PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:9ராஜாராம்
19-03-2011, 05:30 AM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTIodLiKAPSOCA3Ut_uVeOZH01pLAsLSPN6O-kfG-AZEzUaoXDgyLvUq40
திருச்சி....தெப்பக்குளம்...அபிராமியின் இல்லம்....மாலை..6.30மணி..

அசோக்,அவனது தந்தை தாய் மூவரும் அபிராமியை பெண்பார்க்க வந்திருந்தனர்.

"பொண்ணோட ஜாதகம் தெய்வசக்திவாய்ந்ததுன்னு ஜோசியர் சொன்னாரு,
எனக்கோ..கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி.
அதான் என்னத் தடங்கல் வந்தாலும் உங்கப் பேத்தியைத்தான்
என் பையனுக்குக் கட்டிவைக்கனும்னு எனக்கு ஆசை",
அசோகின் அப்பா ராமநாதன் கூறியதும் மங்களத்தின் முகம் பிரகாசமானது,

"தடங்கல்கள் அதிகமா இருந்ததாலே...
என் பேத்தியை பார்க்கவரமாட்டிங்களோன்னு...
நெனச்சுக்கிட்டே இருந்தேன்..",
என்ற மங்களம்,,

"அம்மாடி...அபிராமி...
இங்கவாம்மா...",
என அழைத்ததும்,,,

அழகியப்பட்டுசேலையில் அழகுதேவதைப்
போல் குனிந்த தலையுடன் வந்து நின்றாள் அபிராமி.
அவளது அழகைகண்ட அசோக் ஒருநிமிடம் தன்னையே மறந்துவிட்டான்.

"உங்கப் பேத்தி...
கோயிலில் உள்ள அம்பாள் சிலைப்போலவே இருக்காம்மா...",
தன்னையும் மறந்து வாய்விட்டுக் கூறினார் ராமநாதன்.

"வாம்மா...இங்க வந்து உட்க்காரும்மா...",
அபியினை அன்போடு அழைத்தாள் அசோக்கின் தாய்.
அபியின் உள்ளமோ பிரகாஷினை எண்ணியபடியே..
துயரத்தில் அலைமோதிக்கொண்டிருந்தது.

"உன் பாட்டிய வந்துப் பேசுறேன்னு",
சொல்லிய பிரகாஷ் வராமல்போனது..
அபியின் மனதில் குறையாவே இருந்தது.

"கடவுளே..எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்..
எனக்கு பிரகாஷ்தான் புருஷனா வரனும்",
மனதுக்குள்ளே வேண்டிக்கொண்டாள்.

"பொண்னுக்கூட கொஞ்சம் தனியா பேசனும்.
பெரியவங்க நீங்களாம் சம்மதிச்சால்....",
என்று தன் மனதில் உள்ள எண்ணத்தை அனைவர் மத்தியிலும் கூறினான் அசோக்.

"தாராளாமா..பேசுங்க..
இப்ப இருக்கிற காலக்கட்டங்களில்
முன்கூட்டியே எதையும் பேசிக்கிறது நல்லதுதான்...",
என்றாள் மங்களம்.

சற்றுநேரத்திற்கெல்லாம்...
அபியும் அசோக்கும் பூஜை அறையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க..

"நான் புலனாய்வுதுறை அதிகாரிங்க...
ஓரளவு சம்பாதிக்கிறேன்..உங்களை நல்லாவே வெச்சுப்பேன்...",
என்றவன்,

"எனக்கு உங்க வீட்டில் இருந்து ஒருதுரும்பைக்கூட கொண்டுவரவேண்டாம்...",
என்றதும்..
சட்டென விம்மிவிம்மி அழத்தொடங்கினாள் அபிராமி.

"என்னங்க ஆச்சு?ஏன் அழறீங்க?
நான் எதும் தப்பா பேசிட்டேனா?",

"இல்லை"

"பிறகு ஏன் அழறீங்க?
என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?",

"நான் ஒருத்தரை லவ் பன்னுகிறேன்...",

"நெஜமாவா?",
அதிர்ந்தவன்னம் கேட்டான் அசோக்,

"சத்தியமா..",
அவளதுக் கண்களில் மேலும் கண்ணீர் பெருகியது.

"பாட்டிக்கு இந்த விஷயம் தெரியாது...
அவருப் பேரு பிரகாஷ்,என்கூடப் படிக்கிறாரு..
அவரு இல்லைன்னா நான் செத்தேப்போயிடுவேன்....",
சிறுபிள்ளைப்போல அழத்தொடங்கினாள்.

