PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:7ராஜாராம்
15-03-2011, 05:43 AM
(இந்தப் படைப்பு..ஆத்திகத்தை முன்னிலைப்படுத்தியோ..
நாத்திகத்தை முன்னிலைப்படுத்தியோ...சித்தரிக்கப்பட்டது அல்ல.
இது ஒரு கற்பனையில் படைக்கப்பட்ட பொழுதுப்போக்கு அம்சம்.
1999ல் பதிவுசெய்யப்பட்ட.இப்படைப்பின்...மூலக்கதையில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.)

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRFAkUV4ufunP0FuJj52V5SKGhfhhO5tcB9PegGCd5QoxNp0fbwU8unMmw

[SIZE="4"][COLOR="Red"]சிதம்பரம்.....கீழவீதி....அசோக்குமாரின் இல்லம்...காலை..7.30.மணி...

"ஹலோ...அக்கா..நான்தான் ராமநாதன் பேசுறேன்..
இன்னைக்கு நம்ம அசோக்கிற்குப் பொண்ணுப் பார்க்க திருச்சிக்குப் போறோம்...
அசோக்கும் சென்னையில் இருந்து, இங்க வந்திருக்கான்.
அவனும் எங்ககூட வரான்...
பொண்ணைப்பார்த்துட்டு வந்ததும் உனக்கு ஃபோன் பன்றேன்",
என்று மூச்சிவிடாமல் பேசிவிட்டு,

"ஏய் அசோக் நீ ரெடியா?
உங்கம்மாவை சீக்கிரம் கிளம்ப சொல்லு..9மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் டிரெயின் வந்துரும்..",
என்று அனைவரையும் ஊருக்கு செல்ல தயார்செய்துக் கொண்டிருந்தார்..

"பொறுமையா கிளம்புங்கப்பா...
இப்ப மணி 7.30தானே ஆகுது.",
அவரது அவசரத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டான் அசோக்.

"ஹலோ...திருச்சியா?
மங்களம் அம்மாவா?
நான் சிதம்பரத்தில் இருந்து ராமநாதன் பேசுறேன்..
நானும்,என் சம்சாரம்,என் பையன் மூவரும்
9மணி டிரெயின்ல கிளம்பி அங்க பொண்ணுப்பார்க்க வரோம்..
உங்கப் பேத்தி அபிராமியை எங்கேயும் போகாமல் வீட்டிலே இருக்கச்சொல்லுங்க...",
திருச்சியில் உள்ள அபியின் பாட்டிக்கு விவரத்தைக் கூறிய ராமநாதன்,
தனது மொபைல்ஃபோன்னை,அசோக்கிடம் தந்தபடி,

"ஏய்,,..அசோக்!!!,,என் மொபைலில் மெசெஜ் ஏதோ,
ஒன்று வந்திருக்கு...
அது என்னான்னுப் பாருடா...",
என்று வந்த மெசேஜைக்கூட பார்க்க நேரமில்லாமல்,
பரபரவென அங்குமிங்கும் அலைந்துக்கொண்டிருந்தார்.

"ஏன் இப்படி படபடன்னு இருக்கிங்க?
கூலா இருங்கப்பா...",
என்று தன் தந்தையை ஆசுவாசப்படுத்திவிட்டு,
அவரது பொபைல்ஃபோன்னில் வந்திருந்த மெசேஜை ஓப்பன் செய்தான்..

"பெட்டிகள் பலக் கொண்டு இணைந்ததுவாம்....
உலோகத்தில் ஊர்ந்திடும்...
வாகனமாம்........
மூவேந்தர் மன்னர்களில்....
இரண்டாமவனின் பெயர் கொண்டதுவாம்....
விதிவடிவால்.......
தடம்புரலும்..இக்கணமே..
உயிர்கள் பலவதுமே....
சேர்ந்திடுமே..இறைபதமே...
...இக்கணமே...
பெண்பார்க்கும்...படலமதுவும்...
தடைபடுமே......",

ராமநதனின் மொபைல்ஃபோனில் இப்படியொரு மெசெஜைக் கண்டதும்..
அசோக்கின் முகம் வியர்த்துப் போனது..

சட்டென மெசேஜ் வந்த மொபைல்நம்பரை உற்றுநோக்கினான்...
"9789781080...",
மீண்டும் அவனது மிகம் கலேபரமானது.

"ஏய்,,.ரமேஷ்..
9789781080...
இந்த நம்பரை உடனே ட்ரேஸவுட் செய்யனும்...
இப்ப எங்கப்பா நம்பருக்கும் ,அதே நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்கு...",
அவசரமாய்...தனது உதவியாளர் ரமேஷிற்கு தகவல் கொடுத்தான்...

