PDA

View Full Version : "ரா"ணாக்களின் ராஜ்ஜியம்..15ராஜாராம்
15-03-2011, 07:54 AM
(இது ஒரு கற்பனைப் படைப்பே...நகைச்சுவையை கருத்தில் கொண்டுமட்டுமே உருவாக்கப்பட்டது)
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ850PMstOgQ0eYOksNEGBs5hXzeKNsHCrv6LjlNQ89ZEi-jLHsqgiizFtf

மன்றத்தின் சகோதரி...
திருமதி ஜானகி அக்கா அவர்களின் அனுமதியோடு...
(ராணாக்களின் ராஜ்ஜியத்தில் புதுமுகம் அறிமுகமாக....ஜானகி அக்கா அவர்கள்)

'ஸ்டார்ட் காமிரா....
ஆக்*ஷன்...",
என்று கோமாளி டீ.வியின்,
சமையல்பாகம் நிகழ்ச்சி இயக்குனர்...
சாம்பாரு சந்தானம்", கூறியதும்...

புதியதொரு சமையல் பக்குவத்தை செய்துக்காட்ட...
முராவும்...சாராவும்..ஜானகி அக்கா தலைமயில் ஆஜர் ஆகினார்கள்.

"இன்றைய சமையல் நிகழ்ச்சியிலே...
ஒரு புதுவிதமான சமையல் பக்குவத்தை செய்து காட்டப்போகிறேன்...",
என்று கேமிராவைப் பார்த்துக் கூறிய ஜானகி அக்கா...

"தம்பிகளா..முரா...சாரா...,
உங்க ரெண்டுபேரையும்
நல்லவைங்கன்னு நம்பி இங்க கூட்டியாந்திருக்கேன்..
.இந்த அக்காவுக்கு பாதகமா எதையும் பன்னிடாதிங்கப்பா...",
என்று மெல்ல கூறிவிட்டு பரிதாபமாக பார்த்தார்..

"அக்கா...எங்களைய நம்புங்கக்கா....",
முரா,சாரா இருவரும் முனுமுனுத்தனர்.

"இன்றைக்கு நான்,"
பாம்பே மைதா கேக்" செய்வதுப்பற்றி....சொல்லப்போறேன்",
என்றவர்..

"இதற்கு தேவையான பொருட்கள்.....
மைதா...
டால்டா...
2முட்டை...
சர்க்கரை..
முந்திரி...
திராட்சை..
தேவையான அளவு நெய்..
எஸ்ஸென்ஸ் பவுடர்....
உலர்ந்த பேரிச்சம் பழம்...,",
என்றதுமே..

"அக்கா...
நீங்க இங்க வருவதற்குமுன்னவே...
அந்தப் பேரீச்சம்ப்பழத்தையெல்லாம் முரா சாப்பிட்டுட்டான்...',
என்று,சிறுபிள்ளைத்தனமாக
குண்டைத்தூக்கிப்போட்டான் சாரா.

ஜானாகி அக்கா..
சட்டென முராவை ஒரு பார்வைப் பார்த்ததும்..

"பசி ரொம்ப இருந்துச்சுக்கா...
அதான் உணர்ச்சவசப்பட்டு அதையெல்லாம்
சாப்பிட்டுவிட்டேன்...
சாரி...அக்கா,,,.",
என்று ஒன்றும்தெரியாத அப்பாவிப்போல முகத்தை தொங்கவிட்டான் முரா.

"முதலில் மைதா மாவில்...
2முட்டைகளையும் உடைத்து ஊற்றவேண்டும்..",
என்று தொடர்ந்த ஜானகி அக்கா...

"முட்டைய எடுங்கப்பா...",
என்றதும்..

"அக்கா...
அந்த முட்டைகளை சமையல் பக்குவத்துக்காகவா வெச்சுருந்தீங்க?",
முரா அதிர்ச்சியாய் கேட்க,

"ஆமாம்...
அதையும் ஒடைச்சு குடிச்சுட்டியா நீ?",
அக்காவின் கேள்வியில் பதற்றம் இருந்தது.

"ஐயோ....இல்லைக்கா,..
யாரோ..உங்களுக்கு எதிரா மந்திரிச்சி வெச்ச முட்டைன்னு நெனச்சு...
சாரா அதை வெளியத்தூக்கிப்போட்டு விட்டான்..",
என்று முரா கூற,

"சாரி...அக்கா...
உங்களுக்கு எதுவும் கெடுதல் நடந்திறக்கூடதுன்னு...
அப்படி செஞ்சேன்...",
பாசாமய் கூறினான் சாரா.

"எனக்கு கெடுதல்னு ஒன்னு நடந்தால்,...
அதை நீங்க ரெண்டுபேரும்தான்டா...பன்னுவீங்க...",
என்ற அக்காவின் கண்கள் சற்றே கலங்க,

அதக்கண்ட இயக்குனர்...
"இந்தாங்க மேடம்..",
என்று 2முட்டைகளை அக்காவிடம் தந்தார்.

'மைதா,,,
உடைத்து ஊற்றிய முட்டை...
சர்க்கரை...
இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து....
டால்டாவைக் கொண்டு நன்றாக அடித்துப்பினையவும்...",
என்று தனது அடுத்த விளக்கவுறையை
கேமிராவைப் பார்த்தபடி சொல்லத்தொடங்கிய
ஜானகி அக்கா,.

"அடுத்து முந்திரி பருப்பை...
பல்லில் கடிபடும் அளவிற்கு நறுக்கிக்கொள்ளவேண்டும்...",
என்றுக் கூறியதும்,

"அக்கா...
நறுக்கி வெச்ச முந்திரிபருப்பெல்லாம்...
நல்லாவே பல்லில் கடிபடுதுக்கா....",
என்ற முரா,
காட்டுத்தனமாய்,'
முந்திரிகளை வாயில் போட்டு
கிரைண்டரில் அரைப்பதுபோல் அரைக்கத்தொடங்கிவிட்டு,

"எலே,...சும்மா நிக்காதேடா...
நீயும் உன் வாயில் முந்திரியைப்போட்டு...
நல்லாக் கடிபடுதான்னு பாருடா...",
என்று சாராவையும் தூன்டிவிட,

"நான் அப்பவே...
அதை செஞ்சிப்பார்த்துட்டேன்...
ஆனால்...பாதிபருப்பு என் வயித்துக்குள்ளே போயிடுச்சிடா...",
என்றான் சாரா.

"அடப்பாவிங்களா....
இங்க எதைத்தான்டா....
மிச்சம் வெச்சுருக்கீங்க?",
ஜானகி அக்கா பாவமாகக் கேட்க...

"நீங்க கவலைப்படாதீங்கக்கா...
இருக்கிறதை வெச்சு வேற எதாயாவது செஞ்சிக்காட்டுங்கக்கா...",
என்று சாரா அதிபுத்திசாலியாகக் கூற,

"உங்களையெல்லாம்
இப்படி பேசச்சொல்லி யாருடா சொல்லித்தரா?
இல்லை நீங்களாத்தான் இப்படி பேசுறீங்களா?",
அக்காவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

"கட்...கட்....",
இயக்குனர் கூறியதும்...
கேமிராவின் பதிவு நிருத்தப்பட்டது.
தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் அக்காவினை நெருங்கி..

"என்ன ஆச்சு மேடம்..?
நீங்க எப்போது நல்ல நல்ல டிஷ்ஷஸ் எல்லாம் செய்விங்களே?
இன்னைக்கு என்னாச்சு?",

"சாரி...சார்...
எனக்கு ஹெல்பிற்கு எப்போதும்
வருகிறப் பொண்ணு இன்னைக்கு வரவில்லை...
அதனால இதுங்க ரெண்டையும் இழுத்துக்கிட்டு வந்தேன்...
எல்லாமே சொதப்பல் ஆகிடுச்சி...",
என்று சாராவையும் முராவையும் பார்த்துக் கண்ணீருடன் கூற,

"அக்கா...அழுக்காதீங்கக்கா...
இருக்கிறதை வெச்சு வென்னீரு எப்படி செய்யறதுன்னு செஞ்சிக்காட்டுக்கா...",
விடாபிடியாய்...மேலும் அக்காவை
அழவைப்பதைப்போல் பேசினான் சாரா..

