PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:4



ராஜாராம்
09-03-2011, 06:17 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQvkg0lgfiSrg6GKPXLx_GMLE6Ub9RuiDRZgaXrmp7CRQL6xjrR9_jfbwsb
திருவண்ணாமலை....காலை,,,8.0மணி..,கீழசன்னதிதெரு.....
அண்ணாமலையார் திருமணமண்டபம்...

"திருவண்ணாமலை,..வணிகசங்க தலைவர்..
"பொன்னம்பலம்,,..கல்யாணி."..தம்பதியரின் மகன்...
கோபிநாதன்.B.E,க்கும்..
செஞ்சிக்கோட்டை...தங்கராசு...தேவி...தம்பதியரின்..மகள்,...
கல்யாணி..B.Com..,,க்கும்
நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு வருகை தரும் அணைவரையும்...
இருவீட்டார் சார்பில் வரவேற்கிறோம்....",

பிரம்மாண்டமான வரவேற்புபலகை மண்டபத்தின் வாசலில்
விசாலமாய் வைக்கப்பட்டிருந்தது.

"ஹாய்...கோபி...எப்படிடா இருக்கே?",
மணமகன் கோபியை செல்லமாக தட்டினான் அசோக்குமார்.

"நான் நல்லா இருக்கேன்டா...
உன்னோட புலனாய்வுத்துறை வேலையெல்லாம்...
எப்படி போயிக்கிட்டு இருக்கு...",.,
கோபியின் கேள்விக்கு,.

"ம்ம்ம்...ஏதோப் போயிட்டு இருக்கு...",
என்றான் அசோக்.

"ஏன்டா மாப்பிளே,,..உனக்கு
திருச்சியில ஒருப் பொண்ணுப்பார்க்கப் போறதா,..சொன்னியே...
அது என்னாச்சுடா?",

"எல்லா பொறுத்தமும் நல்லாதான் இருக்கு...
ஆனால்...எனக்கு காரில் ஒரு சின்ன விபத்து நடந்துப்போச்சு...
அதானால பொண்ணுப்பார்க்கப் போறதை
தள்ளிப்போட்டுட்டாரு அப்பா...",
என்ற அசோக்..

"சரி...சரி..முகூர்த்தநேரம் நெருங்கியாச்சுடா,..
சீக்கிரம் ரெடியாகு....",
என கோபியை துரிதப்படுத்தினான்..

"வாப்பா...அசோக்...நல்லா இருக்கியா..."?
கோபியின் அம்மா,அசோக்கை வறவேற்றுவிட்டு...
"ஏய் கோபி..உன் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்குடா.....",
என்று கோபியிடம் மோபைல்போன்னை தந்ததும்,

"யாரவது வாழ்த்து அனுப்பி இருப்பாங்க...',
என்றுகூறியபடி
செல்ஃப்போன்னில் மெசேஜை ஓப்பன் செய்த கோபிக்கு...
அந்த மெசேஜைப் படித்ததும்,
ஒருநிமிடம் தலையே கிர்ரென,சுற்றிவிட்டது.

"ஏய்,,,மாப்ளே...இது என்ன மெசேஜ் பாருடா..ஒன்னுமேப் புரியலை..",
என்று அசோக்கிடம் செல்ஃப்போன்னை நீட்டினான்...

"மணப் பெண்ணை கரம்பிடிக்கும்...
முன்னதுவே...
மணமகளின் உறவு ஒன்றின்....
உயிர் பிரியும் அப்பொழுதே....
மாய்ந்துப்போன மன்னன் ஒருவன்....
உருவடிவில்.....
காலனவனும்..
வந்தேக் கொல்வான்..."

கோபியின் செல்ஃப்போன்னில் படித்த வாக்கியத்தைக் கண்டு
அசோக்கும் சற்றே குழம்பிப் போனான்...

"என்னாடா...இது..
புராணக்கால வாசகம் போல வந்திருக்கு?
யார் இதை அனுப்பிருக்கா..?",
என்று கோபியை ஏறிட்டுப் பார்த்தான் அசோக்குமார்.

'தெரியலையேடா...எதோ புது நம்பரா இருக்கு...",
கோபியின்,முகத்தில் குழப்பம் தெரிந்தது.

"ஓகே..எவனாவது...ராங்நம்பரா இருக்கும்...
நீ மணவரைக்கு போயி உட்காருடா,,..
என்று அசோக் கூறவும்

சற்றுநேரத்திற்கெல்லாம்....
மணமகன்கோபிநாதன்...மணமகள் கல்யாணி,
இருவரும் மணமேடையில் அமர்ந்தனர்..

"பொண்ணோட அண்ணனைக் கூப்பிடுங்கோ
மாப்பிள்ளைத் தோழன் யாருமே இங்க இல்லை...",
அய்யர் கூறியதும்...

"ஏய் எங்கேடி அருன்?
இந்த நேரத்தில் எங்கப்போனான்?",
மணமகள் கல்யாணியின் தந்தை.,
தங்கராசு ஆவேசமாக கேட்க,..

"எங்க மாமா...ரயில்வேஸ்டேஷனில் இருந்து போன் பன்னினாரு...
அவரை மண்டபத்துக்கு,கூட்டியாரப் போனான்..",
என்ற அவரது மனைவி தேவி...

உடனே,
அருணின் மொபைல்நம்பருக்கு போன்செய்துப் பார்த்தாள்...
ரிங்க் ஒலி முழுவதுமாய் ஒலித்து முடிந்தது.
அவள் மீண்டும்.,
மீண்டும் முயற்சி செய்ய...

"நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்...
தற்போது பதில் அளிக்கவில்லை",
என்ற பதிலையே கூறிக்கொண்டிருந்தது,...அவனது மொபைல்ஃபோன்..

"ஏப்பா...அசோக்...நீ அருண் நம்பருக்கு கூப்பிட்டுப் பாரு",
தனது மொபைல்ஃபோன்னை அசோக்கிடம் தந்துவிட்டு
அவசரமாய் மணவரையை நோக்கி ஓடினாள் தேவி.

சிறிது நேரத்தில்,..
"கெட்டிமேளம்...கெட்டிமேளம்....",
என அய்யர் கூற,
மறுநிமிடமே,,.
மணமகள் கழுத்தில் ,கோபி திருமங்கல்யத்தைக் கட்டினான்...

"கிரீங்க் கிரீங்க்...",
என,அசோக்கின் கையில் இருந்த ,
கல்யாணியின் செல்ஃப்போன் சிணுங்கியது...

"அருண் காலிங்க்....",
என்று அந்த செல்ஃப்போன் திரையில் கண்டதும்,
சட்டென அதை எடுத்த அசோக்,
"ஹலோ...",
என்றதும்..

"சார்..இந்த நம்பருக்கு சொந்தக்காரருக்கு ஒரு சாலைவிபத்து...
அவரு இறந்துட்டாரு...
உடனே...
திருவண்ணாமலை மேலவீதிக்கு வாங்க...;,
மறுமுனையில் கேட்ட செய்தியில்
அதிர்ந்துப் போன அசோக்குமார்...

"நீங்க யாரு சார்?",
என்றதும்,

"திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் பேசுறேன்",

"சார்...நான்..புலனாய்வுத்துறை ஆய்வாளர் அசோக்குமார்தான் பேசுறேன்...
இதோ இப்பவே வரேன்,,,.",
பதட்டமாய்,..மண்டபத்தை விட்டு வெளியேறினான்...அசோக்.

(திருவண்ணாமலை...மேலவீதி காலை....9.32)

சலையோரமாய்.....தலையில் ரத்தம் கசிந்தவாறு...
உயிரற்ற பிணமாய்..
கிடத்தப்பட்டிருந்தான்...கல்யாணியின் அண்ணன் அருண்..
அவனது உடலைச் சுற்றி மக்கள்கூட்டம்...
அவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த...காவல்துறையினர்...
இவையாவும்,...அவ்விடத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

"ஒரு உயிர் பிரியும்னு கோபியின் செல்லுக்கு மெசேஜ் வந்துச்சே...
இப்ப அதில் சொன்னதுப் போனலவே...
கோபியின் மச்சான் இறந்துப்போயிட்டானே...",
என்று மனதுக்குள்,
புலம்பியபடியே இன்ஸ்பெக்டரை நெருங்கிய கோபி,

"சார்....என்ன ஆச்சு?
இவரு என் பிரண்டோட மச்சான்..
.இப்பத்தான் என் பிரண்டுக்கு கல்யாணாம் முடிஞ்சிது,
இவரைக் காணோம்னு மண்டபத்தில எல்லாரும் தேடுறாங்க...
இவரு எப்படி இறந்தாரு?",
படபடப்பாய் அடுக்கு அடுக்காய் கேள்விகளைக்
கேட்டான் அசோக்.

"இவரு ,ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நின்னுக்கிட்டு இருந்திருக்காரு,..
நகராட்சி பணியாளர்கள்,ஆக்கிரமிப்பு கட்டிடங்களை
பொக்கலைன் மூலமா இடிச்சிக்கிட்டு இருந்திருக்காங்க...
இடிந்த கட்டிடத்தின் ஒரு பாகம்,,
அருகில் இருந்த,..
மன்னர் ராஜராஜசோழன் சிலைமேல விழுந்து,,..",
என்றவர்...,தன் முகத்தில் வழிந்த வியர்வைகளை துடைத்தபடி..

"ராஜராஜசோழன் சிலை அடியோடு பெயர்ந்து...
அருகில் நின்றிருந்த இவர் தலையில் பலமா விழுந்துருச்சு....
ஆளு ஸ்பாட்டுலேயே இறந்துட்டாரு...",
என்று சோகமாய் கூறிமுடித்தார்..

ராஜராஜசோழன் சிலை அடியோடு பெயர்ந்து...
அருகில் நின்றிருந்த இவர் தலையில் பலமா விழுந்துருச்சு....
ஆளு ஸ்பாட்டுலேயே இறந்துட்டாரு....,என்று இன்ஸ்பெக்டர் கூறியதுமே...

அசோகின் மனதில்...
கோபியின் மொபைலுக்கு வந்த,
அந்தமெசேஜின் வரிகள் நினைவுக்கு வந்தன,...

"மணமகளின் உறவு ஒன்றின்....
உயிர் பிரியும் அப்பொழுதே....
மாய்ந்துப்போன மன்னன் ஒருவன்....
உருவடிவில்......
காலனவனும்..
வந்தேக் கொல்வான்................................?



http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSY99I4X-89ux_x5vc6UqPd0gUBMT-jgwN_pWDwk0e1zSjOKsN7jpCUg-A
திருச்சி....தெப்பக்குளம்..அபிராமியின் இல்லம்...காலை...11.00மணி....

அபியின்,வீட்டு தொலைபேசி உரக்க ஒலித்தது.
டெலிபோனின் ரிஸீவரை எடுத்த அபியின் பாட்டி மங்களம்..

"ஹலோ...யாருங்க?"

"நான் சிதம்பரத்தில் இருந்து...ராமநாதன் பேசுறேன்..
என் பையனோட அசோக்குமார் ஜாதகமும்...
உங்கப் பேத்தி அபிராமியின் ஜாதகமும்..நல்லப் பொருத்தம் இருக்கு...
நாங்கப் பொண்ணுப்பார்க்க வரலாம்னு இருக்கோம்...
நாங்க எப்ப அங்க வரலாம்னு சென்னீங்கன்னா...
பொண்ணை வந்து பார்த்திடுவோம்..",
என்று அசோக்கின் தந்தை மறுமுனையில் கூற..

"ரொமப சந்தோஷம்...
ஆனால்..என் பேத்தி இங்கே இல்லை.
அவள் காலேஜில எல்லா பசங்களும்,
குற்றாலத்திற்கு சுற்றுலாப் போயிருக்காங்க...
அபியும் அவங்களோட போயிருக்காள்.
2நாட்களில் வந்துருவாங்க...
என் பேத்தி வந்ததும் உங்களுக்கு சொல்றேன்...
நீங்க வந்து அவளை பார்த்துட்டுப்போலாம்..."
என்று கூறிமுடித்தாள் மங்களம்.

"அப்படியா...
சரிம்மா...
உங்கப் பேத்தி வந்ததும் சொல்லுங்க....நாங்கப் பையனோட அங்கே வரோம்..",
என்று ராமநாதன் கூறியதும்...
அவர்களது தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்பட்டது.


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR9sPuy22dRclNdzvCGDt9vYXoW37wx1V4yB2F7OpQ_cVhtiCUnnDM67Zz_
திருக்குற்றாலம்...மலையருவி வனப்பகுதி...மதியம்...12.51...

கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாட்டமாய்...கும்மாளம்போட்டுக் கொண்டிடிருந்தனர்...

'ஏய் மச்சான்...அருவியிலபோயிக் குளிடா,,..'இன்னைக்காவது கொஞ்சம் குளிடா...",
என்று ஒருவருக்கு ஒருவர் கேலிக்கிண்டல் செய்துக்கொண்டிருந்தனர்...

"ஏய்...அபி வாடி இங்கே...",
அபியின் தோழிகள் அவளை அரிவிக்குளியலுக்கு அழைக்க,

"நான் வாரலைடி...",
என்றபடி மலையருவியின் அருகே இருந்த,,,ஒரு பாறைமீது அமர்ந்தாள் அபிராமி.

அழகிய இயற்கை சூழல்...
இனிமையான தென்றல் காற்று அவள் மனதை ...சந்தோஷப்படுத்தின,..
மலையின் வனப்பகுதிகளை தன் அழகு விழிகளால் ரசித்துக்கொண்டிருந்தாள்...

"அபிராமி....",

மென்மையான தெய்வீகக்குரல் ஒன்று...
காட்டுப்பகுதியில் இருந்து மெல்ல அவள் காதருகே வந்தடைந்தது...
சப்தம்வந்த திசை நோக்கித் திரும்பினாள்...

வெள்ளைப்புடவைக்...கட்டி
ஆங்காங்கே நிரைகள் நிறைந்த...
கூந்தலை விரிக்கவிட்டவன்னம்...
நெற்றி நிறைய விபூதி பூசியபடி...
கண்களில் ஒருக் காந்தசக்த்தியுடன்...
வசீகரப்பார்வையுடன்...
தெய்வீக சிரிப்புடன்....
மலையருவி அருகே ஒரு குகைக்கு வெளியில் நின்று...
தனது இருக்கரங்களையும்...
அபியை நோக்கி நீட்டி....
அழைத்தப்படி நின்றிருந்தாள் 80வயது மூதாட்டி...

"அபிராமி....வாம்மா....வா....
நான்தான் கிருஷ்ணவேனி...
என்ன தெரியலையா?
வாம்மா....என் அருகேவாம்மா.....",

மீண்டும் அந்த அன்னையின் அழைப்புக்குரல்....
தன்னையும் மறந்தவளாய்
அந்த அன்னையின் அருகே செல்லத் தொடங்கினாள்
அபிராமி...........

(கண்ணாமூச்சி ஆட்டம்.........தொடரும்..........)

(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821A0.TAMILNADU FILM CHAMBER/..rajaram..RTD240)

Nivas.T
09-03-2011, 06:37 AM
விரு விருப்பிற்கு பஞ்சமில்லை
சொல்ல வார்த்தை இல்லை

தொடருங்கள் ராஜாராம்
நாங்களும் தொடர்கிறோம்

p.suresh
09-03-2011, 06:51 AM
கதை சில்லுடுகிறது.ஒரே குறை, நாவலாய் கிடைப்பின் ஒரே மூச்சில் படிப்பேன்.

sarcharan
09-03-2011, 07:02 AM
விறு விறு மாண்டி விருமாண்டி
கதையும் விறு விறுன்னு போகுது விருமாண்டி

கீதம்
09-03-2011, 07:31 AM
கதையில் பல முடிச்சுகள். அதுவும் மர்மமுடிச்சுகள். அமானுஷ்யம் காரணம் காட்டி அடிவயிற்றில் கிலி உண்டாக்குகிறீர்கள்.

அவசர அவசரமாகப் பதிவிட்டீர்களோ? நிறைய எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன. நேரம் கிடைக்கும்போது களைந்துவிடுங்கள். கதையோட்டம் தெளிவாய் அமையும்.

உமாமீனா
09-03-2011, 07:47 AM
சுறுசுறுப்பாக போகுது......ராரா ...ரொம்பவே.... பொறுமையை சோதிக்காதேப்பா.....

ராஜாராம்
09-03-2011, 10:37 AM
நன்றி,
கீதம் அவர்களுக்கும்,
சாரா அவர்களுக்கும்,
நிவாஸ் அவர்களுக்கும்,
உமாமீனா அவர்களுக்கும்,
புதுவை சுரேஷிற்கும்,
முரளிராஜாவிற்கும்,
அனைத்து நண்பர்களுக்கும்.

கீதம் அவர்களுக்கு,
தாங்கள் கூறியதைப்போல் ,கதையில் இருந்த எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்துள்ளேன்.நன்றி

முரளிராஜா
10-03-2011, 05:53 AM
ராரா என்ன குழப்பம் உனக்கு?
நான் இப்பதான் இங்கே பின்னுட்டமே கொடுக்கிறேன்
அதுக்கு முன்னாடியே எனக்கு நீ நன்றி சொல்லிட்ட.
கதை அருமையாவும், விறுவிறுப்பாவும் இருக்கு.

ராஜாராம்
10-03-2011, 06:37 AM
ராரா என்ன குழப்பம் உனக்கு?
நான் இப்பதான் இங்கே பின்னுட்டமே கொடுக்கிறேன்
அதுக்கு முன்னாடியே எனக்கு நீ நன்றி சொல்லிட்ட.
கதை அருமையாவும், விறுவிறுப்பாவும் இருக்கு.

சாரி...டெக்கினிக்கல் ஃபால்ட்

கீதம்
11-03-2011, 12:04 AM
ராரா என்ன குழப்பம் உனக்கு?
நான் இப்பதான் இங்கே பின்னுட்டமே கொடுக்கிறேன்
அதுக்கு முன்னாடியே எனக்கு நீ நன்றி சொல்லிட்ட.


நீங்கள் பின்னூட்டம் இடாமலிருந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கலாம்.:icon_b:

முரளிராஜா
11-03-2011, 04:09 AM
நீங்கள் பின்னூட்டம் இடாமலிருந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கலாம்.:icon_b:

என்ன வில்லத்தனம். :icon_p:
(ஒருவேலை நீங்க சொன்ன மாதிரி கூட இருக்கலாமோ )

govindh
11-03-2011, 07:42 AM
பரபரப்பு.... விறுவிறுப்பு....குறைவில்லாமல்...
கதை நகர்த்தல் அருமை...

பாராட்டுக்கள் ராஜாராம்.