PDA

View Full Version : சச்சினின் சதமும் இந்தியாவும் - கற்பிதம்

ஆளுங்க
13-03-2011, 09:00 AM
http://images.businessweek.com/ss/09/04/0415_india_most_powerful/image/036_sachin_tendulkar.jpg

சச்சின் தெண்டுல்கர்....
"இந்திய கிரிக்கெட் கடவுள்" என்று தன் ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர்!!!

ஆனால், இவர் மேல் பலரும் சுமத்தும் குற்றச்சாட்டு ஒன்று உண்டு..
"சச்சின் சதம் அடித்தால், அந்த போட்டியில் இந்தியா நிச்சயம் தோற்கும்" என்பது தான்!!
ஆனால், இது எந்தளவு உண்மை?????????

இங்கு அலசுவோம்!!!!

ஆளுங்க
13-03-2011, 09:07 AM
சச்சின் சதம் அடித்த போட்டிகள் மற்றும் அதில் இந்தியாவின் வெற்றி- இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்!!

http://www.altiusdirectory.com/Sports/images/Sachin-Tendulkar-century.jpg

* சச்சின் தெண்டுல்கர் 1994 செப்டம்பர் 9 ஆம் நாள் தனது முதல் ஒரு நாள் சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் அவர் குவித்த ஓட்டங்கள் 101.

இந்தியா அந்த போட்டியை 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது!!

மேற்கண்ட கூற்று உண்மையெனில், இந்தியா அந்த போட்டியில் தோற்று இருக்க வேண்டும் தானே!!!

ஆளுங்க
13-03-2011, 09:14 AM
http://www.dhruvplanet.com/wp-content/uploads/2010/02/highest-odi-score-sachin.jpg

ஏதோ குருட்டாம்போக்கில் அந்த போட்டியில் இந்தியா வென்றதாக கொள்வோம்...

சச்சின் தன் முதல் ஐந்து சதங்கள் அடித்த அனைத்து போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றி தான்!!!

அது மட்டுமல்ல,
ஏப்ரல் 1998 இல் இருந்து மார்ச் 2000 வரைக்குமான இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் சச்சின் மொத்தம் 11 சதங்களை அடித்தார்..

அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றிக் கனியைச் சுவைத்தது!!

ஆளுங்க
13-03-2011, 09:19 AM
http://worldcricketwatch.com/wp-content/uploads/2010/04/sachin11.jpg

சச்சின் இதுவரை 48 சதங்களை அடித்து உள்ளார். (12 மார்ச் 2011ன் படி)

அவற்றில் இந்தியா 33 போட்டிகளில் வென்றுள்ளது!!!!

(மீதமுள்ளவற்றில் 1 போட்டி டையில் முடிந்துள்ளது; மற்றொன்று ரத்து செய்யப்பட்டது)

ஆக,
சச்சின் சதம் அடித்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 68.75 %

ஆளுங்க
13-03-2011, 09:23 AM
http://www.tribuneindia.com/2004/20040320/spf3.jpg

சச்சின் மட்டுமே சதம் அடித்த போட்டிகள் 39..

அவற்றில் இந்தியா வென்றது 25!!
(மீதமுள்ளவற்றில் 1 போட்டி டையில் முடிந்துள்ளது; மற்றொன்று ரத்து செய்யப்பட்டது)

சச்சின் மட்டும் சதம் அடித்தால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு = 64.1%

ஆளுங்க
13-03-2011, 09:50 AM
http://www.southasiafair.com/wp-content/uploads/2010/02/Sachin-Tendulkar-200.jpg

சச்சின் இதுவரை 6 உலககோப்பை சதங்கள் அடித்து உள்ளார்...
(12 மார்ச் 2011)

அவற்றில், 3 ஆட்டங்களில் இந்தியா அபார வெற்றி பெற்றது..

வென்ற ஆட்டங்கள்:

127* (1996 - கென்யா)
140* (1999 - கென்யா)
152 (2003 - நமீபியா)

டையில் முடிந்தது:
120 (2011 - இங்கிலாந்து)

தோல்வி:
137 (1996 - இலங்கை)
111 (2011 - தெனாப்பிரிக்கா)

ஆளுங்க
13-03-2011, 10:10 AM
http://manahyd.com/wp-content/uploads/2010/10/Sachin_Tendulkar04.jpg

இதுவரை இறுதிப் போட்டிகளில் அதிகமாக சதம் அடித்த பெருமையும் சச்சினையே சேரும்..
மொத்தம் 6 இறுதிப் போட்டிகளில் சதம் அடித்து உள்ளார்..

இந்தியா அந்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது!!!

போட்டிகள்:
134 - ஆஸ்திரேலியா (1998)
100* - கென்யா (1998)
128 - இலங்கை (1998)
124* - ஜிம்பாவே (1998)
117* - ஆஸ்திரேலியா (2008)
138 - இலங்கை (2009)

ஆளுங்க
13-03-2011, 10:14 AM
http://images.sportinglife.com/11/03/330/India-Sachin-Tendulkar-century-celeb_2572800.jpg

சச்சின் இந்திய அணித்தலைவராக இருக்கும் போது எழுந்த குற்றச்சாட்டு இது!!
அப்படியென்றாலும் தவறு தான்!!

சச்சின் அணித்தலைவராக 6 சதங்கள் எடுத்து உள்ளார்...
இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றது!!!

ஆளுங்க
13-03-2011, 10:21 AM
http://reviews.in.88db.com/images/stories/sachin-tendulkar-50th-century.jpg

நெடுநாள் ஆட்டத்தொடரிலும் (டெஸ்ட்) இந்த குற்றச்சாட்டு பொய் என நிருபிக்கலாம்!!!

இதுவரை சச்சின் எடுத்தது 51 சதங்கள் (12 மார்ச் 2011) ..
அவற்றில் இந்தியா வெற்றி கண்டது 20; முடிவின்றி முடித்தது (டிரா) 20..

தோல்வி வெறும் 11 இல் மட்டுமே!!!

ஆளுங்க
13-03-2011, 10:28 AM
http://resources1.news.com.au/images/2011/03/13/1226020/499101-sachin-tendulkar.jpg

இதுவரை நாம் அலசியதில் இருந்து ...........
முதலில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு ஒரு தவறான கற்பிதம் (Superstition) என்று தெரிகிறது...
சச்சினின் புகழைக் குலைக்கும் நோக்கில் அவரின் சாதனைகளை விரும்பாத யாரோ கிளப்பி விட்ட புரளி இது!!!

இனியேனும்,
அந்த நல்ல ஆட்டகாரரின் சாதனைகளைப் புண்படுத்தாமல் வரவேற்போம்!!!

சச்சினின் சாதனைகள் மேன்மேலும் பெருகுக!!!

ஆதாரம்:
விக்கிபீடியா (wikipedia)
கிரிகின்போ (cricinfo)

பி.கு:
சச்சின் மட்டுமே விளையாடி (சதம் அடித்து) ஏனைய வீரர்கள் அனைவரும் (30 ஓட்டங்களுக்குள்) சுருண்ட ஆட்டங்கள் 10 உண்டு.. அதில் இந்தியா 4 இல் வெற்றி பெற்றுள்ளது!!
மற்றவர்கள் மோசமாக ஆடியதற்கு நாம் சச்சினைக் குறை கூற முடியாது.. என்ன சரி தானே?

கௌதமன்
13-03-2011, 02:48 PM
முதலில் யாராவது இப்படி கொளுத்திப் போடுவார்கள்.

மற்றவர்கள் என்னதென்று பார்க்காமல் அதையே சொல்லுவார்கள்.

உங்களைப் போல் யாராவது புள்ளி விபரத்தோடு சொன்னாலாவது நம்புவார்களா பார்ப்போம்.

அக்னி
13-03-2011, 04:08 PM
அப்போ சச்சின் ‘டக்’ அவுட் ஆகிக்கொண்டேயிருந்திருந்தால்,
இப்பிடிச் சொல்லுறவங்க என்ன சொல்லுவாங்களாம்...

shiva.srinivas78
13-03-2011, 05:14 PM
அதிக போட்டிகள் விளையாடி , அதிக பங்களிப்பு உள்ளதால் இயல்பாகவே வெற்றி வாய்ப்புகள் போல தோல்வியும் அதிகமாக தெரிகிறது ,இது மாயை தான் ,புள்ளி விவரங்களின்படி பார்த்தால் உண்மை புரியும்

உதயா
14-03-2011, 02:17 AM
ஒரு நல்ல மனிதரின் உழைப்பை இப்படி எல்லாம் மோசமாக முடிச்சு போடக்கூடாது.

aalunga நல்ல விளக்கத்திற்கு மிக்க நன்றி.

ஆதவா
14-03-2011, 04:49 AM
சச்சின் குறித்து நான் எழுதலாம் என்றிருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள்.

முதலில் 11 பேர் குழுவிலிருந்து சச்சின் என்ற தனிமனிதனை முன்னிறுத்தி ”தோல்வி கண்டது” “வெற்றி கண்டது” என்று சொல்வது மிகப்பெரிய தவறு. ஒரு அணி ஜெயிக்க, மற்றும் தோற்க அவ்வணியின் அனைத்துவீரர்களின் முயற்சியில்தான் இருக்கிறது. சச்சின் சதமடித்த போட்டிகளில் மற்ற வீரர்கள் எப்படி ஆடினார்கள்? பவுலர்கள் தங்கள் கடமையை எப்படி செய்தார்கள் என்பதை யாரும் பார்ப்பதேயில்லை. ஒரு அணியில் ஒருவர் மட்டும் சதமடித்துவிட்டாலே ஸ்கோர் சராசரியாக இருநூறைத் தாண்டிவிடும். அப்படியெனில் தோல்விக்கு யார் காரணமாக இருக்க முடியும்?

புள்ளிவிபரங்கள் தந்த ஆலுங்க விற்கு நன்றி!!!!

இன்னொரு குற்றச்சாட்டும் உள்ளது! அது சச்சின் சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்று!!! ஒரு பேட்ஸ்மென் சாதனைக்காக ஆடினால் நிச்சயம் ஸ்கோரிங் ரேட் குறையும்... ஆனால் சச்சினின் ஸ்கோரிங் ரேட் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சச்சின் இறங்கி அடிப்பதால் ஏதாவது ஒரு சாதனை தானாகவே நிகழ்ந்துவிடுவதென்பதால் சச்சினை சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்று சொல்வது ஆராயாமல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்!!!

கொஞ்சம் பெருமைப் படுங்கள்!! சச்சின் இந்திய அணிக்குக் கிடைத்த பொக்கிஷம்!! அவரை/அவரது பங்கை பல இடங்களில் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்பது என் கருத்து!

இங்கிலாந்துடன் டையடித்த போட்டியிலும் சரி, தென்னாப்பிரிக்காவுடன் தோல்விகண்ட போட்டியிலும் சரி, லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்கள் மற்றும் பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை... ஆகவே, சச்சினைக் குறை சொல்வது கொஞ்சம் காட்டமாகச் சொல்லவேண்டுமென்றால் “முட்டாள்தனமானது”

தொடருங்க ஆலுங்க.

ஓவியன்
14-03-2011, 04:53 AM
aalunga சச்சின் சதம் அடிக்க முற்பட்டு (50 ஓட்டங்களுக்கு மேல் ஓட்டங்களைக் குவித்த தடவைகள்) ஆனால் சதம் அடிக்க முடியாமல் இந்திய அணி வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த புள்ளி விபரங்கள் இல்லாமல் ஒரு தெளிவான முடிவுக்கு எப்படி வருவது..?

ஆதவா
14-03-2011, 05:20 AM

50 மற்றும் 50 க்கும் மேல் 100க்குள் 93 முறை அடித்திருக்கிறார்....
இதில் 56 போட்டிகளில் இந்தியா வென்றிருக்கிறது. 37 ல் தோல்வி!

சூரியன்
14-03-2011, 08:13 AM
அவர் மட்டும் விளையாடினால் போதுமா அணியில் உள்ள அணைவரும் சிறந்து பங்களித்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்..

இதில் அவர் மேல் மட்டும் குறை சொல்ல ஒன்றும் இல்லை...

ஆதி
14-03-2011, 09:29 AM
ஆதவா சொல்வது போல் சச்சின் ஆட்டத்தை மட்டும் வைத்து இந்தியாவின் வெற்றியை/தோல்வியை பற்றி பேசுவது ஏற்புடையதல்ல.

சச்சன் ஒரு சிறப்பான நட்சத்திர ஆட்டக்காரர், அவர் சிறப்பான ஆட்டங்கள் அணிக்கு வலிமை சேர்க்கலாம், ஆனால் அவர் ஆட்டம் மட்டுமே இந்திய அணியின் வலிமை என்று சொல்லுதல் கூடாது. அப்படி சொல்லுதல் மற்ற இந்திய வீரர்களின் தரத்தை தாழ்த்துவது போலுள்ளது..

கௌதமன்
14-03-2011, 02:03 PM
சச்சினைப் பற்றிக் குறை சொல்பவர்களின் திருப்திக்காக ஒரு செய்தி.

ஆரம்பக்கால கட்டத்தில் சச்சினுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் போல யாருக்கும் வழங்கப்படவில்லை. (நன்றி: அன்றிருந்த கவாஸ்கர், வெங்சர்க்கார் போன்ற செல்வாக்கான முன்னாள் பாம்பே வீரர்கள்). அதே மாதிரியான வாய்ப்பு வினோத் காம்ளி, பிரவீன் அம்ரே போன்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.

ஒருநாள் ஆட்டத்தில் சச்சினின் முதல் சதம் எழுபது ஆட்டங்களுக்குப் பிறகே அமைந்தது. ஆனால் இப்போதுள்ள வீரர்கள் முதல் தொடரில் சாதிக்கவில்லையென்றால் அணியில் மீண்டும் இடம் பெறுவது குதிரைக் கொம்பு.

மண்டலம் வாரியாக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியாவுக்கு ஒரு சாபக்கேடு. திராவிட் இருந்ததால் தமிழக வீரர் சரத்துக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு கிட்டவில்லை. ராபின் சிங்குக்கு காலங்கடந்தே வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேர்வுக்குழுத் தலைவர் சிலசமயம் புகுந்து விளையாடுவார். ஒருசமயம் விஸ்வநாத் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தபோது, தென்மண்டலத்துக்கான கோட்டாவில் கர்நாடக வீரர்களைக் கொண்டு நிரப்பினார்.

ஆரம்பத்தில் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல மறுத்து, அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கங்குலிக்கு டால்மியா தயவால் இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது. ( உண்மையில் சிறந்த வீரர்)

ஸ்ரீகாந்த் இல்லாவிட்டால் அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது. ஸ்ரீகாந்தும் சூப்பர் கிங்ஸில் அனிருத்தை (அவரின் மகன்தான்) நுழைத்தார். அதே போல் மகாராஷ்டிரா மாநில அணியில் இடம் கிடைக்காத ரோகன் கவாஸ்கர் மேற்கு வங்காள அணியில் இடம் பிடித்து பிறகு அந்த மண்டலக் கோட்டாவில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

சுருக்கமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற திறமையுடன், சிபாரிசும் தேவை. ஆனால் கிரிக்கெட்டில் வெற்றி பெற கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பும் தேவை. (உதாரணம்: சச்சின், கங்குலி).

மற்றவர்கள் அணியில் இடம் பெறலாம். மக்கள் மனதில் இடம் பெற முடியுமா?

[ஹைய்யா! நல்லா சூடேத்தி விட்டாச்சு. இனி ஆளாளுக்கு பிச்சு உதறுவாங்க. தள்ளி இருந்து வேடிக்கை பார்ப்போம்.]

ஆளுங்க
14-03-2011, 02:27 PM
http://images.smh.com.au/2010/07/20/1703375/sachin_tendulkar-420x0.jpg

நான் இந்த கருத்தை வலியுறுத்தி எனது முக புத்தகத்திலும் (Face Book) பதிவு இட்டிருந்தேன்..
என் நண்பர் ஒருவர் ஒரு புதுமையான தகவலைச் சொன்னார்..

அதாவது, சச்சின் மிக சரியாக சதம் அடித்தால் (அதாவது சரியாக 100 எடுத்தால் - வெளியேறினாலும் சரி, ஆட்டமிழக்காமல் இருந்தாலும் சரி) இந்தியா தோல்வி காணும். இதுவே, இப்படி ஒரு புரளியாக மாறியது என்றார்...

ஆனால், உண்மை......

சச்சின் 100 மட்டுமே அடித்த ஆட்டங்கள் 6..
அவற்றில் இந்தியா அபார வெற்றியைச் சுவைத்த போட்டிகள் 4!!

போட்டிகள்:

100 - பாகிஸ்தான் (1996) தோல்வி
100 - ஆஸ்திரேலியா (1998) வெற்றி
100* - கென்யா (1998) வெற்றி
100 - ஆஸ்திரேலியா (2003) வெற்றி
100 - பாகிஸ்தான் (2006) தோல்வி
100* - மேற்கிந்திய தீவுகள் (2007) வெற்றி

ஆதவா
14-03-2011, 02:52 PM
சச்சினுக்கு ஏன் அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றால், சச்சினின் மேலுள்ள நம்பிக்கை.. கிட்டத்தட்ட 78 போட்டிகளுக்குப் பிறகுதான் அவரால் சதமடிக்க முடிந்தது என்று கூறுவதை விட, அந்த எழுபது போட்டிகளில் அவரது ரன்கள் எத்தனை?

78 போட்டிகளில் மொத்தம் 2126 ரன்கள் ஆவ்ரேஜ் 32.70!
சச்சின் அப்பொழுது ஓபனர் கிடையாது. ஐந்தாவது மனுசன். அப்படியொன்றும் குறைந்த ஆவ்ரேஜ் அல்ல.

ஓபனராக இறங்க ஆரம்பித்தபிறகுதான் தலைவர் ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார் அதே 78 போட்டிகளில் ஓபனராக இறங்கி அடித்த ரன்களை வரிசைபடுத்தியிருக்கிறேன்...

82, 63, 40, 63, 73, 6, 24, 11, 6 எட்டு போட்டிகளில் நான்கு அரைசதங்கள்,

மொத்தம் 17 அரைசதங்கள்!! மூன்று “டக்” அதில் முதலிரண்டு போட்டிகள்!!

இதற்குப்பிறகு ஆஸ்திரேலியாவுடன் ஒரு சதம்.

இதே காலகட்டத்தில் டெஸ்டில் ஆடியது 32 போட்டிகளில் (45 இன்னிங்ஸ்) 2023 ரன்கள்... ஆவ்ரேஜ் 50.57!!! அப்பொழுதே ஏழுசதங்கள்!!!

அவருக்கு வாய்ப்பு கொடுத்தது இப்பொழுது சரியா தவறா?? நீங்களே முடிவுபண்ணுங்களேன்!

ஆதவா
14-03-2011, 02:55 PM
அதே மாதிரியான வாய்ப்பு வினோத் காம்ளி, பிரவீன் அம்ரே போன்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.

:confused::confused::confused::confused:

ஓவியன்
14-03-2011, 03:38 PM
தகவலுக்கு மிக்க நன்றி ஆதவா....

_____________________________________________________________________________________________

சில காலங்களின் முன்னர் சச்சின் ஒரு போட்டியில் 50 ஓட்டங்களைக் குவித்தால் அதன் பின்னர் நூறு ஒட்டங்களைக் குவிக்க அவர் அதிக பந்து வீச்சுக்களைச் சந்திப்பது வழமையாக இருந்தது. (அண்மைக் காலங்களில் இந்த வழக்கத்தை மாற்றி அதிரடியாக ஆடி வருகிறாரென்பது வேறு விடயம்) சச்சினின் இந்த பண்புதான் சச்சினைப் பற்றிய இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கான அடிப்படைக் காரணமாக இருந்திருக்குமென நான் நம்புகிறேன்.

கிரிக்கட் என்பது என்னதான் பல வீரர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும் சில/பல சந்தர்பங்களில் யாராவது ஒருவரது முயற்சியால் அல்லது தவறினால் அவர் தங்கியிருக்கும் அணியின் வெற்றி தோல்வியில் பாரிய பங்கினை ஏற்படுத்தி விடெமென்பதால் (தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் அவசரத்தில் இழைத்த ஒரு தவறினால் அவர்களது அணி உலகக் கோப்பையையே இழந்ததை மறக்க முடியுமா) இது போன்ற குற்றச்சாட்டுக்கள் வழமைதான்.

அதுதாங்க ‘காய்க்கிற மரத்தில்தான் கல்லடி விழுமெங்கிறேன்’ ;)

சச்சின் ஒரு அற்புதமான வீரர் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை, கிரிக்கட்டின் நடமாடும் சாதனைப் பெட்டகமாக இருக்கும் அவரது திறமையை காலமெல்லாம் கிரிக்கட் உலகம்சொல்லிக் கொண்டிருக்கும்.

அணியொன்றினைத் தலமை தாங்குவதில் சச்சினின் கணிப்புக்கள் பொய்த்திருக்கலாம் (சென்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் போலார்ட்டுக்கு முன்னர் ஹர்பஜனை துடுப்பெடுத்தாட அனுப்பியது வரை..!! :D), ஆனால் ஒரு அணியின் முன்வரிசை ஆட்டக்காரராக அவர் வேண்டியதற்கும் மேலாக இந்திய அணிக்கு செய்து முடித்து விட்டார் என்பதே உண்மை.

ஆதி
14-03-2011, 03:41 PM
:confused::confused::confused::confused:

இதில் என்ன குழப்பம் ஆதவா, காம்ளிக்கு வாய்ப்பும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது, ஆனால் அவரால் அவரை நிரூப்பிக்க இயலவில்லை...

ஓவியன்
14-03-2011, 03:45 PM
இதில் என்ன குழப்பம் ஆதவா, காம்ளிக்கு வாய்ப்பும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது, ஆனால் அவரால் அவரை நிரூப்பிக்க இயலவில்லை...

ஆரம்பத்தில் மட்டுமல்ல, சச்சினின் சிபாரிசின் அடிப்படையில் அவரது கிரிக்கட் வாழ்க்கையின் இறுதியில் கூட காம்ளிக்கு வாய்ப்பு அதிகமாகவே கொடுக்கப்பட்டது. :cool:

ஆதி
14-03-2011, 03:57 PM
//சில காலங்களின் முன்னர் சச்சின் ஒரு போட்டியில் 50 ஓட்டங்களைக் குவித்தால் அதன் பின்னர் நூறு ஒட்டங்களைக் குவிக்க அவர் அதிக பந்து வீச்சுக்களைச் சந்திப்பது வழமையாக இருந்தது. (அண்மைக் காலங்களில் இந்த வழக்கத்தை மாற்றி அதிரடியாக ஆடி வருகிறாரென்பது வேறு விடயம்) சச்சினின் இந்த பண்புதான் சச்சினைப் பற்றிய இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கான அடிப்படைக் காரணமாக இருந்திருக்குமென நான் நம்புகிறேன்.//

இது உண்மை, இதற்கு சொந்தக்காரணங்கள் உண்டு, பல முறை அவர் 90களில் அவுட் ஆகி இருக்கிறார், முந்தைய சில வருடங்களிலும் இது போல் நிகழ்ந்தது, அப்போது அவர் மகன் சொன்னானாம், " இனிமே 94 வந்துட்டா ஒரு சிக்ஸ் அடிச்சிடுப்பா" என்று, அதன் பிறகு அவரின் ஆட்டங்களில் சில மாறுதல்கள் காண முடிந்தது உண்மையும் கூட..

மும்பை ஆட்டக்காரர்கள் சாதனைகளுக்காக மட்டுமே விளையாடும் சுயநலவாதிகள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு...

ஆளுங்க
14-03-2011, 05:17 PM
http://www.topnews.in/sports/files/Sachin-Tendulkar1.jpg
ஓவியன் அவர்கள் கேட்ட கேள்வியைக் கருத்தில் கொண்டு ஆராய்வோம்...
அதாவது, சச்சின் அரை சதத்திற்கு மேல் (சுமார் 80 -க்கு) மேல் எடுக்க முன்பு நெடுநேரம் எடுப்பார்.. அதனால், பந்துகள் வீணாகி வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டதா?

சச்சின் மொத்தம் 93 அரைசதங்களை எடுத்துள்ளார். 48 சதங்களையும் கண்டுள்ளார்...
(12 மார்ச் 2011)

சச்சினின் செயல்பாட்டை 50களில் இருந்து ஆராய்வோம்....

ஓட்டங்கள் போட்டிகள் வெற்றி வெற்றி சதவீதம்
50 + 141 89 63.1
80 + 83 57 68.6
90 + 66 44 66.7
100 + 48 33 68.7

மேற்கண்ட ஆய்விலிருந்து சச்சின் 80 ஐக் கடந்தாலே வெற்றி பெற 2/3 வாய்ப்பு உண்டு என்று தெரிகிறது.

ஓட்டங்கள் போட்டிகள் வெற்றி வெற்றி சதவீதம்
100+ 48 33 68.7
90-99 18 11 61.1
80-89 17 13 76.5
50-80 58 32 55.1

இதிலிருந்து சச்சின் 80 ஐத் தாண்டினால் இந்தியாவின் வெற்றிக்கு கணிசமான வாய்ப்பு உள்ளது தெரிகிறது!!

ஷீ-நிசி
14-03-2011, 11:43 PM
சச்சின் 100 அடிச்சா இந்தியா தோற்கும் என்பதெல்லாம் வெறும் மாயை, ஓபனிங் பேட்ஸ்பேன் ஒரு நல்ல ஓபனிங்தான் கொடுக்க முடியும்... சச்சின் சதம் அடித்த போட்டிகளில் பின் வரிசை ஆட்டக்காரர்கள் சரியாக செயல்பட்ட போட்டிகள் வெற்றியையும், பின் வரிசை ஆட்டக்காரர்கள் சரியாக செயல்படாத போட்டிகள் தோல்வியையும் அளிக்கத்தான் செய்யும், உதாரணம் கடைசியாக நடந்த இந்தியா சவுத் ஆப்ரிக்கா போட்டி.

இந்தியா தோல்வி அடைந்ததற்கு காரணங்களை அலசுவதை விட்டுவிட்டு, சச்சின் சதம் அடித்ததனால்தான் தோல்வியா என்று நாம் இன்று அலசிகொண்டிருப்பது அர்த்தமில்லாத ஒன்று...

100 வது சதத்தை நெருங்கிவிட்ட சச்சினுக்கு வாழ்த்துக்கள்.. சென்னை சேப்பாக்கத்தில் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது... சச்சினின் 100வது சதத்தை காணும் மிகப்பெரும் வாய்ப்பு சென்னை ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ஆதவா
15-03-2011, 04:52 AM
ஆரம்பத்தில் மட்டுமல்ல, சச்சினின் சிபாரிசின் அடிப்படையில் அவரது கிரிக்கட் வாழ்க்கையின் இறுதியில் கூட காம்ளிக்கு வாய்ப்பு அதிகமாகவே கொடுக்கப்பட்டது. :cool:

இதில் என்ன குழப்பம் ஆதவா, காம்ளிக்கு வாய்ப்பும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது, ஆனால் அவரால் அவரை நிரூப்பிக்க இயலவில்லை...

சரி உங்கள் இருவருக்கும் ஒரு கேள்வி....

காம்ப்ளியின் டெஸ்ட் ஆட்டம் மிகச்சிறப்பானது... மொத்தம் 21 இன்னிங்ஸில் 1084 ரன்களுடன் 3 அரைசதம் 4 சதங்கள் 2 இரட்டைச் சதங்கள் அடித்து 54.20 ஆவ்ரேஜ் வைத்திருந்தவருக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளிக்கவில்லை??
அவர்து கடைசி பத்து இன்னிங்ஸ்கள் மோசமாக இருக்கலாம்... இதுபோல தொடர்ந்து பத்து இன்னிங்க்ஸ்கள் மோசமாக ஆடிய அனுபவம் சச்சினுக்கும் உண்டே!!!???

ஆதவா
15-03-2011, 04:54 AM
சச்சின் 100 அடிச்சா இந்தியா தோற்கும் என்பதெல்லாம் வெறும் மாயை, ஓபனிங் பேட்ஸ்பேன் ஒரு நல்ல ஓபனிங்தான் கொடுக்க முடியும்... சச்சின் சதம் அடித்த போட்டிகளில் பின் வரிசை ஆட்டக்காரர்கள் சரியாக செயல்பட்ட போட்டிகள் வெற்றியையும், பின் வரிசை ஆட்டக்காரர்கள் சரியாக செயல்படாத போட்டிகள் தோல்வியையும் அளிக்கத்தான் செய்யும், உதாரணம் கடைசியாக நடந்த இந்தியா சவுத் ஆப்ரிக்கா போட்டி.

இந்தியா தோல்வி அடைந்ததற்கு காரணங்களை அலசுவதை விட்டுவிட்டு, சச்சின் சதம் அடித்ததனால்தான் தோல்வியா என்று நாம் இன்று அலசிகொண்டிருப்பது அர்த்தமில்லாத ஒன்று...

100 வது சதத்தை நெருங்கிவிட்ட சச்சினுக்கு வாழ்த்துக்கள்.. சென்னை சேப்பாக்கத்தில் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது... சச்சினின் 100வது சதத்தை காணும் மிகப்பெரும் வாய்ப்பு சென்னை ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சரியாச் சொன்னீங்க.... கபாலி!
அப்ப போட்டிய நேர்ல பார்க்கப் போறீங்களா???
இந்த போட்டியில் நிச்சயம் இந்தியா ஜெயிக்கும் ஏனெனில் It is written!! :)

ஓவியன்
15-03-2011, 05:54 AM
சரி உங்கள் இருவருக்கும் ஒரு கேள்வி....

காம்ப்ளியின் டெஸ்ட் ஆட்டம் மிகச்சிறப்பானது... மொத்தம் 21 இன்னிங்ஸில் 1084 ரன்களுடன் 3 அரைசதம் 4 சதங்கள் 2 இரட்டைச் சதங்கள் அடித்து 54.20 ஆவ்ரேஜ் வைத்திருந்தவருக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளிக்கவில்லை??
அவரது கடைசி பத்து இன்னிங்ஸ்கள் மோசமாக இருக்கலாம்... இதுபோல தொடர்ந்து பத்து இன்னிங்க்ஸ்கள் மோசமாக ஆடிய அனுபவம் சச்சினுக்கும் உண்டே!!!???

வினோத் காம்ளியின் ஆரம்ப கட்ட டெஸ்ட் கிரிக்கட் வாழ்க்கை அபாரமானதுதான், ஆனால் அவரால் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கட்டிலும் அவரது பலவீனங்களை கச்சிதமாக எதிரணி வீரர்கள் பிடித்துக் கொண்டார்கள் அதாவது short ball போட்டால் திணறுவது போன்ற காம்ளியின் பலவீனங்களை எதிரணி பந்து வீச்சாளர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் (அந்த கால கட்டத்தில் பாகிஸ்தான் அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ஆதவா, சுமாரான பந்து வீச்சாளர்களா அவர்கள்...??). அத்துடன் அவரது மைதானத்துக்கு வெளியிலான மற்றும் மைதானத்துக்கு உள்ளேயான ஒழுக்கம் குறித்தும் பல பிரச்சினைகளை காம்ளி சந்தித்தார், இத்தனைக்கும் அவரது கடைசி ஆறு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 8 இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி அவர் குவித்தது வெறும் 119 ஓட்டங்கள் தான்.

சச்சினினுக்கு இருந்த மன உறுதியும், எல்லா சந்தர்பங்களுக்கும் தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவமும், எங்கும் கடைப்பிடிக்கும் சுய ஒழுக்கமும் காம்ளியிடம் இருக்கவில்லை.....

அதனால் தான் ஆரம்பத்தில் சச்சினிலும் திறமையானவராகக் கருதப்பட்டாலும் அவரால் சச்சினளவுக்கு நிலைக்க முடியவில்லை.

சரி இப்போது உங்களுக்கான கேள்வியினை நான் கேட்கின்றேன் ஆதவா, அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், காம்ளி தன்னை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்து மீண்டும் அணிக்குள் நுளைந்திருக்கலாமல்லவா...??, ஏன் அவர் அதனை செய்யவில்லை....????

ஆதவா
15-03-2011, 06:09 AM

ஓவியன்!!

நீங்கள் சொல்வது நிஜம்தான்.. காம்ப்ளியின் ஒழுங்கீன நடவடிக்கையே அவரை வெளியேற்றியது.. இருப்பினும் ஒருநாள் போட்டிக்கு கிபி 2000 வரைக்கும் இருந்தார்... சரியான சான்ஸை கப்பென்று பிடித்துக் கொள்ள இயலவில்லை!! தவிர, டெஸ்டுக்கு ஏற்றவாறு உடல்தகுதியை இழந்துவிட்டார் என்று தோணுகிறது!!! ஆனால் பேக்டூபேக் இரட்டை சதமடித்த ஒரே ஆள் இவர்தான் என்பது ஆச்சரியமாகவும் இருக்கிறது!

அப்பறம்... நான் தருமி மாதிரி... கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்!!! :D

அக்னி
21-03-2011, 10:48 AM
இத்தனை நூறுகளைக் குவித்த சச்சின் மீது எனக்கும் ரசிப்பு உண்டு.
ஆனால்,
நேற்றைய தினம், சச்சின் மீது எனக்கு மதிப்பும் ஏற்பட்டது.

சச்சினது ஆட்டமிழப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட,
நடுவர் இல்லையெனத் தலையாட்டியபோதும்,
பந்து தனது மட்டையிற்பட்டுச்சென்றதை ஏற்றுக்கொண்டு,
நடுவரைக்கூட நோக்காமல் உடனடியாகவே மைதானம் விட்டகன்ற
சச்சினின் அந்தப் பண்பு, கிரிக்கெட் வீரர்களில் எத்தனை பேரிடம் உண்டு?

மட்டையிற் பட்டுச் சென்றது தெரிந்த போதிலும்
நடுவரின் தீர்ப்பிற்காகக் காத்திருந்த ரிக்கி பாண்டிங் போன்றவர்களுக்கு
சச்சினின் இச்செய்கை ஒரு சாட்டையடியாகவே இருந்திருக்கும்...

ஆதவா
21-03-2011, 11:11 AM

முன்பே சச்சின் இப்படி நடந்து கொண்டதுண்டு. கில்கிறிஸ்ட்டும் நேர்மையான மனுசன் தான்!! பாண்டிங் இதற்கு என்ன சொல்கிறாராம் “ நான் எப்போதும் நடுவரின் தீர்ப்புக்காக காத்திருப்பேன்” என்கிறார்...

ஓவியன்
21-03-2011, 12:20 PM
முன்பே சச்சின் இப்படி நடந்து கொண்டதுண்டு. கில்கிறிஸ்ட்டும் நேர்மையான மனுசன் தான்!! பாண்டிங் இதற்கு என்ன சொல்கிறாராம் “ நான் எப்போதும் நடுவரின் தீர்ப்புக்காக காத்திருப்பேன்” என்கிறார்...

ஓமானில் வெளிவரும் தினசரி ஒன்றில், இன்று பின்வருமாறு ஒரு தலையங்கம் தீட்டியிருந்தார்கள்....!! :cool:

"Ponting buries the myth of a gentleman's game." :eek::eek::eek:

-----------------------------------------------------------------------------------------------------------------

சச்சின், ஹில்கிறிஸ்டுடன் இன்னொரு கனவானும் கிரிக்கட்டில் இருக்கிறார், அவர் குமார் சங்ககாரா....!! :icon_b:

தாமரை
21-03-2011, 12:29 PM
முன்பே சச்சின் இப்படி நடந்து கொண்டதுண்டு. கில்கிறிஸ்ட்டும் நேர்மையான மனுசன் தான்!! பாண்டிங் இதற்கு என்ன சொல்கிறாராம் “ நான் எப்போதும் நடுவரின் தீர்ப்புக்காக காத்திருப்பேன்” என்கிறார்...

நடுவரின் திர்ப்பை அவ்வளவு மதிக்கிறவர் ஏன் "UDRS" நடுவரின் தீர்ப்பு மறு ஆய்வுக்கு ஏன் விண்ணப்பிக்கிறாராம்?
:D:D:D

தாமரை
21-03-2011, 12:30 PM
-----------------------------------------------------------------------------------------------------------------

சச்சின், ஹில்கிறிஸ்டுடன் இன்னொரு கனவானும் கிரிக்கட்டில் இருக்கிறார், அவர் குமார் சங்ககாரா....!! :icon_b:

நான் கூட தாமரையைத்தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்!!:lachen001::lachen001::lachen001:

Nivas.T
21-03-2011, 01:03 PM
நான் கூட தாமரையைத்தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்!!:lachen001::lachen001::lachen001:

:eek::eek::eek:

உங்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா ??

:D:D:D:D

நாஞ்சில் த.க.ஜெய்
21-03-2011, 01:08 PM
அருமையான் அலசல் ஆளுங்கோ,ஓவியன் மற்றும் ஷூநிஷி அவர்களே !
முதலில் வீட்டை பார் பின்னர் நாட்டை பார் என்பர் ..இது போல் தான் எந்தவொரு வீரரும் தான் சிறப்பாக விளையாடினால் தான் அந்த ஒருங்கிணைந்த அணியானது வெற்றிபெறும் ..இது போல் தான் பலமுறை நிகழ்ந்துள்ளது இதில் அவசியம் சுயநலம்(ஆசை ) என்பது இருக்கவேண்டும் ..அப்போதுதான் ஆவரால் ஒரு ஆட்டத்தை ரசித்து ஆட முடியும்...சச்சினின் மட்டை பந்து வாழ்வில்...இது போன்று அர்பணிப்பு உணர்வில் விளையாடும் ஒரு வீரரை பற்றி சிறப்பாக விளையாடாத அந்த அணிதனில் உள்ளவர்களே இது போன்ற புரளிதனை பரப்புவார்கள்..உதாரணமாக அசாருதீன் மற்றும் மோங்கியா எனும் வீரர்கள் இவர்(சச்சின் ) தலைமையில்விளையாடியபோது ஒரு சிறுவனின் தலைமையில் விளையாடவேண்டும என்று பல விளையாட்டுகளில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தனர் ..அந்த சூழலில் கூட சச்சின் தான் சிறப்பாக விளையாடினார் ...இவர்கள் இருவரும் சூதாட்ட புகாரில் சிக்கி மட்டை பந்து ஆட்டத்தினை விடு விலகிவிட்டனர் என்பது வேறு விடயம்...இது மட்டுமின்றி நமது நண்பர் கவுதமன் கூறுவது போ தேர்வாளர்களின் தேர்வு ஒருவகையில் காரணம் ,,, இந்த வகையில் பாதிக்க பட்டவர்கள் தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் ,வினோத் காம்ப்ளி மற்றும் கங்குலி மற்றும் நமக்கு அறிமுகம் இல்லாத பலர் ... இவர்களில் ரமேஷ் அவர்கள் இறுதியாக கலந்துகொண்ட நெடுந்தொடர் போட்டி ஒன்றி கலந்து கொண்டு சிறப்பாக ஆசியபோது காயம் காரணமாக் வெளியேறியவர் மீண்டும் அணிதேர்வாளர்கள் பார்வையில் படவே இல்லை ...இது போல் தான் வினோத் கம்பளி நிலையும்...இறுதியா அவர் வெளிநாட்டில் கலந்துகொண்டு விளையாடிய போட்டியில் சிறப்பாக விலாடவில்லை அந்நிலையில் வெளியேறிய அவர் அதன் பின்னர் உள்ளூர் விளையாட்டு போட்டி களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய போதும் மீண்டும் தேர்வாளர்கள் கவனத்தி ஈர்க்க வில்லை ..இதற்க்கு முக்கிய காரணம் இவருடைய நடத்தை... ஒருவன் அடையும் புகழ் கண்டு பொறுக்காது எவரேனும் குற்றம் கண்டு மட்டடம் தட்டும் ஒருசில கூட்டம் திரிகின்றது அதில் சிக்கிய ஒருவர் தான் சச்சின் ..இதற்கு அருமையான உதாரணம் இந்த தங்க கிண்ண போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியுடன் விளையாடிய ஆட்டம் ..சச்சின் மேன்மேலும் சதங்கள் அடிக்க ஒரு ரசிகனான என வாழ்த்துகள்....

ஆளுங்க
21-03-2011, 01:41 PM
இத்தனை நூறுகளைக் குவித்த சச்சின் மீது எனக்கும் ரசிப்பு உண்டு.
ஆனால்,
நேற்றைய தினம், சச்சின் மீது எனக்கு மதிப்பும் ஏற்பட்டது.

சச்சினது ஆட்டமிழப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட,
நடுவர் இல்லையெனத் தலையாட்டியபோதும்,
பந்து தனது மட்டையிற்பட்டுச்சென்றதை ஏற்றுக்கொண்டு,
நடுவரைக்கூட நோக்காமல் உடனடியாகவே மைதானம் விட்டகன்ற
சச்சினின் அந்தப் பண்பு, கிரிக்கெட் வீரர்களில் எத்தனை பேரிடம் உண்டு?

மிகவும் சரி...
ஒரு சிலரிடம் மட்டுமே அந்த பண்பு இன்றும் நிலைத்து உள்ளது!!

ஆதவா
21-03-2011, 02:10 PM
ஓமானில் வெளிவரும் தினசரி ஒன்றில், இன்று பின்வருமாறு ஒரு தலையங்கம் தீட்டியிருந்தார்கள்....!! :cool:

"Ponting buries the myth of a gentleman's game." :eek::eek::eek:

-----------------------------------------------------------------------------------------------------------------

சச்சின், ஹில்கிறிஸ்டுடன் இன்னொரு கனவானும் கிரிக்கட்டில் இருக்கிறார், அவர் குமார் சங்ககாரா....!! :icon_b:

ஓவி... அப்படியென்றால் தலையங்கம் தீட்டவில்லை, திட்டியிருக்கிறார்கள்!!:)

சங்ககராவும்தான் ஓவியன்!! காலிஸும் இப்படி நடந்து கொள்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை பார்த்ததில்லை.

நடுவரின் திர்ப்பை அவ்வளவு மதிக்கிறவர் ஏன் "UDRS" நடுவரின் தீர்ப்பு மறு ஆய்வுக்கு ஏன் விண்ணப்பிக்கிறாராம்?
:D:D:D
அவரும் நடுவர்தானே? அதனால இருக்குமோ?
பாண்டிங், இந்த அம்பயரைவிடவும், மூன்றாவது அம்பயரைத்தான் இன்னும் மதிப்பாராம்.. :D:D

:eek::eek::eek:

உங்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா ??

:D:D:D:D

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.... பந்தை பவுலர் வீசாததற்கு முன்பே அவுட் ஆகிவிட்டோம் என்று நேர்மையாக பெவிலியன் திரும்புபவருங்க அவர்!!! :lachen001::lachen001:

Nivas.T
21-03-2011, 02:14 PM
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.... பந்தை பவுலர் வீசாததற்கு முன்பே அவுட் ஆகிவிட்டோம் என்று நேர்மையாக பெவிலியன் திரும்புபவருங்க அவர்!!! :lachen001::lachen001:

:eek::eek:
:lachen001::lachen001::lachen001:
:D:D:D

ஆளுங்க
21-03-2011, 02:25 PM
அவரும் நடுவர்தானே? அதனால இருக்குமோ?
பாண்டிங், இந்த அம்பயரைவிடவும், மூன்றாவது அம்பயரைத்தான் இன்னும் மதிப்பாராம்..

நல்ல வேளை... நான் "Fourth Umpire" (தூர்தர்சனின் கிரிக்கெட் அலசல்) சொன்னா தான் வெளியே போவேன்னு அடம் பிடிக்கல!!! :lachen001:

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.... பந்தை பவுலர் வீசாததற்கு முன்பே அவுட் ஆகிவிட்டோம் என்று நேர்மையாக பெவிலியன் திரும்புபவருங்க அவர்!!! :lachen001::lachen001:

நாங்கல்லாம் டாஸ் போடும் போதே தோத்துட்டதா டிக்ளேர் பண்றவங்க!!

தாமரை
21-03-2011, 02:36 PM
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.... பந்தை பவுலர் வீசாததற்கு முன்பே அவுட் ஆகிவிட்டோம் என்று நேர்மையாக பெவிலியன் திரும்புபவருங்க அவர்!!! :lachen001::lachen001:

ஆமாங்க நிவாஸ் மாதிரி வைட், நோபால் அப்படின்னு போடறவங்களா இருந்தா விளையாடலாம்.. ஆதவா மாதிரி மண்டைக்கு மாங்கா குறி வைக்கிறவவங்களைப் பார்த்தா, சட்டுன்னு வெளிய வந்திடறது நல்லதுதானே.. ஆல் அவுட் ஆகறதுக்கு முன்னால ஆள் அவுட் ஆயிருவமே!!!

ஆதவா
21-03-2011, 02:43 PM
ஆமாங்க நிவாஸ் மாதிரி வைட், நோபால் அப்படின்னு போடறவங்களா இருந்தா விளையாடலாம்.. ஆதவா மாதிரி மண்டைக்கு மாங்கா குறி வைக்கிறவவங்களைப் பார்த்தா, சட்டுன்னு வெளிய வந்திடறது நல்லதுதானே.. ஆல் அவுட் ஆகறதுக்கு முன்னால ஆள் அவுட் ஆயிருவமே!!!

:icon_hmm:.................................

:icon_03:

Nivas.T
21-03-2011, 03:49 PM
ஆமாங்க நிவாஸ் மாதிரி வைட், நோபால் அப்படின்னு போடறவங்களா இருந்தா விளையாடலாம்.. ஆதவா மாதிரி மண்டைக்கு மாங்கா குறி வைக்கிறவவங்களைப் பார்த்தா, சட்டுன்னு வெளிய வந்திடறது நல்லதுதானே.. ஆல் அவுட் ஆகறதுக்கு முன்னால ஆள் அவுட் ஆயிருவமே!!!

:shutup::shutup:

ஷீ-நிசி
21-03-2011, 04:20 PM
தனக்கு அவுட்னு தெரிஞ்சா சச்சின் போயிட்டே இருப்பார் இது கிரிக்கெட் மேல் அவரு வச்சிருக்கற மரியாதைய காட்டுது.

U.D.R.S என்கிற தொழில்நுட்பம் இல்லாத காலத்துல தனக்கு அவுட்னு தெரிவிக்கபட்டதுனா தயங்காம வெளியேறிடுவார் சச்சின்.

ஆனா இப்ப அந்த தொழில்நுட்பம் இருக்கும் காலத்துலயும் அயர்லாந்துக்கெதிரான போட்டியில் பவுலர் எல்.பி.டபிள்யூ கேட்டு நடுவர் கொடுத்ததும், தான் அவுட்தானா என்பதை எதிரிலிருந்த கோஹ்லியிடம் மட்டும் கேட்டுவிட்டு ரிவியூ கேட்காமலே பெவிலியன் திரும்பியவர் சச்சின்.

ஆளுங்க
27-03-2011, 10:55 AM
சச்சின் தன்னை மீண்டும் நிரூபித்து விட்டார்...
ஆஸ்திரேலியா போட்டியின் போது!!