PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:5ராஜாராம்
10-03-2011, 04:26 AM
(இந்தப் படைப்பு..ஆத்திகத்தை முன்னிலைப்படுத்தியோ..
நாத்திகத்தை முன்னிலைப்படுத்தியோ...சித்தரிக்கப்பட்டது அல்ல.
இது ஒரு கற்பனையில் படைக்கப்பட்ட பொழுதுப்போக்கு அம்சம்.
1999ல் பதிவுசெய்யப்பட்ட.இப்படைப்பின்...மூலக்கதையில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.)

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQyVWxahdWR8tRD1-TtFQM9gZaizK_Gd7QrGInd3L-4eXNc_JKcHlVWs5k
திருக்குற்றாலம்...மலையருவி...வனப்பகுதி....மதியம்...1.06மணி

மலையருவியின் சாரலோடு சேர்ந்து,
சில்லெனக் காற்று வீசிக்கொண்டு இருந்தது...
ஆங்காங்கே...குயில்களின் குக்கூ சப்தமும்,..
ஷ்ஷ்ஷ்...என்று அருவியின் வீழும் சப்தமும் ஒலித்துக்கொண்டு இருந்தது...

கிருஷ்ணவேனி என்று
தன்னை அறிமுகம் செய்துக் கொண்ட,அந்த அன்னையின் அருகே...
அகண்ட விழிகளோடு...
ஏதோ ஒரு ஏக்கத்தோடு பார்த்தபடி நின்றிருந்தாள்..அபிராமி.

"என்னம்மா...பார்க்கிறே?
சிவனாடி சித்தன் வந்து தொல்லைப் பன்னுகிறானா?....",
என்ற அன்னை,
மென்மையாய் சிரித்துவிட்டு...

"பயப்படாதே....
அவன் எது சொன்னாலும் நல்லதுக்குத்தான் சொல்லுவான்....
இனிமே நீ நிறைய நல்லவைகளையும்,,,
கெட்டவைகளையும் சந்திக்கவேண்டி வரும்",
அன்னை கிருஷ்ணவேனியின் தாமரைமலர் போன்றக் கரங்கள்...
மெல்ல...அபிராமியின் தலையை வருடியது...

"என்ன சொல்றீங்கன்னு புரியலை....",
குழம்பிப் போனாள் அபி.

"இனி,,,
உன்னை,,,மனநோயாளி என்றுக்கூட,
ஒருசிலர் சொல்லுவார்கள்...
நீ தெய்வ ஷக்திப்படைத்தவள் என்று ஒருசிலர் கூறுவார்கள்....",
மீண்டும் அன்னையின் உதடுகளில் தெய்வீகப்புன்னகை...

"உன் வாழ்க்கையில் வரும் இன்பமும் துன்பமும்....
ஒவ்வொன்றாய்...
ஒவ்வொரு பாடங்களை கற்றுத்தரும்...",
என்ற அன்னை,.
அபியின் நெற்றியை வருடியவன்னம்...

"எதாவது பேசு.....',
என்றார் செல்லமாக..

"..என்னப்பேசுறதுன்னு தெரியலை...",
மீண்டும் தயங்கியபடி பதில் வந்தது அபியிடமிருந்து.

"நீ...தெரியாததையெல்லாம்...பேசப்போறே...",
என்ற அன்னை கலகலவென சிரித்துவிட்டு...

"மற்றவர்களுக்கு தெரியாததை எல்லாம் நீ பேசப்போறே..
அன்னைப் பிரத்தியங்கிராகாளிதேவி வருவாள்....
உன்னை உனக்கு உணர்த்துவாள்,...
நீயாரென்பது...சிலநாட்களில் புரிந்துவிடும்...",

"நான் நிறையா படிக்கனும்..
நிறையா சம்பாதிக்கனும்...அதான் என் ஆசை..",
அபியின் வார்த்தைகளில்...லட்சியங்கள் வெளிப்பட்டன,.

"நீ என்னவா ஆகப்போறேன்னு...போகபோகத் தெரியும்..",
என்ற கூறிவிட்டு,

"போயிட்டுவாம்மா....நானும் உன்னுடனே இருப்பேன்",
அபியின் கன்னத்தில் முத்தமிட்டது அன்னையின் செம்பவழ இதழ்கள்...

.சில்லெனக் காற்று....
சரசரவென மரங்களின் இலைகள் படபடக்கத் தொடங்கின....
பின்னிருந்து,
பட்டென அபியின் கரங்களைப் பற்றி இழுத்தவாறு,

"ஏய்...அபி இங்கயென்னப் பன்னுக்கிட்டு இருக்கே?
உன்னைய எங்கெல்லாம் தேடுறது...
யார் இந்தக் கெழவி?",
சிடுசிடுவென பொரிந்துதள்ளியப்...பிரகாஷ்...

"ஏய்,,,நீ யாரு?
என் அபிக்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தே?",
அன்னையின் முகம்பார்த்து கடுமையாகக் கேட்டான்.

அவனக் கண்டு...புருவங்களை உயர்த்தியவாறு...

"உன் அபியா?
உன் அபியா?......இவள் உனக்கு சொந்தமா?...",
என்று,
ஆனந்தமாய் சிரித்த அன்னை...
மெல்ல...அங்கிருந்தக் குகைக்குள்...
செல்லத் தொடங்கினாள்...

"ஏய்...வா...",
அபியை மீண்டும் தன்வசம் இழுத்தான் பிரகாஷ்...

"கையைவிடுங்க...
என்னையேன்..இப்படி இழுக்கிறீங்க?
அப்படி என்ன என்மேல அக்கறை உங்களுக்கு?".,
என்று சினுங்கியவளின் முகத்தை சட்டென உயர்த்திய பிரகாஷ்..

நான் உன்னைய லவ் பன்றேன்டி......
உன்னையக் கல்யாணம் பன்னிக்க ஆசைப்படுறேன்...
உன்மேல உயிரையே வெச்சுருக்கேன்...போதுமாடி...",
மனதில் இருந்ததைக் கொட்டித் தீர்த்தான்...

அன்னையின்.....புரியாத உபதேசம்...
பிரகாஷின்......திடீர்...காதல்...வார்த்தைகள்......
இவ்விரண்டிலும் குழம்பியவளாய் நின்றாள்...அபி..http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSUTcFLHGBq9dJiwYzrgCBoRbXTV0nAFD7BaYBbOex0f5WOPCnk6dqxcw
சென்னை....அருணாச்சலம் சாலை....பிரசாத் ஸ்டுடியோ.....மதியம்,,,,3.40மணி...

"ஹலோ...வாங்க சார்...",
தனக்காக காத்திருந்த,,..அசோக்குமாரை வரவேற்றவன்னம்...
டப்பிங் தியேட்டரை விட்டு வெளியே வந்தாள்..
கொலைசெய்யப்பட்ட....நடிகை பிரியதர்ஷினியின் தோழி...ஜானகி.

"வணக்கம்...உங்க தோழி பிரியதர்ஷினி கொலை சம்மந்தமா
விசாரணை செய்கிறேன்.அதற்கு உங்க ஒத்துழைப்பு தேவை",
அசோக்குமார் கூறியதும்..

"ஓ...தாராளமா,...",
ஜானகியின் பதிலில் ஒத்துழைப்பிற்கான சம்மதம் தெரிந்தது.

"பிரியதர்ஷினிக்கு...குடும்பமே..இல்லையா?",

"எனக்கு தெரிஞ்வரைக்கும்....அவளுக்கு உறவுன்னு யாரும்மில்லை..",

"பிரியதர்ஷினிக்கு காதல் எதுவும்..இருந்ததா?.",

"நோ,...நோ...அதுக்கெல்லாம்,அவளுக்கு நேரமே இல்லமல் இருந்தாள்",

"தொழில் போட்டி...பொறாமையில யாரும் இதை செய்திருக்கலாமா?",
சற்று யோசித்த ஜானகி...

"அப்படி யாரும் இருக்கவும் வாய்ப்பில்லை...",

"கொலையாவதற்கு முதல் நாள் எங்க இருந்தாங்க?",
அசோக்கின்,அடுத்த விசாரணைக்கு ,

"2நாட்களுக்கு முன்,
திருக்குற்றாலம் போயிருந்தாள்...
அங்கிருந்து,திரும்பி அவள் வந்த,
அன்று இரவுதான்
கொலையாகி இருக்காள்.."
என்று பதில்க் கூறினாள் ஜானகி.

"அங்கே ஷூட்டிங் எதுவும் நடந்ததா?இல்லை..
யாரையும் பார்க்கப்போறதா...போனாங்களா?",
என்று அசோக்குமார் கேட்டது,

"..கிருஷ்ணவேனி...அம்மாள்னு
ஒரு பெண் சித்தர் அங்க இருக்கிறதாகவும்...
அவுங்களைப் பார்க்கப்போறதாகவும் சொன்னாள்..",
என்றாள்.

"யார் அந்தக் கிருஷ்ணவேனி?",
அசோக்கின் புருவங்கள் சற்றே சுருங்கின..

"அதேக் குழப்பம்தான் எனக்கும்..
அவர் ஒரு சித்தருன்னு தெரியும்...
மற்றபடி..பிரியதர்ஷினிக்கும்,.
அந்தம்மாவிற்கும் என்ன தொடர்புன்னு தெரியாது..",
என்ற ஜானகி...

"நான் இதுவரை அந்தம்மாவைப் பற்றி
முழுமையா அவளிடம் கேட்டதில்லை",
என்றாள் திடமாக...

"ஓகே...ரொம்ப தேங்க்ஸ்,...ஜானகி மேடம்...
வேற எதுவும் தகவல் தேவைப்பட்டாள்...உங்களை சந்திக்கிறேன்..",
என்று கூறிவிட்டு....
புதிதாய் வாங்கிய சான்ட்ரோக் காரில் புறப்பட்டான் அசோக்குமார்...
காரில் அவன் பயணித்துக் கொண்டிருக்கும்போதே...
அவனது சொல்ஃப்போனில்...
அழைப்புமணி ஒலித்தது.

காரை ஒரு ஓரமாய் நிறுத்திய அசோக்குமார்..
"ஹலோ...அசோக்குமார்...ஸ்பீக்கிங்..",
என்றான்...http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcShpP-sLMza7ieKdBhrPD120lO9kiynn558YPtaqFpC865yUBTh-OGALg
திருவண்ணாமலை....வடக்குவீதி......புறநகர் காவல்நிலையம்....மாலை...6.10மணி...

காவல்நிலைய தொலைப்பேசியை காதோடு அனைத்த,
இண்ஸ்பெக்டர்...
"ஹலோ...இது சென்னை தானே?
நீங்க அசோக்குமார் சாரா...?
நான் திருவண்ணாமலையில் இருந்து
இண்ஸ்பெக்டர் மூர்த்திப் பேசுறேன்?",
என்றதும்,

மறுமுனையில் இருந்த அசோக்குமார்,

"ஆமாம்...அசோக்குமார்தான் பேசுறேன்..
என்ன விஷயம் சொல்லுங்க சார்...?",
என்றான்,.

"உங்க நண்பர் கோபிநாதன் மொஃபைலுக்கு,
..........
மணப்பொண்ணை கரம்பிடிக்கும்...
முன்னதுவே...
மணமகளின் உறவு ஒன்றின்....
உயிர் பிரியும் அப்பொழுதே....
மாய்ந்துப்போன மன்னன் ஒருவன்....
உருவடிவில்.....
காலனவனும்..
வந்தேக் கொல்வான்....
என்ற வாசகம் வந்ததுன்னு சொன்னிங்களே...",

"ஆமாம்...சார்..
அந்த மெசேஜில் இருந்ததைப்போலவே..
அவன் மச்சானும் அன்றே இறந்துப்போயிட்டன்..
அதான் உங்களிடம் கம்பிளைன்ட் கொடுத்திருந்தேன்..",
என்றான் அசோக்குமார்.

"சார்....அந்த மெசேஜ் வந்த நம்பரை
ட்ரேஸவுட் பன்னிட்டோம்..
அது சென்னை சிம்கார்ட்...",
என்றார் இண்ஸ்பெக்டர் மூர்த்தி,

"வெரிகுட்...!!!!,
அந்த சிம்கார்ட் யார் பேருல இருக்கு..?",
உற்சாகமாய் கேட்டன் அசோக்.

"சமீபத்தில் கொலைசெய்யப்பட்ட...
நடிகை பிரியதர்ஷினிப் பெயரில்,
ஆவணங்கள் தரப்பட்டு இருக்கு.....
நடிகை பிரியதர்ஷினியே...
அந்த படிவங்களில் கையெப்பமும் போட்டிருக்காங்க...சார்..",
என்று மூர்த்திக் கூறியதும்.........

"கொலையாவதற்கு முன் பிரியதர்ஷினி,
கிருஷ்ணவேனி அம்மாவைப் பார்க்க
குற்றாலம் போயிருக்காங்க..,
திருவண்ணாமலையில்,
கோபிக்கு வந்த மெசேஜ் பிரியதர்ஷினியின் பெயரில்
உள்ளது......எங்கயோ....ஏதோ நடந்திருக்கே....",
மனதுக்குள்ளே....
குழம்பியவனாய்...
கார் ஸீட்டினில் தலைசாய்ந்தான் அசோக்குமார்............


(கண்ணாமூச்சி ஆட்டம்......தொடரும்)
(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHIAATTAM:13654821A0.TAMILNADU FILMCHAMBER/..rajaram..RTD240)

Nivas.T
10-03-2011, 04:41 AM
இன்னும் எத்தனை முடுச்சுகள் தான் விழும் என்று
நினைத்தால் தலை சுற்றுகிறது. கண்ணாமூச்சு அருமையாக தொடரட்டும்

M.Jagadeesan
10-03-2011, 05:00 AM
கண்ணாமூச்சி ஆட்டம் விறுவிறுப்பாகப் போகிறது.

ராஜாராம்
10-03-2011, 06:39 AM
நன்றி.
நிவாஸ் அவர்களுக்கும்..
ஜகதீசன் அவர்களுக்கும்