PDA

View Full Version : காற்றோடு...காற்றாக..பாகம்:1ராஜாராம்
18-03-2011, 07:59 AM
காற்றோடு....காற்றாக...
__________________________________________________________________
{இது ஒருக் கற்பனைக் கதையே...

இறந்த மனித உயிர்கள் ஆவியாக காற்றோடு கலப்பதாகவும்...
இறந்தவர்கள் தங்களது சொந்தங்களை தேடி,
ஆவியாக வருவார்கள் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர்.
மேலும்..
.இறந்தவர்களில் ஒருசிலருக்கு மறுஜென்மம் உண்டு என்றும்
கருத்து பரவலாக உள்ளது.

இதற்கும் மேலாக,
இவையெல்லாம் மூடநம்பிக்கையென்றும் ஒருசிலர் கூறுகின்றனர்.

நான்...இவ்விருக்கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டவன்.

ஒரு பொதுவான சிந்தனையிலும்....
கற்பனைகளை கலந்தும்....
ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே இதை சித்தரித்துள்ளேன்...
இதில் கூறப்படும் கருத்துக்கள்,
ஒருசில சான்றுகளில் இருந்து எடுக்கப்பட்டவயே..
அவை எனது சொந்தக் கருத்து அல்ல.

அமானுஷ்யங்களை ஊர்ஜிக்கும் படைப்பாக இதைக் கருதாமல்...
பொழுதுப்போக்கு படைப்பாகவே,
இதைக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன்........................}


நன்றி;____
ஆவிகள் ஆராய்ச்சிக்கழகம்....கோயம்புத்தூர்.

ஆவிகள் ஆராய்ச்சியளர்..விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்...

எல்.எல்.சுமதி..எம்,ஏ.பில்(வழக்கறிஞர்)
திரவிட கழக முற்போக்கு சிந்தனையாளர்...

டாக்டர்..எஸ்.மணி...,மனநல மருத்துவர்,..
கும்பகோணம்,.

டாக்டர்...ரமோநாராயணா..மனநல மருத்துவர்...
கொச்சின்..கேரளா.

ஜெய.புன்னியகேச நம்பூதிரிகள்..
எர்ணாக்குளம்.


________________________________________________________________

கேரளா மாநிலம்...எர்ணாக்குளம்...கரிக்குமாரி....1969....

"காசிநாதருக்கு உடம்பு ரொம்ப மோசமான நிலையில் இருக்காம்",
அவரோட மூச்சுக்காற்று,இன்னும் ஒருநாள் இருந்தாலே பெரியவிஷயமாம்...
டாக்டர் சொல்லிட்டங்க...",

"மலையாள மந்திரகலைகளை அவரைமாதிரிக் கற்றவன் யாருமே...'
இருக்கமுடியாது....
நிறையப்பேருக்கு அந்த மனுஷன் நல்லதுப் பன்னிருக்காரு...",

"இப்படிபட்டவங்க இன்னம் கொஞ்சநாள் வாழ்ந்த நல்லா இருக்கும்...
என்னசெய்வது ...விதி முடியப்போதுன்னா...அதை தடுக்கவா முடியும்",

"இதுநாள் வரைக்கும் அவர் மக்களுக்கு செய்த உதவிகளுக்கு,
ஒருபைசா காசுக்கூட வாங்கியதில்லை....",

"அவருக்கு குடும்பம் இருக்கா?",

"அவருக்கு ரெண்டு பொண்டாட்டி...
முதல் மனைவி இறந்ததும்..இரெண்டாம் தாரமாக
ஒரு தமிழ்ப் பொண்ணைக் கட்டிக்கிட்டாரு...",

"அவருக்கு பிறந்தக் குழந்தைகள்,
3பையன்கள்..ஒருப் பொண்ணு..",

மரணப்படுக்கையில் கிடந்த காசிநாத நம்பூதிரியினைச் சுற்றி
உறவினர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

"எல்லாரும் ஓடியாங்க காசிநாதருக்கு மூச்சு திணருது,,,,",
உள்ளிருந்து கூக்குரலிட்டார்..
ஆனந்தக்குட்டன்.

காசிநாதனின் மூச்சு மேல்ம்கீழும் இழுத்துக் கொண்டிருக்க...
அவரதுக் கண்கள் பஞ்சடைந்து...இருந்தது.

"என்னோட...கலைகளை யாருமே கற்றுக் கொள்ளவில்லையே...
எல்லாம் இந்த உடலோடயே...
மண்ணோடு மண்ணாக மடியப் போகிறதே....",,
அவரது உதடுகளில் இருந்து வந்து விழுந்தன,
ஏக்கமும் துயரமும் சூழ்ந்த வார்த்தைகள்.

