PDA

View Full Version : சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்முரளிராஜா
12-03-2011, 02:20 AM
http://www.hoax-slayer.com/images/tsunami-dust-wave.jpg

ஜப்பானை நேற்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் 19-ம் தேதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல் தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் வி்ஞ்ஞானிகள். இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வால்,

உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து.

இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இந்த சூப்பர்மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.

சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜான் கெட்லி தெரிவித்துள்ளார்.
நன்றி: தட்ஸ்தமிழ்

பாலகன்
12-03-2011, 02:48 AM
இந்த நிகழ்வை நினைச்சா இப்பவே பயமா இருக்குது

பிரேம்
12-03-2011, 02:54 AM
நம்ம எல்லாரயும் சக்திமான் தான் காப்பத்தனும்... :frown:

த.ஜார்ஜ்
12-03-2011, 05:08 AM
அந்த அலை.. ஆஹா..எம்மாம் பெருசு.

lolluvathiyar
12-03-2011, 06:22 AM
பேரழிவுகள் பல முரை நிகழுந்திருகின்றன. சூப்பர் மூன் இல்லாத காலங்களிலும் கூட நிகழ்ந்திருகிறது. அதை சூப்பர் மூனோடு முடிச்சு போடுவது கோன் இன்சிடன்ஸ் தவிர வேறு இல்லை. அலைகள் அதிகரிக்க வாய்பு இருக்கலாம். அத*னால் ப*ய*ப*ட* தேவை இல்லை.

அந்த அலை.. ஆஹா..எம்மாம் பெருசு.

ஹெலோ ஜார்ஜ் அந்த படத்தில் இருப்பது அலை இல்லீங்க அது சேன்ட்ஸ்ட்ராம் என்று அழைக்கபடும் புழுதிபுயல். ஆஸ்திரிலேயாவில் அடிகடி இந்த மாதிரி புழுதிபுயல் வீசும் அதில் எடுக்க படம் படம் இது.

த.ஜார்ஜ்
19-03-2011, 04:28 PM
ஹெலோ ஜார்ஜ் அந்த படத்தில் இருப்பது அலை இல்லீங்க அது சேன்ட்ஸ்ட்ராம் என்று அழைக்கபடும் புழுதிபுயல். ஆஸ்திரிலேயாவில் அடிகடி இந்த மாதிரி புழுதிபுயல் வீசும் அதில் எடுக்க படம் படம் இது.

ஒ. அதானா இது?!!!!!!

கீதம்
19-03-2011, 11:22 PM
எனக்கென்னவோ இது சுனாமி அலைகள் என்று தோன்றுகிறது. ஜப்பானில் சுனாமி வந்தபோது எடுக்கப்பட்ட பல படங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். அறிந்தவர்கள் விளக்கினால் இன்னும் தெரிந்துகொள்வோம்.

அமரன்
19-03-2011, 11:26 PM
ஜப்பானில் சுனாமிக்கு முதல் இந்தப் படம் பார்த்திருக்கேனே.:)

கீதம்
20-03-2011, 12:47 AM
அப்படியானால் இது லொள்ளுவாத்தியார் சொன்னதுபோல் புழுதிப்புயலாக இருக்கலாம். புயல் கிளம்பும் சமயம் நான் பார்த்ததில்லை. முழுவதுமாய் ஆக்கிரமித்தபின்பே பார்த்திருக்கிறேன்.

முரளிராஜா
20-03-2011, 03:40 AM
ஆம், இது சுனாமிக்குமுன் வரும் புழுதி புயல்தான்

tsunami-dust-wave

ஓவியா
21-03-2011, 01:11 AM
சூப்பர் மூன் ரொம்ப அழகா இருந்துச்சி. இரவெல்லாம் அதனுடன் பேசினேன். பதிலே சொல்லாமல் அமைதியா இருந்துச்சு. ரொம்ப நல்லது போல.

பாவம் அது, நாமிதா போல (கும்முனு) வந்துச்சு... அது பாட்டுக்கு அசின் போல அழகா சிரிச்சுட்டு போயிடுச்சு. :)

lolluvathiyar
21-03-2011, 07:27 AM
ஜப்பானில் சுனாமி வந்தபோது எடுக்கப்பட்ட பல படங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.
இல்லை இது சினாமியின் போது எடுக்கபட்டது இல்லை. இந்தியாவின் சுனாமியின் போது கூட எடுக்க பட்டது இல்லை அதற்க்கு பல நாட்களுக்கு முன்பே இந்த புகைபடத்தை நான் பார்த்திருகிறேன். இது பேமஸான ரொம்ப பழைய படம்.

தாமரை
21-03-2011, 07:43 AM
சூப்பர் மூன் என்றால் என்ன?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=518844#post518844

சூப்பர் மூன் நிகழ்வு தனித்துவமாக ஒண்ணும் செய்யறதில்லை. நாம் மூச்சு விடறப்ப நுரையீரல் சுருங்கி விரிகிற மாதிரிதான், நிலா பூமிக்கு அருகில் வருவதும் தொலைவில் செல்வதும் 27.3 நாட்களுக்கு ஒரு முறை நடக்குது. அதே மாதிரி வருஷத்திற்கு ஒரு முறை பூமி சூரியனுக்கு அருகில் சென்று வருகிறது. அதே மாதிரி சூரியன் பால்வெளி மையத்திற்கு அருகில் சென்றுவருகிறது 250 மில்லியன் வருஷங்களுக்கு ஒருமுறை.

இப்படி சுருங்கியும் விரிந்து பேரண்டமே மூச்சு விட்டுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கு. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் போவது போல வெளிமண்டலத்தில் காஸ்மிக் கதிர்கள் பயணிக்கின்றன.

அதனால் சூப்பர் மூன் நிகழ்வு ஒரு மிகச் சிறிய காரணி. பூமி அதிர்ச்சி, சுனாமி ஆகியவை இப்படியாகப்பட்டவை பற்பலத் தொடர்நிகழ்வுகளின் விளைவு, அதனால் சூப்பர் மூன் மட்டுமே காரணம் என்பது முற்றிலும் தவறு.:D:D:D

Ravee
21-03-2011, 12:38 PM
ம்ம் ஆளாளுக்கு ஒரு கவலை எனக்கு என் கவலை. பக்கத்து வீட்டு நிலா பத்து வருஷம் முன்னாலே போனா ..... போன மாசம் பார்த்தேன் சூப்பர் மூன் போல பெருசா குண்டா வந்துருக்கா ...... ம்ம்ம் :eek: :eek: :eek:

தாமரை
21-03-2011, 12:44 PM
ம்ம் ஆளாளுக்கு ஒரு கவலை எனக்கு என் கவலை. பக்கத்து வீட்டு நிலா பத்து வருஷம் முன்னாலே போனா ..... போன மாசம் பார்த்தேன் சூப்பர் மூன் போல பெருசா குண்டா வந்துருக்கா ...... ம்ம்ம் :eek: :eek: :eek:

நிலா முன்னால போனா சரி.. பின்னால போனது யாரு?

முன்னால போன நிலாவுக்கு இப்ப ரிவர்ஸ் கியர் வச்சுட்டாங்களா? இப்பவாச்சும் பின்னால வர்ராங்களா?

அதுசரி இந்தக் கதை வீட்டு நிலாவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தெரியுமா சூரியன்? (ரவீ??)

Nivas.T
21-03-2011, 12:48 PM
நிலா முன்னால போனா சரி.. பின்னால போனது யாரு?

முன்னால போன நிலாவுக்கு இப்ப ரிவர்ஸ் கியர் வச்சுட்டாங்களா? இப்பவாச்சும் பின்னால வர்ராங்களா?

அதுசரி இந்தக் கதை வீட்டு நிலாவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தெரியுமா சூரியன்? (ரவீ??)

:D:D:D:D

முரளிராஜா
21-03-2011, 12:57 PM
நிலா முன்னால போனா சரி.. பின்னால போனது யாரு?

முன்னால போன நிலாவுக்கு இப்ப ரிவர்ஸ் கியர் வச்சுட்டாங்களா? இப்பவாச்சும் பின்னால வர்ராங்களா?

அதுசரி இந்தக் கதை வீட்டு நிலாவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தெரியுமா சூரியன்? (ரவீ??)

வீட்டு நிலாவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தெரியாதாம் நீங்க அங்க போய்
சொன்னாலும் பயம் இல்லையாம்:icon_p:

தாமரை
21-03-2011, 12:59 PM
வீட்டு நிலாவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தெரியாதாம் நீங்க அங்க போய்
சொன்னாலும் பயம் இல்லையாம்:icon_p:

இதை அவர் சொல்ல பயந்துகிட்டு உங்களை அனுப்பி வச்சாரா?

முரளிராஜா
21-03-2011, 01:05 PM
இதை அவர் சொல்ல பயந்துகிட்டு உங்களை அனுப்பி வச்சாரா?
ஆமாம்
(எப்படியோ ஒருத்தருக்கு இன்னிக்கு நல்லது செஞ்சாச்சு:D)

Ravee
22-03-2011, 09:33 AM
நிலா முன்னால போனா சரி.. பின்னால போனது யாரு?

முன்னால போன நிலாவுக்கு இப்ப ரிவர்ஸ் கியர் வச்சுட்டாங்களா? இப்பவாச்சும் பின்னால வர்ராங்களா?

அதுசரி இந்தக் கதை வீட்டு நிலாவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தெரியுமா சூரியன்? (ரவீ??)

கிரகணத்து அன்று சூரியனை பாம்பு முழுங்கும் என்று என் பாட்டி சொல்வாங்க .... பாம்பு கிளம்பிடுச்சுங்கோ ..... ஐ யாம் எஸ்கேப் ......... :traurig001: :traurig001: :traurig001: