PDA

View Full Version : ஏதோவொரு தூண்டுதல்...

கீதம்
17-03-2011, 09:34 AM
ஏனென்று தெரியவில்லையென்று
காரணம் சொல்லப்படும் துவக்கங்களின் பின்னே
மறைந்தே இருக்கிறது, ஏதோவொரு தூண்டுதல்...
துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி
பற்பலவுருக்களில்!!

தோள் நனைக்கும் ஒரு
கண்ணீர்த்துளியாகவோ...
வாயில்கடக்குமுன் எழும்
மெல்லிய விசும்பலாகவோ....

முன்னிருக்கையிலிருந்து பின்னே தாவும்
மழலைமுறுவலாகவோ....
நடுக்கத்துடன் தலைதடவி
ஆசிவழங்குமொரு வயோதிகக்கரமாகவோ....

இதமான அணைப்பாகவோ...
இறுக்கமான இதழ்பிணைப்பாகவோ.....
இசையாகவோ... இச்சையாகவோ...

இன்னும் பலவாகவும் இருக்கும் அதன் பேரிலேயே
ஆற்றப்படுகின்றன சில காரியங்கள்,
கைவிடப்படுகின்றன சில!

தள்ளிவைக்கப்படுகின்றன சில தற்கொலைகள்,
தயாராகின்றன சில!
நிறைவேற்றப்படுகின்றன சில சபதங்கள்,
உறுதியிழக்கின்றன சில!

அணைக்கப்படுகின்றன சில உறவுகள்,
விலக்கப்படுகின்றன சில!
விதைக்கப்படுகின்றன சில விரோதங்கள்,
மன்னிக்கப்படுகின்றன சில துரோகங்கள்!

எந்தவொரு நிகழ்வுக்கும் பின்னே
ஏதோவொரு காரணமிருப்பதுபோல்...
எந்தவொரு துவக்கத்தின் பின்னும்
எந்நாளும் மறைந்தே இருக்கிறது,

ஏதோவொரு தூண்டுதல்...
துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி!

முரளிராஜா
17-03-2011, 09:57 AM
ஏதோவொரு தூண்டுதல்..
ஏதோவொரு தூண்டுதல்தான்
உங்கள் கவிதைக்கு புகழ்மாலை
எனை சூட்ட சொல்கிறது.

பிரேம்
17-03-2011, 11:50 AM
கவிதா ரொம்ப நல்லா இருக்கு மேடம்...:)

முரளிராஜா
17-03-2011, 11:54 AM
கவிதா ரொம்ப நல்லா இருக்கு மேடம்...:)
பிரேம், கவிதையா?, கவிதாவா?:confused:

Nivas.T
17-03-2011, 03:40 PM
நற்ச்செயலின் பொழுது
துடிப்பதைவிட தீமை நிகழும் பொழுது
அதன் துடிப்பு அதிகமாகவே
காணப்படும்

உள்ளுணர்வின் உயிரோட்டம்
கவிதை வடிவில்

அருமையான வரத்தைக் கோர்வைகள்
அழகான கரு

கவிதை மிக அருமைங்க

Nivas.T
17-03-2011, 03:41 PM
கவிதா ரொம்ப நல்லா இருக்கு மேடம்...:)

:eek::eek::eek::eek::eek:

கவனிக்கப்பட் வேண்டிய விஷயம்

:sprachlos020::sprachlos020::sprachlos020:

அக்னி
17-03-2011, 07:17 PM
அமரன் அண்மையில் ஒரு பதிவிற் சொல்லியிருந்தார்,
தூண்டல் இல்லாமற் துலங்கல் இல்லை என்று...

தூண்டல்களை நம்மாற் தடுக்கமுடியாது...
ஆனால்,
விளைவுகள் விபரீதமாகுமெனில்,
கட்டுப்படுத்துவது நம்மால் முடியுமானது...
அவசியமானதும் கூட...

தூண்டல்களின் விபரிப்புக்கள் அற்புதம்...
பாராட்டு கீதம்+அக்கா...

ஜானகி
18-03-2011, 01:34 AM
இதைத்தான்,

இறைச் செயல் என்கிறானோ..... ஆத்திகவாதி...?

வினைப் பயன் என்கிறானோ......வேதாந்தி....?

மனசாட்சி என்கிறானோ...பகுத்தறிவாதி...?

தலைச்சுழி என்கிறானோ......சம்சாரி....?

