PDA

View Full Version : வேர் நட்பு..!



பூமகள்
15-03-2011, 09:10 AM
(http://poomagal.blogspot.com/2011/03/blog-post_14.html)



http://1.bp.blogspot.com/-5RSl_FWKCD8/TX3j_GN5YaI/AAAAAAAACuE/J1zC780DByE/s400/hidinggirl (http://1.bp.blogspot.com/-5RSl_FWKCD8/TX3j_GN5YaI/AAAAAAAACuE/J1zC780DByE/s1600/hidinggirl)

அடை மழை கால
புழுக்கங்கள் போல்
விடை தெரியாத
உன் மௌனங்கள்..!!

உரக்க எழுதினாலும்
இரங்கவில்லை இதயம்..
இரவு முழுக்க
ஈரம் எங்கும்…!!

பரிமாறல்களின்றி..
பார்வைகளின்றி..
பாசம் பேச
வேற்று மொழியை
விரும்பவில்லை நான்..!!

உன் கரம் பற்றி
விழி ஊன்றி
ஒரேயொரு முறை
நாம் நட்பு சமைப்போம்..!!

பகிர்தல் நட்பிற்கழகாம்..
பகிர ஏதுமில்லையெனினும்..
பகிராமலே பாத்திரம் நிரம்புவது
நட்பில் மட்டுமே சாத்தியம்..!!
̀̀
அன்பின் ஊற்றை
அந்த நாள் நினைவுகளை
அழுந்த வாசிக்கையில்
நிரம்பி விடும் கண்ணீருக்கேனும்
பதில் சொல்வாயா நீ…??!!

ஜானகி
15-03-2011, 09:14 AM
' பூ ' வைக் கிழித்த முள்...எங்களையும் காயப் படுத்துகிறது....

பூமகள்
15-03-2011, 09:18 AM
காயப்பட்டதால் காட்ட விரும்பமின்றி விலகிக் காயப்படுத்துகிறதோ நட்பூ?

நன்றிகள் ஜானகி அம்மா. :)

ஜானகி
15-03-2011, 09:30 AM
முட்கள் காய்ந்து உதிர்ந்துவிடும்.....

நட்பும் மீண்டும் மலர்ந்துவிடும்....

உண்மையெனும் உரமிருந்தால்....

திண்மையெனும் நீர் அருந்தியே.....

வேர்கள் உயிர்க்க காத்திருப்பாய் !

ஓவியன்
15-03-2011, 09:33 AM
பகிர்தல் நட்பிற்கழகாம்..
பகிர ஏதுமில்லையெனினும்..
பகிராமலே பாத்திரம் நிரம்புவது
நட்பில் மட்டுமே சாத்தியம்..!!

இந்த வரிகள் மட்டும் போதும் பூமகள் நட்பின் அழகினைப் படம் பிடித்துக் காட்ட....

வாழ்க்கை எனும் வேக இயந்திரத்தில் அகப்பட்டு
திசைக்கு ஒன்றாய் சிதறுப்பட்டு
ஓடிக் கொண்டிருந்தாலும்...

ஓரே எண்ணத்துடன்,
புரிதலுடன் ஓடிக் கொண்டிருக்க
நட்பினால் தான் முடிகிறது....

அந்த வேரினை அழகாக படம் பிடித்த கவிதைக்கு என் வாழ்த்துகளும்..!!

த.ஜார்ஜ்
15-03-2011, 02:05 PM
அன்பு பூமகள்... ஓவியன் குறிப்பிட்ட வரிகளையே சிலாகித்து சொல்ல விரும்பினேன். அதை ஏற்கெனவே ஒருவர் சொல்லிவிட்டபின் அதை அடிகோடிடுகிறேன்.[காயங்கள் விரைவில் ஆறுக]

ஷீ-நிசி
15-03-2011, 04:11 PM
வேதனைக்கும் கண்ணீருக்கும் பிறந்த வரிகள் கவிதையாக...

கீதம்
15-03-2011, 10:45 PM
வேரோடு கொண்ட நட்பூ
என்றும் வேரோடியிருக்கட்டும்.
வேறிடம் சென்றாலும்
வேரிடம் சிநேகம் மாறுமோ?
நழுவும் நட்பின் ஏக்கத்தை
நன்றாகவே இயம்புகின்றன வரிகள்.
வலியாடும் வார்த்தைகளில்
களியாடக் காத்திருக்கிறேன்.

கலாசுரன்
21-03-2011, 04:06 AM
நன்றாக உள்ளது..:)

இளசு
10-04-2011, 08:40 AM
சில பிறழ்வுகளுக்கு மனம் ஏற்கும் விளக்கம் கிடைக்கும் வரை... ( Unresolved emotional conflict)
நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள் நிலைத்தே உறுத்தும்....

வலியின் தீவிரம் குறையலாம்... ஆனால் மறைவதில்லை..

விளக்கமும் சுமுகத் தீர்வும் காலம் தாஆஆஆழ்ந்து கிடைத்தால்...
கிடைத்தும் வீரியப் பயனில்லை...

வாழ்க்கை மரத்தின் வேர்களின் சூட்சுமங்கள்
மனிதம் இன்னும் முழுதாய் அறியாதவை..


பாமகளின் கவிதைக்குப் பாராட்டுகள்!

கலாசுரன்
11-04-2011, 05:51 AM
கொள்ளாம்..:)

நளின நடைகொண்டதோர்க் கவிதை...!

வாழ்த்துக்கள் .:)

சுகந்தப்ரீதன்
13-04-2011, 02:29 PM
அன்பின் ஊற்றை
அந்த நாள் நினைவுகளை
அழுந்த வாசிக்கையில்
நிரம்பி விடும் கண்ணீருக்கேனும்
பதில் சொல்வாயா நீ…??!!
நட்பில் புரிதல் பூரணத்துவம் அடைந்தால் மட்டுமே இத்தகைய கேள்விகளுக்கு எளிதில் விடைப்பது சாத்தியம்..!!:D

தலைப்புக்கு ஏத்தமாதிரியே கவிதையின் வரிகளில் உணர்வுகள் ஆழமாய் மிளிர்ந்திருப்பது அருமை..!! வாழ்த்துக்கள் பூமகள்..!!:icon_b:

அமரன்
13-04-2011, 05:15 PM
வேர்கள் பெரிதும் வெளித்தெரிவதில்லை.

வெளித்தெரியும் வேர்களில் காலிடறக் கூடும்!

மழைக்காலப் புழுக்கள் நெளியத் துவங்கி விட்டன
இனி என்ன...?
வளம் கொழிக்கும் நிலம் விளைந்து கொடுக்கும் பாருங்களேன்
விதம் விதமாக..

இன்னுமா மௌனம் கொண்டுள்ளது ‘அந்தப் பெண்’மை’