PDA

View Full Version : மாற்றுத் திறனாளிகள்.!!



பிரேம்
13-03-2011, 11:06 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=329

இறைவன் எழுதிய கவிதைகளில்..
எழுத்துப் பிழையுடன் சில..
சாதிக்க துடிக்கும் இவர்களுக்கு..
சமூகம் வைத்த பெயர்...
மாற்றுத் திறனாளிகள்.

தன்னம்பிக்கையுடன் இவர்கள்
எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும்
தலைகுனிகிறான் படைத்தவன்.

பேருந்தில் தனி இடம்..
கொண்டாட ஒரு தினம்
என்றெல்லாம் இருந்தாலும்...
மான்யங்களைக் கூட..
மறியல் செய்தே வாங்க வேண்டி இருக்கிறது..

தாண்டியும் குதித்தும்..
தடகளத்தில் வென்றாலும்..
தனக்கெனும் நிதர்சனங்களில்
தடுமாறத்தான் செய்கிறார்கள்..

கடவுளின் பிழை திருத்த இவர்களை
கருணையுடன் பார்ப்போம்...
நலமுடன் இவர்கள் வாழ..
நம்முடன் ஏற்ப்போம்.

ஏழையின் சிரிப்பில்..
இறைவனை காணலாம்-இம்மாதிரி
இயலாதவரின் சிரிப்பில்
நாம் இறைவனாகலாம்...

உமாமீனா
13-03-2011, 11:08 AM
கடவுளின் பிழை திருத்த இவர்களை
கருணையுடன் பார்ப்போம்...
நலமுடன் இவர்கள் வாழ..
நம்முடன் ஏற்போம்.

M.Jagadeesan
13-03-2011, 11:15 AM
மனங்கவர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்!

ஜானகி
13-03-2011, 11:20 AM
உண்மை தான்... மாற்றுத் திறனாளர்கள் எதிபார்ப்பது நம் பரிதாபத்தை அல்ல... நம் ஒத்துழைப்பைத் தான்.....கூடி வாழ்வோம்...கை கொடுத்து வாழ்வோம்....

ஷீ-நிசி
13-03-2011, 01:54 PM
காம்பில்லாத ரோஜாக்கள் - இந்த
காலில்லாத ராஜாக்கள்

இவர்கள் தவழும் குழந்தைகள் என்ற தலைப்பிட்டு நான் எழுதின கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது..

கடவுளின் பிழைதிருத்த வரிகள்...அழகான வார்த்தை

வாழ்த்துக்கள்

முரளிராஜா
14-03-2011, 09:56 AM
கவிதை அருமை வாழ்த்துக்கள் பிரேம்

sarcharan
14-03-2011, 10:08 AM
வாழ்த்துக்கள் பிரேம்!
கவிதை அருமை.

பிரேம்
14-03-2011, 10:10 AM
வாழ்த்து தெரிவித்த உ.மீ..,jagadeesan சார்.,.ஜானகி மேடம்...,ஸ்ரீ-நிசி சார்..& நம்ம தல முரா-சரண்...அனைவருக்கும் நன்றி... :)

கீதம்
15-03-2011, 12:46 AM
மனிதரை மனிதராய் பார்ப்போம். மனிதநேயமிக்க வரிகள். பாராட்டுகள் பிரேம்.

Nivas.T
15-03-2011, 08:08 AM
[IMG]
இறைவன் எழுதிய கவிதைகளில்..
எழுத்துப் பிழையுடன் சில..
சாதிக்க துடிக்கும் இவர்களுக்கு..
சமூகம் வைத்த பெயர்...
மாற்றுத் திறனாளிகள்.


அருமையான வரிகள் பிரேம்

நல்ல சிந்தனை

அழகான கண்ணோட்டம்

சிறப்பான வரிகள்

பாராட்டுகள்

பிரேம்
15-03-2011, 01:19 PM
மிக்க நன்றி..கீதம் மேடம்...நிவாஸ் -ன்னா..

த.ஜார்ஜ்
15-03-2011, 02:21 PM
இயலாதவரின் சிரிப்பில்
நாம் இறைவனாகலாம்...

:icon_b: