PDA

View Full Version : மறக்கமுடியாத நினைவுப்பரிசு



M.Jagadeesan
15-03-2011, 04:45 AM
.அன்று, அந்தப் பள்ளிக்கு கடைசி வேலைநாள்.யு.கே.ஜி.படிக்கும் குழந்தைகள் தங்களுடைய டீச்சருக்கு, அன்புப்பரிசுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

முதலில் பூ வியாபாரியின் குழந்தை டீச்சருக்கு ஒரு பார்சலைக் கொடுத்தது.அதைக் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்த டீச்சர் குழந்தையிடம்

"உள்ளே பூக்கள் இருக்கின்றன.சரியா?" என்று கேட்டார்.

"ஆமாம் டீச்சர்! எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?"

"எல்லாம் ஒரு யூகம்தான்"

அடுத்துவந்த ஸ்வீட் வியாபாரியின் குழந்தை ஒரு பார்சலைக் கொடுத்தது.அதைக்
காதருகே வைத்து ஆட்டிப்பார்த்த டீச்சர் குழந்தையிடம்

"உள்ளே ஸ்வீட்ஸ் இருக்கு! நான் சொன்னது சரியா " என்று கேட்டார்.

"அட! எப்படி டீச்சர் சரியா சொன்னீங்க?"

டீச்சர், பெருமையுடன் "எல்லாம் ஒரு யூகம்தான்" என்று சொன்னார்.

மூன்றாவதாக வந்த, ஃபுரூட்ஜூஸ் விற்கும் வியாபாரியின் குழந்தை, டீச்சரிடம் ஒரு பார்சலைக் கொடுத்தது.அதை வாங்கி காதருகே கொண்டுசெல்லும் முன்பாக அதிலிருந்து ஒரு திரவம் கசிவதை டீச்சர் கவனித்தார்.அதை விரலால் தொட்டு நாக்கில் வைத்து ருசி பார்த்த டீச்சர் குழந்தையிடம்

"ஆப்பிள் ஜூஸ்?" என்று கேட்டார்.

குழந்தை,"இல்லை டீச்சர்" என்றது.

அதற்குள், பார்சலிலிருந்து நிறைய திரவம் வெளியே வர, அதை உள்ளங்கையில் பிடித்து அள்ளிக்குடித்த டீச்சர் குழந்தையிடம்

"லெமன் ஜூஸ்?" என்று கேட்டார்.

குழந்தை,"இல்லை டீச்சர்" என்றது.

"என்னவென்று நீயே சொல்லித் தொலை" டீச்சர் கோபத்துடன் கேட்டார்.

"உள்ள நாய்க்குட்டி இருக்கு டீச்சர்" என்று பதில் சொன்னது குழந்தை.

நன்றி: YOUNG WORLD, THE HINDU

ஜானகி
15-03-2011, 05:23 AM
இன்று நான் நாளிதழில் படித்து ரசித்த பகுதி...பலரும் காணத் தாங்கள் மொழிபெயர்த்தது நன்று.

கீதம்
15-03-2011, 05:37 AM
குழந்தைகளிடம் அன்புப்பரிசு என்ற பெயரில் லஞ்சம் வாங்கும் ஆசிரியருக்கும் அவரது அவசரக்குடுக்கைத்தனத்துக்கும் இந்தப்பரிசு தேவைதான்.

sarcharan
15-03-2011, 05:41 AM
ஹா ஹா ஹா.. ரசித்தேன் சார்...

M.Jagadeesan
15-03-2011, 05:51 AM
பி.ஊ.இட்ட ஜானகி,கீதம்,சர்சரண் ஆகியோருக்கு நன்றி!

Nivas.T
15-03-2011, 06:00 AM
:lachen001::lachen001::lachen001:

M.Jagadeesan
15-03-2011, 06:02 AM
:lachen001::lachen001::lachen001:

மூன்று பொம்மைகள் சிரிப்பதற்கு நன்றி நிவாஸ்!

மதி
15-03-2011, 06:32 AM
இதுக்கப்புறம் ஆசியரின் முகம்.. சுஜாதா பாஷையில் 'ஙே!' :)

முரளிராஜா
15-03-2011, 06:38 AM
ரசிக்கும்படியாக இருந்தது
நன்றி ஜெகதீசன் சார்

ஓவியன்
15-03-2011, 06:39 AM
பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெகதீசன்..!!

இதிலே இருந்து என்ன புரியுதுணா, எடுத்தற்கெல்லாம் அவசரப்படக் கூடாது. :icon_rollout:

M.Jagadeesan
15-03-2011, 06:51 AM
பி.ஊ.இட்ட மதி,மு.ரா மற்றும் ஓவியன் அவர்களுக்கு நன்றி!