PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:6



ராஜாராம்
12-03-2011, 05:21 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6eX9k76TdA1uGN7XmUCO_mj1LLkCvdsMfIW0oRZUIfSuFoUjRw_2SAA
திருச்சி....மெயின்கார்ட்கேட்...கங்கையம்மாள் கலைக்கல்லூரி...காலை...8.46மணி

"ஏய்...இங்கவாடி...நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்...
நீப்பாட்டுக்குக் கண்டுக்காமல்
போயிக்கிட்டே இருக்கே....",
கல்லூரி வாசலினுள் வேகமாய் சென்றுக் கொண்டிருந்த,
அபியினை வழிமறித்தான் பிரகாஷ்.

"என்ன நீங்க...
எப்போதும் இப்படி வம்பு பன்னிக்கிட்டே இருக்கிங்க...?",
கோபமாய் அவனைப் பார்த்தாள் அபிராமி.

"நான் உன்னை லவ் பன்றேன்...
உனக்கு என்னையப் புடிச்சிருக்கா?இல்லையா?
எஸ் ஆர் நோ...டக்குன்னு சொல்லிடு...
அதுக்கப் பிறகு நான் உன்னைய தொல்லைப்பன்னமாட்டேன்..".,
உரிமையோடு அவளிடம்,பிரகாஷ் கேட்டதும்,.

"யோசிச்சு...சொல்றேன்...",

"என்னடி...உன்கிட்ட தேர்தல் தொகுதிப்பங்கீடா கேட்கிறேன்...?
யோசிச்சு சொல்றேன்னு சொல்றே?
ஏய்,,.இது காதல்...
காதலில் யோசிக்கவே கூடாது..
கப்புன்னு கண்ணமூடிக்கிட்டு கிணத்தில்ல குதிக்கிறாப்ல...முடிவெடுக்கனும்..",

"இது வாழ்க்கைப் பற்றிய முடிவு.
அதனால யோசிச்சுத்தான் முடிவெடுக்கனும்..
ஒரு புடவை வாங்கினாலே யோசிச்சு வாங்குறோம்...
அப்படி இருக்கையில்...
காதலனை உடனே செலக்ட் பன்னமுடியாது...",
என்ற அபியிடம்,

"புடவைய காதாலுக்கும்,கல்யாணத்துக்கும்
உதாரணமாக் காட்டுவதை எப்பத்தான் விடப்போறிங்களோ...
தமிழ்சினிமா,ரொம்பவே உங்களையெல்லாம் கெடுத்திருக்கு",
என்றான் நக்கலாய்.

"எங்கப் பாட்டிக்கு காதல்னா பிடிக்காது...
அவுங்க இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க...",
அவனை மெல்ல பார்த்தபடி அவள் கூற,

"பாட்டி ஒத்துக்கமாட்டாங்களா?
நான்,உங்கப்பாட்டியை லவ் பன்னலேடி...
உன்னையத்தான் லவ் பன்றேன்...",
என்றான் மீண்டும் குறும்புத்தனமாக.

"சரி..நான் கிளாஸிற்கு போகனும்...வழிவிடுங்க...",

"இன்னைக்கு முடிவை சொல்லு..
இல்லாட்டி வழிவிடமாட்டேன்....",
என்று செல்லமாய் அடம்பிடித்த பிரகாஷிடம்,

"ஆமாம்....புடிச்சிருக்குப் போதுமா....
வழிவிடுங்க நான் போனும்...",
என்றாள்.

"புடிருக்கா?......
நிஜமாவா?,,,",
அவனது வார்த்தைகளில்,ஆச்சர்யமும்...
சந்தோஷமும் தெரிந்தது.

"ஆமாம்..உங்களை புடிச்சிருக்கு...
நிஜமாதான்....சொல்றேன்....
ஆனால்...எங்கப்பாட்டி கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க...
அதை நீங்கதான் சமாளிக்கனும்..",

"கண்டிப்பா...அதுக்கு நான் பொறுப்பு,,,
நீ கவலைப்படாதே...",
என்று அவளது,கன்னத்தை செல்லமாகத் தட்டினான்.

வெட்க்கத்தில் சிரித்தவளாய்...வகுப்புக்குச் சென்றாள்.

(இரவு....11.0மணி,.....அபிராமியின் இல்லம்.....)

உறங்கிகொண்டிருந்தவளின்...கனவுகளில்...
விசித்திராமாய் சிலக்காட்சிகள் ஓடத்தொடங்கின...

(......குற்றால அருவி வெகு வீரியமாய்...
ஆக்ரோஷமாய் வீழ்ந்துக்கொண்டிருந்தது..
பாறையின் மேல்
கன்னத்தில் கைவைத்தப்படி அமர்ந்த்திருந்தாள் அபிராமி.