ராஜாராம்
18-03-2011, 04:30 AM
கவிதை வடிவில் அருமையான தத்துவம்.
பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் தூண்டுதல் படைப்புக்கள்

பிரேம்
18-03-2011, 06:13 AM
பிரேம், கவிதையா?, கவிதாவா?:confused:

:eek::eek::eek::eek::eek:

கவனிக்கப்பட் வேண்டிய விஷயம்

:sprachlos020::sprachlos020::sprachlos020:

ஹி..ஹி..சாரி சாரி..
கவிதை தான்...
வழக்கம்போல அவசரப்பட்டுட்டேன்..
(i missed the " I "... thats why I had " shy " )

ஜானகி
18-03-2011, 10:08 AM
விட்டுவிடுங்கள் பிரேம் அவர்களே...இதுவும் ஏதோ தூண்டுதலின் பேரில் தான் நடந்திருக்கிறது....! விளைவுகள் நல்லதாக இருந்தால், சரி...

பூமகள்
18-03-2011, 11:04 AM
உலகம் இவ்வகை தூண்டல்களால் தானே உருவானது.. நாமும் அப்படித்தான் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கிறோம்..

நான்கு காலில் நடக்கும் குரங்கு இனம், இரு காலில் நடக்க ஏதேனும் ஒரு தூண்டுதல் இருந்திருக்க வேண்டும்.

நல்ல கவிதை கீதம் அக்கா.

--

ஹா ஹா.. பிரேம் வெட்கப்பட வேண்டாம்.. எங்க கிட்ட மட்டும் சொல்லுங்க.. யாரு அந்த கவிதா??!! :D:D

சிவா.ஜி
18-03-2011, 01:37 PM
அழகான கவிதை. ஏதோ ஒரு தூண்டுதல்தான் எல்லா விளைவுகளுக்கும் காரணமாய் அமைகிறது. அதை ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்கம்மா கீதம்.

வாழ்த்துக்கள்.

கீதம்
20-03-2011, 12:22 AM
ஏதோவொரு தூண்டுதல்..
ஏதோவொரு தூண்டுதல்தான்
உங்கள் கவிதைக்கு புகழ்மாலை
எனை சூட்ட சொல்கிறது.

ஏதோவொரு தூண்டுதல்தான் என்னை உங்கள் பின்னூட்டத்தை ரசிக்கச் சொல்கிறது. நன்றி முரளிராஜா.

கீதம்
20-03-2011, 12:26 AM
கவிதா ரொம்ப நல்லா இருக்கு மேடம்...:)

நன்றி பிரேம். மற்றவர்கள் போல் உங்களைக் கேள்வி கேட்கமாட்டேன். கவிதை என்பதை கவிதா என்று இந்தியில் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்வேன்.:)

(மேடம் எதுக்கு? நான் என்ன உங்க ஸ்கூல் டீச்சரா? கீதம் அல்லது அக்கா என்றால் மகிழ்வேன்)

கீதம்
20-03-2011, 12:29 AM
நற்ச்செயலின் பொழுது
துடிப்பதைவிட தீமை நிகழும் பொழுது
அதன் துடிப்பு அதிகமாகவே
காணப்படும்

உள்ளுணர்வின் உயிரோட்டம்
கவிதை வடிவில்

அருமையான வரத்தைக் கோர்வைகள்
அழகான கரு

கவிதை மிக அருமைங்க

விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நிவாஸ்.

கீதம்
20-03-2011, 12:31 AM
அமரன் அண்மையில் ஒரு பதிவிற் சொல்லியிருந்தார்,
தூண்டல் இல்லாமற் துலங்கல் இல்லை என்று...

தூண்டல்களை நம்மாற் தடுக்கமுடியாது...
ஆனால்,
விளைவுகள் விபரீதமாகுமெனில்,
கட்டுப்படுத்துவது நம்மால் முடியுமானது...
அவசியமானதும் கூட...

தூண்டல்களின் விபரிப்புக்கள் அற்புதம்...
பாராட்டு கீதம்+அக்கா...

ஒருவேளை, அமரன் சொன்னதே இந்தக் கவிதையின் தூண்டுதலாகவும் இருக்கலாம். விமர்சனப்பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்னி.

கீதம்
20-03-2011, 12:33 AM
இதைத்தான்,

இறைச் செயல் என்கிறானோ..... ஆத்திகவாதி...?

வினைப் பயன் என்கிறானோ......வேதாந்தி....?

மனசாட்சி என்கிறானோ...பகுத்தறிவாதி...?

தலைச்சுழி என்கிறானோ......சம்சாரி....?

உங்கள் சிந்தனை அற்புதம் ஜானகி அவர்களே..

இப்படியொரு அற்புத சிந்தனையைத் தூண்ட இக்கவிதை உதவியதே என்று மகிழ்கிறேன்.:)

கீதம்
20-03-2011, 12:37 AM
உலகம் இவ்வகை தூண்டல்களால் தானே உருவானது.. நாமும் அப்படித்தான் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கிறோம்..

நான்கு காலில் நடக்கும் குரங்கு இனம், இரு காலில் நடக்க ஏதேனும் ஒரு தூண்டுதல் இருந்திருக்க வேண்டும்.

நல்ல கவிதை கீதம் அக்கா.

நல்ல அலசல். பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி, பூமகள்.

கீதம்
20-03-2011, 12:38 AM
அழகான கவிதை. ஏதோ ஒரு தூண்டுதல்தான் எல்லா விளைவுகளுக்கும் காரணமாய் அமைகிறது. அதை ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்கம்மா கீதம்.

வாழ்த்துக்கள்.

நன்றி அண்ணா... இந்தப் பின்னூட்டமே தூண்டுதலாய் இன்னொரு கவிதை எழுதச் செய்யலாம். :)

பிரேம்
22-03-2011, 12:55 AM
பிரேம், கவிதையா?, கவிதாவா?:confused:

:eek::eek::eek::eek::eek:

கவனிக்கப்பட் வேண்டிய விஷயம்

:sprachlos020::sprachlos020::sprachlos020:

விட்டுவிடுங்கள் பிரேம் அவர்களே...இதுவும் ஏதோ தூண்டுதலின் பேரில் தான் நடந்திருக்கிறது....! விளைவுகள் நல்லதாக இருந்தால், சரி...

ஹா ஹா.. பிரேம் வெட்கப்பட வேண்டாம்.. எங்க கிட்ட மட்டும் சொல்லுங்க.. யாரு அந்த கவிதா??!! :D:D

முடியல..யாரவது என்ன காப்பாத்துங்க..!! :eek:

ஆளுங்க
22-03-2011, 01:40 PM
ஏதோ ஒரு தூண்டுதல் தான் கவிதையைப் படிக்க என்னை அழைத்தது...

அனைவரையும் படிக்க தூண்டும் கவிதை..
நன்று!!

கீதம்
22-03-2011, 08:27 PM
ஏதோ ஒரு தூண்டுதல் தான் கவிதையைப் படிக்க என்னை அழைத்தது...

அனைவரையும் படிக்க தூண்டும் கவிதை..
நன்று!!

நன்றி ஆளுங்க.:)

சுகந்தப்ரீதன்
31-03-2011, 08:42 AM
தேடிக் கிடைப்பதில்லை எனத் தெரிந்த ஒருபொருளை மனம் தேடத் துவங்கியதோ..?!:smilie_abcfra:

ஒவ்வொரு தேடலின் பின்னே யாருக்கும் தெரியாமலும் யாராலும் தேடப்படாமலும் தேங்கி தெளிவற்று கிடப்பவற்றை தேடித்துவங்கும் பயணமாய் இந்த கவிதை..!! இந்த பயணத்தின் பயனென்று கீதம் அக்கா எண்ணுவதென்னவோ..?!:D

கீதம்
31-03-2011, 09:06 PM

தூண்டலைப் பற்றி எழுதிய கவிதை உங்களுக்கு தேடலைப் பற்றிய தேடலைத் தூண்டியிருக்கிறதே...:icon_b:

பின்னூட்டத்துக்கு நன்றி சுகந்தவாசன்.:)

இளசு
14-04-2011, 08:55 PM
வீணை பேசும் - அதை மீட்டும்
விரல்களைக் கண்டு

-- கவியரசன் வரியிது!

பாறைமேல் விதைக்காதீர்!

-- பரமபிதா சொன்னது!

தீதும் நன்றும் பிறர்தர வாரா
-- கணியன் கணிப்பிது..

தூண்டத்தக்க மனமின்றி
எண்ணம், எழுத்து, செயல் விளைவில்லை...

-- இக்கவிதை சொல்லும் ஆழ்சேதி இது.

பாராட்டுகள் கீதம்...

கீதம்
14-04-2011, 10:21 PM
வீணை பேசும் - அதை மீட்டும்
விரல்களைக் கண்டு

-- கவியரசன் வரியிது!

பாறைமேல் விதைக்காதீர்!

-- பரமபிதா சொன்னது!

தீதும் நன்றும் பிறர்தர வாரா
-- கணியன் கணிப்பிது..

தூண்டத்தக்க மனமின்றி
எண்ணம், எழுத்து, செயல் விளைவில்லை...

-- இக்கவிதை சொல்லும் ஆழ்சேதி இது.

பாராட்டுகள் கீதம்...

மனம் நிறைந்த நன்றி இளசு அவர்களே.