"ஐயா...நீங்கம் கவலைப்படாதீங்க...
கண்கலங்காதீங்க...",
அவரதுக் கண்களில் வழிந்தக் கண்ணீரினைத்
துடைத்தான் அவரது உதவியாளர்..அச்சுதானந்த குட்டி.

தனது தலைமாட்டின் அருகே இருந்த
பகவதி அம்மன் சிலையினைக் கட்டி தழுவியது அவரதுக் கரங்கள்.

சிறிது நேரத்தில்.....
"ஐயையோ....ஐயா போயிட்டாரு....
ஐயா...இறந்துப்போயிட்டாரு....",
உரக்ககத்தியவன்னம் கதறி அழுதான் அச்சுதானந்த குட்டி.

"நல்ல மனுஷன் போயிட்டரே....",

"இவரைப்போல மந்திரக்கலைகளை
கற்றவன் யாருமே இல்லை..",
கூடியிருந்த மக்களிடையே
துக்கம் தெரிந்தது.

"அவரைபோல மந்திரவித்தைகளை கற்கவும்,'
கற்றுத்துதரவும்,
இனிமே ஒருத்தன் பொறந்துத்தான் வரனும்...",


_______________________

தமிழ்நாடு......சென்னை...மாம்பலம்...சவுந்தர்யா அப்பார்ட்மென்ட்.....2011.....

சவுந்தர்யா அப்பார்ட்மெண்ட்...
இரண்டாம் மாடியில் நின்றபடி..,

"இதான் நம்ம புது வீடு...
எப்படி இருக்கு?",
சவுந்தர்யா அப்பர்ட்மென்ட்டில்,தான் வாங்கியிருக்கும்
வீட்டினைக் காட்டினான் பிரபு.

விசாலமான ஹால்...
அதிநவீன வசதிகளுடன் அறைகள்,
அழகிய பெயிண்டிங்க் செய்யப்பட்ட அறைகள்...,
மேலைநாட்டு பாணியில் அமைக்கப்பட்ட,டைனிங் ஹால்...
கிடத்தட்ட ஒரு வசந்தமாளிகைப் போலவே,,
கவிதாவின் கண்களுக்கு அதுக் காட்சிதந்தது.

"ரொம்ப..ரொம்ப..அழகா இருக்குங்க...",
என்றுக்கூறியவன்னம்,
பிரபுவின் கரங்களை செல்லமாக இறுக்கிப்பிடித்துக்
கொண்டாள் கவிதா.

"பிள்ளையார் கோயில் குருக்களை
இப்ப வரச்சொல்லி இருக்கேன்...
சின்னதா ஒரு பூஜையை செய்வாரு.
நீ பால் காய்ச்சி சாமிக்கு படைச்சிடு...
நம்ம திங்ஸ் எல்லாம் இன்னம் கொஞ்சம்
நேரத்திலே பழைய வீட்டில் இருந்து வந்துவிடும்...",
பிரபுக் கூறியதும்..

"முதலில் எதாவது ஒரு சாமிப்படத்தை மாட்டுங்க...",
என்ற கவிதா..
சிறிய மாரியம்மன் விக்கிரகம் ஒன்றினை பூஜை அறையில் வைத்டுவிட்டு
பால் காய்ச்ச தயாராகினாள்.

"ஹாய்..பிரதீப்...
நானும் கவிதாவும் இப்ப மாம்பலம் புது வீட்டிற்கு குடிவந்துவிட்டோம்...
நீயும் உன் மிஸ்ஸஸ் ரஞ்சனியும் கண்டிப்பா,இங்க வரனும்டா...",
செல்ஃபோன்னில் தனது நீண்டநாள் சிநேகிதனை,
பிரபு வறவேற்க,

"மச்சான்...இன்னம் கொஞ்ச நேரத்திலே
நானும் ரஞ்சிதாவும் அங்க இருப்போம்டா ...",
செல்ஃபோன்னின் மறுமுனையில் சந்தோஷமாய் பதில் அளித்தான் பிரதீப்.

அடுப்பங்கரையில் இருந்த ஜன்னலினை மெல்லத் திறந்தாள் கவிதா...
ஜில்லெனக் காற்று...வீசியது..
அங்கிருந்து, தொலைவு துராத்தில் மாம்பலம்
ரயில்நிலையம் தெரிந்தது.

அருகே அடர்ந்த மாமரம்...
அதிலிருந்து வந்தக் காற்று இவையாவும் அவளை உற்சாகப்படுத்தின..

சிறிது நேரத்தில் ,
கினீர் கின்னீரென மந்திர உச்சரிப்புகளைக் கூறி தனது பூஜையை
தொடங்கினார் குருக்கள்.

"புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும் சேர்ந்து
நின்னு இதை கையிலே வாங்கிங்கோ..",
பூஜை செய்த பிரசாதங்களையும்..
ஒரு விநாயகர் படத்தையும்..
தாம்பாளத் தாட்டில் ஏந்தியபடி நின்றார் குருக்கள்..

"கவிதா சீக்கிரம் வாம்மா,...
குருக்கள் பிரசாதம் வாங்கிக்கொள்ள கூப்பிடுகிறாரு..."
பிரபு குரல் கொடுத்தடும்,

"இதோ வந்துட்டேங்க....",
அடுப்பங்கரையில் இருந்து ஆவலோடு ஓடிவந்தாள் கவிதா...

கவிதாவும்,பிரபுவும் இணந்து நிற்க,
அவர்களிடம் பிரசாத தட்டை நீட்டியபடி...

"சீக்கிரம்...உங்களுக்கு குழந்தைப்பிறக்கனும்...
இந்த ஆத்துக்கு வந்த நேரம் ஓகோன்னு வாழனும்...",
என்று மனமார வாழ்த்திய குருக்கள்,
அவர்களது கரங்களில்
தாம்பாளதட்டினை தாரைவார்க்க முயன்ற அந்த நிமிடமே...

"மாமா...
உங்காத்து மாமிக்கு ஹார்ட் அட்டாக்போல வந்து
திடீருன்னு இறந்துப்போயிட்டா மாமா...",
அலறியபடி உள்ளே நுழைந்தான் ,
குருக்களின் எதிர் வீட்டு அம்பி.

"என்னாடா...சொல்றே...
என் ஆத்துகாரி செத்டுப்போயிட்டாளா...
என்னடா சொல்றே....
ஐயோ...பகவானே....",
அதிரிச்சியில் பதறிய அவரது கைகளில் இருந்து
தடம்புரண்டு தரையில் வீழ்ந்தது
தாம்பாளதட்டு...

அதைக் கண்ட
கவிதாவின் முகம் வெளிறிப்போனது...
அவளது உள்ளுணர்வுக்குள்....

"கவிதா...ஜாக்கிரதை....
இதெல்லாம் நல்ல சகுனம் இல்லை....
ஏதோ..இங்க கெட்டது நடக்கப்போகிறது....",
என்று யாரோ எச்சரிக்கை செய்வதுப்போல உணர்ந்தாள்..............

(காற்றோடு....காற்றாக....தொடரும்...)

(பதிவு செய்யப்பட்டது,TDP.kaatroodu kaatraaka :186000510J2.TAMILNADU FILM
CHAMBER/..rajaram..RTD240)

Nivas.T
18-03-2011, 08:35 AM
:eek::eek:என்ன ராரா இப்டி ஆரம்பத்லயே பயமுறுத்துறீங்க:frown:

எப்டி இருந்தாலும் படிப்போம்ல:sprachlos020::sprachlos020:

தொடருங்கள் .... இடைவெளி விடாமல் :D:D:D:D

ஜானகி
18-03-2011, 09:44 AM
" கற்பனை இறக்கை கட்டிப் பறக்கிறது " என்பார்கள்...அதற்காக இப்படியா...ஊர் விட்டு ஊர்...கூடு விட்டுக் கூடு பாய்ந்து....அப்பப்பா....எங்களைக் கொஞ்சம் மூச்சு வாங்க விடுங்கள்......{.சும்மா...கலாட்டாவிற்கு...நீங்கள் ஜமாயுங்கள்...}

sarcharan
18-03-2011, 11:12 AM
ரா ரா இப்ப விக்ரமாதித்தன் வேதாளம் மாதிரி கதை சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா?
சபாஷ்.. நன்றாக உள்ளது. தொடருங்கள்.

முரளிராஜா
18-03-2011, 11:34 AM
ஐயய்யோ அடுத்த கதையா
எழுது எழுது எப்படி இருக்குனு பார்ப்போம்

sarcharan
18-03-2011, 11:47 AM
என் முரா, நம்ம ரா ரா திருவள்ளுவர் கைல இருந்து எழுத்தாணி வாங்குனவரா என்ன?

சிவா.ஜி
18-03-2011, 01:31 PM
வித்தியாசமானக் கதைக்களனுக்குள்ள பயணிக்கத் தொடங்கிய உணர்வு. தொடருங்க உங்க மாந்த்ரீகப் பயணத்தை....கூடவே வரோம்.

ராஜாராம்
18-03-2011, 02:14 PM
நன்றி,
நிவாஸ் அவர்களுக்கும்,
முரா சாரா விற்கும்,
ஜானகி அவர்களுக்கும்,
சிவா.ஜி அவர்களுக்கும்.

govindh
24-03-2011, 09:29 AM
காற்றோடு...காற்றாக..
அதிரடி ஆரம்பம்...

தொடருங்கள் ராஜாராம்.
தொடர்ந்து வருகிறோம்.

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 10:22 AM
அருமையான துவக்கம் ...ஒன்றிவிட்டேன் கதையில் ....தொடருங்கள் ..