PDA

View Full Version : சனா சனா ஈசீ ஈசி...



simariba
19-03-2011, 02:47 AM
சனா சனா ஈசீ ஈசி...
வழக்கம் போல ஒரு நாள், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து நிறைய பொருட்களை எடுத்து பரப்பி விட்டு சரி செய்து அடுக்கும் வேலை. இன்று ஒரு அறையிலிருக்கும் அத்தனை பொருட்களும் வேகமாக தரையில் கிடத்தப்பட (பெரும்பாலும் இப்படித்தான் எதை ஆரம்பித்தாலும் அதனுள் சென்று விடுவதே இயல்பாகவும் அதுவே சில சமயம் நன்மையாகவும், தீமையாகவும் மாறிவிடுவதும் உண்டு) என் பெரிய மகன் என்றோ பார்க்க கிடைக்ககூடிய சில அபூர்வமான சாமங்களை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்க,
வழக்கம் போல் நான் பொறுமை இழந்து எந்த உதவியும் இல்ல என் வேலையையும் லேட் பண்ற என்று உச்ச கதியில் ஆரம்பிக்க, இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு குரல், " சனா சனா ஈசி ஈசி" " கூல் கூல்" என்று. திட்டு வாங்கிக்கொண்டிருந்த பெரிய மகன் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க அப்புறம் தான் இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் புரிந்தது எனக்கு. போய் தூங்கு என்று சொன்னவுடன் தலையை தொங்க போட்டுக்கொண்டு மனமில்லாமல்
கட்டிலுக்கு நடையை கட்டிய சின்ன மகன் (3 வயது) திடீரென என்னருகில் வந்து சொன்னது தான் சனா சனா ஈசி ஈசி..... சரியாக பேசவர வில்லையென்றாலும் எப்போதுமே எல்லாவற்றையும் கூர்ந்து கவனிததபடி இருப்பான். ரோபோ படத்தை பல முறை பார்த்து அந்த டயலாக் எல்லாம் மனப்பாடம். படத்தில் ஐஸ்வர்யா வரும் போதெல்லாம் மம்மி மம்மி என்று அவன் அப்பாவை வெறுப்பேற்றியது போதாது என்று இது வேறா கடவுளே!!

Nivas.T
19-03-2011, 05:58 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:

simariba
19-03-2011, 06:06 AM
நன்றி த.நிவாஸ்!

அன்புரசிகன்
22-03-2011, 12:19 AM
உங்கள் பையனை இடதுகை எழுத்து பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். நல்லதொரு Air traffic controller ஆக வர நல்ல வாய்ப்பு உண்டு. (இது நகைச்சுவைக்கல்ல. உண்மையாகவே... இவர்கள் அசாதாரணமானவர்கள். அதை நன்றாக பயன்படுத்தவேண்டும்.)

வெளிப்படையாக பார்த்தால் அவன் நகைச்சுவையாக பேசுவதாக தோன்றும். ஆனால் சற்றே வித்தியாசமாக படத்தின் வசனங்களை தகுந்தவாறு உபயோகிக்கிறான். அதுவும் பொருத்தமாக இன்னும் சொல்லப்போனால் உடனடியாக... இதுவே 15 வயது சிறுவன் செய்தால் பரவாயில்லை. செய்வதோ 3 வயது சுட்டி. நிச்சயம் வரவேற்கப்படவேண்டும்.

simariba
03-04-2011, 02:07 PM
நன்றி அன்புரசிகன்!
இதுல இவ்வளோ விஷயம் இருக்கா? முயற்சி செய்யுறேன்.

சிவா.ஜி
03-04-2011, 04:01 PM
அபி...

சுட்டிப்பையன்.....அவன் நிச்சயம் மிக நல்ல நிலைக்கு வருவான். வாழ்த்துக்கள்ம்மா.

simariba
04-04-2011, 02:16 AM
நன்றி சிவா.ஜி!!

தங்கவேல்
04-04-2011, 07:56 AM
சூழ் நிலைக்கு ஏற்ப உடனடி முடிவெடுப்பவர்கள் அதுவும் சரியான முடிவெடுப்பவர்கள் மிக உயர்ந்த உன்னத நிலைக்கு வருவார்கள். உங்கள் குழந்தையும் அவ்வாறே ஆகுவார். விளையும் பயிர் முளையிலே தெரியும் அல்லவா. வாழ்த்துக்கள்