PDA

View Full Version : அழகு



rameshkumar.rsm
13-03-2011, 04:36 PM
ஆடை அலங்காரமும்
ஜொலிக்கும் அணிகலண்களும்
பெண்ணுக்கு அழகு அல்ல - மாறாக
பெண்களை அடக்கி ஆளும்
குள்ளநரிகள் மத்தியில்
வீரத்தை ஆடையாகவும்
துணிச்சலை அணிகலனாகவும்
சிந்தும் கண்ணீர் துளிகளை
காவியமாக மாற்றும்
தன்னம்பிக்கைதான் ஒரு பெண்ணுக்கு
அழகு! .....................

M.Jagadeesan
13-03-2011, 04:52 PM
இதை G.R.T..போத்தீஸ்,சென்னை சில்க்ஸ் ஒத்துக்கொள்வார்களா?

கவிதை நன்று!தொடர்ந்து தாருங்கள்.

பிரேம்
14-03-2011, 12:52 AM
யாரையோ சமாதானம் சொல்லி சமாளிக்க முயற்சி பன்றார்ன்னு
நினைக்கிறேன்...பைசா இல்லாத காரணத்தால...:redface::):cool::p

ஆளுங்க
21-03-2011, 02:58 PM
தன்னம்பிக்கைதான் ஒரு பெண்ணுக்கு அழகு என்று அழகாக கூறியுள்ளீர்கள்...

முரளிராஜா
21-03-2011, 03:24 PM
தன்னம்பிக்கை வேண்டும் பெண்களுக்கு என்பதை அழகாய் சொல்லும் கவிதை