"சார்...அந்த நம்பருக்கு நானே பலமுறைக் கால்செய்துப் பார்த்தேன்...
ரிங்க் அடிச்சிக்குட்டே இருக்கு..
யாரும் அட்டெண்ட் பன்னமாட்றாங்க....",
ரமேஷின் பதிலில் பதட்டம் தெரிந்தது.

"மூவேந்தர் மன்னர்களில் இரண்டாவது யாரு?",
அசோக் கேட்டதும்,

"சோழன்...",
சடாரென பதில்கூறினான் ரமேஷ்.

"பெட்டிகள் பலக்கொண்டு...இணந்ததுவாம்,,
உலோகத்தில ஊர்ந்திடும் வாகனமாம் ..
அப்படின்னா...ட்ரெயின்னுதானே..ரமேஷ்?.",
அடுத்து அசோக் கேட்டதும்,

"ஆமாம் சார்.....
ஏன்சார் என்ன மெஸெஜ் வந்திருக்கு?",
ரமேஷின் வார்த்தைகளில் ஏதோ ஒரு குழப்பம் இருந்தது,.

'நான் அப்புறமா உன்கிட்ட விவரமா பேசுறேன் ரமேஷ்....",
என்று,
தனது மொபைல்ஃபோனை அசோக் சுவிட்ச் ஆஃப் செய்த மறுகணமே....

"வணக்கம்.......
தலைப்புசெய்திகள்...
சென்னையில் இருந்து திருச்சிவரை சென்றுக்கொண்டிருந்த...
சோழன் எக்ஸ்பிரஸ்..கடலூர் அருகே...காவேரிப்பாலத்தில் தடம்புரண்டது....
பலர் அதில் உயிர் இழந்தனர்...
அருகில் இருந்த கிராமமக்கள் முதலுதவியில் ஈடுப்பட்டுள்ளனர்.........",

அசோக்கின் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த,...
எஸ்.ஏ.டீ,வியில்...பரபரப்பாக...
செல்ஃபோன் மெசேஜாய் வந்த அந்தசம்பவம்.
காலை 8.0மணி செய்தியில்,
ஒரு உண்மை சம்பவ செய்தியாய்,வெளியேறியது.......

கையில் இருந்த மொபைல்லையும்.....
ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியையும்...
அதிர்ந்த இதயத்துடன் மாறிமாறி பார்த்து சிலைபோல் நின்றான்....

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTIodLiKAPSOCA3Ut_uVeOZH01pLAsLSPN6O-kfG-AZEzUaoXDgyLvUq40
திருச்சி......மெயின்கார்ட் கேட்....கங்கையம்மாள் கலைக்கல்லூரி...மதியம்...1.25மணி

"என்னை இன்னைக்குப் பொண்ணுப்பார்க்க
வருவதாக இருந்தாங்க...
அவர்கள் வருவதாய் இருந்த ட்ரெயின்னு விபத்துக்குள்ளானதால்...
தடங்கல் ஆயிடுச்சின்னு..
மாபிள்ளை வீட்டிஉள்ளவங்க வரவில்லை...",
அபிராமிக் கூற,

"உன்னையப் பொண்ணுப்பார்க்க வரனும்னு நெனச்சதுமே..
ரயிலே கவுந்துப்போச்சேடி....",
கிண்டல் செய்தான் பிரகாஷ்.

"விளையாடாதீங்க...
எனக்குப் பயமா இருக்கு...",

"ஏன்?என்ன பயம்?",
அவளது அச்சத்தைப் புரியாதவானய்
கேட்டான் பிரகாஷ்.

"சிதம்பரம் மாப்பிள்ளைக்கு என்னைய புடிச்சுப்போயி..
நிச்சயம் பன்னிட்டாங்கன்னா...
நான் செத்தேப்போயிடுவேன்..."
அபியின் கண்கள் கலங்கின.

"லூஸூ...ஏன்டி நீயா ஏதேதோ கற்பனைப் பன்னிக்கிறே...
நான் உங்க வீட்டுக்கு வந்து
உங்கப்பாட்டிக்கிட்டே நாளைக்கே பேசுறேன்..
போதுமா?",
அவளது விழியோரம் வந்தக்கண்ணீரினை துடைத்த பிரகாஷிடம்,

"நெஜாமா,,பாட்டிக்கிட்டே,.பேசவறீங்களா?".
என்று கேட்டபடி ஏக்கமாகப் பார்த்தாள்.

"நெஜாமாதான்...",
என்று அவளை செல்லமாக தட்டிக்கொடுத்தான்.

(மாலை....6.01மணி...,திருச்சி...சமயபுரம் மாரியம்மன் கோவில்....)

கருவறையில் புன்முறுவல் பூத்திருக்கும்,
மாரியம்மனின் அழகை கண்களால் ரசித்தபடி...
கோவில் தூணில் தலைசாய்ந்தவன்னம் அமர்ந்திருந்தாள் அபிராமி.
"அம்மா.....
எனக்கு வாழ்க்கையில எந்தப்பிடிமானமும் இல்லை...
ஏதேதோ நினைக்கிறேன்...ஏதேதோ செய்யிறேன்..
சித்தர் பேசுறாப்ல, அடிகடி எனது காதில் கேட்கிறது...
ஒருவேளை எனக்கு மனநிலை பாதிப்பு ஆகிடுச்சா?
எதுக்கு?
ஏன் இப்படி என்னவெச்சு விளையாடுறே?",
மனதுதுக்குள் ஏதேதோ புலம்பியவளாய் அமர்ந்திருந்த
அபியின் கரங்களைப் பற்றியது ஒரு வயதான முதியவரின் கரங்கள்.

"விஞ்ஞானம் உன்னை......மருந்துகளில் ஆட்க்கொள்ளும்....
மெய்ஞ்ஞானம் உன்னை....மஹத்துவமாய் ஆட்க்கொள்ளும்...
விஞ்ஞானத்திற்கு....நீ...தத்துப்பிள்ளை...
மெய்ஞ்ஞானத்திற்கு.....நீ..ஈன்ற பிள்ளை...
உன் வாழ்க்கையே கொஞ்சம் கொஞ்சமாக மாறும்......
அதுவரைப் எதுவுமே புரியாது..
பயனில்லா...உன் வாழ்க்கை....
பலருக்கும் பயனாகும்.....",
என்று வியாக்கியானம் கூறியபடி அவளது
கரங்களை சற்று இருக்கமாகப் பிடித்தார் அந்த முதியவர்.

நரைத்த தலைமுடி....நெற்றியில் பெரிதாய் குங்குமம்...
சாந்தமான அருள் ததும்பும் முகம்...
அந்த முதியவரின் தோற்றமும்...
அவரது வார்த்தைகளும்....
அபியின் புருவங்களை சற்றே உயரவைத்தது.

"நீங்க யாரு...?",
தயக்கத்துடன் கேட்டாள் அபிராமி....

அவளது தலையை மெல்ல வருடிய அந்த முதியவர்,..
"காசிநாதன்....
காசிநாதன் நம்பூதிரி.....
உன் பாட்டி மங்களத்துக்கிட்டே சொல்லு.....
காசிநாதன் நம்பூதிரி வந்தேன்னு....",
புரியாப்புதிராய் எதையோக் கூறிவிட்டு....
அவளைவிட்டு விடைப்பெற்றார்.....
சிரித்தவாறு...


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT6Q4-7hhfvh0nz7M321I-qOKDSoIAMyqjkyqcPxb_B4LShQSwgSlbkFg

சென்னை.....நுங்கம்பாக்கம்,....தனியார் செல்ஃபோன் நிறுவன கால்சென்ட்டர்...அலுவலகம்....இரவு...7.31மணி...


"சார்....
இந்த நம்பர் ,

நடிகை பிரியதர்ஷினி பெயரிலே இருக்கு...
இந்த நம்பரில் இருந்து அடிக்கடி எல்லாருக்கும் மெசெஜ் வருது...
இந்த நம்பரை இப்ப யாரு யூஸ் பன்றாங்க?
எந்த ஏரியா?
இதை டிரேஸவுட் பன்னனும்...",
என்று அசோக்கின் உதவியாளர் ரமேஷ் கூறியதும்.

"அந்த நம்பருக்கு கால்பன்னிப்பார்த்திங்களா?",
என்றார் கால்சென்ட்டர் அதிகாரி.

"யாரும் அட்டென் பன்னமாட்றாங்க...சார்",

"எங்களுக்கு பத்துநாள் அவகாசம் தாங்க...
உங்களுக்கு டீட்டைல் ரிப்போர்ட் சப்மிட் பன்றோம்...","
என்று அதிகாரிக்கூரியதும்,,

"நம்பரை எப்படி டிரேஸவுட் பன்னப்போறீங்க...",
என்று சந்தேகப்பார்வைப் பார்த்தான் ரமேஷ்.

"எப்படியும் இந்த நம்பருக்கு ...ரீச்சார்ஜ் பன்னுவாங்க...
ரீச்சார்ஜ் செய்த ,
ஈ.ஸி.ரீசார்ஜ் ரிப்போர்ட்டை ஃபாலோ பன்னினா...
எங்க ரீச்சார்ஜ் பன்னினாங்க?
அவர்களுக்கு ரீச்சார்ஜ் செய்த கடையோட ஈ,சி.நம்பர்...
கடை அட்ரெஸ்..இதைவெச்சு..
ஏரியாவை கண்டுபிடிச்சிடலாம்...",
என்று கால்செண்டர் அதிகாரி கூற,

அதைக் கேட்ட ரமேஷ் மலர்ந்த முகத்துடன்,
"வெரிகுட்....",
என்றான்.
கால்செர்ண்டர் அதிகாரி மேலும்,

இந்த நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்த ரீட்டெய்லரிடம்,,,
கால்சென்ட்டர்மூலமா விசாரிச்சா...
அந்த நம்பரை யூஸ் பன்றவங்க யாரு?
எந்த ஊரு?
இதெல்லாம் தெரிஞ்சிடும்....",
என்றதும்,
அதைக்கேட்ட ரமேஷ் உற்சாகமாய்...

"வெல்டன்....
இந்த ஒர்க்கை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுக்கொடுங்க....",
என்றதும்

"கண்டிப்பா...சார்...
இன்னும் 10நாட்களுக்குள் உங்களுக்கு எங்கள் ரிப்போர்ட் வந்துவிடும்..".
என்று அவனுக்கு உறுதி அளித்தார்...


(கண்ணாமூச்சி ஆட்டம்...தொடரும்....)

(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821A0.TAMILNADU FILM
CHAMBER/..rajaram..RTD240)

ஜானகி
15-03-2011, 06:07 AM
9789781080... என்ற எண்ணிலிருந்து தற்சமயம் எனக்குக் கிடைத்த செய்தி......

" இடையின இரண்டின் இரட்டை நெடிலாலே [ ரா.ரா ]

தடையும் படுமே பலரின் உறக்கமுமே .....

மடையெனப் பொழியும் கற்பனை ஊற்றாலே...

நடையும் [ எழுத்து ] மாறியதே மன்ற கூத்தாடிக்கே...! "

Nivas.T
15-03-2011, 06:13 AM
ராஜாராம்

ஆண்மீகம அறிவியலானு
பயங்கர கொழப்பம்

கதையில் நல்ல விறுவிறுப்பு

சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்

தொடருங்கள் ராரா

ராரா......... கதைசொல்ல நீ ராரா...........

Nivas.T
15-03-2011, 06:14 AM
ராஜாராம்

ஆண்மீகம அறிவியலானு
பயங்கர கொழப்பம்

கதையில் நல்ல விறுவிறுப்பு

சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்

தொடருங்கள் ராரா

ராரா......... கதைசொல்ல நீ ராரா...........

முரளிராஜா
15-03-2011, 06:17 AM
9789781080... என்ற எண்ணிலிருந்து தற்சமயம் எனக்குக் கிடைத்த செய்தி......

" இடையின இரண்டின் இரட்டை நெடிலாலே [ ரா.ரா ]

தடையும் படுமே பலரின் உறக்கமுமே .....

மடையெனப் பொழியும் கற்பனை ஊற்றாலே...

நடையும் [ எழுத்து ] மாறியதே மன்ற கூத்தாடிக்கே...! "

ஜானகி மேடம் அந்த ரா ரா பய உங்கள நக்கல் அடிக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்
எழுதிகிட்டு இருக்கான். ஜாக்கிரதை

ஜானகி
15-03-2011, 09:07 AM
ரா.ராவின் கொட்டம் அடங்க,[ கோந்து ]அல்வா பர்சலில் அனுப்பியாச்சு...ரா.ரா.வின் பெயரைச் சொல்லிக் கொண்டு வேறு சிலர் அடிக்கும் கொட்டத்திற்கும் புதுமையான டிஷ் தயாராகிக் கொண்டிருக்கிறது...விரைவில் கிடைக்கும் !

முரளிராஜா
15-03-2011, 09:18 AM
அய்யய்யோ
ஜானகி மேடம் நான் ரொம்ப நாள் வாழனும்னு ஆசைபடறேன்
அதனால வேண்டாம்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா நான் அழுதுடுவேன்:medium-smiley-100:

ராஜாராம்
15-03-2011, 11:35 AM
நன்றி,
நிவாஸ் அவர்களுக்கும்,
ஜானகி அக்காவிற்கும்(நான் ரொம்ப ரொம்ப நல்லப்புள்ள...என்னைய நம்புங்கக்கா...நான் அப்பாவி...)
முரா,அக்கா செய்யும் டிஷ் உனக்குத்தான்:aetsch013: