PDA

View Full Version : அன்னையே!!!Nivas.T
15-03-2011, 04:34 PM
அழகாய் இருந்து
அமைதியாய் கிடந்து
மனதை ஆட்கொள்கிறாய்

சிலநேரம் ஆர்ப்பரித்து
அள்ளிக் கொ(ல்)ள்கிறாய்
நீயே நின் மக்களை

மரங்களைப் பெயர்த்தாய்
பரவாயில்லை

அனால் நீ அறுத்துக்கொண்ட
மொட்டுக்கள் எத்தனை?
பிய்த்துப்போன பூக்கள்
எத்தனை?
அள்ளிச்சென்ற பிஞ்சுகள்தான்
எத்தனை? எத்தனை?

எத்தனைக் கவிங்ஞ்னை அழித்தாயோ?
எத்தனை மா மனிதனை அழித்தாயோ?
எண்ணிச் சொல்ல இயலுமா?

உனக்குப் பசித்தால்
உன் பிள்ளைகளை நீயே
உட்க்கொள்வதா?

உன்னை அழகுபத்திக்கொள்ள
இத்தனை உயிர்களை
உருக்குவதா?

பிள்ளைகளின் இரத்தத்தில்
தாய் மின்னிக் கொள்வதா?

நீ புரண்டு படுத்து
எங்களை அழிவில் ஆழ்த்துவதா?

மலைகளை பெயர்த்துவிட்டு
பிணங்களை குவிக்கப் பார்க்கிறாய்

உன் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
மண்டை ஓடுகளை தண்ணீரால்
தள்ளிவிட்டுப் பார்க்கிறாய்

நீங்களே ஏன்?
நானிருக்கையில் என்கிறாயா?

வேண்டாம் இந்த விளையாட்டு
போதும் இனியேனும்
இதனை நிப்பாட்டு

ஷீ-நிசி
15-03-2011, 05:03 PM
வலியோடு எழுதியிருக்கிறீர்கள் இந்த கவிதையை... நன்கு உணர முடிகிறது நண்பரே...

இருக்கும் இடம் போதவில்லையென்றா
எங்கள் வீதியில் வந்து விளையாடினாய்?!

இல்லை இல்லை - எங்கள்
விதியில் அல்லவா விளையாடினாய்?!

சுனாமி தமிழகத்தை தாக்கியபோது கடல் நீர் என்ற தலைப்பில் எழுதிய வரிகள்..

ஜானகி
15-03-2011, 05:04 PM
அன்னையாயிருந்தால் இவ்வாறெல்லாம் செய்ய மனம் வருமா... சிற்றன்னையோ...?

[சிற்றன்னைகள் மன்னிக்க...]

கீதம்
15-03-2011, 10:39 PM
இயற்கைக்கு விரோதமாய் செயல்படும்போது அன்னை என்கிற நினைப்பு எவருக்கும் இருப்பதில்லை. அவளுக்கு ஊறு செய்கிறோம், அவள் பதிலுக்கு செய்தால் புலம்புகிறோம். அன்னை என்று சொல்லி அன்பால் அடக்கப்பார்க்கிறோம். வினையை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்த்தால் முடியுமா?

இனியாவது இயற்கையைப் பேணும் முயற்சியில் ஒவ்வொருவரும் இறங்குவோம்.

ஆழ்கடலின் கொந்தளிப்பென
ஆழ்மனக் கொந்தளிப்பை
அப்படியே எடுத்தியம்புகிறது, கவிதை.

Nivas.T
16-03-2011, 05:14 AM
வலியோடு எழுதியிருக்கிறீர்கள் இந்த கவிதையை... நன்கு உணர முடிகிறது நண்பரே...

இருக்கும் இடம் போதவில்லையென்றா
எங்கள் வீதியில் வந்து விளையாடினாய்?!

இல்லை இல்லை - எங்கள்
விதியில் அல்லவா விளையாடினாய்?!

சுனாமி தமிழகத்தை தாக்கியபோது கடல் நீர் என்ற தலைப்பில் எழுதிய வரிகள்..

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நிசி

முரளிராஜா
16-03-2011, 05:18 AM
உங்கள் சிந்தனை அருமை வாழ்த்துக்கள் நிவாஷ்

Nivas.T
16-03-2011, 05:25 AM
அன்னையாயிருந்தால் இவ்வாறெல்லாம் செய்ய மனம் வருமா... சிற்றன்னையோ...?

[சிற்றன்னைகள் மன்னிக்க...]

தெரியவில்லையே மேடம்

மிக்க நன்றி

Nivas.T
16-03-2011, 06:19 AM
இயற்கைக்கு விரோதமாய் செயல்படும்போது அன்னை என்கிற நினைப்பு எவருக்கும் இருப்பதில்லை. அவளுக்கு ஊறு செய்கிறோம், அவள் பதிலுக்கு செய்தால் புலம்புகிறோம். அன்னை என்று சொல்லி அன்பால் அடக்கப்பார்க்கிறோம். வினையை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்த்தால் முடியுமா?

இனியாவது இயற்கையைப் பேணும் முயற்சியில் ஒவ்வொருவரும் இறங்குவோம்.

ஆழ்கடலின் கொந்தளிப்பென
ஆழ்மனக் கொந்தளிப்பை
அப்படியே எடுத்தியம்புகிறது, கவிதை.

உண்மைதாங்க

தீதும் நன்றும் பிறர் தர வாரா

அறிவியலில் புரட்சி என்று
அறியாமையில் அலைகிறோம்
துன்பம் வந்த பிறகும்
தூய்மை கொளவதில்லை
நம் அறிவு
என்ன மானிடப் பிறவியோ????

பின்னூட்டத்திற்கும்
பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க

Nivas.T
16-03-2011, 06:22 AM
உங்கள் சிந்தனை அருமை வாழ்த்துக்கள் நிவாஷ்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முரளிராஜா

பிரேம்
16-03-2011, 01:02 PM
"உன் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
மண்டை ஓடுகளை தண்ணீரால்
தள்ளிவிட்டுப் பார்க்கிறாய்"

கவிதை மிக அருமை..Nivas.
பேனாவில் கண்ணீரை நிரப்பி எழுதியது போல..
வலிகள் சுமந்த வார்த்தைகள்..

Nivas.T
16-03-2011, 01:55 PM
"உன் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
மண்டை ஓடுகளை தண்ணீரால்
தள்ளிவிட்டுப் பார்க்கிறாய்"

கவிதை மிக அருமை..Nivas.
பேனாவில் கண்ணீரை நிரப்பி எழுதியது போல..
வலிகள் சுமந்த வார்த்தைகள்..

இனியாவது இப்படி நடவாமல் இருக்க
இறைவனை பிராத்திப்போம்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பிரேம்

சிவா.ஜி
16-03-2011, 02:01 PM
சீண்டியதால் சிலிர்த்தாள்...
மீண்டும் அவளே சரியாக்குவாள்..
மீண்டும் மீண்டும் சீண்டினால்
மீளாத்துயர்தான்..
அறிந்திடடா மானிடா...இல்லையேல் நீ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோனிடா.....!!!

நல்லாருக்கு நிவாஸ். அன்னையானாலும் எவ்வளவுதான் பொறுப்பாள். வாழ்த்துக்கள்.

Nivas.T
16-03-2011, 02:09 PM
சீண்டியதால் சிலிர்த்தாள்...
மீண்டும் அவளே சரியாக்குவாள்..
மீண்டும் மீண்டும் சீண்டினால்
மீளாத்துயர்தான்..
அறிந்திடடா மானிடா...இல்லையேல் நீ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோனிடா.....!!!

நல்லாருக்கு நிவாஸ். அன்னையானாலும் எவ்வளவுதான் பொறுப்பாள். வாழ்த்துக்கள்.

உண்மை தான் அண்ணா

எப்பொழுது இதனை புரிந்து கொள்வார்களோ? இந்த பாழாய் போன மனிதர்கள்

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா