PDA

View Full Version : இந்தியக் குடிமகன்...!



pkarthi28
17-03-2011, 07:51 AM
அழுக்கேறியே
உருமாற்றம் அடைந்த முகம்...

மானம் காக்கும்
காலம் கடந்த சட்டை...

சோர்வை
ஓவியமாக்கிய கண்கள்...

இவற்றுடன்,
கடைத்தெரு ஓரமாய் கடிதுண்ண சத்தின்றி
கையில் திருஷ்டிக்கு உடைத்த தேங்காய்...

ஆம்,
இவரும் ஒரு இந்தியக் குடிமகன்...!

முரளிராஜா
21-03-2011, 04:04 PM
கவிதையின் அர்த்தம் புரியவில்லை நண்பா

கீதம்
22-03-2011, 12:02 AM
அழுக்கேறியே
உருமாற்றம் அடைந்த முகம்...

மானம் காக்கும்
காலம் கடந்த சட்டை...

சோர்வை
ஓவியமாக்கிய கண்கள்...

இவற்றுடன்,
கடைத்தெரு ஓரமாய் கடிதுண்ண சத்தின்றி
கையில் திருஷ்டிக்கு உடைத்த தேங்காய்...

ஆம்,
இவரும் ஒரு இந்தியக் குடிமகன்...!

வர்ணனைகள் சாட்சி,
சிதறுதேங்காய்களே
அவன் ஜீவிதத்தின் ஆட்சி!

வறுமையோ?
வஞ்சித்த உறவுகளோ?
பெருங்'குடி'மகனோ?
மகனின் குடியினின்று
மறுதலிக்கப்பட்டவரோ?
முதுமையோ?
முற்றிய ரோகியோ?
பிச்சைக்காரனோ?
மனம் பேதலித்தவனோ?

காணும் அவலம் யதார்த்தம்.
எனினும் கவிக்காட்சியிலொரு அழுத்தம்.
பாராட்டுகள்.

pkarthi28
23-03-2011, 06:39 AM
வர்ணனைகள் சாட்சி,
சிதறுதேங்காய்களே
அவன் ஜீவிதத்தின் ஆட்சி!

வறுமையோ?
வஞ்சித்த உறவுகளோ?
பெருங்'குடி'மகனோ?
மகனின் குடியினின்று
மறுதலிக்கப்பட்டவரோ?
முதுமையோ?
முற்றிய ரோகியோ?
பிச்சைக்காரனோ?
மனம் பேதலித்தவனோ?

காணும் அவலம் யதார்த்தம்.
எனினும் கவிக்காட்சியிலொரு அழுத்தம்.
பாராட்டுகள்.

இரசித்து பாராட்டுவதே ஒரு கவிதைக்கு கிடைக்கும் முதல் பரிசு...
பரிசுக்கு மிக்க நன்றி நண்பரே...! :icon_b:

lolluvathiyar
23-03-2011, 12:07 PM
கவிதையின் அர்த்தம் புரியவில்லை நண்பா[/QUஓடே]
மிகவும் சிம்பிளாக அழகாக எழுதி இருக்கும் கவிதை புரியவில்லை என்று சொன்னது ஆச்சர்யம்.
நொந்து நூடில்ஸான ஒரு ஏழையை காட்டி இவரும் இ ந்திய குடிமகன் என்று அடையாளம் கவிதை மூலம் சொல்லி இருக்கிறார்.
[QUOTE=pkarthi28;518299]கடைத்தெரு ஓரமாய் கடிதுண்ண சத்தின்றி
கையில் திருஷ்டிக்கு உடைத்த தேங்காய்...
இந்த வரி எனக்கு மிகவும் பிடிச்சது. பாராட்டுகள். இன்னும் பல கவிதை எழுதுங்க.

நாஞ்சில் த.க.ஜெய்
23-03-2011, 01:01 PM
கடைகோடி இந்தியனின் வாழ்வு ஒரு கருத்தாளமிக்க கவிதையில் ....வாழ்த்துகள் நண்பரே ...

pkarthi28
24-03-2011, 05:49 AM
[QUOTE=முரளிராஜா;519007]கவிதையின் அர்த்தம் புரியவில்லை நண்பா[/QUஓடே]
மிகவும் சிம்பிளாக அழகாக எழுதி இருக்கும் கவிதை புரியவில்லை என்று சொன்னது ஆச்சர்யம்.
நொந்து நூடில்ஸான ஒரு ஏழையை காட்டி இவரும் இ ந்திய குடிமகன் என்று அடையாளம் கவிதை மூலம் சொல்லி இருக்கிறார்.

இந்த வரி எனக்கு மிகவும் பிடிச்சது. பாராட்டுகள். இன்னும் பல கவிதை எழுதுங்க.

'மன்றத்தின் தூண்' என்பவரிடம் இருந்து இந்த பாராட்டை பெறுவதில் உற்சாகத்துடன் பெரும் மகிழ்ச்சி...
பிடித்த வரிகளை குறிப்பிட்டமைக்கு நன்றி...:)

pkarthi28
24-03-2011, 05:51 AM
கடைகோடி இந்தியனின் வாழ்வு ஒரு கருத்தாளமிக்க கவிதையில் ....வாழ்த்துகள் நண்பரே ...

இளம் புயலின் வாழ்த்துக்கு நன்றி... :)

அனுராகவன்
28-03-2011, 12:11 PM
நல்ல கவி நண்பரே!!
மேலும் படைங்கள் நண்பா.....