PDA

View Full Version : அவள் ஒரு ஆத்திச்சூடி



M.Jagadeesan
14-03-2011, 05:42 AM
(இக்கவிதை முழுவதும் ஈரசைச்சீர்களே வந்துள்ளன)

அதரச் சிவப்பு கோவைப் பழமே!
ஆடும் சடையோ கருநிற நாகம்!
இமைகள் இரண்டும் அடிக்கடித் துடிக்கும்!
ஈக்கள் மொய்க்கும் மாம்பழக் கன்னம்!
உடுக்கை இடையோ அழகைக் கூட்டும்!
ஊரில் அவளே கனவுக் கன்னி!
எப்படி இவளைப் பிரமன் செய்தான்
ஏட்டில் செதுக்கிய சிற்பம் போல?
ஐம்புலன் அடக்கிய முனிவரும் கூட
ஒருமுறை பார்க்கத் தூண்டும் அழகு!
ஓடும் நதியில் துள்ளும் மீன்களும்
ஒளவியம் கொள்ளும் அழகிய கண்கள்!!

ஒளவியம்=பொறாமை

உமாமீனா
14-03-2011, 06:54 AM
படித்து முடித்ததும் அக்...அதாங்க ஃஅவ்வளவு அழகியா?

நன்றி தோழரே அருமை

M.Jagadeesan
14-03-2011, 06:58 AM
படித்து முடித்ததும் அக்...அதாங்க ஃஅவ்வளவு அழகியா?

நன்றி தோழரே அருமை

நன்றி! உ.மீ. அவர்களே!

கீதம்
15-03-2011, 12:24 AM
காதல் பாடம் படிப்போருக்குதவும் வகையில்
புதிய ஆத்திசூடி படைத்த உமக்குப் பாராட்டுகள் ஐயா...

M.Jagadeesan
15-03-2011, 01:39 AM
காதல் பாடம் படிப்போருக்குதவும் வகையில்
புதிய ஆத்திசூடி படைத்த உமக்குப் பாராட்டுகள் ஐயா...

பாராட்டுக்கு நன்றி!

முரளிராஜா
15-03-2011, 02:38 AM
ஜெகதீசன் சார்
புதிய தங்களின் ஆத்திச்சூடி அருமையா இருக்கு

M.Jagadeesan
15-03-2011, 02:49 AM
ஜெகதீசன் சார்
புதிய தங்களின் ஆத்திச்சூடி அருமையா இருக்கு

வாழ்த்துக்கு நன்றி மு.ரா!!

அக்னி
17-03-2011, 07:58 PM
அனைத்திலும் பொருந்திடும்
காதல் வியப்புத்தான்...
ஆத்திசூடியும் தப்பாமல்...

காதலாத்திச்சூடி :icon_b:

அப்படியே காதற்குறள்களும் கொஞ்சம் எழுதிடலாமே...

sarcharan
18-03-2011, 11:17 AM
ஐம்புலன் அடக்கிய முனிவரும் கூட
ஒருமுறை பார்க்கத் தூண்டும் அழகு!


அய்யா மன்னிக்க!

ஐம்புலன் அடக்கிய முனிவரும் கூட
ஒருமுறையேனும் பார்க்கத் தூண்டும் அழகு!

இப்படி அமைத்தால் நன்றாய் இருந்திருக்குமோ?

சிவா.ஜி
18-03-2011, 01:47 PM
காதல் ஆத்திச்சூடி அருமை. வாழ்த்துக்கள் ஜெகதீசன்.