PDA

View Full Version : கலைஞர் vs கவுண்டமணி



உமாமீனா
14-03-2011, 10:22 AM
கவுண்டமணி - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயரா?அதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படி?உங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.


கலைஞர் - அது ... அது வந்து... ஒரு வனிதை , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?

கவுண்டமணி - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்க?விபரம் தெரியாத யாரோ என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?


நன்றி சி.பி.செந்தில்குமார்

ஆதவா
14-03-2011, 11:02 AM
உமாமீனா..

உங்கள் பதிவில் கடுமையான வார்த்தைகள், வக்கிரமாகத் தாக்கும் வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள். இது மன்ற விதி மீறலாகும்... இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை பதிவு. இனிவரும் பதிவுகளில் வன்மையான வார்த்தைகளோ தனிமனித துவேசங்களோ இருந்தால் தடைசெய்யப்படுவீர்கள்...

ஒரு அறிவுரை:
கூடுமானவரையிலுமல்ல, முற்றிலும் “காப்பி பேஸ்ட்” பதிவுகளை நிறுத்திக் கொள்ளுங்கள்!!

- பொறுப்பாளர்கள்!

முரளிராஜா
14-03-2011, 11:38 AM
வ குவாட்டர் கட்டிங்க்கு இதுதான் அர்த்தமா?
நல்ல கற்பனை

ராஜாராம்
14-03-2011, 12:32 PM
வா குவார்ட்டர் கட்டிங்க்கு இப்படி ஒரு விளக்கமா?!!!!.............
நன்றாக உள்ளது.

முகம்மது ஹுமாயூன்
14-03-2011, 12:57 PM
உமாமீனா அவர்களுக்கு படத்தின் பெயரை "'வ" என்று மாற்றப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?:fragend005:

sarcharan
15-03-2011, 04:27 AM
அக்னியின் கூற்று சரியே என்று தோன்றுகின்றது. நிர்வாக குழுவினரது முடிவுக்கு காத்திருப்போம்.

உமாமீனா
19-03-2011, 11:46 AM
அக்னியின் கூற்று சரியே என்று தோன்றுகின்றது. நிர்வாக குழுவினரது முடிவுக்கு காத்திருப்போம்.

என்ன அந்த கூற்று?

உமாமீனா
19-03-2011, 11:49 AM
உமாமீனா அவர்களுக்கு படத்தின் பெயரை "'வ" என்று மாற்றப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?:fragend005:

ஒ அப்படியா - தெரியாது தோழரே - இது ஒரு காமடிக்கான பதிவு அவ்வளவுதான். சீரியஸ் ஆக எடுத்துகொள்ளவேண்டாமே

பதிந்துள்ளதும் சிரிப்பு பகுதியில் தானே

உமாமீனா
19-03-2011, 11:51 AM
!!

- பொறுப்பாளர்கள்!


நன்றி