"வென்னீரு...
பன்னீருன்னு...
சொல்லி..
அக்கா கண்ணீருதான்...
மிச்சம் ஆச்சு...",
என்று கவிதைவடிவில் முரா கூற,

"அடப்பாவிங்களா...
நல்ல திறமைசாலியை அழவெச்சுட்டீங்களேடா...",
என்று இயக்குனர் கடுப்பாகி கையை
ஓங்க,

"சார்...
இவன்னுங்களை சொல்லிக்குத்தம்மில்லை...
இவனுங்க சேர்க்கை அப்படி..
ராரான்னு ஒருத்தன் இருக்கான்..
அவன்தான்...,
இவனுங்களோட என்னைய சேர்த்துவிட்டான்...",
என்ற ஜானகி அக்கா..

"ராரா இருக்கானே...
அவன் நான் சமையல் குறிப்பு சொன்னால்...
அதை கூரியரில் அனுப்பச்சொல்லிக் கேட்பான் சார்...",
மேலும் குலுங்கிகுலுங்கி...
அழத்தொடங்கியதும்

"டேய்...
இவனுங்க ரெண்டுபேரையும்...
நல்லா அடிச்சுக்...
கொத்து புரோட்டா பக்குவத்திற்கு,
கைம்மா பன்னுங்கடா....
அதுதான்டா...
இன்னைக்கு சமையல் குறிப்பு...",
என்று,தன் சகஊழியர்களைப் பார்த்து இயக்குனர் கூற...

சட்டிகள்...
கரண்டிகள்...
அடுப்பு...
எல்லாம் சரம்மாரியாக சாராவின் மேலும்...
முராவின் மேலும் வந்து விழத்தொடங்கின...

"ராணா ராஜ்ஜியாமாடா பன்னுறிங்க?
சோழ..சேர...பாண்டிய
மன்னர் ராஜ்ஜியம்ன்னு நெனப்பாடா
உங்களுக்கு...",
என்றுக் கூட்டத்தின் நடுவே தன் ஆத்திரம் தீர திட்டி தீர்த்தார் ஜானகி அக்கா....

ஜானகி
15-03-2011, 08:25 AM
உதவிக் கரம் நீட்டி வந்த பிரியமான சகோதரார்களே .... உங்களை உதவிக்கு அனுப்பிய ரா.ராவிற்கு என் பாசப் பரிசாக பாம்பே அல்வா அனுப்பி வைத்திருக்கிறேன்...குரியரில் ! நீங்களும் ருசிக்கலாம்...!

{ ரா.ரா. வின் எதிரி முகாம் கவனத்திற்கு....கவலை வேண்டாம்... பசை போட்ட அல்வாவைத் தொட்ட ரா.ராவின் விரல்கள் ஒட்டிக்கொண்டு, குறைந்தது ஒரு வாரமாவது, அவரால் தட்டச்ச முடியாமல் போய்விடும்....இனி நம் ராஜ்ஜியம் தான் ஒரு வாரத்துக்கு....}

பிரேம்
15-03-2011, 08:32 AM
"சத்தான பீர்"..எப்டி செய்றதுன்னு கேட்டப்போ ஜானகி மேடம்..சொல்லியே தரலை..தெரியுமா..:medium-smiley-100:

இதுதான்..சரியான தீர்ப்பு..:icon_b:

Nivas.T
15-03-2011, 08:47 AM
உதவிக் கரம் நீட்டி வந்த பிரியமான சகோதரார்களே .... உங்களை உதவிக்கு அனுப்பிய ரா.ராவிற்கு என் பாசப் பரிசாக பாம்பே அல்வா அனுப்பி வைத்திருக்கிறேன்...குரியரில் ! நீங்களும் ருசிக்கலாம்...!

{ ரா.ரா. வின் எதிரி முகாம் கவனத்திற்கு....கவலை வேண்டாம்... பசை போட்ட அல்வாவைத் தொட்ட ரா.ராவின் விரல்கள் ஒட்டிக்கொண்டு, குறைந்தது ஒரு வாரமாவது, அவரால் தட்டச்ச முடியாமல் போய்விடும்....இனி நம் ராஜ்ஜியம் தான் ஒரு வாரத்துக்கு....}

சபாஷ் பழிக்குப் பழி :lachen001::lachen001:


அப்படி எதாவது உண்மையா நடந்தா நல்லாருக்கும்
இம்..........எங்க????:D:D:D:D

sarcharan
15-03-2011, 10:06 AM
மன்றத்தின் சகோதரி...
திருமதி ஜானகி அக்கா அவர்களின் அனுமதியோடு...
(ராணாக்களின் ராஜ்ஜியத்தில் புதுமுகம் அறிமுகமாக....ஜானகி அக்கா அவர்கள்)

'ஸ்டார்ட் காமிரா....
ஆக்*ஷன்...",


சொலீட்டாருய்யா பெரிய கலக்டரு
சமையல்பாகம் நிகழ்ச்சி இயக்குனர்...
சாம்பாரு சந்தானம்", கூறியதும்...ரா ராவின் புதிய பெயர்..
புதியதொரு சமையல் பக்குவத்தை செய்துக்காட்ட...
முராவும்...சாராவும்..ஜானகி அக்கா தலைமயில் ஆஜர் ஆகினார்கள்.ரா ராவின் புதிய பெயர்..
"இன்றைய சமையல் நிகழ்ச்சியிலே...
ஒரு புதுவிதமான சமையல் பக்குவத்தை செய்து காட்டப்போகிறேன்...",
என்று கேமிராவைப் பார்த்துக் கூறிய ஜானகி அக்கா...

போச்சுடா இன்று நீ நாளை நான் கதை தொடங்கியாச்சு...
அப்ப நாளை நம்ம தல மணியா முறையா ?"அக்கா...எங்களைய நம்புங்கக்கா....",
முரா,சாரா இருவரும் முனுமுனுத்தனர்.பின்ன பாசக்கார பயலுவலாச்சே நாங்க.."இன்றைக்கு நான்,"
பாம்பே மைதா கேக்" செய்வதுப்பற்றி....சொல்லப்போறேன்",
என்றவர்..யோவ் எதுக்குத்தான் பாம்பேவ இழுக்கறதுன்னு இல்லையா? :confused:
ஒன்றும்தெரியாத அப்பாவிப்போல முகத்தை தொங்கவிட்டான் முரா.


எங்கள் வீட்டு புள்ள எம் ஜி ஆர் கணக்கா முகத்த வெச்சு கான்பிச்சீங்களா? நீரு பலமுக மன்னன் ஜோவாச்சே..:sprachlos020:

"சாரி...அக்கா...
உங்களுக்கு எதுவும் கெடுதல் நடந்திறக்கூடதுன்னு...
அப்படி செஞ்சேன்...",
பாசாமய் கூறினான் சாரா.


இதப்பார்ரா இன்னொன்னு....:icon_ush:
"எனக்கு கெடுதல்னு ஒன்னு நடந்தால்,...
அதை நீங்க ரெண்டுபேரும்தான்டா...பன்னுவீங்க...",
என்ற அக்காவின் கண்கள் சற்றே கலங்க,
திருமதி ஒரு வெகுமதி படம் மாதிரியா?
கிரைண்டரில் அரைப்பதுபோல் அரைக்கத்தொடங்கிவிட்டு,மு ரா டில்டிங் வெட் கிரைண்டர்
அறைத்திடும் விதத்தில் வந்தது புதுமை...
ஆகா அருமை
மு ரா டில்டிங் வெட் கிரைண்டர்
மு ரா டில்டிங் வெட் கிரைண்டர்
"எலே,...சும்மா நிக்காதேடா...
நீயும் உன் வாயில் முந்திரியைப்போட்டு...
நல்லாக் கடிபடுதான்னு பாருடா...",
என்று சாராவையும் தூன்டிவிட,


பக்கத்துக்கு எலைக்கு பாயசம் இல்லை...
ஜானகி அக்கா பாவமாகக் கேட்க...உண்மையிலேயே நீங்க பாவம் தான்...
"சாரி...சார்...
எனக்கு ஹெல்பிற்கு எப்போதும்
வருகிறப் பொண்ணு இன்னைக்கு வரவில்லை...
அதனால இதுங்க ரெண்டையும் இழுத்துக்கிட்டு வந்தேன்...
எல்லாமே சொதப்பல் ஆகிடுச்சி...",
என்று சாராவையும் முராவையும் பார்த்துக் கண்ணீருடன் கூற,அந்த ஹெல்பர் பொண்ணு ஒவியாவா அல்ல கீதமா?"வென்னீரு...
பன்னீருன்னு...
சொல்லி..
அக்கா கண்ணீருதான்...
மிச்சம் ஆச்சு...",
என்று கவிதைவடிவில் முரா கூற,தென்னைய வெச்சா இளநீரு
அடுப்புல வெச்சா வென்னீரு
நெத்தில இட்டா வெண்ணீறு
ரா ராவ பாத்தா கண்ணீரு
"அடப்பாவிங்களா...
நல்ல திறமைசாலியை அழவெச்சுட்டீங்களேடா...",
என்று இயக்குனர் கடுப்பாகி கையை
ஓங்க,நில்லுங்க ரா ரா ஜானகி அம்மா போய் நம்ம தல கிட்ட மாட்டிவுட போறாங்க.. அப்புறம் ரானா ராஜ்ஜியம் இல்ல.. பூஜ்யம் தான்"சார்...
இவன்னுங்களை சொல்லிக்குத்தம்மில்லை...
இவனுங்க சேர்க்கை அப்படி..
ராரான்னு ஒருத்தன் இருக்கான்..
அவன்தான்...,
இவனுங்களோட என்னைய சேர்த்துவிட்டான்...",
என்ற ஜானகி அக்கா..உன்னை சொல்லி குத்தமில்லை என்னை சொல்லி குத்தமில்லை... ரா ரா செய்த கோலமடி
ரா ரா செய்த குத்தமடி..
"ராரா இருக்கானே...
அவன் நான் சமையல் குறிப்பு சொன்னால்...
அதை கூரியரில் அனுப்பச்சொல்லிக் கேட்பான் சார்...",
மேலும் குலுங்கிகுலுங்கி...
அழத்தொடங்கியதும்


அழுத பிள்ளைகள் லிஸ்ட்ல இன்னொரு வரவு...:icon_b:"டேய்...
இவனுங்க ரெண்டுபேரையும்...
நல்லா அடிச்சுக்...
கொத்து புரோட்டா பக்குவத்திற்கு,
கைம்மா பன்னுங்கடா....
அதுதான்டா...
இன்னைக்கு சமையல் குறிப்பு...",
என்று,தன் சகஊழியர்களைப் பார்த்து இயக்குனர் கூற...புரிஞ்சு போச்சு நல்லா புரிஞ்சு போச்சுய்யா:confused:


சட்டிகள்...
கரண்டிகள்...
அடுப்பு...
எல்லாம் சரம்மாரியாக சாராவின் மேலும்...
முராவின் மேலும் வந்து விழத்தொடங்கின...ரா ரா சீக்கிரம் ரா ரா கிளைமாக்ஸ்ல ஹீரோ மாதிரி வந்து எங்கள காப்பாத்துங்க

sarcharan
15-03-2011, 10:33 AM
(
மன்றத்தின் சகோதரி...
திருமதி ஜானகி அக்கா அவர்களின் அனுமதியோடு...
(ராணாக்களின் ராஜ்ஜியத்தில் புதுமுகம் அறிமுகமாக....ஜானகி அக்கா அவர்கள்)

ரா ரா வின் அட்டூழியம் ஜானகி மனங்குமுறும்
ராராயணம் சூராயணம்..
அடிபடும் லட்சணம்...
தமிழ்மன்றமே எழுக... ஓ...ஒ

முரா பாவம் சா ராவும் ரொம்ப பாவம்...
அடி வாங்க தெம்பும் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை..
கதறும் ரானாஸ் கோஷ்டி....

sarcharan
15-03-2011, 10:38 AM
ரா.ராவிற்கு என் பாசப் பரிசாக பாம்பே அல்வா அனுப்பி வைத்திருக்கிறேன்


காதல் கண்ணன்
காலை வருவதில் மன்னன்
கார்முகில் வண்ணன்...
எங்கள் அபிமான அண்ணன்
அல்வா கடை அழகேசன்
ரா ரா வாழ்க

முரளிராஜா
15-03-2011, 10:54 AM
"அக்கா...அழுக்காதீங்கக்கா...
இருக்கிறதை வெச்சு வென்னீரு எப்படி செய்யறதுன்னு செஞ்சிக்காட்டுக்கா...",
விடாபிடியாய்...மேலும் அக்காவை
அழவைப்பதைப்போல் பேசினான் சாரா..சாரா, இது போதும் உங்க புத்திசாலிதனத்துக்கு :lachen001:
யாருக்காது இது மாதிரி ஐடியா தோனுமா?:icon_p:

முரளிராஜா
15-03-2011, 10:57 AM
ராரா, எங்களை நக்கல் செய்றத இதோட நிறுத்திக்க இல்லைனா
நானும் சாராவும் உனக்காகவே ஒரு திரி ஆரம்பிப்போம்.
ஜாக்கிரதை:sprachlos020:

ராஜாராம்
15-03-2011, 11:45 AM
{ ரா.ரா. வின் எதிரி முகாம் கவனத்திற்கு....கவலை வேண்டாம்... பசை போட்ட அல்வாவைத் தொட்ட ரா.ராவின் விரல்கள் ஒட்டிக்கொண்டு, குறைந்தது ஒரு வாரமாவது, அவரால் தட்டச்ச முடியாமல் போய்விடும்....இனி நம் ராஜ்ஜியம் தான் ஒரு வாரத்துக்கு....}[/QUOTE]

பாவம் நான்.
பச்சப்புள்ளைய இப்படியாக்கா பழிவாங்குறது..:icon_rollout:

ராஜாராம்
15-03-2011, 11:47 AM
ராரா, எங்களை நக்கல் செய்றத இதோட நிறுத்திக்க இல்லைனா
நானும் சாராவும் உனக்காகவே ஒரு திரி ஆரம்பிப்போம்.
ஜாக்கிரதை:sprachlos020:


(டி ராஜேந்திர் பாணியில்)
நீ ஆரம்பிச்சா ஒத்தைவெடி திரி...
நான் ஆரம்பிச்சேன்னா...
அது சரவெடி திரி...
ஏய் டன்டனக்கா...டன்டனக்கா...

தாமரை
18-03-2011, 05:40 AM
வென்னீர் போடுவதுதானே.. அதுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்காரு..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7281


இதுவும் மிகச் சிறந்த உணவுக் குறிப்புதான்http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6551

lolluvathiyar
21-03-2011, 08:50 AM
சூப்பர் ஜோக்கு ரான கோஸ்டியை நம்பி சமையல் சீனுக்கு போனா மைதா மாவை தவிர அனைத்தையும் சாப்பிட்டுட்டாங்க. அக்காவா நொந்து நூடில்ஸ் ஆக்கீட்டாங்க. கடைசியில அவுங்களை கைமா செஞ்சா பத்தாது மசாலா தடவி பொறிச்சா தான் ஆக்கா கோபம் அடங்கும் போல இருக்கு. ரசிக்க வைத்த படைப்பு.