PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:8



ராஜாராம்
17-03-2011, 12:13 PM
(இந்தப் படைப்பு..ஆத்திகத்தை முன்னிலைப்படுத்தியோ..
நாத்திகத்தை முன்னிலைப்படுத்தியோ...சித்தரிக்கப்பட்டது அல்ல.
இது ஒரு கற்பனையில் படைக்கப்பட்ட பொழுதுப்போக்கு அம்சம்.
1999ல் பதிவுசெய்யப்பட்ட.இப்படைப்பின்...மூலக்கதையில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.)


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTSemQRoXeFAOFXaMelgsgsO2y5Lu9tCyWlrRBa758z4n0J23ckl0XUJ5uS
வைத்தீஷ்வரன் கோவில்...நாகைமாவட்டம்...காலை..8.0மணி...
பிருகுமுனிவர் நாடிமுனிவர் சித்தப்பீடம்....

அசோக்குமார்,அவனது உதவியாளர் ரமேஷ் இருவரும் அமைதியாய் அமர்ந்திருக்க...
பிருகுமுனிவர் சித்தர்பீடத்தின் நிர்வாகி,சுவாமிநாதன்
அசோக்கொடுத்த ஒருசில தகவல்கள் அடங்கிய
காகிதத்தை கூர்ந்து நோக்கிவிட்டு..

"நீங்க என்ன சொல்லவந்திங்க?
அதை முதலில் சொல்லுங்க",
என்றதும்..

"அந்த பேப்பரில் உள்ளதையெல்லாம் படிச்சுப்பார்த்திங்களா?",
அசோக் கேட்க,

"படிச்சேன்...
இதெல்லாம் சித்தர்கள் கணித்து எழுதிய ஓலைச்சுவடிகளின் வரிகள் போல் உள்ளது..",
என்றவர்

"இதை யார் அனுப்பினாங்க?எப்படி அனுப்பினாங்க?",.
என்றுக் கேட்டார்.

'யார் அனுபினாங்கன்னுதான் விசாரணை செய்துக்கொண்டு உள்ளோம்..
ஆனால்..
இதெல்லாம் செல்ஃபோன்னில் எஸ்.எம்.எஸ் வடிவில்
9789781080 என்ற ஒரு நம்பரில் இருந்து வந்தவை",
என்று அசோக் கூறியதும்,

"இதில் குறிப்பிட்டு வந்த செய்திகள் உண்மையில் நடந்ததா?".
என்று அசோக்கினை கேட்டார் சுவாமிநாதன்.

"ஆமாம்...டிரெயின் கவிழப்போதுன்னு மெசெஜ் வந்துச்சு...
அது நடந்துவிட்டது.
மன்னர் உருவில் மரணம் நிகழும்னு என் நண்பனுக்கு மெசெஜ் வந்துச்சு....
அதன்படியே அவன் மைத்துனன் இறந்துப்போனான்...
இதெல்லாம் எப்படி சாத்தியம்?",
என்று அசோக் கேட்டதும்,

மெல்ல சிரித்தபடி,
"2011ல் உலம் அழியப்போதுன்னு போனவருஷம் கணித்து சொன்னார்கள்
விஞ்ஞானிகள்..ஒருசிலர்.
அதை கருவாக வைத்தே,,
2011 (தமிழ் மொழி ஆக்காத்தில்,-உலகின் அழிவின் ஆரம்பம்னு)
ஒர ஆங்கிலத் திரைபடமே வெளியானது.
இன்னக்கு ஜப்பானில் வந்த சுனாமி உலகில் பேரழிவை ஏற்படுத்திருக்கு....
இதற்கு நீங்க என்ன சொல்லுறீங்க?",
என்றார் சுவாமிநாதான்.

"விஞ்ஞானம்னு சொல்லலாம்...
காக்கா உட்க்கார பனம்பழம் விழுந்ததுப் போல,
என்றும் சொல்லலாம்...",
என அசோக் வார்த்தைகளை இழுக்க,

"இருக்கலாம்...நினைக்கலாம்...
இதெல்லாம் சரியான பதில் இல்லையே...",
என்றார் சுவாமிநாதன்,

"அப்படின்னா நீங்க என்ன சொல்லவறீங்க...?"
அழுத்தமாய் கேட்டான் அசோக்,

"ஒருசில விஷயங்கள் சித்தர்கள் காலத்தில் இருந்தே
கணிக்கப்பட்டு அது நடந்தும் இருக்கு.
அதை அறிவியல் வழி சிலர் சொல்லுகிறார்கள்..
சிலர் ஆன்மீக வழியில் சொல்லுகிறார்கள்...",
ஆனால்..
.அப்படி சொல்லவரும் கருத்துக்களில்..
ஒருசிலர் மதச்சாயங்களையும்...
கடவுளின்பெயர்களையும்.
பூசுவதாலும்...
அதை வியாபார நோக்கில் சொல்வதாலும்...
இன்று இப்படிப்பட்ட விஷயங்கள் ஒருக் கேள்விக்குறியாகவே ஆகிவிட்டது..",
என்றவர்,

"மேலும் இதுப்போன்ற விஷயங்கள் வாழ்க்கைக்கு,
ஒருசிறிய வழிகாட்டி அவ்வளோதான்..
ஆனால் ஒருசிலரோ அதுவே வாழவழிசொல்லும் என்று
தனது உழைப்பை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்...",
என்று முடித்தார்.

"இதை அனுப்பிய நபர் பற்றி உங்கக் கருத்து?",
அடுத்து வந்த அசோக்கின் கேள்விக்கு,

"அவர் நிச்சயம் சாதாரண நபர் அல்ல..
அவரை உங்களது அறிவால் கண்டறியுங்கள்.
அப்படிக் கண்டுபிடித்துவிட்டால்...
மேலும் பலவிஷயங்கள் நமக்கு தெரியவரும்..",
என்று தமது இருக்கரங்களாலும்...இறைவனை நோக்கி வணங்கினார்.

"கடைசியாய் ஒருக் கேள்வி....",
எழுந்து நின்றபடி அசோக் கேட்க,

"கேளுங்கள்...",
என்றார் சிரித்தபடி,

"நீங்க சொல்லுவதைப்போலவே....
இவை
ஏதோ ஒரு நம்பிக்கையில்;,
ஏதோ ஒரு சக்தியினால்
உருவானதாகவே இருக்கட்டும்.
ஆனால்...இவை ஏன் நடக்கப்போகும்
பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதில்லை?",
என்றான்.

"புயல் வருவதை கண்டறியும் விஞ்ஞானத்தால்...
சுனாமி வருவதை கண்டறியும் விஞ்ஞானத்தால்...
அவற்றை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?
விஞ்ஞானம்...மெய்ஞானம்..
இவ்விரெண்டாலும் ஒருசில விஷயங்களை கூறமுடியும்...
ஆனால் தடுக்கமுடியாது.. ",
என்றார் அவர்,

"அதான் ஏன்",
அசோக்கின் ஆணித்தரமானக் கேள்விக்கு,

"மன்னிக்கவும்..
நீங்க கேட்கும் கேள்விக்கு,
பதில் கூறும் அறிவோ திறமையோ
எனக்கு இல்லை...",
என்றார் மீண்டும் சிரித்தப்படி.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTftjHMaPyRRiwJKOePhZfvTSRA5uxSwphCvK3Df0Y1InRrTH7I0lpuuA
திருச்சி....உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில்.....மதியம்...12.30மணி...

கோவில் கடைத்தெருவில் பூஜைசாமான்களை வாங்கிக்கொண்டிருந்த
அபிராமியின் பாட்டி மங்களத்தின் கரங்களை மெல்ல தட்டிஅழைத்தார் ஒரு வயோதிகர்.
அதை உணர்ந்து சட்டென திரும்பிய மங்களத்தின் கண்கள் ,'
ஆச்சரியத்திலும்,,,அதிரிச்சியிலும் அகலமாய் விரிய...

"நீங்க காசிநாதன் நம்பூதிரி தானே?",
என்று கேட்டாள்.

"ஆமாம்...நானேதான்...வா என்னுடன் ",
என்றவர் விருவிருவென முன்னே நடந்தார்.
அவரைப் பின் தொடர்ந்தாள் மங்களம்.

இருவரும் ஒரு மண்டபத்தின் அருகே சென்று நின்றனர்..

"எப்படி இருக்கிங்க நம்பூதிரி ஐயா?",

"ம்ம்ம்ம்...பகவதி அருளால நல்லாவே இருக்கேன்,,,,",

"நீங்க என் பேத்தி அபிராமியை சமயபுரம் கோவிலில்
பார்த்து பேசினிங்களாமே...
நீங்க யாருன்னு என்னிடம் கேட்டாள்...
தெரியாதுன்னு சொல்லிட்டேன்...",

"உன் பேத்திக்கு இனிமே வரிசையா நிறைய சோதனைகள் வரும்.
ஆனால் எல்லாமே நல்லபடியா முடிஞ்சிடும்.
அபிராமி உன்னுடைய சொந்தப் பேத்தி இல்லை என்பதுக்கூட
அவளுக்கு இனி தெரிந்துவிடும்...",
என்று அவர் கூறியதும்,

"ஐயையோ...அது தெரிஞ்சிப்போச்சுன்னா....
அவள் மனசு ஒடைஞ்சிப்போயிடுமே....",
மங்களம் பதறினாள்,

"குழந்தைப் பருவத்தில்,,,,
அபிராமி வளர்ந்தது கிருஷ்ணவேனிஅம்மாவிடம்....
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இனி வந்துவிடும்...",
என்றார் காசிநாதன் நம்பூதிரி.

"இருந்தாலும்...
அது தெரிஞ்சிப்போச்சின்னா...
என்கிட்டே இனி எப்போதும்போல் பிரியமா இருப்பாளா?",
மங்களத்தின் கண்கள் கலங்கின,

"அபிராமி உனக்குமட்டும் சொந்தமில்லை...
நீ பழசையெல்லாம் மறந்துட்டியா?
குற்றாலத்தில் நடந்த பழையக்கதைகள் மறந்துப்போச்சா?",
என்ற காசிநாத நம்பூதிரியின் பேச்சில் மார்மம் மறைந்திருந்தது.

"நீங்க இப்ப என்னைப்பார்க்க வந்தது ஏன் ?",
மங்களம் அவரை கேட்க,

"அபிராமிக்கு கல்யாணம் செய்துவைக்க நீ முயற்சி எடுக்கிறே...
அதை நடத்துவது கஷ்டம்..
அவள் ஜனன ஜாதக அமைப்பே விசித்திரமானது...
அவள் அனைவருக்கும் சொந்தமாகும் காலம் நெருங்கிவிட்டது...',
என்றார்.

"அப்படின்னா அவளுக்கு கல்யாணமே ஆகாதா?".,
மங்களத்திற்கு மேலும் அதிர்ச்சியானது,

"என் அறிவுக்கு எட்டியவரை அப்படித்தான் தோனுது...",
என்றவர்,

"நான் இப்ப குற்றாலத்திற்குப் போகப்போறேன்...
உன்னை பிறகு சந்திக்கிறேன்....",
என்றவர்,

"முடிந்தால்...
என்றாவது ஒருநாள்...
நீ கிருஷ்ணவேனிஅம்மாவை குற்றாலத்தில் சந்தித்துப் பேசு",
என்றுக்கூறிவிட்டு,...மெல்ல நகர்ந்தார்...

காசிநாதநம்பூதிரிக் கூறியவை
மங்களத்தின் முகத்தை வெளிறிப்போக வைத்தது.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSSnUF2YzSNqtqqkUoeTiiC_AAalnVjVNll8ufZ8cVuh5bBy_MswOugdTU
பாண்டிச்சேரி,.....சபிதா மருத்துவமனை.....நேருஜிசாலை...மாலை..6.45மணி....

"வாப்பா,...அசோக் நல்லா இருக்கியா....?",
என்றபடி வந்தார் மனநலமருத்துவர்..மணி.

"நல்லா இருக்கேன் மாமா...",
என்ற அசோக்கிடம்,

"என்ன விஷயம் திடீருன்னு இந்தப்பக்கம் வந்திருக்கே?",
என்றார்.

"நடக்கப்போகிற ஒருவிஷயத்தை
முன்க்கூட்டியே யாராவது சொல்லமுடியுமா?",
உள்ளே நுழைந்த வேகத்தில் கேட்டான் அசோக்,.

"ஏன்?திடீருன்னு இப்படி ஒரு சந்தேகம்?",
மருத்துவர் மணி மெல்ல சிரித்தார்,

"நாங்க ஒரு கொலைவழக்கை
விசாரணை செய்துக்கொண்டு இருக்கிறோம்..
ஆனால் எங்கள் விசாரணையை திசைத்திருப்பும் விதமாக,
யாரோ எஸ்.எம்.எஸில் நடக்கப்போவதை அனுப்புகிறார்கள்.
அதான் அப்படிக் கேட்டேன்...",
என்ற அசோக்கிடம்,

"மருத்துவத்தில்...
ஈ.எஸ்.பி...என்று சொல்லுவோம்.
மனித மூளையில் ஏற்படும்,
ரசாயணமாற்றத்தால் ஒருசிலருக்கு
எதிர்காலத்தை கூறும் சக்தி வருவதுண்டு.
ஆனால்...அது சிலகாலங்கள்தான் இருக்கும்.
டீ.எல்.ஈ...என்ற வலிப்பு நோயில்கூட கண்ணுக்கு விநோத காட்சிகளும்,
புலன்களில் அதீதஉணர்ச்சிகளும்,தன்னிலை மறந்த செயல்பாடுகளும் ஏற்படும்...",
என்றார் மணி,

"அப்படின்னா...
எங்களுக்கு மெசெஜ் அனுப்புகிற நபருக்கும்...அப்படி ஏதாவது இருக்குமோ...",
என்ற அசோக்கிடம்,

"பேஷண்ட்டை நேரில் பார்க்காமல் எப்படிடா சொல்லமுடியும்?",
என்றார்,

"கூடிய சீக்கிரம் அந்த நபர் எங்க கையில் சிக்குவான்...",
என்ற அசோக்கிடம்,

"சரி..சரி...
வீட்டுக்கு வந்து உன் அத்தையப் பார்த்துவிட்டு போ,...
இல்லைன்னா...அது அவளுக்கு பெரியக் குறையா ஆகிடும்...",
என்று காரில் ஏறத்தொடங்கினார்.

அசோக்கின் மனமோ
எதிலும் நாட்டம்மில்லாமல் தனது விசாரணை....
எஸ்.எம்.எஸ் செய்தி இவற்றிலே சுற்றி சுற்றி அலைப்பாய்ந்துக்கொண்டிருக்க....
மெல்லா ஈனசுரத்தில் சினுங்கியது அவனது மொபைல்ஃபோன்.....

"ஒன் மெசெஜ் ரிசீவ்டு...",
அவனது செல்ஃப்போன் திரையில் தெரிந்த
வரிகளைக்கண்டு
எஸ்.எம்.எஸை உடனே ஓப்பன் செய்தான் அசோக்.

"உச்சிதனில் வீற்றிருக்கும் விநாயகனும்...
உனை அழைப்பான்....
அவ்விடமே.......
உன் அறிவால் நீ காணும் உலகமெல்லாம்....
தன்னதுவாய்...தான் நிற்கும் காலம் வரும்...
சிற்றம்பல கூத்தனவன் அருள்பதத்தால்....
புதிர்களுக்கு...புரியாத விடைகிடைக்கும்....",


[/COLOR]9789781080...........மொபைல்நம்பரின்....மெசெஜ்
அவன் கண்களில்...ஏட்டுசுவடிப்போல......
வரிகளைத் தந்தன...........................................


(கண்ணாமூச்சி ஆட்டம்......தொடரும்....)


(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821A0.TAMILNADU FILM
CHAMBER/..rajaram..RTD240)

p.suresh
17-03-2011, 12:27 PM
ஏர்டெல் கஸ்டமர் கேர்:ஹலோ,சொல்லுங்க சார், என்ன தகவல் வேணும்?

கஸ்டமர்:9789781080 அப்படிங்ற நம்பர்லேந்து ஒரு சித்தர் அனுப்புறமாதிரி கன்னாபின்னானு sms போகுது. அத block பண்ணணும்;

ஏ.க.கே.:ஸாரி சார், அப்படி எங்களால பண்ணமுடியாது. நீங்க policeலதான் கம்பெள்ய்ன்ட் பண்ணனும்

க:sms போறதே policeக்குதான்.

ஏ.க.கே:கொஞ்ச நேரம் லைன்ல நில்லுங்க சார்

க:ஓட்டுக்காக பிரியாணிப் பொட்டலம் வாங்க இப்ப லைன்லதான் நிக்கிறேன்

ஏ.க.கே:ஸார் நீங்க 2 hours கழிச்சிக் கால் பண்ண முடியுமா?

க; ஏன் அப்பத்தான் உங்களுக்கு ஷிப்ட் முடியுதா?

ஏ.க.கே; server downனா இருக்கு அதான்

க:உங்க சர்வீஸே டவுனா இருக்கு, இப்ப நான் என்ன செய்ய?

ஏ.க.கே: பேசாம தமிழ்மன்றத்துல கண்ணாமூச்சி ஆட்டம் பாருங்க

Nivas.T
17-03-2011, 03:52 PM
கண்ணாமூச்சு
என் கண்ணை கட்டி காட்ல விட்ருச்சு

ஆனா ஒன்னுமட்டும் உண்மை

அது என்னனு ஆடம் - 8 ல் சொல்கிறேன்

நீங்கள் தொடருங்கள் ராரா

ராஜாராம்
18-03-2011, 04:27 AM
நன்றி,
சுரேஷ்,
நிவாஸ் அவர்களுக்கும்

முரளிராஜா
18-03-2011, 11:32 AM
ராரா,
இந்த கதை எப்படி முடியும்னு உனக்காது தெரியுமா?

sarcharan
18-03-2011, 11:49 AM
ராரா,
கதைய முதல்ல முடிப்பீங்களா இல்ல சந்திரகாந்தா சீரியல் மாதிரி பாதியிலேயே உட்டுருவீங்களா?

sarcharan
18-03-2011, 11:52 AM
ராரா,
இந்த கதை எப்படி முடியும்னு உனக்காது தெரியுமா?

மு ரா சித்தர் கிட்டருந்து அடுத்த எஸ் எம் எஸ் அடுத்த பத்தினதாம் .

முரளிராஜா
18-03-2011, 11:53 AM
சாரா,
நீங்க கதைய படிச்சிட்டு அருமை, விறுவிறுப்பா இருக்கு அப்படினு பின்னுட்டம் போடாம இருந்தா
அவனே கதைய அப்பவே நிறுத்திடுவான்.இல்லைனா இப்படிதான் கிறுக்கிகிட்டு இருப்பான்:lachen001:

ராஜாராம்
18-03-2011, 12:03 PM
சாராவும்,முராவும்,நான் லைன்ல இல்லைன்னு கொட்டம்மா அடிக்கிறீங்க?இப்படியெல்லாம் செய்தால்...
அடுத்து கவிதை எழுதி டார்ச்சர் பன்ன ஆரம்பிச்சுடுவேன்....
ஜாக்கிரதை......

sarcharan
18-03-2011, 12:12 PM
சாரா,
நீங்க கதைய படிச்சிட்டு அருமை, விறுவிறுப்பா இருக்கு அப்படினு பின்னுட்டம் போடாம இருந்தா
அவனே கதைய அப்பவே நிறுத்திடுவான்.இல்லைனா இப்படிதான் கிறுக்கிகிட்டு இருப்பான்:lachen001:


சாராவும்,முராவும்,நான் லைன்ல இல்லைன்னு கொட்டம்மா அடிக்கிறீங்க?இப்படியெல்லாம் செய்தால்...
அடுத்து கவிதை எழுதி டார்ச்சர் பன்ன ஆரம்பிச்சுடுவேன்....
ஜாக்கிரதை......

வேலில போற ஓணான எடுத்த கதையா இல்ல இருக்கு...