PDA

View Full Version : இந்தியா VS தென்னாப்பிரிக்கா



Nivas.T
12-03-2011, 07:16 AM
இந்தியா VS தென்னாப்பிரிக்கா

நாக்பூர் இல் இன்று நடக்க இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புடைய அணிகளாகக் கருதப்படும் இந்த இரு அணிகளும் சமபலத்துடன் இன்று மோதவிருக்கின்றன.

இந்தியா இந்தக்குழுவில் முதன்மை வகித்து காலிறுதிக்கு தகுதிப் பெற்றிருந்தாலும், இந்த ஆட்டம் மிக முக்கியமானதா கருதப்படும். இன்று இந்திய அணியில் சுழற்ப்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

தென்னாப்ரிக்கா அணியில் சுழற்ப்பந்து வீச்சாளர் தாகிர் ஓய்வளிக்கப்பட்டு இந்தியாவுக்கு எதிராக மறைக்கப்பட்டுளார் என்றே கருதத் தோன்றுகிறது.

இருப்பினும் போட்டி இந்தியாவில் நடப்பது இந்திய அணிக்கு பெரும் பலம் என்று கூறலாம்.

எப்படி இருப்பினும் இந்தப் போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது என்பது உறுதி.

பிரேம்
12-03-2011, 07:20 AM
பார்த்திடலாம்...:icon_b:

ஆதவா
12-03-2011, 07:43 AM
சாவ்லா இல்லை.... மற்றும் அஸ்வினும் இல்லை!!

மூன்று வேகம், ஒரு ஸ்பின்னர் 7 பேட்ஸ்மென்கள்!!!

இந்தியா டாஸில் ஜெயித்தது போல பேட்டிங்கில் ஜெயிக்குமா???

பிரேம்
12-03-2011, 07:46 AM
கண்டிப்பா முடியும்..ஆதவா-ண்ணே..
போன மேட்ச் மாதிரி யூசுப் பதானை செகண்ட் down இறக்க கூடாதுன்னு நினைக்குறேன். :)

Nivas.T
12-03-2011, 08:12 AM
சாவ்லா இல்லை.... மற்றும் அஸ்வினும் இல்லை!!

மூன்று வேகம், ஒரு ஸ்பின்னர் 7 பேட்ஸ்மென்கள்!!!

இந்தியா டாஸில் ஜெயித்தது போல பேட்டிங்கில் ஜெயிக்குமா???

செய்துதான் ஆகவேண்டும் ஆதவா

இல்லையென்றால் இந்திய அணி மனரீதியாக பலவீனம் அடைந்துவிட வாய்ப்புள்ளது

ஏனென்றால் நாம் பெரிதும் நம்பியிருப்பது பேட்டிங்கைத்தான்.

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் திருப்திகரமாக இல்லை

Nivas.T
12-03-2011, 08:13 AM
கண்டிப்பா முடியும்..ஆதவா-ண்ணே..
போன மேட்ச் மாதிரி யூசுப் பதானை செகண்ட் down இறக்க கூடாதுன்னு நினைக்குறேன். :)

இது மிகவும் முக்கியம்

தோனியின் கணிப்பு தவறியது

Nivas.T
12-03-2011, 08:26 AM
இந்தியா 33/0 (5.0)

ஆளுங்க
12-03-2011, 09:14 AM
இந்தியா 119/0 (14.0)
சச்சின், சேவாக் இருவரும் அரைசதம்!!

Nivas.T
12-03-2011, 09:15 AM
இந்தியா 119/0 (14)

சச்சின் - 50 (33)
சேவாக் - 60 (52)

அமரன்
12-03-2011, 09:17 AM
அடித்தாடும் இருவரும் வெற்றிக்கு இடுகிறார்கள் அடித்தளம்.

ஆதவா
12-03-2011, 09:39 AM
வழக்கத்தைக் காட்டிலும் இன்று ஷேவாக் ஆட்டம் நன்றாக இருந்தது. 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்!!!
சச்சினும் கெளதமும் தொடர்கிறார்கள்!!!

155/1
20 ஒவர்கள்

ஆதவா
12-03-2011, 09:54 AM
கண்டிப்பா முடியும்..ஆதவா-ண்ணே..
போன மேட்ச் மாதிரி யூசுப் பதானை செகண்ட் down இறக்க கூடாதுன்னு நினைக்குறேன். :)


இது மிகவும் முக்கியம்

தோனியின் கணிப்பு தவறியது

தோனி, அன்று பதானை இறக்கிவிட மூன்று காரணங்கள் இருக்க முடியும்

1. பதான் மற்ற போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காததால் இதில் அடித்து ஆடட்டும் என்று
2. சீக்கிரமே வெற்றி பெற்று ரன் ரேட்டை ஏற்றவேண்டும் என்று
3. நெதர்லாந்தை ஒரு சின்ன அணியாக நினைத்து

இறக்கிவிட்டிருக்கலாம்..

*---------------

173/1
24 ஓவ்

பிரேம்
12-03-2011, 10:18 AM
ஆம் உண்மைதான்..அன்னிக்கு மேட்ச்ல யூசுப் கேட்ச் கொடுத்தது எதிர்பாராத விதமானதுதான்..

ஆளுங்க
12-03-2011, 10:20 AM
சீற்றம் சற்று தணிந்துள்ளது!!!!

203/1 (31)

சச்சின் 89
கம்பீர் 29

பிரேம்
12-03-2011, 10:44 AM
அப்பாடா...சச்சின் 100 -ங்க... காளியாத்தாவுக்கு கூழ் confirm .

ஆளுங்க
12-03-2011, 10:46 AM
36 ஆம் ஓவர் மிகவும் நல்லதாக அமைந்தது!!!
சச்சின் தனது 48 வது சதத்தைத் தொட்டார்...
மறுபக்கம், கம்பீர் அரைசதம் கண்டார்..

இனி, மீண்டும் புலி சீறும் என எதிர்பார்ப்போம்...

இந்தியா 237/1 (36.0)

ஆளுங்க
12-03-2011, 10:50 AM
ஓடிஒடியே 100 ஓட்டங்கள் கொண்ட கூட்டணி!!!
கூட்டணி இன்னும் வலுப்படட்டும்!!

ஆளுங்க
12-03-2011, 10:51 AM
ட்வீட் மொழி: "99 Hundreds! Are there anymore adjectives?"

ஆளுங்க
12-03-2011, 10:54 AM
250 ஓட்டங்கள்!!!

ஆளுங்க
12-03-2011, 11:02 AM
மேலும் ஒரு 100....

நான் சச்சின் அடித்த பந்துகலைச் சொன்னேன்... :lachen001::lachen001::lachen001::lachen001:

Nivas.T
12-03-2011, 11:06 AM
சச்சின் 111 (101) அவுட்

இந்தியா 267/2

இப்பொழுதும் பதான் வந்துள்ளார்

ஆளுங்க
12-03-2011, 11:07 AM
சச்சின் ஆட்டமிழப்பு.... 111 (101)..:icon_shok:
அடுத்து வருபவருக்கு ..........

தீயா வேலை செய்யணும்...
:082502now_prv:

ஓவியன்
12-03-2011, 11:08 AM
தோனி, அன்று பதானை இறக்கிவிட மூன்று காரணங்கள் இருக்க முடியும்

1. பதான் மற்ற போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காததால் இதில் அடித்து ஆடட்டும் என்று
2. சீக்கிரமே வெற்றி பெற்று ரன் ரேட்டை ஏற்றவேண்டும் என்று
3. நெதர்லாந்தை ஒரு சின்ன அணியாக நினைத்து

இறக்கிவிட்டிருக்கலாம்..

நான்காவது ஒன்று உள்ளது ஆதவா, அதாவது பதானை தோனி பரீட்சித்துப் பார்த்திருக்கலாம் தானே....

ஆளுங்க
12-03-2011, 11:09 AM
அய்யய்யோ .....

கம்பீருமா?????:eek:

Nivas.T
12-03-2011, 11:10 AM
நான்காவது ஒன்று உள்ளது ஆதவா, அதாவது பதானை தோனி பரீட்சித்துப் பார்த்திருக்கலாம் தானே....

மீண்டும் அதே பரிசோதனை

கம்பீர் வெளியேறினார் 69 (75)


இந்தியா 268/3

யுவராஜ் இறங்கியுள்ளார்

Nivas.T
12-03-2011, 11:12 AM
பதானும் காலி :confused::confused::confused::confused:
:eek::eek::eek:

268/4

தோனி களத்தில் யுவராஜுடன்


இதன் மூலம் வரவிருக்கும் போட்டிகளில்

ரெய்னா அணியில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது

ரெய்னா வும், அஷ்வின் ம் சேர்க்கப்பட்டால்
இந்திய அணி மிகவும் பலம் பொருந்திவிடும்

ஆளுங்க
12-03-2011, 11:27 AM
யுவராஜும் போய் விட்டார்...:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

இவ்வளவு நேரம் அடித்ததற்கு இப்படியா சோதனை???:confused:

ஓவியன்
12-03-2011, 11:30 AM
அடக் கடவுளே இப்படியா தொடர்ந்து ஆட்டமிழப்பாங்க...!! :eek:

ஆதவா
12-03-2011, 11:30 AM
யுவராஜும் போய் விட்டார்...:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

இவ்வளவு நேரம் அடித்ததற்கு இப்படியா சோதனை???:confused:

கோலி காலி!!

300 ஆவது வருமா?

டெண்டுல்கருக்குப் பின்னே வரிசையாகச் செல்லும் பழக்கம் இன்னமும் விடவில்லையா?

ஆதவா
12-03-2011, 11:38 AM
இந்தியாவின் மிடில் ஆர்டர் கொஞ்சம் “லூஸ்” ஆகிறது போலத் தெரிகிறது. முன்பு இங்கிலாந்துக்கு எதிராகவும் இப்படித்தான் ஆடினார்கள். 350க்கும் மேல் போகவேண்டிய ஸ்கோரை “திறமை”யாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்களே!!! ஆரம்பம்தான் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கிறது. என்னதான் அடித்து ஆடி அவுட் ஆனாலும் வரிசையாகவா போய்க்கொண்டே இருப்பது!! அடப்போங்கப்பா!!

இப்படியே போனா வெங்கலக் கிண்ணம் கூட கிடைக்காது!!!

292/6

46 ஓவ்

பஜ்ஜி, மற்றும் மகி!!

ஆதவா
12-03-2011, 11:43 AM
294 / 8

Nivas.T
12-03-2011, 11:44 AM
:eek::eek::eek:

பஜ்ஜி, ஜாகீர் காலி???????????

ஓவியன்
12-03-2011, 11:49 AM
:eek::eek::eek:

பஜ்ஜி, ஜாகீர் காலி???????????

ஷப்பா, முடி.........ல

ஆல் அவுட்டாயிட்டாங்க....

டெண்டுல்கரும், ஷேவக்கும் கம்பீரும் தேம்பி, தேம்பி அழுதிட்டிருப்பாங்கா இப்போ... :D:D:D

ஆளுங்க
12-03-2011, 11:50 AM
:medium-smiley-045:
300 கூட வரலியே.............. :sprachlos020::sprachlos020:

ஆதவா
12-03-2011, 11:55 AM
இதைவிட மோசமாக இந்தியா விளையாடிவிட முடியாது... மிகச்சிறப்பான தொடக்கம் கொடுத்த சேவக், சச்சின், காம்பிர் முகத்தில் கரியைப் பூசியது போல இருந்தது மிடில் டூ லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்களின் ஆட்டம். 267 க்கு 1 என்றிருந்த அணி 296 க்கு ஆலவுட் ஆனது உண்மையிலேயே வெறுப்பைத் தருகிறது. வெறும் 29 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருக்கிறது!!!!
எனினும் 296 ஒரளவு நல்ல ஸ்கோர்தான்!!

360 எட்டும் என்றிருந்த அணியின் ஆட்டம் புஸ்ஸாகி 300கூட எட்டாதது ஏமாற்றம்தான்!!!

பார்ப்போம், பவுலர்களின் திறமையை!!!
ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸைத் தூக்கினாலே பாதி வெற்றிதான்!!!

ஆளுங்க
12-03-2011, 11:55 AM
இத தான் சொல்வாங்களோ:

பேஸ்மென்ட் ஸ்ட்ராங்.... பில்டிங் தான் வீக்!!!:frown:

ஆளுங்க
12-03-2011, 11:59 AM
இதைவிட மோசமாக இந்தியா விளையாடிவிட முடியாது... மிகச்சிறப்பான தொடக்கம் கொடுத்த சேவக், சச்சின், காம்பிர் முகத்தில் கரியைப் பூசியது போல இருந்தது மிடில் டூ லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்களின் ஆட்டம்.


சச்சின், கம்பீரை விட்ட பின் 268/3..
கடைசி 13 ரன்களுக்குள் 6 விக்கெட்டுக்கள்!!! :sauer028:

பிரேம்
12-03-2011, 11:59 AM
நெஹ்ரா திரும்பி போகும்போது..எல்லாரும் ஒரு மாதிரியா சிரிச்சிரிப்பீங்களே..உண்மையா இல்லையா..(ஆமா அவரு எதுக்குப்பா கைய ஒருமாதிரி உதறினாறு..யாருக்கும் தெரியுமா..:confused:)

Nivas.T
12-03-2011, 12:00 PM
கடைசி 55 பந்துகளில் :icon_shout:

29 ஓட்டங்கள் :mad::mad::mad:

9 விக்கட்டுகள் இழப்பு :sauer028::sauer028::sauer028::traurig001:

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:


296 / 10

Nivas.T
12-03-2011, 12:03 PM
இதைவிட மோசமாக இந்தியா விளையாடிவிட முடியாது... மிகச்சிறப்பான தொடக்கம் கொடுத்த சேவக், சச்சின், காம்பிர் முகத்தில் கரியைப் பூசியது போல இருந்தது மிடில் டூ லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்களின் ஆட்டம். 267 க்கு 1 என்றிருந்த அணி 296 க்கு ஆலவுட் ஆனது உண்மையிலேயே வெறுப்பைத் தருகிறது. வெறும் 29 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருக்கிறது!!!!
எனினும் 296 ஒரளவு நல்ல ஸ்கோர்தான்!!

360 எட்டும் என்றிருந்த அணியின் ஆட்டம் புஸ்ஸாகி 300கூட எட்டாதது ஏமாற்றம்தான்!!!

பார்ப்போம், பவுலர்களின் திறமையை!!!
ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸைத் தூக்கினாலே பாதி வெற்றிதான்!!!


நிச்சயமாக இது விறுவிறுப்பான போட்டியாகத்தான் இருக்கும்

பொறுத்திருந்து பார்க்கலாம்:sprachlos020::sprachlos020:

பிரேம்
12-03-2011, 12:04 PM
பரவா இல்ல...நல்ல ஸ்கோர் தான்...பௌலிங் சிறப்ப அமையும்..
சும்மா ஒரு ப்ரேக் எடுத்துட்டு..அதுக்கப்றம்..
தீயா..வேலை செய்யணும்..

