PDA

View Full Version : நாவிடம் பாவிடம்

கீதம்
11-03-2011, 04:59 AM
(மக்களே... பயந்துவிடாதீர்கள். கவிதைப் பட்டறையில் தட்டி செம்மைப்படுத்துவதற்காகவே இக்கவிதை(?)

எவரும் படித்தால் எளிதில் புரியும் என்று நினைக்கிறேன். புரியவில்லையெனில் விளக்கம் பிறகு தருகிறேன்.)

*****************

நாவிடம் பாவிடம்

விதைப்பை உருவிடம் வரப்பை உறைவிடம்
கருப்பை வாழ்விடம் உடைப்பைச் சூழ்விடம்
அகப்பை வழிவிடம் இரைப்பை நிறைவிடம்
படிப்பை அறிவிடம் பகுப்பை உணர்விடம்
இருப்பை அறிவிடம் இயல்பை உணர்விடம்!

மசிப்பைத் துளிவிடம் வனப்பைப் பொழிவிடம்
கனிப்பை வடிவிடம் முகப்பைக் கனிவிடம்
விழிப்பைக் கருவிடம் இமைப்பைக் கனவிடம்
அகப்பை உறைவிடம் வதைப்பை உணர்விடம்
இனிப்பைத் தருவிடம் இனிப்பைத் திருவிடம்!

மணப்பை பூவிடம் மனப்பை மகிழ்விடம்
நகைப்பை மனைவிடம் களிப்பை மகவிடம்
மிதப்பைத் தருவிடம் மதிப்பைச் சரிவிடம்
பணப்பை அசைவிடம் பழிப்பை அழைவிடம்
பிழைப்பை நுழைவிடம் தலைப்பை சுழிவிடம்!

புகைப்பை நுழைவிடம் நுரைப்பைத் தீவிடம்
மதுப்பை பூவிடம் இரைப்பை மதுவிடம்
இருப்பைப் பாய்விடம் இருப்பைத் தேய்விடம்
அரிப்பை குறைவிடம் குடற்பை அரிவிடம்
அகப்பை அயர்விடம் இறப்பை உணர்விடம்!

உயிர்ப்பை நோவிடம் உடற்பை சாவிடம்
சிதைப்பை எருவிடம் சதைப்பை கழிவிடம்
நெருப்பைச் சேர்விடம் கரிப்பை முடிவிடம்
கலப்பை வாழ்விடம் உழைப்பைச் சூழ்விடம்
விதைப்பை உருவிடம் வரப்பை உறைவிடம்!

பிரேம்
11-03-2011, 05:08 AM
பரவா இல்ல க்கா..ஒரு சில வரி நல்லாவே புரியுது...
ஆமா இது நீங்களே எழுதினதா..? (ஆஹா..தப்பா கேட்டுட்டேனோ..!)

செல்வா
11-03-2011, 05:09 AM
வாழ்க்கை ஒரு வட்டண்டா...

கரு உருவாவதில் இருந்து சிதையாகி மீண்டும் கருவாகும் வரை என்பது என் சிற்றறிவுக்குப் பனிபடலம்போல் புரிகிறது.

வார்த்தைக்கு வார்த்தை பொருள் விளங்கிக் கொள்ளுமளவு நான் இன்னும் வளரவில்லை...

ஆமா இதுக்கு தலைப்பு நாவிடம் - பாவிடம் னு இருக்கே... ஏன். :confused:

அப்புறமா ஆற அமர மறுபடியும் படிச்சுப் பாக்குறேன். இப்போ அலுவலில்... :(

தமிழாசான்களுக்காகக் காத்திருக்கிறேன்.

முரளிராஜா
11-03-2011, 05:09 AM
சத்தியமா புரியல கீதம் அவர்களே:confused:
என் நண்பன்ட்ட படிச்சி கான்பித்தேன் அதுக்கு அவன் எனக்கு சொன்ன பதில்
மச்சான் உடம்ப பாத்துக்க, நல்ல டாக்டரா போய் பாரு

பிரேம்
11-03-2011, 05:12 AM
சத்தியமா புரியல கீதம் அவர்களே:confused:
என் நண்பன்ட்ட படிச்சி கான்பித்தேன் அதுக்கு அவன் எனக்கு சொன்ன பதில்
மச்சான் உடம்ப பாத்துக்க, நல்ல டாக்டரா போய் பாரு

கரீட்டாதான்..சொல்லி இருக்காரு..லேட் பண்ணிடாதிங்க..:eek: :icon_b:

முரளிராஜா
11-03-2011, 05:19 AM
பரவா இல்ல க்கா..ஒரு சில வரி நல்லாவே புரியுது...
ஆமா இது நீங்களே எழுதினதா..? (ஆஹா..தப்பா கேட்டுட்டேனோ..!)
யாரோ சித்தர் எழுதினதுன்னு நினைக்கிறேன்:lachen001:

ஆதவா
11-03-2011, 05:23 AM
சத்தியமா புரியல கீதம் அவர்களே:confused:
என் நண்பன்ட்ட படிச்சி கான்பித்தேன் அதுக்கு அவன் எனக்கு சொன்ன பதில்
மச்சான் உடம்ப பாத்துக்க, நல்ல டாக்டரா போய் பாரு

தலைப்பு பாத்தீங்களா?? நா+விடம்... பா+விடம். (விடம் - விஷம்)

தலைதெறிக்க ஓடறீங்களா??? :aetsch013:

கீதம்
11-03-2011, 05:23 AM
யாரோ எழுதியதையெல்லாம் தட்டி செம்மைப்படுத்துங்கன்னு உரிமையோடு தர முடியுமா? நான் எழுதியதுதான். தைரியமாப் படிங்க. எழுதின நானே இன்னும் டாக்டரைப் பார்க்கும் நிலைமைக்கு வரலை.:lachen001:

முரளிராஜா
11-03-2011, 05:36 AM
யாரோ எழுதியதையெல்லாம் தட்டி செம்மைப்படுத்துங்கன்னு உரிமையோடு தர முடியுமா? நான் எழுதியதுதான். தைரியமாப் படிங்க. எழுதின நானே இன்னும் டாக்டரைப் பார்க்கும் நிலைமைக்கு வரலை.:lachen001:

இத எங்க தைரியமா படிக்கறது?:aetsch013:
எச்சரிக்கை என்கிற தலைப்பில் எங்க எல்லோரையும் குழப்பினிங்க
அடுத்து இப்ப, எனக்கென்னமோ நீங்க சீக்கிரம் டாக்டரை பாக்கறது நல்லது
வெய்யில் காலம் வேற ஆரம்பம் ஆயிடுச்சி. நாங்க தமிழ் மன்றத்துக்கு
அப்பப்ப வரனும் இத மனசுல வச்சுக்குங்க:lachen001:

கீதம்
11-03-2011, 05:39 AM

ராணாக்கள் பண்ணுகிற அட்டகாசத்தை விடவா என் அட்டகாசம் பெரிசாப் போயிட்டு? இது உங்களுக்கே ஓவராத் தெரியல?:D

Nivas.T
11-03-2011, 05:42 AM
சொல்லவே வெக்கமாத்தான் இருக்கு என்ன பண்றது

எனக்கும் புரியல :icon_rollout::icon_rollout::icon_rollout:

முரளிராஜா
11-03-2011, 05:48 AM
சொல்லவே வெக்கமாத்தான் இருக்கு என்ன பண்றது

எனக்கும் புரியல :icon_rollout::icon_rollout::icon_rollout:

அட நீங்க வேற நிவாஷ்
அத எழுதினவங்களுக்கே புரியலையாம்
இதுக்கெல்லாம் போய் வெட்கபட்டுகிட்டு:lachen001:

தாமரை
11-03-2011, 05:52 AM
இல்லா விடத்தில் இருக்குந் தமிழது
பொல்லா விடத்தில் பிறக்குந் தமிழது
செல்லா விடத்தில் செழிக்குந் தமிழது
கல்லா விடத்துத் தமிழ்.

விடத்தை நீங்களும் குடிச்சிட்டீங்களா?

எப்பதான் தாமரை வருவாரு.. அவருக்கு வேலை கொடுக்கலாமுன்னே காத்திருந்து தனி மடல் போட்டு பதியறாங்களே!!!

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=342918#post342918

விஷத்துக்கும் விஷயத்திற்கும் மத்தியிலதான் வாழ்க்கையே ஊசலாடிகிட்டு இருக்கு.

ய - அப்படின்னா யாம்,(தமிழில் ய, இ, ஐ ஆகிய எழுத்துக்களுக்கு மாற்றாக வருவதைப் பார்க்கலாம். இதைத்தான் இங்கிலீஸ் ல I அப்படீன்னு சொல்றாங்கது) அதாவது ஆத்மா.. அதாவது விஷமத்தின் மத்தியில் ஆத்மா சிக்கும்போதுதான் விஷயம் உண்டாகுது... :lachen001::lachen001::lachen001:

ஆனாலும் ஆள் செட்டப் பண்ணி நாலு தட்டு தட்டற அளவுக்கு பெரிய அரசியல்வாதி ஆயிட்டீங்க.. :eek::eek::eek::eek:

ஆமாம் தட்டறதுக்கு தாதா வை ரெடி பண்ணிட்டீங்களா? :icon_ush::icon_ush::icon_ush:

வாழ்த்துக்கள். :lachen001::lachen001::lachen001:

sarcharan
11-03-2011, 05:55 AM
கவிதை சூப்பரா இருக்கு! பாராட்டுகள் கீதம் அவர்களே..

கீதம்
11-03-2011, 06:02 AM
ஆனாலும் ஆள் செட்டப் பண்ணி நாலு தட்டு தட்டற அளவுக்கு பெரிய அரசியல்வாதி ஆயிட்டீங்க.. :eek::eek::eek::eek:

ஆமாம் தட்டறதுக்கு தாதா வை ரெடி பண்ணிட்டீங்களா? :icon_ush::icon_ush::icon_ush:

வாழ்த்துக்கள். :lachen001::lachen001::lachen001:

எனக்கு என் தாத்தாவைத்தான் தெரியும். எந்தத் தாதாவையும் தெரியாது. :lachen001: உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

[FONT=&quot]அடுத்ததாய் குமுதா அக்கா கேட்டார்கள்

“எப்போ எழுதுவீங்க? சாயங்காலம் வீட்டுக்குப் போனப்புறமா?”

நான் தாமரைப் பார்க்க,

“ஆபிஸ்ல தான். வேலை அதிகமா இருக்கும் போது சின்ன டைவர்ஷன் தேவை. அப்போ தான் மூளை எந்நேரமும் சுறுசுறுப்பா இருக்கும். எனக்கான வேலைன்னு மட்டும் பாக்கறப்போ வேலையும் மன்றமும் மாத்தி மாத்தி பார்த்தாலும் வேலை சீக்கிரமே முடிஞ்சுடும். இப்போல்லாம் மேனேஜ்மெண்ட் வேலை நிறைய இருக்கு. எப்போது மீட்டிங்னு போறதால மன்றம் பக்கமே வர முடியறதில்லை...”

உங்களை சுறுசுறுப்பாய் வைக்க நினைத்த என்னைப்போய்..... தப்பா நினைச்சிட்டீங்களே....:traurig001:

அமரன்
11-03-2011, 06:05 AM
அண்ணோய். ஓவியாக்கா வந்ததுக்கும் இந்தக் கவிதைக்கும் சம்மந்தமிருக்கிற மாதிரித் தெரியல*

கீதம்
11-03-2011, 06:09 AM
அண்ணோய். ஓவியாக்கா வந்ததுக்கும் இந்தக் கவிதைக்கும் சம்மந்தமிருக்கிற மாதிரித் தெரியல*

தெரியல.

தாமரை
11-03-2011, 06:15 AM
உங்களை சுறுசுறுப்பாய் வைக்க நினைத்த என்னைப்போய்..... தப்பா நினைச்சிட்டீங்களே....:traurig001:

“ஆபிஸ்ல தான். வேலை அதிகமா இருக்கும் போது சின்ன டைவர்ஷன் தேவை. அப்போ தான் மூளை எந்நேரமும் சுறுசுறுப்பா இருக்கும்.

இது ஆழ முழுகி முத்தெடுக்கற வேலையாச்சே.. சின்ன டைவர், அவரோட சன் அவன் எவ்வுளவு ஆழம்தான் போக முடியும்?

சரி சரி அழாதீங்க..

முதல்ல் மாணவர்கள் முடிஞ்ச வரைக்கும் அலசட்டும்.

உதாரணமா

விதைப்பை உருவிடம் வரப்பை உறைவிடம்..

பாகவதப் புராணத்தில் ஆன்மாக்களின் வாழ்க்கைச் சுழற்சி பற்றி வியாசர் சொல்லி இருக்கிற விஷயங்களை நீங்க படிச்சிருக்க வாய்ப்பில்லை,, ஆனால் அதை இங்கே தெளிச்சிருக்கீங்க...

பொறுமையா அலசுவோம்..

தாமரை
11-03-2011, 06:17 AM
அண்ணோய். ஓவியாக்கா வந்ததுக்கும் இந்தக் கவிதைக்கும் சம்மந்தமிருக்கிற மாதிரித் தெரியல*

நதிமூலம் கவிமூலம் பார்க்காம பிரிச்சி மேய ஆரம்பிக்கணும். பார்க்கலாம் யார் எவ்வளவு கத்துகிட்டு இருக்கீங்கன்னு..

அமரன், அக்னி, ஆதன், ஆதவா இன்னும் யாரெல்லாம் விளையாட்டுக்கு வர்ரீங்க?

ஆதவா
11-03-2011, 06:30 AM
நதிமூலம் கவிமூலம் பார்க்காம பிரிச்சி மேய ஆரம்பிக்கணும். பார்க்கலாம் யார் எவ்வளவு கத்துகிட்டு இருக்கீங்கன்னு..

