PDA

View Full Version : வாஸ்து



M.Jagadeesan
13-03-2011, 09:06 AM
பையன் படிப்பதில்லை பரீட்சையில் தோல்வி என்று
பக்கத்து வீட்டு நண்பரிடம் சொன்னேன்.அதற்கு அவர்
பையன் ஜாதகத்தில் தோஷம் இருக்கும் என்றார்.
பரிகாரம் செய்துவிட்டால் பாஸாக வழியுண்டு
எனச்சொல்ல,

எதிர்வீட்டு நண்பரிடம் யோசனை கேட்டபோது
யாரேனும் உம்வீட்டில் பில்லிசூன்யம் வைத்திருப்பர்
கேரளா மாந்திரீகன் ஒருவனை வரவழைத்து
பில்லிசூன்யம் எடுத்து, சாங்கியங்கள் செய்திட்டால்
பள்ளிசெல்லும் உம்பையன்,பரீட்சை நன்குஎழுதி
பாஸாக வழியுண்டு,கவலை விடு என்றுரைத்தார்.

அலுவலகத்தில் நண்பரிடம் ஆலோசனை கேட்டபோது
கிரகதோஷம்,பில்லிசூனயம் என்பதெல்லாம் சுத்தப்பொய்
வீட்டினிலே ஏதேனும் தோஷம் உண்டா என்று
வாஸ்து நிபுணரை வரவழைத்துக் கேட்டுப்பார்.
என்றுசொல்ல

வாஸ்து நிபுணரை வரவழைத்து வீட்டைக் காட்ட
அறைகளின் எண்ணிக்கை இரட்டையாக உள்ளது
ஆதலினால் ஓர் அறையை இடித்துத் தள்ளிவிடு
எனச்சொல்ல,

அவசரமாய் ஒர் அறையை இடித்துத் தள்ளினேன்.

படிக்கட்டுகள் எண்ணிக்கை நான்காக உள்ளது
பையன் பெயிலாக இதுவும் ஒருகாரணம் ஆதலினால்
முதல்படியை இடித்துத் தள்ளினால் எண்ணிக்கை
மூன்றாகக் குறைந்துவிடும் உடனடியாய் செய்திடுக
எனச்சொல்ல

முதல்படியை அவசரமாய் இடித்துத் தள்ளினேன்.

கிழக்குநோக்கி அமைக்காமல் சாக்கடை உம்வீட்டில்
வழக்கத்திற்கு மாறாக மேற்குநோக்கி உள்ளதையா!
ஆதலினால் சாக்கடையை அவசரமாய் இடித்திடுவீர்
எனச்சொல்ல,

சாக்கடையை அவசரமாய் இடித்துத் தள்ளினேன்.

வடக்குநோக்கி கக்கூஸ் அமைப்பதை விட்டுவிட்டு
இடக்குமுடக்காக இருக்கின்ற காரணத்தால் தான்
படிக்கவேண்டிய உம்பையன் படிக்காமல் இருக்கின்றான்.
உடனடியாய் கக்கூஸை இடிப்பதுதான் உன்வேலை
எனச்சொல்ல,

அவசரமாய் கக்கூஸை இடித்துத் தள்ளினேன்.

ஏறுகின்ற மாடிப்படி வடக்குநோக்கி இல்லாமல்
வேறுதிசை நோக்கி இருக்கின்ற காரணத்தால்
ஊறுவந்தது உன்மகனின் படிப்பிற்கு ஆதலினால்
வேறுபேச்சு வேண்டாம் இடித்திடுவாய் இப்போதே!
எனச்சொல்ல,

அப்போதே மாடிப்படியை இடித்துத் தள்ளினேன்.

கன்னிமூலையில் இருக்கவேண்டிய ஓவர்டேங்க்
கண்டபடி உன்வீட்டில் இருக்குதய்யா ஆதலினால்
கடப்பாரை கொண்டு இடித்திடுவாய் எனச்சொல்ல

அவசரமாய் ஓவர்டேங்க்கை அப்போதே இடித்திட்டேன்.

சமையலறை,பூஜையறை,படுக்கையறை எல்லாமே
சரியான அளவுகளில் இல்லையெனச் சொல்லிட்டார்.
முருங்கைமரம் வீட்டின் முன்புறத்தில் ஆகாது
எருமையாய் உன்பையன் ஆனதும் இதனால்தான்
அருமையான மரமெனினும் அருவாளைக் கொண்டு
வெட்டிச் சாய்த்திடுவாய் வேதனை தீருமென்றார்.

எரிகின்ற கொள்ளியிலே எண்ணெயை விட்டதுபோல்
பரிகாரம் சொன்னதற்கு பத்தாயிரம் பீஸ் என்றார்.
படிக்காமல் என்பையன் பெயிலான காரணத்தால்
குடியிருக்கும் என்வீட்டை குட்டிச் சுவராக்கி
இடித்துத் தள்ளியதால் இப்போது என்நிலைமை
நடுத்தெருவுக்கு வந்ததையா! வாஸ்துவால் வந்த வினை!!

உமாமீனா
13-03-2011, 09:13 AM
அட இன்னுமுமாடா இந்த ஊர் நம்மளை நம்புது - இப்படிக்கு வாஸ்து

முரளிராஜா
13-03-2011, 09:35 AM
வாஸ்து அமைப்பில் நாம் நல்லமுறையில் நலமுடன் வாழ பல விசயங்கள் உள்ளன
என்பதை மறுக்கமுடியாது.
இருப்பினும் சம்பந்தமில்லாத விசயத்துக்கெல்லாம் வாஸ்து பார்த்தால் இந்த நிலைமைதான் ஆகும் என்பதை அழகாக சொல்லி உள்ளிர்.
பாராட்டுக்கள் ஜெகதீசன் சார்

ஜானகி
13-03-2011, 09:52 AM
எட்டுக்குப் பத்து உள்ள கூடத்தில்

நட்ட நடு ராகுவான தொலைகாட்சிப்

பெட்டியை, முக்காடிட்டு மூடியே

அட்டத்தில் ஏற்றினால்......எல்லாம் சரியாகும்

பட்டியலில் விட்டுப் போனதோ....?

Nivas.T
13-03-2011, 10:03 AM
நல்ல கருத்து

பாராட்டுகள் ஜெகதீசன் அவர்களே

M.Jagadeesan
13-03-2011, 10:07 AM
பி.ஊ.இட்ட மு.ரா,ஜானகி ,உ.மீ. மற்றும் நிவாஸ் அவர்களுக்கு என் நன்றி!