ஆதவா
12-03-2011, 12:19 PM
தெண்டுல்கரின் 111 ராசியில்லையோ என்னவொ?? :confused::confused:

ஓவியன்
12-03-2011, 12:26 PM
தெண்டுல்கரின் 111 ராசியில்லையோ என்னவொ?? :confused::confused:

ஓ அப்படியும் இருக்குமோ, இதைவிட்டால் வேறு நல்ல காரணமும் தோனியிடம் இல்லை இப்போது... !!:D:D:D

ஆதவா
12-03-2011, 12:59 PM
அவுட்!!!! ஸ்மித்!!!

ஜாஹீரின் பவுலிங் எக்ஸலண்ட்!!! இன்னொருபக்கம் நெஹ்ரா கடைசி இருபந்துகளை பவுண்டரிக்குக் கொடுத்துவிடுகிறார்....

41/1

8.3 ஓவ்

Nivas.T
12-03-2011, 01:28 PM
இதுவரை இந்திய பந்துவீச்சு

கட்டுக்கோப்பாக உள்ளது

தென்னாப்ரிக்கா 66/1 (15)

அக்னி
12-03-2011, 01:36 PM
இதுவரை இந்திய பந்துவீச்சு

கட்டுக்கோப்பாக உள்ளது



winrar சாப்பிட்டிருப்பாங்களோ... :rolleyes: :cool:

ஆதவா
12-03-2011, 02:06 PM
தென்னாப்பிரிக்கா.... 111/1 (24.4 ஓவ்) !!!

அக்னி
12-03-2011, 02:08 PM
தென்னாப்பிரிக்கா.... 111/1 (24.4 ஓவ்) !!!

இப்பிடி இருந்தா விக்கட் போகுமுன்னு சொன்னாங்க...
ஆனா, ப்வுண்ட்ரி தானே போச்சுது...

Nivas.T
12-03-2011, 03:35 PM
தென்னாப்பிரிக்கா 240 / 5 (43)

த.ஜார்ஜ்
12-03-2011, 04:16 PM
இப்ப நிம்மதிதானே?

ஆளுங்க
12-03-2011, 04:17 PM
எல்லாம் சரி...
கடைசி ஓவர் போட வேற ஆளே கிடைக்கலையா???????
:medium-smiley-100:


வாரி வழங்கும் வள்ளல்...

ஒரு பவுலர் தொடர்ந்து 4 , 6 எடுப்பது போல பந்து வீச இவரால் மட்டும் தான் முடியும்!!
:medium-smiley-045:
கடைசி ஓவர் சொதப்பலால் பெருந் தோல்வி!!:frown:

ஆளுங்க
12-03-2011, 04:23 PM
ஓபனிங் எல்லாம் நல்லா தான் இருந்தது...
ஆனா, பினிசிங் சரியில்லையேபா!!

பாலகன்
12-03-2011, 05:02 PM
ஜகீர்கான் கை கால் கழுவும்போது அந்த தண்ணீரை நெக்ராவுக்கு ஒரு டம்ளர் புடிச்சிட்டு வந்து தரலாம், அடுத்த போட்டியில் ஞானம் வரட்டும்.

ஆளுங்க
12-03-2011, 05:26 PM
சில ட்வீட் மொழிகள்:

*Behind every successful batsman there is a kamran akmal...
BUT in front of every successful batsman there is a ashish nehra

*சச்சின், சேவாக் பொறுப்பில்லாமல் ஆட்டமிழக்க, தோனி கடைசி வரை போராடி ரன் குவித்தார்
- பொது ஜனம்

*Sachin-"I was changing out of my sweaty clothes & taking a shower.. was shocked to see the whole team back in the dressing room showering too"

பாலகன்
12-03-2011, 05:31 PM
அருமையான வாசகங்கள்.

தோனி எதற்காகவோ காத்திருந்த மாதிரி இருந்தது. :)

M.Jagadeesan
12-03-2011, 11:49 PM
பின்வரிசை ஆட்டக்காரர்கள் சொதப்பிவிட்டனர்.சேவாக்கும்,டெண்டுல்கரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துவிட்டார்கள்,இந்தியா ஜெயித்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டதன் விளைவுதான் இந்தத் தோல்வி.