PDA

View Full Version : ஒரு டைரி குறிப்பிலிருந்து!



ரசிகன்
13-03-2011, 08:40 AM
முன்பொரு கவிதையில்
இல்லாத ஒரு உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...

மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!

நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?

அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!

அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...

பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?

ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...

என் ரெண்டுங்கெட்டான் மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில் ...

அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!

Nivas.T
13-03-2011, 10:06 AM
எல்லாம் மாயை

அருமையான் கவிதை

அழகான கவிதை

ஆழமான் வலியின் கவிதை

உமாமீனா
13-03-2011, 10:23 AM
பாபா பானியில் சொன்னால் மாயை எல்லம் மாயை

பிரேம்
13-03-2011, 10:29 AM
வரிகள் அருமை ரசிக்க..
வலிகளை என்ன சொல்லி சகிக்க...

முரளிராஜா
13-03-2011, 02:15 PM
ரசிகனின் கவிதை அருமை
வாழ்த்துக்கள் ரசிகன்

sarcharan
14-03-2011, 04:38 AM
அருமையான் கவிதை. வாழ்த்துக்கள் ரசிகன்

அக்னி
14-03-2011, 02:00 PM
காதலென்ன துறவா
காமத்தைத் தள்ளிவைக்க?

காதற் ஸ்பரிசங்கள்தானே
காமத்தின் ஆரம்பம்!

அழகின் தூண்டல்
இல்லாமல்..,
காதலில்லை...
காமத்தின் தீண்டல்
இல்லாதது
காதலேயில்லை...

காமத்திற்குட் காதல்
என்றாகாமல்,
காதலுக்குட் காமம்
என்றாவது
தப்பேயில்லை...

தப்பான புரிதல்கள்
தொடர்ந்தால்,
அலைகலின் துப்பல்களும்
தொடரத்தான் செய்யும்...

பாராட்டு ரசிகனுக்கு...

கீதம்
14-03-2011, 11:46 PM
நீர் தள்ளி நின்றதற்காய்
நுரை துப்பிச் சென்றாலும்
நரை தள்ளும்வரை அவள்
நன்றியுடன் நினைத்திருப்பாள்.

ரசிகனின் புலம்பலும், அக்னியின் ஆற்றுப்படுத்தலும் குறுந்தொகைப்பாடலை நினைவூட்டுகிறது.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே;

கலாசுரன்
15-03-2011, 03:49 AM
முன்பொரு கவிதையில்
இல்லாத ஒரு உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...

நல்லா இருக்கு சதீஷ், அது மாற்றப்பட்ட விதம் ..:)

ரசிகன்
27-03-2011, 07:32 PM
எல்லாம் மாயை

அருமையான் கவிதை

அழகான கவிதை

ஆழமான் வலியின் கவிதை
நன்றி நிவாஸ் :-)

ரசிகன்
27-03-2011, 07:33 PM
பாபா பானியில் சொன்னால் மாயை எல்லம் மாயை
நன்றி meena :-)

ரசிகன்
27-03-2011, 07:34 PM
நீர் தள்ளி நின்றதற்காய்
நுரை துப்பிச் சென்றாலும்
நரை தள்ளும்வரை அவள்
நன்றியுடன் நினைத்திருப்பாள்.

ரசிகனின் புலம்பலும், அக்னியின் ஆற்றுப்படுத்தலும் குறுந்தொகைப்பாடலை நினைவூட்டுகிறது.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே;
புலம்பலுக்கான நுண்ணிய பின்னூட்டம் ... நன்றி

ரசிகன்
27-03-2011, 07:35 PM
முன்பொரு கவிதையில்
இல்லாத ஒரு உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...

நல்லா இருக்கு சதீஷ், அது மாற்றப்பட்ட விதம் ..:)
உங்களோட திருத்தல் தான் :-)

ரசிகன்
27-03-2011, 07:36 PM
காதலென்ன துறவா
காமத்தைத் தள்ளிவைக்க?

காதற் ஸ்பரிசங்கள்தானே
காமத்தின் ஆரம்பம்!

அழகின் தூண்டல்
இல்லாமல்..,
காதலில்லை...
காமத்தின் தீண்டல்
இல்லாதது
காதலேயில்லை...

காமத்திற்குட் காதல்
என்றாகாமல்,
காதலுக்குட் காமம்
என்றாவது
தப்பேயில்லை...

தப்பான புரிதல்கள்
தொடர்ந்தால்,
அலைகலின் துப்பல்களும்
தொடரத்தான் செய்யும்...

பாராட்டு ரசிகனுக்கு...
படைப்பை நன்கு ஆராய்ந்து என்னை மேம்படுத்தும் பின்னூட்டம் கொடுப்பதில் உங்களுக்கு ரசிகனாகி போகிறேன்.. நன்றி அக்னி :)

ரசிகன்
27-03-2011, 07:37 PM
அருமையான் கவிதை. வாழ்த்துக்கள் ரசிகன்
நன்றி சரண் :-)

ரசிகன்
27-03-2011, 07:38 PM
ரசிகனின் கவிதை அருமை
வாழ்த்துக்கள் ரசிகன்
நன்றி முரளி ! :-)

ரசிகன்
27-03-2011, 07:38 PM
வரிகள் அருமை ரசிக்க..
வலிகளை என்ன சொல்லி சகிக்க...
நன்றி பிரேம் ! :-)