PDA

View Full Version : கொலை உலை....!!!!சிவா.ஜி
17-03-2011, 02:15 PM
நீர், காற்று, நிலமென
இயற்கை சக்தியிலிருந்தே
எமக்கு சக்தியை எடுத்துக்கொள்ள
எத்தனையோ வசதியிருந்தும்....
அணு உலையெனும்
பேரரக்க சக்தி இப் பெரு உலகத்துக்குத்
தேவைதானா.....?

அணுகுண்டு மட்டுமா தரும் அழிவு
அணு உலை வெடிப்பில்
அத்தனை மனிதரும்
அது தின்று போட்டக் கழிவு....!

எங்கோ நடக்கும் விபத்து
இங்கும் நடக்கும்....
எங்கும் நடக்காமல்
எதிர்ப்போமே அணு உலையை
உயர்த்துவோமே உயிர்களின் விலையை....!!!

அக்னி
17-03-2011, 02:20 PM
இன்றைய காலத்திற்குத் தேவையான கவிதை.

அணு உலைக்குப் பின்னால்,
பேரழிவு ஆயுதம் இருக்குமே அன்றி,
மாற்றுச்சக்தி பெறும்வழி
பெருமளவில் இருக்காது...

அணு உலை என்பது முகமூடி...
கிழித்துப் பார்த்தால்,
தெரியும் எதன் மூடி என்று...

பாராட்டு சிவா.ஜி...

ஜானகி
17-03-2011, 02:26 PM
உண்மைதான்...ஆனால் காலம் கடந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

' வல்லரசு ' பட்டத்தை எட்டிப் பிடிக்கும் மாயச் சுழலில் சிக்கித் தவிக்கிறோம் நாம் அனைவருமே..

வியூகத்தில் நுழையத் தெரிந்த நமக்கு, வெளிவரும் தைரியமில்லை....

ஆக்கத்திற்கு ஏற்பட்ட போட்டி, இப்போது, அழிவில் யார் முந்தி என்றல்லவா மாறிவிட்டது ? பரிதாபம் தான்... முடிவு தெரிந்தால் நம் பாக்கியமே !

சிவா.ஜி
17-03-2011, 02:30 PM
ஆமாம் அக்னி. திறந்து பார்த்தால்தான் தெரியும் அதன் மூடி எதை மூடியிருக்கிறதென.

அழிவை நோக்கியப் பயணத்தில் இதுவும் ஒன்று....என்ன செய்வது சக பயணிகளாகிவிட்டோமே.

மிக்க நன்றி அக்னி.

சிவா.ஜி
17-03-2011, 02:32 PM
வியூகத்தில் நுழையத் தெரிந்த நமக்கு, வெளிவரும் தைரியமில்லை....

ஆக்கத்திற்கு ஏற்பட்ட போட்டி, இப்போது, அழிவில் யார் முந்தி என்றல்லவா மாறிவிட்டது ? பரிதாபம் தான்... முடிவு தெரிந்தால் நம் பாக்கியமே !

மிக மிக உண்மை. ஆக்கமும் அழிவைத்தருமென....அதிமேதாவிகளுக்கு யார் சொல்வது?

அருமையான கருத்துக்கு அன்பான நன்றிகள் சகோதரி.

த.ஜார்ஜ்
17-03-2011, 02:40 PM
இப்போதும் நம் நாட்டு உலைகள் அந்த மாதிரி இல்லை என்றுதான் பூசி மெழுகுறார்கள்.

பூமகள்
17-03-2011, 02:48 PM
என் கருத்தை ஏற்று நிற்கும் கவிதை..

பல நேரங்களில் எப்படி அண்ணா என் போலவே யோசிக்கிறீர்கள். அதனால் தான் வேண்டவே வேண்டாம் அணு சக்தி ஒப்பந்தம் என்று நான் முன்பிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?

ஜப்பானில் எத்தனை பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருத்திருக்கும் அரசு.. ஆனால், இந்தியாவில் அப்படியான அணு மின் நிலையம் இருந்து இப்படி ஏதேனும் கசிவு இருந்திருந்தால் எப்படி அதை அரசு சரி செய்யும்??

அணு சக்தியை சேகரிக்கும் கொள்கலனில் கூட நம்மவர்கள் ஊழல் செய்து தரம் குறைத்து பிரச்சனை உண்டு பண்ண மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மின்சாரம் இன்றி கூட இருந்திடலாம்..
மக்கட்செல்வங்கள் மட்கும் நிலை வர வேண்டாம்..!! :eek:

சிவா.ஜி
17-03-2011, 02:55 PM
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே ஜார்ஜ்....”பூசி மெழுகிறார்கள்”....

மிக மிக உண்மை.

சிவா.ஜி
17-03-2011, 02:59 PM
தங்கையோட மனசு அண்ணனுக்குத் தெரியாதா.....

நீ சொல்றது நிச்சயமான உண்மைம்மா. அதே துறையில் பணியாற்றியவன் என்ற தகுதியில் சொல்கிறேன்...மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத இந்த தேசத்தில்...அணு உலைகள் தேவையே இல்லை.

உலை வெடிப்பு மட்டும்தான் அழிவைத்தருமென்று இல்லை. அணுக்கழிவுகள் தரும் ஆண்டாண்டு அழிவுகள். அணுக்கழிவுகளை பாதுகாப்பாய் கையாளும் முறையில் இன்னும் இந்தியா மிகப் பின்னடைவில் உள்ளது. இது பிற்காலப் பேராபத்துக்கு வழி வகுக்கும்.

ஆனால்...ஜானகி அவர்கள் சொன்னதைப்போல வல்லரசாகும் ஆசையில்....தம் மக்களை ஆபத்தின் மேல் நிற்க வைக்கிறார்கள்.

Nivas.T
17-03-2011, 05:09 PM
உண்மைதான் அண்ணா

ஆக்கமென்று சொல்லப்படும்
பொய் - அதுவே வித்திடும் நம்
அழிவை
வேண்டாம் என்று சொல்வோம்
இந்த அணுவை

கவிதை நன்று அண்ணா

ஷீ-நிசி
17-03-2011, 05:37 PM
நிகழ்காலத்திற்கு ஏற்ற கவிதை நண்பரே!

செல்வா
18-03-2011, 03:40 AM
காலத்துக் கேற்ற கவிதையாய்... முளைத்திருக்கிறது திரி.
பூசி மெழுகப்படும் அணுஉலைகளின்
உண்மை முகம் உரித்திருக்கிறது
பாநயம் குறைவெனினும்
சொல்லவந்த கருத்தால் வென்றிருக்கிறது.

ஆதவா
18-03-2011, 05:29 AM
தங்கையோட மனசு அண்ணனுக்குத் தெரியாதா.....

நீ சொல்றது நிச்சயமான உண்மைம்மா. அதே துறையில் பணியாற்றியவன் என்ற தகுதியில் சொல்கிறேன்...மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத இந்த தேசத்தில்...அணு உலைகள் தேவையே இல்லை.

உலை வெடிப்பு மட்டும்தான் அழிவைத்தருமென்று இல்லை. அணுக்கழிவுகள் தரும் ஆண்டாண்டு அழிவுகள். அணுக்கழிவுகளை பாதுகாப்பாய் கையாளும் முறையில் இன்னும் இந்தியா மிகப் பின்னடைவில் உள்ளது. இது பிற்காலப் பேராபத்துக்கு வழி வகுக்கும்.

ஆனால்...ஜானகி அவர்கள் சொன்னதைப்போல வல்லரசாகும் ஆசையில்....தம் மக்களை ஆபத்தின் மேல் நிற்க வைக்கிறார்கள்.

அண்ணா... இதே துறையில் என்றால் உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அணு உலை, கசிவு, கழிவுகள் குறித்து... கொஞ்சம் விபரித்தால் உபயோகமாக இருக்கும். முக்கியமாக இதெல்லாம் நடந்தால் மக்கள் என்ன செய்யவேண்டும் என்றே தெரியாது!!

சிவா.ஜி
18-03-2011, 01:22 PM
மிக்க நன்றி நிவாஸ்.

சிவா.ஜி
18-03-2011, 01:24 PM
ரொம்ப நன்றி ஷீ.

சிவா.ஜி
18-03-2011, 01:25 PM
ஆமா செல்வா....எழுதி ரொம்ப நாளாச்சில்ல.....கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிக்கறேன். நன்றி செல்வா.

சிவா.ஜி
18-03-2011, 01:26 PM
விரைவில் எழுதறேன் ஆதவா.

கண்மணி
18-03-2011, 05:00 PM
உலகுக்குப் போதும்
ஒரே ஒரு அணு உலை...
சூரியன்!

-

இதெப்படி இருக்கு சிவா.ஜி அண்ணா?:aetsch013:

சிவா.ஜி
19-03-2011, 02:10 PM
உலகுக்குப் போதும்
ஒரே ஒரு அணு உலை...
சூரியன்!

-

இதெப்படி இருக்கு சிவா.ஜி அண்ணா?:aetsch013:

செம சூப்பர்....அது வெடிச்சா....அம்புட்டுதான்....

கீதம்
20-03-2011, 12:15 AM
ஜப்பானில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்த மக்கள் படும் வேதனையைக் கண்டாலே பகீரென்கிறது. சுனாமியின் சீற்றம் அடங்கியபின் அங்கு உயிர்கள் வாழக்கூடும். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டபின் அங்கு புல்லும் வாழ இயலாது என்னும் உண்மையின் தீவிரத்தை உணராவிடில்.... நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.

கவி சொல்லும் கருத்து வெகுநன்று, அண்ணா.

உமாமீனா
20-03-2011, 03:08 AM
சிறப்பான கவிதை - மனதை உலுக்கியது உருக்கமாகவும் உயிர்ரோட்டமாகவும் உள்ளது

முரளிராஜா
20-03-2011, 03:34 AM
சிந்திக்கவைக்கும் சிறப்பான கவிதை
வாழ்த்துக்கள்

சிவா.ஜி
20-03-2011, 06:37 AM
மிக்க நன்றி கீதம் தங்கையே.

சிவா.ஜி
20-03-2011, 06:38 AM
ரொம்ப நன்றிங்க உமா மீனா.

சிவா.ஜி
20-03-2011, 06:39 AM
மிக்க நன்றி முரா.