PDA

View Full Version : பிளாக்பெர்ரி அலைபேசியில் தமிழ்பாரதி
15-03-2011, 10:04 AM
இன்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிளாக்பெர்ரி அலைபேசி வைத்திருக்கும் நண்பர்களுக்கு இது உண்மையில் உதவினால் மகிழ்ச்சியே.

-----------------------------------------------------------
பிளாக்பெர்ரி போன் ஒன்னு வாங்கிட்டு, அதில் தமிழ் தெரியலையேனு நொந்து, ஒரு வாரமா, ஏதோதோ ரூபத்தில் தேடியதில், நேற்று இரவு தேடல் வெற்றிகரமாய் முடிந்தது.

How to view Tamil – இந்த ஸ்டைலிலியே தேடிய போது எதுவும் சரியாக் கிடைக்கலை. இந்த (http://wiki.pkp.in/forum/t-159712) தளத்தில் Opera Mini ப்ரௌஸரை இன்ஸ்டால் பண்ணச் சொன்னாங்க. அதன் படியே இன்ஸ்டால் ஆகிடுச்சு. ஆனால், அந்த ப்ரௌஸர் திறக்கவே இல்லை. இங்கே துபாயில் எடிசலாட் செட்டிங்கில் என்னவோ செஞ்சு வச்சிருக்காங்க. இது வேலைக்காகாதுன்னு விட்டாச்சு.

இனி ரூட்டை மாத்தி தேடணும்னு முடிவு பண்ணி, How to view Hindi -னு தேட ஆரம்பித்த போது இந்த (http://forums.crackberry.com/f217/typing-indic-languages-584896/) தளம் கண்ணில் பட்டது. இதில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. OS வெர்ஷன் 6 இருந்தா கண்டிப்பா தமிழைப் பார்த்திடலாம்னு ஒரு தெம்பு வந்துச்சு. அப்புறமா Indic font support -ங்கிற key word வச்சு தேடினேன்.

இப்போ இந்த (http://bbindia.net/tips-tricks/3654-how-install-hindi-fonts-blackberry.html) தளத்தில் “net_rim_font_indic.cod” என்கிற ஃபைல் இருந்தால் தமிழ் தெரியும்னு தெரிஞ்சது. ஆனா, இந்த சுட்டியைச் சொடுக்கினா, அது ஃபோரத்துக்குள்ளே போகுது. அதில் நான் மெம்பர் இல்லை.

இன்னும் கொஞ்சம் தேடியதில், blackberry india -ங்கிற பேரில் ஒரு google group தென்பட்டது. அங்கே போனால், பெரிய விவாதமே பண்ணியிருக்காங்க. எனக்குத் தேவையான cod ஃபைல் இங்கே (http://groups.google.com/group/blackberry-india/browse_thread/thread/8a65c2f568c78119/bc27f4e371ce38f4?q=indic+font&lnk=ol&) கிடைச்சது.

இனி அடுத்த சவால், இந்த cod ஃபைலை எப்படி இன்ஸ்டால் பண்ணுவது. மறுபடியும் தேட, என்னவெல்லாமோ சொன்னாங்க:

Read your cod file into memory as a byte array and then:
byte[] cod = getCodHoweverYouWant();


int newHandle = CodeModuleManager.createNewModule(cod.length, cod, cod.length);
if (newHandle == 0) {
// Do something informative here
return;
}
int code = CodeModuleManager.saveNewModule(newHandle, true);
Use “code” to determine if the module was saved correctly (compare it to the CodeModuleManager.CMM_* constants).

இப்படியெல்லாம் போட்டிருந்தாங்க. மிரண்டுட்டேன். “டேய், நான் இந்த அளவு வொர்த் இல்லைடா, ஏதாவது ஈஸியான வழியைச் சொல்லுங்கடா”ன்னு புலம்பிக்கிட்டே மறுபடியும் தேட, bbsak-னு ஒரு டூலை வச்சு இன்ஸ்டால் பண்ணலாம்னு தெரிய வந்தது.

அது எங்கே கிடைக்கும்னு பாத்தா ஒரு புண்ணியவான் இங்கே (http://www.blackberryempire.com/forum/viewtopic.php?f=56&t=307) அழகா ஒரு டுடோரியல் போட்டிருக்காரு. அதன்படி அச்சு பிசகாம செஞ்சு முடிச்சா, அழகா cod ஃபைல் இன்ஸ்டால் ஆகி, ப்ளாக்பெர்ரி ரீபூட் ஆனது.

அதுக்கு முன்னாடியே, இன்பாக்ஸில் கட்டம் கட்டமா தெரிஞ்ச தமிழ் கவிதை மடல் ஒன்னு போட்டு வச்சிருந்தேன்.

ரீபூட் ஆகி முடிஞ்சதும் நேரா இன்பாக்ஸ் போய் பாத்தா, தெய்வமே, தமிழ் அழகா துல்லியமா தெரிஞ்சது!!!
ஃபேஸ் புக் போனேன். தமிழ் தெரிஞ்சது.
கூகிள் டாக் போனேன். தமிழ் தெரிஞ்சது.
ஜிமெயில் போனேன். தமிழ் தெரிஞ்சது.
வாவ்! எனக்குக் கிடைச்ச சந்தோஷத்தை சொல்லி முடியாது.

இன்று ஆஃபீஸுக்குப் போனேன். பிளாக்பெர்ரியோட ப்ரௌஸரில் http://scriptconv.googlelabs.com/ (http://scriptconv.googlelabs.com/) -இந்த தளத்தை தட்டச்சினேன். கூகிள் ஸ்க்ரிப்ட் கன்வெர்ட்டர்க்குப் போனது. Naan ippo bLaackperry tamizhan னு டைப் அடிச்சு, கன்வெர்ட் டூ-வில் தமிழைப் போட்டு, கன்வெர்ட்டைக் கிளிக்கினா,

நான் இப்போ ப்ளாக்பெர்ரி தமிழன் -னு காட்டுச்சு.

காப்பி பேஸ்ட் பண்ணி ஸ்டேடஸ் மெஸேஜை மாத்தினேன்.

Now, my blackberry 9780 is a breeze.
நான் இப்போ ப்ளாக்பெர்ரி தமிழன் http://kadayanallur.org/wp-includes/images/smilies/icon_smile.gif ))

நன்றி : கோகுல்குமரன், பண்புடன் குழுமம்

sarcharan
15-03-2011, 10:14 AM
நல்ல தகவல்

Mano.G.
15-03-2011, 10:44 AM
தம்பி பாரதி அருமையான தகவல்.
கூடிய விரைவில் எனக்கு பிளாக்பெர்ரி டார்ச் அலுவலகத்தில்
கிடைக்க கூடிய வாய்புள்ளது. அப்போது இந்த தகவல் கண்டிப்பாக
உதவும்.
ஆனால் தற்போது நோக்கிய C7 உபயோகிக்கிரேன்
என்ன ன்வோ செய்தாகிவிட்டது நான் இன்னும் நோக்கியா
தமிழனாக முடியவில்லை உதவுங்கள் உறவுகளே


மனோ.ஜி

முரளிராஜா
15-03-2011, 12:23 PM
மிகவும் பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி

அக்னி
07-04-2011, 04:02 PM
ஆனால் தற்போது நோக்கிய C7 உபயோகிக்கிரேன்
என்ன ன்வோ செய்தாகிவிட்டது நான் இன்னும் நோக்கியா
தமிழனாக முடியவில்லை உதவுங்கள் உறவுகளே


அலைபேசியூடாகத் தமிழ் எழுதலாம்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23160)
மேற்படி திரியைப் பாருங்கள் அண்ணா... சிலவேளை உதவலாம்...

நாஞ்சில் த.க.ஜெய்
07-04-2011, 06:04 PM
உதவும் வகையில் ஒரு அருமையான பதிவு ....

பாரதி
09-07-2011, 07:39 PM
கருத்துக்களுக்கு நன்றி அண்ணா மற்றும் நண்பர்களுக்கு.
---------------------------------------------------------------------------------

இன்று இணையத்தில் கண்ட தகவல் நண்பர்களுக்காக இங்கே:பிளாக்பெர்ரியில் தமிழ் (http://pkp.blogspot.com/2011/07/blog-post.html)

பிளாக்பெர்ரி ver6 OS போன்கள் இந்தியாவில் வாங்கினால் மட்டுமே Indic font-டோடு வருகின்றதாக கேள்வி. வெளிநாடுகளில் வாழும் நம் ஆட்கள் கீழ் கண்ட cod கோப்பை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்.


முதலில் உங்கள் பிளாக்பெர்ரி OS வெர்சனை தெரிந்துகொள்ளுங்கள்.
Home screen போய் Settings போய் Options போய் About -ல் தெரிந்துகொள்ளலாம்.

http://com-blackberryinsight.s3.amazonaws.com/wp-content/uploads/2011/06/device-software-id-2.jpg

எல்லா பயன்பாடுகளிலும் தமிழ் தெரிய உங்கள் பிளாக்பெர்ரி OS ver6-ஆக இருக்க வேண்டும். உங்கள் பிளாக்பெர்ரி அலுவலக கைப்பேசி என்றால் கம்பெனி ஐ.ற்றி-காரர்கள் ver5 to ver6 அப்கிரேடு செய்யவேண்டும். எனவே காத்திருக்க வேண்டியிருக்கும். அதுவே பிளாக்பெர்ரி உங்கள் சொந்த போன் என்றால் கீழ்கண்ட சுட்டி போய் அப்கிரேடு செய்யலாம்.
http://us.blackberry.com/update/ (http://us.blackberry.com/update/)

BlackBerry 6 OS உள்ளவர்கள் செய்யவேண்டியது.
பிளாக்பெர்ரியை USB கேபிள் வழி கணிணியில் இணைத்ததும் Device manager-ல் உங்கள் பிளாக்பெர்ரி தெரிகின்றதா என பார்க்கவும்.
இல்லையெனில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து BlackBerry USB and Modem Drivers_ENG.msi என்ற கோப்பை இறக்கி டிவைஸ் டிரைவர் நிறுவிக்கொள்ளவும்.
https://swdownloads.blackberry.com/Downloads/ (https://swdownloads.blackberry.com/Downloads/contactFormPreload.do?%20code=A8BAA56554F96369AB93E4F3BB068C22&dl=F5937D3FABCEC4C05D26AB6F3FEEC891)

கீழ்கண்ட net_rim_font_indic.cod என்ற கோப்பை இறக்கம் செய்துவைத்துக்கொள்ளுங்கள்.
Download net_rim_font_indic.cod (http://www.pkp.in/publicdrive/index.php?dir=Freewares/&file=net_rim_font_indic.cod)

BBSAK என்னும் மென்பொருளை கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்
http://www.bbsak.org/download.php (http://www.bbsak.org/download.php)
Direct download link
http://bbsak.org/request.php?f=BBSAKv1.9.11_Installer.msi (http://bbsak.org/request.php?f=BBSAKv1.9.11_Installer.msi)

பிளாக்பெர்ரியை USB கேபிள் வழி கணிணியில் இணைத்து bbsak அப்ளிகேஷனை ஓடவிடுங்கள். பாஸ்வேர்ட் கீயை டைப்செய்து பின் Modify COD-ஐ சொடுக்கி பின் Install COD(s) பொத்தானை சொடுக்கவும்.இங்கே ஏற்கனவே நீங்கள் இறக்கம் செய்துவைத்துள்ள net_rim_font_indic.cod கோப்பை காட்டவும்.(More detail instructions here.http://www.blackberryempire.com/forum/viewtopic.php?f=56&t=307 (http://www.blackberryempire.com/forum/viewtopic.php?f=56&t=307))http://i277.photobucket.com/albums/kk71/jason_curtis_taylor/Blackberry%20Empire/BBSAK_Step3.jpg

அவ்வளவுதான். உங்கள் பிளாக்பெர்ரியில் இந்திய மொழி எழுத்துருக்கள் நிறுவப்பட்டு அது ரீபூட்டாகும். இனி எல்லா பிளாக்பெர்ரி அப்ளிகேஷன்களிலும் தமிழ் தெளிவாக தெரியும்.

- தகவல் உதவி நண்பர் கோகுல்.
நன்றி : பிகேபி.

innamburan
09-07-2011, 11:07 PM
எல்லாம் மாத்தணும்ப்பா! பயந்து போய் கறுப்பு பெர்ரி வெண்மை பொறி ஆகிவிட்டதாக, வதந்தி!

குரு
23-02-2012, 12:11 PM
நன்றி பாரதி அண்ணா...
நான் பிளாக்பெர்ரி போல்ட் 9700 உபயோகிக்கிறேன்..
நானும் உங்களை மாதிரிதான் நொந்து போய் இருந்தேன்..
உங்களுடைய இந்த விளக்கங்களையும், அந்த வலைத்தளத்திலுள்ள வழிமுறைகளையும் பயன்படுத்தி வெற்றிகரமாக தமிழ் எழுத்துக்களை இணைத்து விட்டேன்..
எனது பிரவுசரிலும் தமிழ் தளங்கள் தெளிவாக தெரிகின்றன...
நன்றி பாரதி அண்ணா...

ஆனால் வேர்ட் மற்றும் பவர்பாய்ண்டிலுள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை..( இந்த இரண்டும் லதா எழுத்துருவில் உள்ளது..)

இதை மாற்றுவதற்கு எதேனும் வழிமுறைகள் உள்ளதா..?
நன்றி..