PDA

View Full Version : இனி ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்



முரளிராஜா
14-03-2011, 10:08 AM
http://technabob.com/blog/wp-content/uploads/2007/02/samsung_f700_front.jpg
ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் பல மாதங்கள் பேசக்கூடிய அதி நவீன செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

செல்போன்களில் உள்ள பேட்டரிகள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான செல்போன்களில் தினசரி சார்ஜ் செய்யும் நிலை உள்ளது.

ஒரு சில செல்போனில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்கு சார்ஜ் நிற்கும். தற்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதற்கான விசேஷமான பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண செல்போன் பேட்டரிகளை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை.

அவை உலோக டியூப்களுக்கு பதிலாக மிகச் சிறிய அளவிலான நானோடியூப்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை மனிதனின் ரோமத்தை விட 10 ஆயிரம் மடங்கு மிகச்சிறியதாகும். இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி சி என் என்

பிரேம்
14-03-2011, 10:14 AM
தகவல் அருமை...
இனிமே முரா மாதிரி காதல் பன்றவங்கலாம் ஒருமுறை சார்ஜ் பண்ணினால் போதும்....பேசிக்கிட்டே இருக்கலாம்..

பேசுங்க..பேசுங்க..போன் வெடிக்கிற வரைக்கும் பேசுங்க.. :) :icon_b:

முரளிராஜா
14-03-2011, 10:18 AM
தகவல் அருமை...
இனிமே முரா மாதிரி காதல் பன்றவங்கலாம் ஒருமுறை சார்ஜ் பண்ணினால் போதும்....பேசிக்கிட்டே இருக்கலாம்..

பேசுங்க..பேசுங்க..போன் வெடிக்கிற வரைக்கும் பேசுங்க.. :) :icon_b:

நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா பிரேம் :lachen001:

sarcharan
14-03-2011, 10:43 AM
நல்ல தகவல். மின்சார கட்டணம் இனி மிச்சம்( அலுவலகங்களுக்கு). நம்மில் பலரும் ஆபீசில் தானே சார்ஜ் செய்கிறோம்..:smilie_abcfra:

M.Jagadeesan
14-03-2011, 10:49 AM
கைபேசிக்கு, பல திங்களுக்கு ஒருமுறை மின்னூட்டம் செய்தால் போதும் என்ற செய்தி மகிழ்வை அளிக்கிறது.

aren
14-03-2011, 11:40 AM
சும்மா சொல்லாதீங்கப்பா, என்னுடைய ஐபோஃனை தினமும் இரண்டுமுறை சார்ஜ் செய்யவேண்டியிருக்கிறதே என்று நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்

அக்னி
14-03-2011, 12:13 PM
‘சார்ச்’ வேணும்னா தினம் போட்டுக்கிறம்...
ஆனா,
ஒரு அஞ்சாறு மாசத்துக்கு ஒரு தடவை ‘பில்’ கட்டிற மாதிரி யாராச்சும் கண்டுபிடிச்சிருந்தாங்கன்னா சொல்லுங்க...

முரளிராஜா
14-03-2011, 12:19 PM
அட நான் இருக்கும்பொழுது நீங்க ஏன் அக்னி சார் கவலைபடுறிங்க
உங்க மொபைல் எண்னையும் ஒரு 10.000 ருபாயும் என்னிடம் கொடுங்க
நீங்க ஒரு வருடத்துக்கு பில் கட்ட வேண்டாம்.
(அந்த ராரா பய மாதிரி இல்ல, நான் ரொம்ப நேர்மையானவன்:D)

அக்னி
14-03-2011, 12:27 PM
நீங்க இருக்கிறதுதானே என்னோட பெருங்கவலை...

சிங்கம் சிக்காதுல...
மொதல்ல, வாயில தோசை... அப்புறமாத்தான் கையில காசு...