"தொபீரேன,...",சப்தத்துடன்...
ஏதோ ஒரு உருவம்...
திடீரேன வெகு வேகமாய் ஓடிவந்து
அருவியில் குதித்தது,..

"ஐயையோ...",
அதைக் கண்ட அபி அதிர்ச்சியில் வாய்விட்டு அலறினாள்.
அவளது சத்தம் யாருக்கும் எட்டவில்லை......

சற்று நேரதிற்கெல்லாம்...

"ஐய்யா,,..
இன்றைக்கு நிறையாப் பிணங்கள் கிடைச்சுருக்கு.
எனக்கு நிறையக் காசு வரும்....",'
என்று கூறியபடி...
இறந்துப்போன பிணங்களை,
குவியல் குவியலாய்...
அபியின் முன் கொண்டுவந்துப் போட்டது,
அருவியில் குதித்த அந்த உருவம்....

"ஐயையோ....",
பிணங்களின் குவியலைக் கண்டவள்...
மீண்டும் வாய்விட்டு சத்தம் போட்டாள்..",.......)

"ஏய் அபி என்னடி ஆச்சு?",
வேகமாய் அபியை தட்டி எழுப்பினாள் பாட்டி மங்களம்.
கண்கள் விழித்த அபிக்கு,,..
அது ஒருக் கனவு என்று,அப்பொழுதுதான் புரிந்தது.

"பாட்டி...கனவுல,ஒரு உருவம்,
குற்றால அருவியில்,
குதித்து நிறையப் பிணங்ளை கொண்டுவந்து
என்முன்னாலப் போடுதுப் பாட்டி...",
என்று பயத்தில்,தேமிதேமி அழுதாள்.

"குற்றாலமா?
ஏதோ ஒரு உருவம்,
பிணங்களைக் கொண்டுவந்து போடுகிறதா?
ஐயையோ...!!!,
ஒருவேளை அது அவனாகத்தான் இருக்குமோ...!!!?",
என்று அபியின் பாட்டி மனதுக்குள்ளே....
யாரையோ எண்ணி அச்சமடைந்தாள்...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSP2F1qmswlCUgWs31ziER7RO3s7O2Nz5VvYjfbhWr2vY9daGvpix3r0kE
சென்னை....வடபழனி...புலனாய்வுத்துறை அலுவலகம்...மறுநாள்..காலை..10.20மணி..

"சார்...கொலைசெய்யப்பட்ட
பிரியதர்ஷினி...பற்றி ஒரு தகவல் கிடைச்சிருக்கு...",
என்று அலுவலகத்திற்குள் நுழைந்தான்,அசோக்கின் உதவியாளர் ரமேஷ்.

"என்ன ரமேஷ்?என்ன விஷயம்?",
என்று அசோக் கேட்டதும்,,

"சார்...பிரியதர்ஷினி...
மாசம் மாசம்...பாம்பேயில் உள்ள ஒருவருக்கு
பணம் நிறைய அனுப்பிருக்காங்க..
பேஃங்க் டிரான்ஸாக்*ஷன்...ரிப்போர்ட்..இருக்கு சார்...",
என்று விவரங்களை அடங்கிய காகிதத்தை அசோக்கிடம் நீட்டினான்.

"சார்...பிரியதர்ஷினி கொலையாவதற்கு முன்..
கடந்த 2மாதங்களாக,,.
அந்த நபருக்கு பணம் அனுப்புவதை நிருத்தி இருக்காங்க...",
என்ற ரமேஷ்,

"ஒருவேளை...அந்த நபருக்கும்...
இந்தக் கொலைக்கும்...
ஏதாவது தொடர்பு இருக்கும்மோ?",
என்றதும்..

"ம்ம்ம்ம்...இருக்கலாம்...".
என்று சற்றே சந்தேகத்துடன் கூறிய அசோக்,

"நாம ரெண்டுபேரும்...
ஒரு நாள்..திருக்குற்றாலம் போகனும் ரமேஷ்.
அதுக்கூட பிரிதர்ஷினி கொலை சம்மந்தமான ஒரு விசாரணை தான்....",
என்றான்.

"ஓகே சார்,...
நான் ரெடி...எப்பவேணும்மென்றாலும் போகலாம்",
என்றான் ரமேஷ்.

"ரமேஷ்,
..."9789781080"....இந்த மொபைல் நம்பர் ,
நடிகை பிரியதர்ஷினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவுங்க இப்ப இல்லை.
ஆனால் அந்த நம்பரில் இருந்து புராணக்கால வாசகங்கள் போல,
ஒருசில வரிகள் எஸ்.எம்.எஸ்.வடிவில்,என் நண்பனுக்கு வந்தது.
அதில் சொல்லி இருந்த விஷயமும் அப்படியே நடந்தும்விட்டது....",
என்ற..அசோக்குமார்,

"அந்த நம்பரை,
யாரு இப்ப பயன்படுத்துறாங்கன்னு..
டிரேஸ்-அவுட்,செய்து கண்டுப்பிடிங்க...
அதுக்கூட..பிரியதர்ஷினிக் கொலைக்கு
ஒரு துடுப்பு சீட்டா இருக்கலாம்..",
என்றதும்.,

"ஓகே,,,..சார்...
உடனடியா அந்த நம்பரை டிரேஸவுட் பன்னிடுறேன்...",
என்ற ரமேஷ்...அசோக்கிடம் இருந்து விடைப்பெற்றான்....

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT-ogfadNZfvEAvw_kIUMbDJ2_y59seELxXSSyu6RAXIW-X2W6tG58x3Bs
சிதம்பரம்.........தேரடிவீதி.......காலை...11.45மணி...

"வாங்க...வாங்க...சொளக்கியமா?
உங்கப் பையனுக்கும்....திருச்சிப் பொண்னுக்கும்...
நிச்சயம் ஆயிடுச்சா?",
என்றார்,ஜோசியர்
தன்னை நாடிவந்த அசோக்கின் தந்தை ராமநாதனிடம்.

"அதுலத்தான்...ஒருப் பிரச்சனை...",
ராமஎஆதன் கூறியதும்,

"ஏன் என்னாச்சு?",

"என் பையன்னுக்கு ஒரு சின்ன விபத்து நடந்துப்போச்சு...
அதனால,,.இப்போதைக்கு பொண்ணையேப் பார்க்கப் போகவில்லை",

"அப்படியா?",

"அதனால பொண்ணோட ஜாதகத்தை
கொஞ்சம் விவரமா பாருங்க...,",
என்று ராமநாதன் கூறியதும்,

"பேஷா,,,பார்த்திடுவோம்...",
என்ற ஜோதிடர்...
பூஜை அறையில் விளக்கினை ஏற்றிவிட்டு
தீவிரமாய் தியானத்தில் ஈடுபட்டார்,.
அவரது முகத்தையே பார்த்தவாறு
ராமநாதனும்,,அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம்,,,ஜோசியரது முகம் சற்றேக் கலேபரம் ஆனது.

"சார்,,..இந்தப் பொண்ணோட
ஜாதகத்தில் ஏதோ ஒரு தெய்வ அனுகூலம் இருக்கு...
அந்த தெய்வ அனுகூலம்..
ஏதோ ஒரு தடைப்பன்னிக்கிட்டே இருக்கு...
இருந்தாலும் நாம மெனக்கிட்டு..நல்லபடியா முடிச்சிடுவோம்...
கவலைப்படாதிங்க...",
என்றார்...

அசோக்கின் தந்தைக்கும்,அன்னைக்கும்...
மனதுக்குள் சற்றே அச்சம் எழத்தொடங்கியது..
குழப்பத்துடன்...மெல்ல வெளியேறினர்...

(கண்ணாமூச்சி ஆட்டம்....தொடரும்...)
(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821A0.TAMILNADU FILM
CHAMBER/..rajaram..RTD240)

Nivas.T
12-03-2011, 05:31 AM
அடுத்தது
மும்பாய்க்கும் போறோமா??

ராரா இது தமிழ் நாட்டோட முடியும்னு நெனெச்சா
இந்திய முழுசும் போகும் போல..

கத நல்லா போகுது ராரா

Nivas.T
12-03-2011, 05:43 AM
அடுத்தது
மும்பாய்க்கும் போறோமா??

ராரா இது தமிழ் நாட்டோட முடியும்னு நெனெச்சா
இந்திய முழுசும் போகும் போல..

கத நல்லா போகுது ராரா

sarcharan
12-03-2011, 06:11 AM
மும்பைக்கு வாரீங்களா...

வெல்கம் டு மும்பை :lachen001:

உமாமீனா
12-03-2011, 08:12 AM
:icon_good: :icon_hmm:

govindh
12-03-2011, 09:22 AM
"அந்த நம்பரை,
யாரு இப்ப பயன்படுத்துறாங்கன்னு..
டிரேஸ்-அவுட்,செய்து கண்டுப்பிடிங்க...

ம்ம்ம்... பிரகாஷா...?!!!:confused:

ராஜாராம்
12-03-2011, 09:57 AM
நன்றி,
நிவாஸ் அவர்களுக்கும்,
சாராவிற்கும்,
உமாமீனா அவர்களுக்கும்,
கோவிந் அவர்களுக்கும்..

(அந்த கதையில் குறிப்பிடப்பட்டுள்ள,..மொபைல் நம்பர்..9789781080.. என்னுடையதுதான்...கோவிந்த)

sarcharan
14-03-2011, 09:28 AM
கஜினி படத்துல ஆமீர் கான் ஒரு நம்பர பச்ச குத்தி இருப்பார். அது யாரோ ஒரு பொம்மனாட்டியோடதாம்.. அது ஒரு பெரிய கதையாடிச்சு