"ஓகே..ஓகே..அழாதீங்க..
நான் எதாவது காரணம் சொல்லி இந்த சம்மந்தம்
பிடிக்கலைன்னு சொல்லிடுறேன்...",
என்றவன்,

"ரொம்ப நேரம் இப்படியே பேசிக்கிட்டு இருந்தால் ,
வீட்டில் உள்ளவங்களுக்கு சந்தேகம் வந்துவிடும்,...
உங்க மொபைல் நம்பர் தாங்க...
நான் ஊருக்குப்போனதும் உங்களீடம் பேசுறேன்..
நானே உங்க காதல் கல்யாணாத்தை நடத்திவைக்கிறேன்...",
என்றவன்,

"என்மேல் நம்பிக்கை இருந்தால் மொபைல் நம்பரை தாங்க...",
என்றான்.

அழுதபடியே,
"9789781080...இதான் என் மொபைல் நம்பர்....",
என்று அபிராமி கூற,

அசோக்கிற்கு தூக்கிவாரிப்போட்டது....

..
"9789781080..உங்க நம்பரா??????",
ஷாக் அடித்தது போல் சட்டெனக் கேட்டான்..

மறுநிமிடமே....
அவனது செல்ஃபோன்னும் சினுங்கியது
"ஹலோ..சார்..
நான் ரமேஷ் பேசுறேன்...
9789781080..இந்த நம்பரை டிரேஸ் பன்னியாச்சு...
திருச்சி...தெப்பக்குளத்தருகே,
எஸ்.எம்.எம்.எஸ்.டீ.டி.என்றக் கடையிலேதான்
ரீசார்ஜ் ரெகுலராக செய்யிறாங்க.
அபிராமின்னு ஒருப்பொண்னுதான் அந்தக் கடைக்கு ரீசார்ஜ் பன்னவருமாம்...
கங்கையம்மாள் காலேஜ் ஸ்டூடண்ட் அந்தப் பொண்னு",
என்ற ரமேஷ்,

"சார்...நான் இப்ப மும்பைக்கு போயிட்டு இருக்கேன்..
அங்கே சவுகத் இப்ராஹிம்மை விசாரணை செய்துவிட்டும்
உங்களூக்கு ஃபோன் பன்னுறேன்",
என்று மூச்சுவிடாமல்,தான்
சொல்லவந்தவற்றைக் கொட்டித்தீர்த்தான்.

விருவிருவென அறையைவிட்டு வெளியேறிய அசோக்,
"அப்பா..அம்மா...வாங்கப்போகலாம்...
எனக்கு ஒரு இண்வெஸ்டிகேஷன் இருக்கு..அர்ஜென்டா போகனும்..",
என்றான்...

"ஏன்டா,,,என்னாச்சு?",
ராமநாதன் கேட்க,

"என்பேத்தி எதும் தப்பா பேசிட்டாளா?",
என மங்களம் பதறிப்போய் கேட்க,

அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அபியின்
வீட்டைவிட்டு வெளியேறினான் அசோக்.

"அப்பா...நீங்களும் அம்மாவும் ஊருக்குப்போங்க....
எனக்கு இங்க திருச்சியில ஒரு முக்கியமான வேளையிருக்கு",
என்று அசோக்கூறியதும்.

"என்னடா...என்னாச்சு உனக்கு?",
அவனது தாய் குழப்பமாய் கேட்டாள்.

"அதெல்லாம் பிறகு சொல்றேன்....
நீங்க ஊருக்குப்போங்க..நான் என் வேலையை முசிச்சிட்டு
வரேன்....",
என்ற அவன் மனதில்,

"யார் இந்த அபிராமி?
9789781080 அவளுடைய செல்ஃபோன் நம்பர் என்றால்...
அவளுக்கும் கொலையாகிய பிரியதர்ஷினிக்கும் என்ன சம்மந்தம்?
சித்தர்வாக்குப்போல எஸ்.எம்.எஸ் அனுப்பியது ஏன்?
இவளுடைய செல்ஃப்போன் பிரியதர்ஷினி பெயரில் வாங்கப்பட்டது ஏன்?
என்னுடைய செல்நம்பர்,கோபியின் செல்நம்பர்,அப்பாவின் செல்நம்பர்,
இதற்கெல்லாம் மெசெஜ் அனுப்பியது ஏன்?
அந்த செல்நம்பர்கள் அவளுக்கு எப்படி தெரியும்?",
அடுக்குஅடுக்காய் கேள்விகள் துளைத்தெடுத்தன.

9789781080 நம்பரில் அபிராமி,
தனக்கு அனுப்பிய மெசேஜை
மீண்டும் ஒருமுறை ஓப்பன் செய்துப்பார்த்தான்...

"உச்சிதனில் வீற்றிருக்கும் விநாயகனும்...
உனை அழைப்பான்....
அவ்விடமே.......
உன் அறிவால் நீ காணும் உலகமெல்லாம்....
தன்னதுவாய்...தான் நிற்கும் காலம் வரும்...
சிற்றம்பல கூத்தனவன் அருள்பதத்தால்....
புதிர்களுக்கு...புரியாத விடைகிடைக்கும்....",

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTQ277KMYK88v_nlVyFaF6pL5CvmV4rF-CZ7CIPz_nBn4OIlNK6IslYsRg
மும்பை....சவுக்கார்ஷா நகர்....மத்தியம்...2.30மணி.......

"வாங்க சார்...',
தனது வீட்டுக்கு வந்த புலானாய்வுத்துறை உதவியாளர்
ரமேஷை வரவேற்றார் சவுகத் இப்ராஹிம்.

"சார்...உங்ககிட்ட ஒருசில கேள்விகளைக் கேட்கனும்...",

"ஓ..தாராளமாக் கேளுங்க..",

"நடிகை பிரியதர்ஷினிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?",

"நான் பிரியதர்ஷினியோட ரசிகன்..",

"மாசம் மாசம் உங்க வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்காங்களே...
அது ஏன்?",

"இங்க அனாதைகள் இல்லத்திற்கு நன்கொடையா அனுப்புவாங்க...",

"அந்த அனாதை இல்லம் எங்கே இருக்கு?
அங்கப் போயி பார்க்கலாமா?",

"அதெல்லாம் இப்ப பார்க்கமுடியாது,,,.'
எனக்கு நிறையா வேலை இருக்கு..",

"கடைசியா பிரிதர்ஷினியை நீங்க எப்ப பார்த்தீங்க?",

"கொலையாவதற்கு முதல்நாள்..",

"எங்க சந்திச்சிங்க?",

"சென்னையில் தான்...",

"சென்னையிலே எங்கே சந்திச்சிங்க?",

"பிரியதர்ஷினி வீட்டில்தான்...",

"எதற்காக சந்திச்சிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...?",

"சென்னயில் நடந்த திரைப்பட விருது வழங்கும்
நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன்...
அப்பதான் சந்திச்சேன்...",

"கொலையாவதற்கு முதல்நாள் பிரியதர்ஷினி குற்றாலம்
போயிருந்ததாக எங்களுக்கு ஒருசிலர் சொன்னாங்க..
ஆனால் நீங்க சென்னையில் சந்திச்சதா சொல்றீங்களே...",
திடீரென ரமேஷ் கிடிக்கிப்பிடிபோட...

முகம் வியர்த்துப்போக,
சவுகத் இப்ராகிமின் முகம் கடுகடுவென மாறியது.......


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS8EzjgyL-OQBFyFtbRqOiYq7kc-wK52HMfJSv9jLIJ3bnJR5LEgHMeFBc
திருக்குற்றாலம்.....மலையருவி வனப்பகுதி....மாலை...6.00மணி..

"கிருஷணவேனி அம்மா...திருச்சியில நம்ம அபிராமியை சந்திச்சேன்...",
அதை கேட்ட அந்த அன்னை மலர்ந்தமுகத்துடன்..

"அபிராமி நல்லா இருக்காளா?",

"நல்லா இருக்காள்..
ஆனால் அவள் முகத்தில் ஏதோ ஒருவாட்டம் இருக்கு...",

"அதெல்லாம் கொஞ்சநாளில் சரியாகிவிடும்..",
என்ற அன்னை...

"அவள் உடல் சாதாரணமானது அல்ல...
...அவளுடைய தேகம்,பல சித்தர்களும்
கூடுவிட்டு கூடு பாய்ந்த தேகம்..
அதனால் எந்தப்பிரச்சனை வந்தாலும்
அது பனிப்போல விலகிவிடும்...",
என்ற அன்னை,

"அவள்..
சிவனாடி சித்தன்..ஈன்ற மகள்...
அவளைக்கண்டால் துக்கங்களும் தூர ஓடும்...",,
என்ற அன்னை வய்விட்டு தெய்வீகமாய் சிரித்தார்..

"அவளுடைய எதிகாலம் எப்படி அமையப்போகிறதோ...",
காசிநாதர் நம்பூதிரி கூற,

"அவளுக்கு 3வயது இருக்கும்போதே...
பிரசங்கம் பார்த்து அவள் எதிர்காலத்தை கணித்தவன் நீ...
நீயே அவள் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகிறாயே...",
என்று சிரித்தப்படி,
காசிநாத நம்பூதிரியை ஒருப் பார்த்தார் அன்னை கிருஷ்ணவேனி.

"அபிராமி இங்க வருவாளா?",
காசிநாதரின் கேள்வி தொடர...

"அவள் சம்மந்தப்பட்டவர்கள்...
இனி இங்கு வருவார்கள்..
அவள் யார் என தெரிந்துக்கொள்ள....",
என்ற அன்னை மெல்ல தனதுக்கரங்களில் இருந்த
ஜபமாலையை உருட்டியவன்னம் குகைக்குள் நுழைந்தார்....

"ஈசன்பதமே.....
அவள் வாழ்வினைக் காத்திடுமே..
ஈசனவன் அருளாலே...
நம்பியோர்கு நடராஜானாய்...
நம்பாதார்கு எமராஜனாய்...
அவள் வாழ்வும் அமைந்திடுமே....
கலியுகமும் கண்டெடுத்த,..
கருவியதனில்...
மின்னுவியல் குறுந்தகவலாய் தந்திட்ட
அவள்....கூற்று..
நாவதனில் வாக்குசொல்லும் காலமும்...
இனி வருமே...................",

சிவானாடிசித்தன் பாட்டய்பாடுவது
அன்னை கிருஷ்ணவேனியின் காதுகளுக்குமட்டும் ஒலித்தது......

(கண்ணாமூச்சி ஆட்டம்...........தொடரும்...)


(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821A0.TAMILNADU FILM
CHAMBER/..rajaram..RTD240)

p.suresh
19-03-2011, 05:48 AM
கதை அருமையாகவும்,விறுவிறுப்பாகவும் போகிறது.ஆனால் என்ன பிரயோஜனம்? கதையின் முடிவை நான் யூகித்து விட்டேனே,

இதோ கதையின் கிளைமாக்ஸ்

"................................................................................

தனக்கு முன் புயல் வேகத்தில் பறந்த

டேங்கர்லாரியை அசோக் தன்

swift dzireல் casino royale படத்தில்

வரும் ஜேம்ஸ்பாண்ட் போல மின்னல்

வேகத்தில் துரத்திச் சென்றான்.

அப்போதுதான் அந்த எதிர்பாராதது நிகழ்ந்தது.

"டமால்" என்ற சத்தத்துடன் லாரியின்

பின்சக்கர டயர் வெடித்தது.

அ.தி.மு.க கூட்டணியைப் போல ரோட்டில்

லாரி தாறுமாறாக ஒடியது. அதில் ஒரு

ச்க்கரம் மட்டும் வை.கோ.வைப் போல் தனியே

பிய்த்துக் கொண்டு ஒடியது.திடீரென லாரி நிலைதடுமாறி

தலைக்குப்புற கவிழ்ந்து சரிந்து கொண்டே சென்றது.

"டொய்ங்,டொய்ங்"

அசோக்கின் சட்டைப்பைக்குள் செல்போன் சிணுங்கியது.

மீண்டும் மெசேஜ். 9789781080 என்ற நம்பரை பார்த்து படபடத்துப் போனான்.

"டேய்...

கழுதை....

பேமானி...

கஸ்மாலம்...

சாவுகிராக்கி..

எந்திரிடா...

தூங்குமூஞ்சி....."

என்ற வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தான்.

சித்தரா....

மகாசித்தரா இப்படி...

ஏன்?......

படுகேவலமாக sms அனுப்பியுள்ளாரே என்று குழம்பியபடி கண்விழிக்க

தான் தன் பெட்ரூமில் படுத்திருப்பதை உணர்ந்தான்,

"டேய் மச்சான்,நாளைக்கு எனக்கு S.I. போஸ்ட் இன்டர்வியூடா

மறக்காம காலைல என்னை எழுப்பிவிடு"

என்று தன் நண்பனிடம் கூறியது நினைவுக்கு வர படுக்கையைவிட்டு

துள்ளி எழுந்தான் அசோக்.

"சே.. அப்ப எல்லாமே கனவா?

அபிராமி, குற்றாலம், சித்தர், நாடிஜோசியம் எல்லாம் கற்பனையா?"

கலைஞரின் மூன்றாவது அணி ஆசையைப் போல் தன் ஆசையும்

நிராசையான வேதனையில் புலம்பியபடி இண்டர்வியூக்கு கிளம்ப

ஆயத்தமானான்

:D:D:D:D:D

Nivas.T
19-03-2011, 05:49 AM
:eek: என்ன ஒரு திருப்பம்

என்ன ஒரு....... என்ன ஒரு..... திகில்.....:sprachlos020:

அற்புதம் ராரா

இனி என்ன நடக்கும்????????????????? :confused::confused::confused:
:eek::eek::eek::eek:

முரளிராஜா
19-03-2011, 10:34 AM
ஒவ்வொரு பாகமும் இந்த கதையின்மீது ஆர்வத்தை தூண்டுகிறது
வாழ்த்துக்கள் ராரா
(என் மனசாட்சிக்கு விரோதமா உனக்காக பொய் சொல்லி இருக்கேன் அதனால என்
bsnl எண்னுக்கு 110 ரூபாய் டாப் அப் போட்டுடு:lachen001:)

ராஜாராம்
19-03-2011, 12:43 PM
நன்றி,
சுரேஷ்(பின்னூட்டம் சூப்பர்)
முரா,
நிவாஸ் அவர்களுக்கும்.