PDA

View Full Version : கோடைகாலத்தில் நம் உடலை பாதுகாக்க

முரளிராஜா
19-03-2011, 02:12 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTyOEwPgfofWBNhRNC_0UGnvqxf_kub72EFLEfzVNPOEcOtNSPWbg

கோடை ஆரம்பித்துவிட்டது. ஆனால், கத்திரி பருவம் வருவதற்கு முன்னரே, வெயில் கொளுத்துகிறதே, இந்த கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என, புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்
* கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம்.
தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.
* தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
* இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.
* உடல் சூட்டின் அளவை குறைக்க உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
* வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச் செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.
* பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
* கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம். கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.
நன்றி: cnn

ஜானகி
19-03-2011, 02:31 PM
கத்திரி வெய்யிலிலிருந்து காத்துக் கொள்வதைப் பற்றி விதவிதமான, எளிமையான டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள்...நன்றி.

இதேபோல், 'ர' ணாக்களின் கிடிக்கிப் பிடியிலிருந்து தப்புவது பற்றியும் தெரிவித்தால் நல்லது ! கோடை முற்றினால் என்னென்னவெல்லாம் ஆகுமோ....இறைவனுக்கே வெளிச்சம் !

ஆமாம்...அது ஏன் கறுப்பு, சிகப்புக் கண்ணாடி....? முகம் வேறு மஞ்சள்....! உள்நோக்கம் ஒன்றும் இல்லையே..?

முரளிராஜா
19-03-2011, 02:46 PM
'ர' ணாக்களின் பிடி பாச பிடி மேடம், அதில் இருந்து தப்ப யாராவது நினைப்பார்களா?
கறுப்பு, சிகப்புக் கண்ணாடி மஞ்சள் இதுக்கெல்லாம் எந்த உள்நோக்கமும் இல்லை.
இப்படி ஏடாகூடமா பின்னுட்டத்த போட்டு என்ன தர்ம அடி வாங்க வச்சுடாதிங்க.
நீங்க அடுத்த தடவை என்ன சமையல் டிப்ஸ் சொன்னாலும் அது ரொம்ப அருமையா இருக்குனு பின்னுட்டத்துல சொல்லிடறேன்(எல்லாம் ஏன் நேரம்:lachen001:)

Nivas.T
19-03-2011, 04:30 PM
அப்படியே தினமும் ரெண்டு பீர்...... :D

முரளிராஜா
20-03-2011, 07:49 AM
பின்னுட்டம் இட்ட ஜானகி மேடம், நிவாஸ் இருவருக்கும் என் நன்றி

உமாமீனா
20-03-2011, 07:56 AM
ஆமாம்...அது ஏன் கறுப்பு, சிகப்புக் கண்ணாடி....? முகம் வேறு மஞ்சள்....! உள்நோக்கம் ஒன்றும் இல்லையே..?

மு ரா (வில்லன்) எதை செய்தாலும் உள்நோக்கம் இருக்கும்

முரளிராஜா
20-03-2011, 08:04 AM
மு ரா (வில்லன்) எதை செய்தாலும் உள்நோக்கம் இருக்கும்
எவ்வளவு நல்ல விசயம் சொல்லி இருக்கேன் அத பாராட்டாம என்ன
நக்கலா அடிக்கறிங்க.
எனக்கும் ஒரு நேரம் வரும் அப்ப பாத்துக்கறன்
இப்படிக்கு
பழி வாங்க துடிக்கும் மு ரா:D

உமாமீனா
20-03-2011, 08:07 AM
எவ்வளவு நல்ல விசயம் சொல்லி இருக்கேன் அத பாராட்டாம என்ன
நக்கலா அடிக்கறிங்க.
எனக்கும் ஒரு நேரம் வரும் அப்ப பாத்துக்கறன்
இப்படிக்கு
பழி வாங்க துடிக்கும் மு ரா:D

இவ்வலவு சூடு உடம்புக்கு ஆகாது

#உடல் சூட்டின் அளவை குறைக்க உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது#

முரளிராஜா
20-03-2011, 08:14 AM
ஆமாம் எலுமிச்சம் பழத்தை நான் ஜீஸ் செய்து அருந்தனும் ஆனா நீங்க
அந்த எலுமிச்சைய எடுத்து உங்க தலையில தேய்த்து கொள்ளனும்
அப்பவாது உங்களுக்கு குணமாகுதான்னு பார்ப்போம்:sauer028:

rvkannan
20-03-2011, 02:14 PM
மிகவும் பயனுள்ள பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி முரளி

sarcharan
21-03-2011, 09:10 AM
பழி வாங்க துடிக்கும் மு ரா:D

ரா ரரா பாருங்க, மு ரா கை முறுக்கும் அழகை.. கை நரம்பில் நாக்குபூச்சி எல்லாம் ஓடுது..

மு ரா (வில்லன்) எதை செய்தாலும் உள்நோக்கம் இருக்கும்
உங்க பங்குக்கு எண்ணைய உத்துங்க..

அப்படியே தினமும் ரெண்டு பீர்...... :D

தொட்டுக்க என்ன வேணும் இட்டிலியா? அப்ப சக்ரம் படத்துக்கு ஹீரோ ரெடி ....

Nivas.T
21-03-2011, 09:54 AM
தொட்டுக்க என்ன வேணும் இட்டிலியா? அப்ப சக்ரம் படத்துக்கு ஹீரோ ரெடி ....

யாரு யாரு நானா

ஹீரோ எல்லா வேணாம் சரண்

டைரக்டர் தான் நமக்கு :D:D:D:D

lolluvathiyar
21-03-2011, 10:57 AM
டிப்ஸ் அருமை மிகவும் தேவையான நேரத்தில் கிடைத்தது. நன்றி

பகலில் மட்டுமல்ல இரவிலும் ஜன்னலை திறந்து வைத்து தூங்கினால் நல்லது. சூட்டை அதிகரிக்கும் காரனமான பொருட்களை குறைத்து கொள்ள வேன்டும். மெத்தையில் படுப்பதை குறைத்து தரையில் படுத்தால் சுகமாக இருக்கும். குழந்தைகளை மாலை நேரம் வெளிய வாக்கிங் கூட்டீட்டு போங்க. டீவி முன்னாடி வேக்காட்ல உக்கார வச்சு பழக்காதீங்க.

அப்படியே தினமும் ரெண்டு பீர்
பீர், கூல் டிரிங்க்ஸ் இது எல்லாம் சில்லுனு இருக்கும் ஆனால் உள்ள போனா சூட்டை கிளப்பும். பீர் குடிச்சே ஆகனும்னா குடிங்க ஆனா அதுக்கு வெய்யிலை காரனம் காட்ட வேன்டியது இல்லை.
ஒருவேலை மதுபானம் சாப்பிடுவதை விட முடியாதவங்க ரொம்ப காரமான மசாலா அதிகமுல்ல சைட் டிஷ்களை கொறிப்பதை தவிர்த்து விடுங்கள். வெய்யிலுக்கு இது ஆகாது.

பிரேம்
22-03-2011, 10:48 AM

வெயிலுக்கு தானே ஆகாது..நமக்கு ஆகும்ல. :cool: :icon_b:

Nivas.T
22-03-2011, 11:45 AM
வெயிலுக்கு தானே ஆகாது..நமக்கு ஆகும்ல. :cool: :icon_b:

;):D:D