PDA

View Full Version : விடியவில்லை



மீனலோஷனி
06-04-2003, 06:04 PM
கண்மணியே என்றாய்
கண்ணடித்தே சொன்னாய்
காதலியே எனை இன்று
காதலில் சிக்கவைத்தாய் என்றாய்

பொய்க்காதல் பல உண்டு
பொய்யன் நான் இல்லை
பொன்னான உன்னை
பொழுதெல்லாம் காப்பாய் என்றாய்

நீ சொன்ன கதை
என் மனதை நெருட
நீண்ட நாள் உனை நினைத்தேன்
நித்திரையிலும் மீட்டெடுத்தேன்
உன் பாசம் என் மனதை நெகிழ
உன்னை நேசித்தேன்

இதை அறிந்த நீ
இணையில்லா இன்பம் உற்றாய்
இணைந்த என்னோடு
இயல்பாகப் பழகினாய்

தொடக்கத்தில் எம் காதல்
தொடுகையில்லா கூடல்
இந் நிலமை மாறியது
இடையில் கை படர்ந்தது

இரண்டு மாதங்கள் கழிந்தன
இன்னும் உன்னைக் காணவில்லை
இரவு நேர ஒத்திகை பின்
இருண்ட என் வாழ்வு விடியவில்லை

rambal
06-04-2003, 06:10 PM
வாருங்கள் மீனா அவர்களே..
நல்ல கவிதை..
இரவு நேர ஒத்திகைக்குத்தானே
அந்தக் காதல்..
எங்கே நல்லவனை நம்புகிறார்கள் இந்தப்பெண்கள்?

இளசு
06-04-2003, 07:13 PM
காதல் நாடகம் பாதியில் நின்றது
ஒத்திகையின் கருப்பு அரிதாரம் பூசிய கறை...
இருட்டாய்.. இன்னும் விடியவில்லை....

அருமை மீனா அவர்களே, பாராட்டுகள்.

gans5001
07-04-2003, 03:46 AM
உங்களின் இன்னொரு கவிதைக்கான் கேள்விக்கு இந்த கவிதையில் விடை இருக்கிறது மீனா

Narathar
07-04-2003, 04:41 AM
நல்ல கவிதை மீனா.......
தமிழ் மன்றுக்கு இன்னொறு கவிதாட்சாயினி..........
வாழ்த்துக்கள்