PDA

View Full Version : சுனாமி



M.Jagadeesan
11-03-2011, 09:03 AM
பயங்கர நில நடுக்கம்!
ஜப்பானை சுருட்டியது
சுனாமி!

இந்தியாவுக்கு ஆபத்தில்லை!
அரசியல்வாதிகள் அறிவிப்பு!
" நாங்கள் இருக்கையில்
இந்தியாவை யாராலும்
சுருட்டமுடியாது!"

முரளிராஜா
11-03-2011, 11:15 AM
சுனாமி எப்பவாதுதான் சுருட்டும் ஆனா அரசியல்வாதிகள்?
வாழ்த்துக்கள் ஜெகதீசன் சார்

M.Jagadeesan
11-03-2011, 11:45 AM
சுனாமி எப்பவாதுதான் சுருட்டும் ஆனா அரசியல்வாதிகள்?
வாழ்த்துக்கள் ஜெகதீசன் சார்

நன்றி! மு.ரா.

அக்னி
11-03-2011, 11:48 AM
‘நச்’

சுருட்ட நாங்கள் இருக்கையில்
வேறு யாராலும் சுருட்ட முடியாது

என்று சொல்லாமற் சொல்லுறாங்களோ...

M.Jagadeesan
11-03-2011, 11:52 AM
அக்னியின் பி.ஊ.க்கு நன்றி!

ஆதி
11-03-2011, 12:00 PM
ஹி.. ஹி..

பொட்டில் அடிப்பதை போன்ற கவிதை, மிக நன்று ஐயா.. வாழ்த்துக்கள்..

அக்னி
11-03-2011, 12:07 PM
அக்னியின் பி.ஊ.க்கு நன்றி!

பி.ஊ. என்றால்,

பின் ஊளை யா... :rolleyes:

Nivas.T
11-03-2011, 12:15 PM
நல்ல கவிதை

ஜெகதீசன்

M.Jagadeesan
11-03-2011, 12:21 PM
பி.ஊ. என்றால்,

பின் ஊளை யா... :rolleyes:

பின்னூட்டம் என்பதன் சுருக்கம். பின் ஊளை அல்ல! நரிகள்தான் ஊளையிடும்.

அக்னி
11-03-2011, 12:50 PM
எல்லாம் இந்தக் கீதம்+அக்காவால வர்றது...

சும்மா இருந்த நரிக்கு எச்சரிக்கை பண்ணி, பின்னூட்டம் கூடப் பின் ஊளையா வர்றது...

ஓவியா
11-03-2011, 06:44 PM
பயங்கர நில நடுக்கம்!
ஜப்பானை சுருட்டியது
சுனாமி!

இந்தியாவுக்கு ஆபத்தில்லை!
அரசியல்வாதிகள் அறிவிப்பு!
" நாங்கள் இருக்கையில்
இந்தியாவை யாராலும்
சுருட்டமுடியாது!"

இந்த கவிதையை எல்லாரும் வாசிக்கனும், இந்தியா+அரசியல் ஏலம் நல்லாவே இருக்கு. நச்சோ நச். :icon_b: