PDA

View Full Version : உறுதியானது இறுதியாக காங் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்



ஆதி
15-03-2011, 11:35 AM
இதுகாறு நீடித்து வந்த திமுக காங் இடையிலான தொகுதி பங்கீடு குறித்த இழுப்பறி இன்று உறுதியான இறுதி முடிவை எட்டியுள்ள நிலையில், காங் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியாகி உள்ளது.


1.திருத்தணி
2.பூந்தமல்லி (தனி)
3.ஆவடி
4.திரு.வி.க.நகர் (தனி)
5.ராயபுரம்
6.அண்ணா நகர்
7.தியாகராய நகர்
8.மயிலாப்பூர்
9.ஆலந்தூர்
10.ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11.மதுராந்தகம் (தனி)
12.சோளிங்கர்
13.வேலூர்
14.ஆம்பூர்
15.கிருஷ்ணகிரி
16.ஓசூர்
17.செங்கம் (தனி)
18.கலசப்பாக்கம்
19.செய்யாறு
20.ரிஷிவந்தியம்
21.ஆத்தூர் (தனி)
22.சேலம் வடக்கு
23.திருச்செங்கோடு
24.ஈரோடு மேற்கு
25.மொடக்குறிச்சி
26.காங்கேயம்
27.உதகை
28.அவிநாசி (தனி)
29.திருப்பூர் தெற்கு
30.தொண்டாமுத்தூர்
31.சிங்காநல்லூர்
32.வால்பாறை (தனி)
33.நிலக்கோட்டை (தனி)
34.வேடசந்தூர்
35.கரூர்
36.மணப்பாறை
37.முசிறி
38.அரியலூர்
39.விருத்தாச்சலம்
40.மயிலாடுதுறை
41.திருத்துறைப்பூண்டி (தனி)
42.பாபநாசம்
43.பட்டுக்கோட்டை
44.பேராவூரணி
45.திருமயம்
46.அறந்தாங்கி
47.காரைக்குடி
48.சிவகங்கை
49.மதுரை வடக்கு
50.மதுரை தெற்கு
51.திருப்பரங்குன்றம்
52.விருதுநகர்
53.பரமக்குடி (தனி)
54.ராமநாதபுரம்
55.விளாத்திகுளம்
56.ஸ்ரீவைகுண்டம்
57.வாசுதேவநல்லூர் (தனி)
58.கடையநல்லூர்
59.நாங்குனேரி
60.ராதாபுரம்
61.குளச்சல்
62.விளவங்கோடு
63.கிள்ளியூர்

முரளிராஜா
15-03-2011, 11:38 AM
இந்த தொகுதியில் அவர்களின் வெற்றி வாய்ப்பை அலசலாமே

ஆதி
15-03-2011, 11:44 AM
அலசலோடு தான் திரி துவங்கினேன், அவசரத்தில் அழுத்திய தவரான பட்டனால் எல்லாம் அழிந்து போய்விட்டது.. :(

ஆதி
15-03-2011, 12:00 PM
இம்முறை காங்கிற்கு சென்னையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன அதில், முக்கியமான திமுக தொகுதி ஒன்றும் அடங்கும், அதுதான் அண்ணாநகர்.
இது நம் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காட்டார் தொகுதி..

திரு.வி.க.நகர் (தனி) - (புது தொகுதி)

ராயபுரம் - அதிமுக வென்ற தொகுதி, முன்னால் அமைசர் ஜெயகுமார் உடையது

அண்ணா நகர் - ஆற்காட்டார் தொகுதி, திமுகவின் முக்கியமான தொகுதி

தியாகராய நகர் - அதிமுக வென்ற தொகுதி

மயிலாப்பூர் - அதிமுக வென்ற தொகுதி, எஸ்.வி.சேகருடையது

அண்ணா நகர் திவிர மற்ற இடங்களில் காங் வெல்ல வாய்பில்லை. ராயபுரம், தி.நகர் அசைக்க முடியாத அதிமுக கோட்டையாக மாறிவிட்டது. மயிலாப்பூரில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது என்றாலும் வெல்பவர்கள் குறைந்த ஒட்டு வித்யாசத்தில் வெல்வார்கள் என்றே தோன்றுகிறது. எஸ்.வி.சேகரை மீண்டும் காங் மயிலாப்பூரில் நிறுத்தலாம். அண்ணாநகரில் திருநாவுக்கரசர் போட்டியிட அதிகப்படியான வாய்ப்புள்ளது.

aren
15-03-2011, 03:15 PM
சென்னையில் திநகர் மற்றும் மயிலாப்பூரில் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பிருக்கிறது. அண்ணாநகரை பிடுங்கிக்கொண்டது போலிருக்கிறது ஆகையால் திமுகவினரின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு விழ வாய்ப்பிருக்கிறது.

திருவிக நகர் பெரம்பூர் மற்றும் புரசைவாக்கம் தொகுதிகளிலிருந்து சில பகுதிகளைக்கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கேயும் திமுகவிற்கு பலம் அதிகம், ஆனால் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு போக வாய்ப்பிருக்கிறது.

திருவிக நகருக்கு பதில் திருவல்லிக்கேணியை வாங்கிக்கொண்டிருக்கலாம்.

ராயபுரம் நிச்சயமாக தோல்விதான்.

அன்பழகன், ஆர்காட்டார் ஆகியோர் எங்கே நிற்பார்கள் என்று தெரியவில்லை. அன்பழகன் விருகம்பாக்கம் தொகுதிக்குப் போக வாய்ப்பிருக்கிறது.

ஆதி
15-03-2011, 03:18 PM
அன்பழகன் வில்லிவாக்கத்து நகர்கிறார் அண்ணா, கலைஞர் திருவாரூர், ஸ்டாலின் வேளச்சேரி, இன்னும்/இதிலும் சில மாறுதல்கள் இருக்கலாம், பார்ப்போம்..

ஆற்காட்டார் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பாததும், அண்ணாநகர் போனதற்கு காரணமாக சொல்கிறார்கள், திருநாவுக்கரசரும் அண்ணா நகரிலேயே இருப்பதால், அண்ணா நகரில் அவரை போட்டி வைப்பார்க்கள் அண்ணா, ஆதலால் ஜெய்க கொஞ்சம் வாய்ப்பிருக்கு என்றே தோன்றுகிறது.....

lolluvathiyar
18-03-2011, 08:45 AM
அலசலோடு தான் திரி துவங்கினேன், அவசரத்தில் அழுத்திய தவரான பட்டனால் எல்லாம் அழிந்து போய்விட்டது.. :(
ஏன் உங்களுக்கு காங்கிரஸ் மேல அப்படி ஒரு கொல வெறி ஆரம்பத்டுலயே டெலிட் பட்டனை அமுக்கீட்டீங்க.

Nivas.T
18-03-2011, 09:32 AM
உறுதியானது இறுதியாக காங் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்

இதுதான் முடிவு :sprachlos020::sprachlos020:

இத்தைதான் எதிர் பார்க்கிறேன் :sprachlos020::sprachlos020: