PDA

View Full Version : பற்றத் தொடங்கிய அக்னி - காதல்



அக்னி
09-03-2011, 11:51 AM
நான் கிறுக்கத் தொடங்கிய காலத்துக் கையெழுத்துப் பிரதிகள்,
மீண்டும் என்னிடம்...

என் மனதுக்குச் சுகந்தமாகும், அந்தக் காகிதமணத்தினை,
உங்கள் மனதுக்குள்ளும் பாய்ச்ச விரும்பி விளைகின்றேன்...

ஆரம்பக் கிறுக்கல்களில்,
பாடல்களின் வரிகளும் இருக்கும்... கவிகளின் வார்த்தைகளும் இருக்கும்...
சொற்குற்றம், பொருட்குற்றங்களும் இருக்கலாம்...
ஆனால்,
இவை தெரிந்தே செய்த தவறல்ல...
எனது எழுத்துக்கள் எழுந்து நடக்க உதவிய பிடிமானங்கள்...

நன்றி!

*****


காதல்..!


இரு ஆத்மாக்களின்
மனச் சந்திப்பில்
உணர்வுகளின்
எழுச்சியில் உதிப்பது.


சோகத்திற்கும்
சுகானுபவத்திற்கும்
தனித்துவமாகிப்போன
துடிப்பு அது.


மௌனங்களின்
மொழி பெயர்ப்பில்
இசையும் கவிதை..,
காதல்...


நிசப்தத்தில்
உறைந்துபோகும்
இரவுகளில்..,
இருதயத்தின்
ஒரு ஓரத்தில்
எட்டிப்பார்க்கும்
நிலா... அது...


பார்வையில் ஒரு வீச்சு
சலனத்தில் ஒரு துளி
மௌனத்தில் ஒரு பேச்சு
இதயத்தில் ஒரு வலி
இவை தொடர்ந்த
ஒரு ஏகாந்தம்
காதல்...


மொத்தத்தில்,
சத்தமில்லாமல்
சரித்திரம் படைக்கும்
உயிர்க் காவியம்
காதலே..!


*****


காதலின் பிரசவம்
சிரிப்பினில் புரிவதில்லை.
அது
கண்ணீர்த் துளிகளிலேதான்
பிரசன்னமாகும்.


*****


நீ காதலித்திருந்தால்
உனது இதயத்துடிப்பின்
ஒலி
உனது காதுவரை
எதிரொலிக்கும்...
அப்பொழுது,
உனக்குள் சந்தோஷம்மட்டுமே
நர்த்தனமாடும்...
ஏனென்றால்,
உனது இதயம்
காதலுக்கு மட்டுமே
அர்ப்பணமாயிருக்கும்...


உனது காதல்
கல்லறைக்குள் அடங்கிப்போனால்
உனது உயிர்த்துடிப்பின்
வலி
நீ உள்ளளவும்
உன்னை வெறுக்கவைக்கும்...
ஏனெனில்,
உனது உயிர்
காதலில் மட்டுமே
உறைந்திருக்கும்.
அப்பொழுது,
உனது நினைவுகளுக்குள்
காதல் மட்டுமே
சமர்ப்பணமாயிருக்கும்...

*****

என் உயிரோடு வாசம் செய்பவளே
உன் இதழோர மௌனம்
என்னைக் கொல்லுதடி...
தளிர் நிலவாக என்னுள்ளே மலர்ந்தவளே
விழி நீர் கூடத்
துளிர்க்க மறுக்கிறதே...

*****

வஞ்சியே!

உன்னை என்
இதயத் துடிப்பில் வைத்துத்
தாலாட்டுவேன்..,
அது துடிக்கும்வரையிலும்...

உன் நினைவுகளை
அதன் மிருதுவான தாளத்தில்
உறங்கவைப்பேன்..,
அது அதிரும்வரையிலும்...

*****

எனது கண்கள்
இமைப்பதைக் கூட
நான் அனுமதிப்பதில்லை...
அவை
உனது விம்பத்தைக்
கணப்பொழுது
என்னிடம் பிரிப்பதனால்...

*****

அழகே!

நீ என்னுள் கலந்த
நாள் முதலாய்
நான் நானாகவில்லை...
நீயாகவே
நான் மாறிவிட்டேன்...

ஷீ-நிசி
09-03-2011, 04:47 PM
காதல் பிரசவித்தால்... அப்படியே காதலில் கலந்து எழுதியிருப்பீங்க போல... வரிகள் ஒவ்வொன்றிலும் இளமை ஊஞ்சலாடுகிறது.

காதலான வரிகள் வாழ்த்துக்கள்

அக்னி
09-03-2011, 04:54 PM
ஆமாமா நிசியாரே,
மேலாழ கீழாழ நடுவால எல்லாம் வெட்டித் தணிக்கை செய்துதான் போடவேண்டியதாப் போச்சு...

நல்லாப் போயிட்டிருக்கிற குடும்பத்தில கும்மியடிச்சதாப் போயிடக்கூடாதில்ல...

வாழ்த்துக்கு நன்றி!

dellas
10-03-2011, 11:24 AM
ஐயா, அக்னியாரே,

நீங்கள், காதலை சுவாசிப்பது என்னமோ உண்மைதான். அதற்காக காதலியை சுவாசிக்க முடியுமா?
வீணே இருந்த வீணனை மீண்டும் வீணாக்குவதே காதல் என்றும் ஒரு கூற்று உண்டு.
உண்மைக்காதல் கொண்டு நீங்கள் எழுதிய கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

sarcharan
10-03-2011, 11:42 AM
வீணே இருந்த வீணனை மீண்டும் வீணாக்குவதே காதல்.



ஐயா... புலவரே... டல்லாஸ்....:icon_ush:

dellas
10-03-2011, 11:51 AM
அப்படியே..

sarcharan
10-03-2011, 12:04 PM
உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள் அக்னியாரே.

கீதம்
15-03-2011, 12:26 AM
காதல் பித்து தலைக்கேறிவிட்டதை பட்டவர்த்தனமாய்ப் புலப்படுத்தும் வரிகள். வாழ்க காதல்!

முரளிராஜா
15-03-2011, 03:00 AM
காதல் பித்து தலைக்கேறிவிட்டதை பட்டவர்த்தனமாய்ப் புலப்படுத்தும் வரிகள். வாழ்க காதல்!

அக்னி சார் உண்மையாவா?

lenram80
10-05-2011, 12:57 PM
உடலெங்கும் எரிமலை!
இதயத்தில் சூறாவளி!
நாகசாகியாய் நான் இருக்க
ஏதும் செய்யா சண்டாளியாய் அவள்!

பற்றிய அக்னிக்கு சூடான நெறுப்பு வாழ்த்துகள்!

பென்ஸ்
14-07-2011, 09:39 AM
நீர் பஞ்சு பக்கத்தில் மட்டுமல்ல
நீரின் பக்கதிலையே போகதையும்...
அப்படி அனல் அடிக்குது கவிதை....

நாஞ்சில் த.க.ஜெய்
14-07-2011, 05:33 PM
காதலெனும் நெருப்பினை கையில் ஏந்தி கவிதை வடிக்கும் தோழர் அக்னி வீழ்ந்து விட்டாரோ காதலில் ...

சான்வி
27-07-2011, 08:18 AM
நிசப்தத்தில்
உறைந்துபோகும்
இரவுகளில்..,
இருதயத்தின்
ஒரு ஓரத்தில்
எட்டிப்பார்க்கும்
நிலா... அது...



அக்கினியின் பார்வையில் நிலவினைப் பற்றிய ரசனை அருமை. தலைப்பு அதைவிட அருமை :)