அமரன், அக்னி, ஆதன், ஆதவா இன்னும் யாரெல்லாம் விளையாட்டுக்கு வர்ரீங்க?

நானு.... நானு....

எனக்கு கொஞ்ச நேரமாகும்... வேலை இருக்கு..

அமரன்
11-03-2011, 06:40 AM
வேலை இல்லைன்னாலும் எனக்கு நேரமாகுமுங்கோ

மதி
11-03-2011, 06:55 AM
என்ன எங்க பாத்தாலும் விடம் விடம்னு இருக்கு..!! இந்த ஆட்டத்தை தூர நின்னு வேடிக்கைப் பார்க்கத் தான் நான் லாயக்கு..

ஜமாய்ங்கோ...!!:eek::eek::eek:

செல்வா
11-03-2011, 07:02 AM
செல்வரே... ஆழ டைவ் பண்ணணுமா? :sprachlos020:

அவசரப் பட்டுட்டியேடா... செல்வா.. :confused:

எதுக்கும் ஓரமா ஒதுங்கி நின்னு வேடிக்கைப் பாரு.

sarcharan
11-03-2011, 07:14 AM
செல்வரே... ஆழ டைவ் பண்ணணுமா? :sprachlos020:

அவசரப் பட்டுட்டியேடா... செல்வா.. :confused:

எதுக்கும் ஓரமா ஒதுங்கி நின்னு வேடிக்கைப் பாரு.

ஆழ டைவ் செய்கிறீர்களா...

ஒமேகா ஸீமாஸ்டர் வாட்ச் அணிந்து டைவ் செய்யுங்கள்..

ஆழ்கடலிலும் நேரம் பார்க்கலாம்..

வாங்குங்கள்!! அணியுங்கள்!! ஒமேகா ஸீமாஸ்டர் வாட்ச்

ஜானகி
11-03-2011, 08:01 AM
ஏதோ புதுவிதமான வடகம் என்று நினைத்து உள்ளே வந்தால்.....விடமான விஷயமாக இருக்கிறதே.....பதவுரை, பொழிப்புரை தந்தாலும் புரியுமா என்பதே சந்தேகம் தான்... முயலுகிறேன்...தப்பித் தவறி மதுரை தமிழ்ச் சங்கத்தினுள் நுழைந்துவிட்டேனோ....?

பிரேம்
11-03-2011, 08:06 AM
ஏதோ புதுவிதமான வடகம் என்று நினைத்து உள்ளே வந்தால்.....விடமான விஷயமாக இருக்கிறதே.....பதவுரை, பொழிப்புரை தந்தாலும் புரியுமா என்பதே சந்தேகம் தான்... முயலுகிறேன்...தப்பித் தவறி மதுரை தமிழ்ச் சங்கத்தினுள் நுழைந்துவிட்டேனோ....?

மொட்டைமாடியில காயப்போட்ட வடகத்தோட ஞாபகத்தோட இருந்தா இப்டித்தான்... :D :rolleyes:

தாமரை
11-03-2011, 08:20 AM
எல்லோரும் விஷத்தை மட்டுந்தான் பார்த்தீங்களா... பக்கத்தில பை இருக்கறதைக் கவனிக்கவே இல்லையா?

ஒவ்வொரு சுவாரஸ்யமான பொருளுக்கும் 50 இ-காசுகள் தரப்படும்

மதி
11-03-2011, 08:24 AM
அட போங்க சார்...!!

தாமரை
11-03-2011, 08:34 AM
அட போங்க சார்...!!

காயமே இது பொய்யடா!
வெறும் காற்றடைத்த பையடா
மாயவனார் குயவன் செய்த
மண்ணு பாண்ட ஓடடா!!!:lachen001::lachen001::lachen001:

மதி
11-03-2011, 08:36 AM
காயமே இது பொய்யடா!
வெறும் காற்றடைத்த பையடா
மாயவனார் குயவன் செய்த
மண்ணு பாண்ட ஓடடா!!!:lachen001::lachen001::lachen001:
ஓடுங்கறீங்க...

முடியாது..!!:icon_rollout::icon_rollout:

ஆதி
11-03-2011, 08:38 AM
எல்லோரும் விஷத்தை மட்டுந்தான் பார்த்தீங்களா... பக்கத்தில பை இருக்கறதைக் கவனிக்கவே இல்லையா?

ஒவ்வொரு சுவாரஸ்யமான பொருளுக்கும் 50 இ-காசுகள் தரப்படும்

நான் கவனிச்சேன் அண்ணா,

விதைப் பை உருவிடம், வரப் பை உறைவிடம்

விதைப்பையுரு விடம், வரப்பையுறை விடம்

பிரிச்சு சேர்த்துவாசிக்க வாசிக்க பொருள் மாறி மாறி, விரியுது..

ஆதவா
11-03-2011, 09:19 AM
ஓகே ஓகே.... திரியை வளர்த்திட்டே இருக்கக்கூடாது.. மேட்டருக்கு வருவோம்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ”நாங்கள்ல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!!!” (டபுள் மீனிங் இருக்கு... எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க!!)

ஏற்கனவே இரையும் உரையும் மறையும் நு எழுதி சாப்பாடு தண்ணீரில்லாமல் ”உம்” “உம்” என்று பார்த்துக் கொண்டே நழுவிய வரலாறுகளும் அறிவியல்களும் கணக்குகளும் தவிர்த்துவிட்டு,

ஏதாவது உரை கொடுப்போமே என்று நம்பி வந்திருக்கும் எனக்கு கரகோஷம் போடுங்கள் பார்ப்போம்!!!

நாவிடம் பாவிடம்..

சொல்லுவார்களே... என்ன வாய்டா உனக்கு (கவுண்டமணி என்று நினைக்கிறேன்) என்று.. கருநாக்கு உள்ளவன் வாக்கு எப்போதுமே விஷமமாகத்தான் இருக்கும்.. வாயுள்ள பிள்ள பிழைக்கும் என்பார்கள்.. இல்லை இல்லை... நாக்குள்ள பிள்ளைதான்.... நாக்கினிடம்தான் வாக்கின் விடம் இருக்கிறது.. பொல்லாதது!! (ஏய்... இப்ப என்ன சொல்ல வர்றே?/)

நாக்கு+விடம்+பாட்டு+விடம் அல்லது நாவு(கோல்)+இடம்+பாட்டு+இடம் அல்லது நாக்கு+இடம்..... அய்யய்யோ!!!.....

மதிக்கு வந்த கனவை கவிதையா போட்டுட்டு..... மதிக்கே தெரியாம கிண்டலடிக்கிறதெல்லாம்.... ம்ஹும்ம்/// என்னங்க மதி@ கேட்கமாட்டீங்களா???

ஆரம்பமே ஏடாகூடமா இருக்கே...விதைப்பை, வரப்பை.... கொஞ்சம் 18+ மேட்டராக இருக்குமோன்னு நினைச்சு அடுத்த வரி வந்தால்... ஆமாம்ல!!! சரிதானே!! என்ன.... தவறா.??? இருந்துட்டு போகட்டும். நமக்கு கவலையே இல்ல. விதைப்பும் அறுவடையும் இருந்தாத்தான் உலகமே ஓடும்!! விதைச்சாச்சு... விதை எங்க வளரும்?? நிலத்தில... அதுவும் வெளிச்சம்படாத நிலத்தில. ஏன்னா அங்கதாங்க மனுசன் கடவுளா இருக்கான்... எப்போ உடைஞ்சு வெளியே வரானோ அப்போ சூழுது விஷம்!! ஒண்ணும் பண்ணமுடியாது.. சரி..... பிள்ளை பொறந்தாச்சு.. அப்பறமுமா?? நோ நோ
மனசு நிறைஞ்சா வயிறு நிறைஞ்சாமாதிரிங்க, அளவா இருக்கணும்.. அறிவுல படிப்பு இருக்கணும்... உணர்வு பகுத்திருக்கணும்!! இல்லையா... பாருங்க புள்ள கோச்சுட்டு போவுது.

எம்.ஜி.ஆர் பாட்டொன்னு இருக்கு.... மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... யாருப்பா எழுதினது... ஏன் விழனும்ங்கறேன்??/ உன்னோட இருப்பு, உலகுக்குத் தெரியணும்... தெரிவிச்சு?? அடபோங்கப்பா!

பையன் பிறந்தாச்சு... நல்லா வளர்ந்தாச்சு... அப்பறமென்ன??? காலகாலத்தில கல்யாணம்?? அட அதுக்கு முன்னாடி காதல்னு ஒண்ணு இருக்கில்ல?? நல்ல வடிவான உடல்; வனப்பான அங்கங்கள்.. இருந்தா போதுமா?? இனிப்பா இருக்கணும்.. முகத்தில இனிப்பைக் காட்டணும்... அப்பத்தான் பொண்ணுங்க கண் விழியில விழும். இராத்திர் கனவு வரும்... மனசு உறையும். அலாரம் அடிக்கும். கல்யாணமும் நடக்கும்.. மனசெல்லாம் சந்தோஷமா இருக்கும்.. பொண்டாட்டியாயிட்டாளா??? இனிமே என்ன நல்லா ஈன்னு சிரிக்கணும். இல்லாட்டி நகை நட்டு வாங்கித் தரணும்... அந்த கடுப்பை பிள்ளைங்ககிட்ட காட்டணூம் (ஏ!!!!ய்!!!!) பொண்டாட்டி புள்ளைங்களுக்கு செலவாச்சேன்னு ஓவரா தண்ணியடிச்சு மிதந்தா ரோட்லதான் தூங்கணும்... அதனால ஓவரா ஆடாம மதிப்பு குறையாம இருக்கணும். அதுக்காக பணத்தை தண்ணிமாதிரி செலவு பண்ணவும் கூடாது.. அப்பறம் பிரச்சனைதான். வாழ்கையில வீண் பிரச்சனைகளை நுழைச்சா தலையெழுத்தே மாறிடும்!!

கொஞ்சம் பர்சனலா வருவோம்... தங்கராஜா வடிகட்டி புகையிலை சுருட்டை நாளொன்றுக்கு 40 அடிக்கவும்!! அப்பத்தானே ஈரல் கெட்டுப்போகும்!! சும்மா அடிக்கக்கூடாது, கொஞ்சம் சரக்கும் சேர்த்து அடிக்கணும். நல்லா முன்னுக்கு வரலாம்... என்ன நம்பமாட்டீங்களா?? லயன்ஸ் கிளப்லயும் ரோட்டரி கிளப்லயும் இதைத்தாங்க பண்றாங்க...! இருப்பாவது தேயறதாவது!!! என்ன??? உடலுறுப்பு கெடுமா?? சான்ஸே இல்லை.. இல்லையா... செத்துட்டு போங்க... உள் உறுப்புகள் டான்ஸ் ஆடிச்சுன்னாத்தான் சங்குசத்தம் காதுல கேட்கும்!!! கரெக்டான வாழ்வும் வாழ்வீங்க....

என்னப்பா... செத்தாச்சா.... எரிச்சாச்சா... விவேக் சொல்றமாதிரி எல்லாரோட வாழ்க்கையும் கடைசியில ஒரு சொம்பு சாம்பல்தாண்டா..... அப்ப்றம்.... திரும்பவும் தோண்டுங்க.... விதைச்சு அறுவடை பார்த்து.......

கண்ணைக் கட்டுது போங்க.... இதைப் போய் கவிதைக்கு விமர்சனம்ன்னு யாராச்சும் சொன்னீங்க..... அப்பறம் மீட்டர் இல்லாத ஆட்டோ எந்த நாடா இருந்தாலும் வரும்!!!

நம்ம பங்கு ஓவர்!!

மதி
11-03-2011, 10:03 AM
மதிக்கு வந்த கனவை கவிதையா போட்டுட்டு..... மதிக்கே தெரியாம கிண்டலடிக்கிறதெல்லாம்.... ம்ஹும்ம்/// என்னங்க மதி@ கேட்கமாட்டீங்களா???

என்னாது என் கனவா"..இப்படி புரியாத பாஷையில எழுதினா விட்டுடுவேன்னு நெனச்சீங்களா..? ஆதவன் இருக்காரு போட்டுக் கொடுக்க..

ஆமா ஆதவா.. என்ன கனவு அது..?

ஆதவா
11-03-2011, 10:20 AM
என்னாது என் கனவா"..இப்படி புரியாத பாஷையில எழுதினா விட்டுடுவேன்னு நெனச்சீங்களா..? ஆதவன் இருக்காரு போட்டுக் கொடுக்க..

ஆமா ஆதவா.. என்ன கனவு அது..?

கல்யாணம் ஆகி கொழந்த குட்டியெல்லாம் பிறந்து................ அந்த கனவுங்க... :D

கீதம்
11-03-2011, 10:31 AM
ஓகே ஓகே.... திரியை வளர்த்திட்டே இருக்கக்கூடாது.. மேட்டருக்கு வருவோம்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ”நாங்கள்ல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!!!” (டபுள் மீனிங் இருக்கு... எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க!!)

ஏற்கனவே இரையும் உரையும் மறையும் நு எழுதி சாப்பாடு தண்ணீரில்லாமல் ”உம்” “உம்” என்று பார்த்துக் கொண்டே நழுவிய வரலாறுகளும் அறிவியல்களும் கணக்குகளும் தவிர்த்துவிட்டு,

ஏதாவது உரை கொடுப்போமே என்று நம்பி வந்திருக்கும் எனக்கு கரகோஷம் போடுங்கள் பார்ப்போம்!!!

நாவிடம் பாவிடம்..

சொல்லுவார்களே... என்ன வாய்டா உனக்கு (கவுண்டமணி என்று நினைக்கிறேன்) என்று.. கருநாக்கு உள்ளவன் வாக்கு எப்போதுமே விஷமமாகத்தான் இருக்கும்.. வாயுள்ள பிள்ள பிழைக்கும் என்பார்கள்.. இல்லை இல்லை... நாக்குள்ள பிள்ளைதான்.... நாக்கினிடம்தான் வாக்கின் விடம் இருக்கிறது.. பொல்லாதது!! (ஏய்... இப்ப என்ன சொல்ல வர்றே?/)

நாக்கு+விடம்+பாட்டு+விடம் அல்லது நாவு(கோல்)+இடம்+பாட்டு+இடம் அல்லது நாக்கு+இடம்..... அய்யய்யோ!!!.....

மதிக்கு வந்த கனவை கவிதையா போட்டுட்டு..... மதிக்கே தெரியாம கிண்டலடிக்கிறதெல்லாம்.... ம்ஹும்ம்/// என்னங்க மதி@ கேட்கமாட்டீங்களா???

ஆரம்பமே ஏடாகூடமா இருக்கே...விதைப்பை, வரப்பை.... கொஞ்சம் 18+ மேட்டராக இருக்குமோன்னு நினைச்சு அடுத்த வரி வந்தால்... ஆமாம்ல!!! சரிதானே!! என்ன.... தவறா.??? இருந்துட்டு போகட்டும். நமக்கு கவலையே இல்ல. விதைப்பும் அறுவடையும் இருந்தாத்தான் உலகமே ஓடும்!! விதைச்சாச்சு... விதை எங்க வளரும்?? நிலத்தில... அதுவும் வெளிச்சம்படாத நிலத்தில. ஏன்னா அங்கதாங்க மனுசன் கடவுளா இருக்கான்... எப்போ உடைஞ்சு வெளியே வரானோ அப்போ சூழுது விஷம்!! ஒண்ணும் பண்ணமுடியாது.. சரி..... பிள்ளை பொறந்தாச்சு.. அப்பறமுமா?? நோ நோ
மனசு நிறைஞ்சா வயிறு நிறைஞ்சாமாதிரிங்க, அளவா இருக்கணும்.. அறிவுல படிப்பு இருக்கணும்... உணர்வு பகுத்திருக்கணும்!! இல்லையா... பாருங்க புள்ள கோச்சுட்டு போவுது.

எம்.ஜி.ஆர் பாட்டொன்னு இருக்கு.... மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... யாருப்பா எழுதினது... ஏன் விழனும்ங்கறேன்??/ உன்னோட இருப்பு, உலகுக்குத் தெரியணும்... தெரிவிச்சு?? அடபோங்கப்பா!

பையன் பிறந்தாச்சு... நல்லா வளர்ந்தாச்சு... அப்பறமென்ன??? காலகாலத்தில கல்யாணம்?? அட அதுக்கு முன்னாடி காதல்னு ஒண்ணு இருக்கில்ல?? நல்ல வடிவான உடல்; வனப்பான அங்கங்கள்.. இருந்தா போதுமா?? இனிப்பா இருக்கணும்.. முகத்தில இனிப்பைக் காட்டணும்... அப்பத்தான் பொண்ணுங்க கண் விழியில விழும். இராத்திர் கனவு வரும்... மனசு உறையும். அலாரம் அடிக்கும். கல்யாணமும் நடக்கும்.. மனசெல்லாம் சந்தோஷமா இருக்கும்.. பொண்டாட்டியாயிட்டாளா??? இனிமே என்ன நல்லா ஈன்னு சிரிக்கணும். இல்லாட்டி நகை நட்டு வாங்கித் தரணும்... அந்த கடுப்பை பிள்ளைங்ககிட்ட காட்டணூம் (ஏ!!!!ய்!!!!) பொண்டாட்டி புள்ளைங்களுக்கு செலவாச்சேன்னு ஓவரா தண்ணியடிச்சு மிதந்தா ரோட்லதான் தூங்கணும்... அதனால ஓவரா ஆடாம மதிப்பு குறையாம இருக்கணும். அதுக்காக பணத்தை தண்ணிமாதிரி செலவு பண்ணவும் கூடாது.. அப்பறம் பிரச்சனைதான். வாழ்கையில வீண் பிரச்சனைகளை நுழைச்சா தலையெழுத்தே மாறிடும்!!

கொஞ்சம் பர்சனலா வருவோம்... தங்கராஜா வடிகட்டி புகையிலை சுருட்டை நாளொன்றுக்கு 40 அடிக்கவும்!! அப்பத்தானே ஈரல் கெட்டுப்போகும்!! சும்மா அடிக்கக்கூடாது, கொஞ்சம் சரக்கும் சேர்த்து அடிக்கணும். நல்லா முன்னுக்கு வரலாம்... என்ன நம்பமாட்டீங்களா?? லயன்ஸ் கிளப்லயும் ரோட்டரி கிளப்லயும் இதைத்தாங்க பண்றாங்க...! இருப்பாவது தேயறதாவது!!! என்ன??? உடலுறுப்பு கெடுமா?? சான்ஸே இல்லை.. இல்லையா... செத்துட்டு போங்க... உள் உறுப்புகள் டான்ஸ் ஆடிச்சுன்னாத்தான் சங்குசத்தம் காதுல கேட்கும்!!! கரெக்டான வாழ்வும் வாழ்வீங்க....

என்னப்பா... செத்தாச்சா.... எரிச்சாச்சா... விவேக் சொல்றமாதிரி எல்லாரோட வாழ்க்கையும் கடைசியில ஒரு சொம்பு சாம்பல்தாண்டா..... அப்ப்றம்.... திரும்பவும் தோண்டுங்க.... விதைச்சு அறுவடை பார்த்து.......

கண்ணைக் கட்டுது போங்க.... இதைப் போய் கவிதைக்கு விமர்சனம்ன்னு யாராச்சும் சொன்னீங்க..... அப்பறம் மீட்டர் இல்லாத ஆட்டோ எந்த நாடா இருந்தாலும் வரும்!!!

நம்ம பங்கு ஓவர்!!

ஆதவா, பின்னிட்டீங்க, எதையா? அதைதான். பாராட்டுகள்.

உங்களுக்கு நான் மதிப்பெண் தர முடியாது. தாமரை அவர்கள்தான் வரணும். ஏன்னா.... என் குழந்தையை அவருக்குத் தத்து கொடுத்திட்டேன். இனி உரிமை கொண்டாட முடியாது.

தாமரை
11-03-2011, 10:54 AM
அப்படியெல்லாம் சொல்லப்படாது..

முதல்ல நீங்க எழுதினதை நீங்க என்ன நினைச்சு எழுதினீங்களோ அதை விளக்கின பின்னாலதான் நான் இதைத் தொடுவேன்..

இந்தத் திரியில் விமர்சனம் இருக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமில்ல..

அதனால...

இந்தத் திரியில் நீங்கதான் விளக்கம் எழுதணும்

கீதம்
11-03-2011, 11:24 AM
ஆதவா சொன்ன அதே கருத்துதான். இருந்தாலும் என் வார்த்தைகளில் எழுதுகிறேன்.

நாவிடம் பாவிடம்

(நாவின் விடம் பாவில், பா என்னும் விடம் நாவில். இரண்டு அர்த்தம், உங்களுக்கு எது வசதியோ அப்படி அர்த்தப்படுத்திக்கோங்க... ஆளைக்கொல்வது அல்லது கடுமையாய்த் தாக்குவது விஷத்தின் வேலை. இந்தப் பாடலில் எந்தெந்த பொருட்கள் அப்படிச் செயல்படுகின்றனவோ அவற்றை விடமென்று குறிப்பிடல் தவறில்லையென எண்ணுகிறேன்.)

விதைப்பை உருவிடம் வரப்பை உறைவிடம்
கருப்பை வாழ்விடம் உடைப்பைச் சூழ்விடம்
அகப்பை வழிவிடம் இரைப்பை நிறைவிடம்
படிப்பை அறிவிடம் பகுப்பை உணர்விடம்
இருப்பை அறிவிடம் இயல்பை உணர்விடம்!

ஓர் ஆணின் விதைப்பையில் அணுவாய் உருவாகும் ஓர் உயிருக்கு பெண்ணின் கருப்பையே வாழுமிடம். ஏதோ ஒரு கருப்பை அல்ல, சுமக்கும் வரம் பெற்ற பையில் உறைந்து வாழ்கிறது. அவ்வுயிர் முழுமை பெற்று மண்ணில் அவதரித்தப்பின் அதை உடையாகிய பை சூழ்ந்துகொள்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அகப்பையில் வழியும் சோறால் இரைப்பை எப்போதும் நிறைந்தே இருக்கிறது. (அளவுக்கதிகமானல் அமுதமும் விஷமாம், அளவு மிஞ்சியதால் சோறும் இங்கே விடம்) அது ஒரு ஆண்மகவு எனக்கொள்வோம். அவன் வளர்கிறான். பள்ளிக்குச் செல்கிறான். படிப்பறிவைப் பெறுகிறான். பகுத்துணரும் அறிவையும் பெறுகிறான். வளர்ந்தவனுக்கு தன்னிருப்பை அறிவிக்கும் ஆர்வம் எழுகிறது. அதாவது வாலிபத்தை எட்டிவிட்டான். தன் இயல்புகள் என்னென்ன என்பதை உணரத் தொடங்குகிறான். (அ) அந்த வயதில் இயல்பாக இளைஞர்கள் செய்யும் காரியத்தை உணர்ந்து அதில் இறங்கிவிடுகிறான்.(அதாங்க காதல்!)

மசிப்பைத் துளிவிடம் வனப்பைப் பொழிவிடம்
கனிப்பை வடிவிடம் முகப்பைக் கனிவிடம்
விழிப்பைக் கருவிடம் இமைப்பைக் கனவிடம்
அகப்பை உறைவிடம் வதைப்பை உணர்விடம்
இனிப்பைத் தருவிடம் இனிப்பைத் திருவிடம்!

மசிப்பை என்றால் மையை வைத்திருக்கும் பை அதாவது ஒரு பெண்ணின் கண். அந்தக் கண்ணிலிருக்கும் துளி மையும் விஷம்போல் செயல்பட்டு அவள் வனப்பை அதிகப்படுத்தி அவனை மயங்கச் செய்துவிடுகிறது. ஒரு பையில் திராட்சை, மாம்பழம், கோவைப்பழங்களைப் போட்டு வைத்தால் அதைக் கனிப்பை எனலாமா? அப்படிதான் அவள் கண்களும், கன்னங்களும், இதழ்களும் இருக்கும் முகத்தைப் பார்த்தால் கனிப்பை போன்று தோன்றுகிறது. அந்தப் பையிலிருந்து வடியும் சாறு போன்ற சிரிப்பானது அந்த முகத்தைக் கனிவாகக் காட்டுகிறது. அவள் விழியாகிய பைக்குள் இருக்கும் கருமணியால்(விஷம்) ஈர்க்கப்பட்டு அவனுடைய இமையாகிய பைக்குள் இருக்கும் கண்கள் எந்நேரமும் கனவில் ஆழ்த்திவிடுகின்றன. (விஷமுண்டவனுக்கு கண்கள் சொருகுவதுபோல் இவனும் கண்கள் சொருகி கனவோடு அலைகிறான்.) அவன் அகத்தில் எப்போதும் உறைந்திருக்கும் அவள் நினைவு (விஷம்) அவனை பெரும்வதைப்புக்கு ஆளாக்குகிறது. இனிப்புகளைப்போன்று இனிமையான நினைவுகளையும் நிகழ்வுகளையும் வழங்கும் அவளே அவன் திருமகள். அவளிடமே இனி அவன் தஞ்சம்.

மணப்பை பூவிடம் மனப்பை மகிழ்விடம்
நகைப்பை மனைவிடம் களிப்பை மகவிடம்
மிதப்பைத் தருவிடம் மதிப்பைச் சரிவிடம்
பணப்பை அசைவிடம் பழிப்பை அழைவிடம்
பிழைப்பை நுழைவிடம் தலைப்பை சுழிவிடம்!

பூப்போன்ற பெண்ணோடு திருமண பந்தத்தில் இணைகிறான். மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது (அ) பூக்கள் நறுமணத்தை ஏந்தியிருப்பதுபோல் மனமாகிய பையும் மகிழ்ச்சியால் நிறைந்து விளங்குகிறது. குடும்பஸ்தன் ஆகிவிட்டான் அல்லவா? நகைப்பெட்டி மனைவியின் கைக்கு வந்துவிடுகிறது. (அ) புன்னகை மனைவியிடமும், களிப்பு குழந்தையிடமும் குடிகொண்டுள்ளது. வாழ்க்கையில் வேண்டியது எல்லாம் கிடைத்துவிட்டது. ஆசைப்பட்டதெல்லாம் நடந்துவிட்டது என்னும் மிதப்பு மேலோங்குகிறது. அலட்சியமும் அகம்பாவமும் குடிகொள்ள அவனுடைய மதிப்பு மற்றவரிடத்தில் சரியத் துவங்குகிறது. தவறான வழிகளில் பணத்தை வாரியிறைக்கிறான். பழிசொற்களைத் தானே வரவழைத்துக்கொள்கிறான். பிழைப்பு நடத்தும் இடத்தில் அதாவது வேலை செய்யும் இடத்தில் அவனுடைய முக்கியத்துவம் ஒன்றுமில்லாமல் போகிறது. (அ) பை பையாய் நுழையும் பிழைகள் அவனுடைய தலையாகிய பையை சுழி அதாவது பூஜ்யமாக்குகிறது. தலையாகிய பைக்குள் என்ன இருக்கும்? மூளைதானே! அது செயலற்றுப்போய்விடுகிறது.

புகைப்பை நுழைவிடம் நுரைப்பைத் தீவிடம்
மதுப்பை பூவிடம் இரைப்பை மதுவிடம்
இருப்பைப் பாய்விடம் இருப்பைத் தேய்விடம்
அரிப்பை குறைவிடம் குடற்பை அரிவிடம்
அகப்பை அயர்விடம் இறப்பை உணர்விடம்!

புகைப்பழக்கம் அறிமுகமாகி, அதிகமாகி நாளடைவில் நுரையீரல் தீய்ந்துவிடுமளவுக்கு (விடம்) கேடுண்டாகிவிடுகிறது. மதுப்பழக்கமும் மெல்ல முன்னேறி இரைப்பை நிறையுமளவு அளவில்லாமல் போகிறது. காற்றுப்பையும், உணவுப்பையுமாகிய (நுரையீரலும், இரைப்பையும்) இரு பைகளிலும் பாயும் விஷமானது நோயுண்டாக்க மருத்துவத்திற்காக கையிருப்பு கரைகிறது. குடலும் அரிக்கும் அளவுக்கு உணவில்லாமல் வறுமை வாட்டுகிறது. (அரிப்பை என்றால் அரிசிப்பை) உணவு சமைக்காததால் அகப்பையும் ஓய்ந்திருக்கிறது (அ) பல்வேறு தீய நினைவுகளாலும் அலைபாய்ந்துகொண்டிருந்த அகம் ஒரு நிலைக்கு வருகிறது. தன் இறுதிக்காலம் நெருங்குவதை உணரத் தொடங்குகிறான்.

உயிர்ப்பை நோவிடம் உடற்பை சாவிடம்
சிதைப்பை எருவிடம் சதைப்பை கழிவிடம்
நெருப்பைச் சேர்விடம் கரிப்பை முடிவிடம்
கலப்பை வாழ்விடம் உழைப்பைச் சூழ்விடம்
விதைப்பை உருவிடம் வரப்பை உறைவிடம்!

உயிர் சுமந்த பை நோயிடம் அகப்பட, உடலாகிய பை சாவிடம் தள்ளப்படுகிறது. எருவால் நிறைக்கப்பட்ட சிதையாகிய பையில் இடப்பட்டு சதையாகிய பிண்டம் கழிகிறது. நெருப்பைச் சேர்ந்து முடிவில் கரியும் சாம்பலுமாய் எஞ்சுகிறது. உயிர் இறுதியாக வந்தடையும் மண்தான் கலப்பை வாழுமிடமாகவும் உழைப்பு சூழ்ந்த இடமாகவும் இருக்கிறது. வரப்பின் வரம்புகளுக்குள் உறைந்திருக்கும் அம்மண்ணில்தான் விதைப்பும் விளைச்சலும் உருவாகிறது.

அவ்வளவுதான் என் விளக்கம். :)

ஆதவா
11-03-2011, 11:53 AM
இப்போ... நான் தவறாக எண்ணிய/விடுபட்ட கருத்துக்களை இச்சமயத்தில் சொல்லிவிடுகிறேன்.

உடைப்பை சூழ்விடம்....

கீதம் : உடையாகிய பை சூழ்ந்துகொள்கிறது
ஆதவா : கரு உடைந்து (அதாவது அங்கிருந்து) வெளியேற, மனிதம் எனும் விஷம் சூழ்கிறது.

மசிப்பைத் துளிவிடம் வனப்பைப் பொழிவிடம்

இதை ரொம்பநெரம் யோசித்தேன்.. மசி என்றால் மை என்று தெரியும் (தெலுகிலும் இதே அர்த்தம்தான்) ஆனால் மசிப்பை???

கீதம் : மசிப்பை என்றால் மையை வைத்திருக்கும் பை அதாவது ஒரு பெண்ணின் கண்.
சபாஷ்... இதை யோசிக்கவேயில்லை. அதனால் ஸ்கிப் செய்துவிட்டேன்.

கனிப்பை வடிவிடம் முகப்பைக் கனிவிடம்

கீதம்: ஒரு பையில் திராட்சை, மாம்பழம், கோவைப்பழங்களைப் போட்டு வைத்தால் அதைக் கனிப்பை எனலாமா? அப்படிதான் அவள் கண்களும், கன்னங்களும், இதழ்களும் இருக்கும் முகத்தைப் பார்த்தால் கனிப்பை போன்று தோன்றுகிறது. அந்தப் பையிலிருந்து வடியும் சாறு போன்ற சிரிப்பானது அந்த முகத்தைக் கனிவாகக் காட்டுகிறது.
ஆதவா : கனிபோன்ற (இனிப்பு, அதாவது சந்தோஷம்) வடிவானவன், இனிப்பான முகத்தானவன்.

மதுப்பை பூவிடம் இரைப்பை மதுவிடம்

கீதம் : மதுப்பழக்கமும் மெல்ல முன்னேறி இரைப்பை நிறையுமளவு அளவில்லாமல் போகிறது.
ஆதவா: பூ என்பதை பெண்ணாக எடுத்துக் கொண்டேன். (ஆனால் சொல்லவில்லை) மது மாது என ஆட்டம் போடுகிறான்...

இருப்பைப் பாய்விடம் இருப்பைத் தேய்விடம்

கீதம் : இரு பைகளிலும் பாயும் விஷமானது நோயுண்டாக்க மருத்துவத்திற்காக கையிருப்பு கரைகிறத
இரு + பை = இருப்பை???
ஆதவா: ஹேங்ஓவராகி தனது இருப்பை தாழ்த்திக் கொள்வது.

அரிப்பை குறைவிடம் குடற்பை அரிவிடம்

கீதம்: உணவு சமைக்காததால் அகப்பையும் ஓய்ந்திருக்கிறது
ஆதவா: இதை ஸ்கிப் செய்துவிட்டேன். முதலில் அரிப்பை என்பது வேறுமாதிரியான அர்த்தத்தைத் தந்தது. அது பொருந்தவுமில்லை..

Nivas.T
11-03-2011, 12:03 PM
அவ்வளவுதான் என் விளக்கம். :)

ஆண்டவா...............:Nixe_nixe02b:

என் தாய் தமிழே !!!

உன்னுள் எத்தனை எத்தனை அழகு??? :icon_clap:

தாமரை
11-03-2011, 12:13 PM
:Nixe_nixe02b:

:icon_clap:

இதுக்காக, அதுக்குள்ள. இருக்கிற ஒத்தை முடியை பிச்சி மூணாக்கிட்டீங்களே!!!:D:D:D

அக்னி
11-03-2011, 12:33 PM
என்ன சொல்ல...

அளவுக்கு மிஞ்சிய அமுதம் விடம் ஆனாலும்
அமுதமே...

மதி
11-03-2011, 12:38 PM
ஒரு மாதிரி பத்திகளின் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்த போதும்.. உங்கள் விளக்கம் இன்னும் தெளிவாக்குகிறது...

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா...???:eek::eek::eek::eek:

5000 ஐகாசுகள் பரிசு.. பத்து நிமிஷம் இதைப் பத்தி யோசிக்க வைத்தமைக்கு..:):)

Nivas.T
11-03-2011, 12:57 PM
இதுக்காக, அதுக்குள்ள. இருக்கிற ஒத்தை முடியை பிச்சி மூணாக்கிட்டீங்களே!!!:D:D:D

:D:D:D:D:D

ஜானகி
11-03-2011, 01:51 PM
மேலிடம் காலி[யி]டமானதால்.....

'பா'விடம் மோதிடும் திடமில்லை - எனக்கு...

வாதிடும் கவிகள் புலனாய்ந்து, மெய்யுணர்ந்து

கூறிடும் பொருளுணர்ந்து வியந்திட்டேன்...!

யாரிடம் பகிர்ந்திடுவேன் களிப்பினையும் நான்...!

[ பரிசாக அனுப்புகிறேன் இ-ஆசிகளை....இளையவர்களுக்கு...இ-வணக்கங்களை....பெரியவர்களுக்கு...]

தாமரை
11-03-2011, 02:04 PM
ஆளைக் கொல்வது விஷத்தின் வேலையல்ல.

விஷம் இரண்டு விஷயங்களுக்காக உருவாகிறது.

1. எதிரிகளிடம் இருந்து தன்னை பாத்காத்துக் கொள்ள
2. இரையைப் பிடிக்க, ஜீரணத்தை ஆரம்பிக்க..

இந்தக் கவிதையை பிரிச்சி மேய்ங்கப்பா, நான் அடுத்த வெள்ளிக்கிழமை வரை பிஸி. அடுத்த சனிக்கிழமை புதுத்திரி ஆரம்பிச்சிருவேன். அதுக்கு முன்னால எல்லோரும் வந்து பாராட்டிடுங்கப்பா!!!

கீதம்
11-03-2011, 09:13 PM
நான் அடுத்த வெள்ளிக்கிழமை வரை பிஸி. அடுத்த சனிக்கிழமை புதுத்திரி ஆரம்பிச்சிருவேன். அதுக்கு முன்னால எல்லோரும் வந்து பாராட்டிடுங்கப்பா!!!

ஆமாமா... அதுக்குள்ள என்னை பாராட்டணும்னு நினைக்கிறவங்க பாராட்டிடுங்க.... இ காசு கொடுக்கணும்னு நினைக்கிறவங்க கொடுத்திடுங்க...

அவர் பிரிச்சி மேய ஆரம்பிச்சிட்டால் இதெல்லாம் எனக்குக் கிடைக்காமப் போயிடும். சொல்லிட்டேன்.:)

கீதம்
11-03-2011, 09:31 PM
ஒரு மாதிரி பத்திகளின் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்த போதும்.. உங்கள் விளக்கம் இன்னும் தெளிவாக்குகிறது...

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா...???:eek::eek::eek::eek:

5000 ஐகாசுகள் பரிசு.. பத்து நிமிஷம் இதைப் பத்தி யோசிக்க வைத்தமைக்கு..:):)

நன்றி மதி. பத்து நிமிஷம் யோசிக்கவைத்ததுக்கு 5000 இ காசா? அப்படியென்றால் ஒருநாள் முழுக்க யோசிக்கவைத்தால்....:icon_hmm:

இருங்க.... அடுத்ததைத் தயார்பண்றேன்.:icon_b:

கீதம்
11-03-2011, 09:35 PM
மேலிடம் காலி[யி]டமானதால்.....

'பா'விடம் மோதிடும் திடமில்லை - எனக்கு...

வாதிடும் கவிகள் புலனாய்ந்து, மெய்யுணர்ந்து

கூறிடும் பொருளுணர்ந்து வியந்திட்டேன்...!

யாரிடம் பகிர்ந்திடுவேன் களிப்பினையும் நான்...!

[ பரிசாக அனுப்புகிறேன் இ-ஆசிகளை....இளையவர்களுக்கு...இ-வணக்கங்களை....பெரியவர்களுக்கு...]

உங்களைப்போன்ற பெரியவர்களுடன் மன்றத்தில் வலம்வருவதே என் பாக்கியம். உங்கள் ஆசிகளை உவகையுடன் பெற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
11-03-2011, 09:38 PM
முதலில் பயந்து, பின் படித்துக் குழம்பி, விளக்கத்துக்குப் பின் தெளிந்து, "சீ, இவ்வளவுதானா? இதுக்கா அப்படி பயந்தோம்?" என்று தம்மைத் தாமே தேற்றிக்கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.:):):)

Nivas.T
12-03-2011, 04:45 AM
முதலில் பயந்து, பின் படித்துக் குழம்பி, விளக்கத்துக்குப் பின் தெளிந்து, "சீ, இவ்வளவுதானா? இதுக்கா அப்படி பயந்தோம்?" என்று தம்மைத் தாமே தேற்றிக்கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.:):):)

:eek::eek:
பயம்லா ஒன்னுமில்ல :rolleyes:

ஆனாலும் ஒரு சின்ன தலை சுத்தல் :mini023: (அதுவும் பயத்லதானோ??):D:D:D

இதுமாதிரி பதிக்கிறத இருந்த கொஞ்சம் முன்னாடியே சொல்லிடுங் தயவு செய்து :sprachlos020::sprachlos020::sprachlos020::D:D:D

முரளிராஜா
12-03-2011, 04:59 AM
:eek::eek:
பயம்லா ஒன்னுமில்ல :rolleyes:

ஆனாலும் ஒரு சின்ன தலை சுத்தல் :mini023: (அதுவும் பயத்லதானோ??):D:D:D

இதுமாதிரி பதிக்கிறத இருந்த கொஞ்சம் முன்னாடியே சொல்லிடுங் தயவு செய்து :sprachlos020::sprachlos020::sprachlos020::D:D:D

முன்னாடியே சொன்னா இந்த பக்கம் வரமாட்டிங்களா?

கீதம் அவர்களுக்கு இந்த மன்றம் முரா, ராரா போன்ற சிறுபிள்ளைகளும்
வந்து போகும் இடம் எனவே :traurig001:இது போல பயமுறுத்தாதிர்கள்.:lachen001:
நேற்று இந்த திரியை படித்ததில் இருந்து நம்ம ராரா தன் சட்டையை
கிழித்துகொண்டு தெருவில் இங்கும் அங்கும் ஓடிகொன்டிருக்கிறான்:D

உமாமீனா
12-03-2011, 08:15 AM
:icon_b:..... :confused:....??? :sauer028:..... :icon_hmm:....

ராஜாராம்
12-03-2011, 10:09 AM
முரளிராஜா...........வேணாம்....என்னைய சீன்டிப்பார்க்காதே,,,,
:sport-smiley-002:

sarcharan
14-03-2011, 09:20 AM
முரளிராஜா...........வேணாம்....என்னைய சீன்டிப்பார்க்காதே,,,,
:sport-smiley-002:

மு ரா பாத்து சீண்டினா கொத்திடுவார் :sprachlos020:

sarcharan
14-03-2011, 09:29 AM
முரளிராஜா...........வேணாம்....என்னைய சீன்டிப்பார்க்காதே,,,,
:sport-smiley-002:

என்ன ஒரு மாதிரியா பேசுறீங்க...;)