PDA

View Full Version : புதிர்-4

Nivas.T
09-03-2011, 05:29 AM
1 - பாதியளவு நீர் நிரப்பட்ட கண்ணாடிக் குடுவையின்
எடை 900 கிராம்

2 - அதே கண்ணாடிக்குடுவையில் முழுவதும் நீர் நிரப்பட்ட நிலையில் அதன எடை 1.5 கிலோ

எனில் கண்ணாடிக் குடுவையின் எடை மட்டும் எவ்வளவு?

sarcharan
09-03-2011, 08:13 AM
தெரியலயே.....:redface:

முரளிராஜா
09-03-2011, 08:20 AM
தெரியலயே.....:redface:
இதுதான் எங்களுக்கும் தெரியுமே.
நான் இதுக்கு பதில் சொல்லிடுவேன் ஆனா மத்தவங்களுக்கும் வாய்ப்பு
கொடுக்கனும் அப்படிங்கற நல்ல மனசு எனக்கு இருக்கு. அதனால பதில்
சொல்லாம போறேன்:lachen001:

sarcharan
09-03-2011, 08:23 AM
அப்படியா? என்னே உங்களது விட்டுகொடுக்கும் மனப்பான்மை

முரளிராஜா
09-03-2011, 08:25 AM
நோ நோ இதுக்கெல்லாம் பீல் பன்னகூடாது.
(கொய்யாலே என்னமா பீல் பன்றாரு)

முரளிராஜா
09-03-2011, 08:37 AM
கண்ணாடிக் குடுவையின் எடை மட்டும் 300 கிராம்

Nivas.T
09-03-2011, 08:54 AM
சரியான விடை 300 கிராம்

வாழ்த்துக்கள் முரா

முரளிராஜா
09-03-2011, 08:57 AM
நான் புத்திசாலின்னு மறக்காம சாரா கிட்ட சொல்லுங்க நிவாஸ்

பிரேம்
09-03-2011, 11:10 AM
சரியான விடை 300 கிராம்

வாழ்த்துக்கள் முரா

எப்பிடி 300 கிராம் வரும்...?!!:confused: :confused: :confused:

Nivas.T
09-03-2011, 11:22 AM
எப்பிடி 300 கிராம் வரும்...?!!:confused: :confused: :confused:

500 லிருந்து 200 ஐ கழித்தால் 300 வரும் சரியா? :D:D:D:D:D

Nivas.T
09-03-2011, 11:24 AM
நான் புத்திசாலின்னு மறக்காம சாரா கிட்ட சொல்லுங்க நிவாஸ்

மக்களே பாத்துக்கங்க இந்த பாவத்து நான் ஆளாகமாட்டேன் :wuerg019::wuerg019::wuerg019:

sarcharan
09-03-2011, 11:31 AM
கண்ணாடிக் குடுவையின் எடை மட்டும் 300 கிராம்

அதெல்லாம் இருக்கட்டும் விடையை எப்படி கண்டுபுடிச்சீங்க?

முரளிராஜா
09-03-2011, 11:49 AM
உங்களுக்கு ஈசியா சொல்லனும்னா 900+900 = 1800-1500=300

Nivas.T
09-03-2011, 12:00 PM
புதிர் - 2

ராஜா வைத்திருந்த பழப்பெட்டியில் இருந்து தனக்கு என்று ஐந்து பழங்களை சாப்பிட்டான். மூன்று பழங்களை ரவிக்கு கொடுத்தான். மீதமிருந்த பழங்களை மற்ற எட்டு நண்பர்களுக்கு, முதல் ஒருவனுக்கு ஒன்று, இரண்டாமவனுக்கு மூன்று, மூன்றாமவனுக்கு ஐந்து என்று எட்டு பேருக்கும் கொடுத்துவிட அனைத்து பழங்களும் தீர்ந்துபோனது. என்றால் ராஜா வைத்திருந்த மொத்த பழங்களின் எண்ணிக்கை எத்தனை?

sarcharan
09-03-2011, 12:41 PM
72 பழங்கள்?

Nivas.T
09-03-2011, 12:45 PM
72 பழங்கள்?

சரியான விடை 72

பாராட்டுகள் சரண்

Nivas.T
10-03-2011, 10:57 AM
பெட்டியில் சிவப்பு , பச்சை , நீல நிற பந்துகள் மொத்தம் 60.

அதில் இருக்கும் பச்சை நிற பந்துகளை விட சிவப்பு நிற பந்துகள் நான்கு மடங்கு.

நீல நிற பந்துகள் பச்சை நிற பந்துகளை விட ஆறு பந்துகள் அதிகம்

எனில்

ஒவ்வொரு நிறப்பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அதாவது சிவப்பு பந்து எத்தனை?
நீல பந்து எத்தனை?
பச்சை பந்து எத்தனை?

M.Jagadeesan
10-03-2011, 11:11 AM
சிவப்பு பந்துகள்=40
பச்சை பந்துகள்=8
நீலப் பந்துகள்=12

sarcharan
10-03-2011, 11:24 AM
சிவப்பு பந்துகள்=40
பச்சை பந்துகள்=8
நீலப் பந்துகள்=12

பெட்டியில் சிவப்பு , பச்சை , நீல நிற பந்துகள் மொத்தம் 60.

அதில் இருக்கும் பச்சை நிற பந்துகளை விட சிவப்பு நிற பந்துகள் நான்கு மடங்கு அதிகம்.

நீல நிற பந்துகள் பச்சை நிற பந்துகளை விட நான்கு பந்துகள் அதிகம்

எனில்

ஒவ்வொரு நிறப்பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அதாவது சிவப்பு பந்து எத்தனை?
நீல பந்து எத்தனை?
பச்சை பந்து எத்தனை?

கணக்கு டாலி ஆகலியே சார்
கேள்வி தப்பா?

Nivas.T
10-03-2011, 11:38 AM
கணக்கு டாலி ஆகலியே சார்
கேள்வி தப்பா?

:eek::eek::eek:

மன்னிக்கவும் இப்பொழுது திருத்திவிட்டேன் :rolleyes:

M.Jagadeesan
10-03-2011, 11:53 AM
சிவப்பு நிற பந்துகள், பச்சை நிற பந்துகளைப் போல் நான்கு மடங்கு
என்றால்,சிவப்பு நிற பந்துகளின் எண்ணிக்கை 32 ஆகும்.ஆனால் நான்கு
மடங்கு அதிகம் என்று கணக்கில் சொல்லப்பட்டுள்ளது.எனவே சிவப்பு
நிற பந்துகளின் எண்ணிக்கை 40 ஆகும்.

சரி பார்த்தல்:
..................
மொத்தப் பந்துகள்= 40+8+12=60
நீலப் பந்துகள்=12
பச்சை பந்துகள்=8
............................
வித்தியாசம்=4
...........................

Nivas.T
10-03-2011, 12:30 PM

ஜெகதீசன்

கணக்கில் சிறு தவறு இருந்தது இப்பொழுது திருத்திவிடேன்

மன்னிக்கவும்

lolluvathiyar
11-03-2011, 07:55 AM
500 லிருந்து 200 ஐ கழித்தால் 300 வரும் சரியா?
விடை சரி ஆனால் தப்பான விளக்கம்
1500-900=600 மிச்சபாதி அப்ப முதல் பாதியும் 600 இருக்கும். குடுவையோடு 900 அதனால்
900-600=300 தான் குடுவை எடை.

பெட்டியில் சிவப்பு , பச்சை , நீல நிற பந்துகள் மொத்தம் 60.

சிவப்பு நிறம் = 2
பச்சை நிறம் = 24=8
நீல நிறம் = 86=48
மொத்தம் = 58
ஆகா 2 பந்து இடிக்குதே. அ ந்த* இர*ன்டு ப*ந்தில் எல்லா நிறமும் கலந்து இருக்கொமோ

தாமரை
11-03-2011, 08:01 AM
பெட்டியில் சிவப்பு , பச்சை , நீல நிற பந்துகள் மொத்தம் 60.

அதில் இருக்கும் பச்சை நிற பந்துகளை விட சிவப்பு நிற பந்துகள் நான்கு மடங்கு.

நீல நிற பந்துகள் பச்சை நிற பந்துகளை விட ஆறு பந்துகள் அதிகம்

எனில்

ஒவ்வொரு நிறப்பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அதாவது சிவப்பு பந்து எத்தனை?
நீல பந்து எத்தனை?
பச்சை பந்து எத்தனை?

மொத்த பந்துகள் = 60

சிவப்பு நிற பந்துகள் = R
பச்சை நிறப் பந்துகள் = G
நீல நிறப் பந்துகள் = B

R + G + B = 60

(4G) + G + (G + 6) = 60

6G + 6 = 60

G = 9

9 பச்சைப் பந்துகள்
36 சிவப்புப் பந்துகள்
15 நீலப்பந்துகள்

lolluvathiyar
11-03-2011, 11:17 AM
அன்னே தாமரை அன்னே நீங்க எப்பவுமே கனக்கில் புலி என்று நிருபிச்சுட்டீங்க. வெல்டன் உங்கள பாராட்டி 60 ஈபனம் வழங்குகிறேன்.

Nivas.T
11-03-2011, 11:22 AM
மொத்த பந்துகள் = 60

சிவப்பு நிற பந்துகள் = R
பச்சை நிறப் பந்துகள் = G
நீல நிறப் பந்துகள் = B

R + G + B = 60

(4G) + G + (G + 6) = 60

6G + 6 = 60

G = 9

9 பச்சைப் பந்துகள்
36 சிவப்புப் பந்துகள்
15 நீலப்பந்துகள்

அருமை அண்ணா

சரியான விடை

Nivas.T
11-03-2011, 11:25 AM
சிவப்பு நிறம் = 2
பச்சை நிறம் = 24=8
நீல நிறம் = 86=48
மொத்தம் = 58
ஆகா 2 பந்து இடிக்குதே. அ ந்த* இர*ன்டு ப*ந்தில் எல்லா நிறமும் கலந்து இருக்கொமோ

இடிக்குதுன்னா கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டித்தான:D:D:D:D

Nivas.T
11-03-2011, 11:27 AM
வரிசை எண்

இந்தத் தொடரின் தொடர்ச்சியை எழுத வேண்டும்

1, 11, 21, 1211, 111221,.....

தாமரை
11-03-2011, 11:56 AM
1
11
21
1211
111221

1 --- இதில் இருப்பது ஒரு 1 அதனால் அடுத்த நம்பர் 1-1
11 --- இதில் இருப்பது இரண்டு ஒண்ணு இருக்கு.. அதனால அடுத்த நம்பர் 2-1
21 --- இதில் ஒரு ரெண்டு 1 ஒண்ணு இருக்கு அதனால் அடுத்த நம்பர் 1-2,1-1
1211 - இதில் ஒரு ஒண்ணு, ஒரு இரண்டு, ரெண்டு ஒண்ணு இருக்கு.. அதனால அடுத்த நம்பர் 1-1, 1-2, 2-1

111221 - இதில மூணு ஒண்ணு, ரெண்டு ரெண்டு ஒரு ஒண்ணு இருக்கு - அதனால் அடுத்த நம்பர் 3-1,2-2,1-1

312211 - அடுத்து 1-3,1-1,2-2,2-1 = 13112221

போதுமா?:aetsch013::aetsch013::aetsch013:

Nivas.T
11-03-2011, 12:09 PM

தெய்வமே.......... தெய்வமே...........

முடியல அண்ணா சத்தியமா முடியல :icon_rollout::icon_rollout:

sarcharan
11-03-2011, 12:12 PM
இனி தாமரை அண்ணா எந்த ஒரு கணக்கு, புதிர் போட்டிகளிலும் கலந்து கொள்ள கூடாதுன்னு ஒரு சட்டம் போடுங்க..

தாமரை
11-03-2011, 12:18 PM
அருமை அண்ணா

சரியான விடை

6G + 6 = 60
2G, 3G ல நாடே அல்லோல கல்லோலப் பட்டுகிட்டு இருக்கு. 6G யை கமுக்கமா கொண்டு வந்திட்டீங்க. அதற்குத் தகுந்த மாதிரி உடனடியா வாத்தியார் பொட்டி கொடுத்திருக்கார் பார்த்தீங்களா?

60 ஈபனம் வழங்குகிறேன்.

Nivas.T
11-03-2011, 12:34 PM

:D ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றும் பொழுது வந்த குழப்பம்

Nivas.T
11-03-2011, 12:35 PM
இனி தாமரை அண்ணா எந்த ஒரு கணக்கு, புதிர் போட்டிகளிலும் கலந்து கொள்ள கூடாதுன்னு ஒரு சட்டம் போடுங்க..

..:)..