PDA

View Full Version : எச்சரிக்கை!



கீதம்
08-03-2011, 05:43 AM
ஆட்டின் தோல் போர்த்திருப்பதை
அடிக்கடி மறந்துவிடுகிறாய்!
நிலவொளி கண்ட நரியென
நிலை மறந்து ஊளையிடுகிறாய்!

எச்சரிக்கை!
குட்டு வெளிப்படும்,
கொட்டம் அடக்கப்படும்,
இன்றில்லையேனும் நாளை!

M.Jagadeesan
08-03-2011, 05:50 AM
கவிதை நன்று! கீதம்! ஆனால் இது யாருக்கு விடப்பட்ட எச்சரிக்கை?

முரளிராஜா
08-03-2011, 05:51 AM
கீதம் அவர்களே
எச்சரிக்கை யாருக்குன்னுதான் புரியல

கீதம்
08-03-2011, 05:56 AM
எச்சரிக்கப்பட்டவருக்குப் புரிந்தால் போதுமானது. பின்னூட்டத்துக்கு நன்றி நண்பர்களே.

Nivas.T
08-03-2011, 07:21 AM
நல்ல கவிதை
பலமான எச்சரிக்கை

அக்னி
08-03-2011, 08:53 AM
இது என்ன...

நரியைக் காக்க விடுக்கப்பட்ட எச்சரிக்கையா.... :smilie_abcfra:

ஆட்டுத்தோல் போர்த்திய நரியை
அடையாளம் காணமுடியாத
ஆடுகள்
பரிதாபத்திற்குரியவைதான்...

ஏன் இந்த எச்சரிக்கை என்றுதான் எனக்கும் புரியவில்லை...

மதி
08-03-2011, 08:56 AM
புரியவில்லை

முரளிராஜா
08-03-2011, 08:59 AM
இது என்ன...

நரியைக் காக்க விடுக்கப்பட்ட எச்சரிக்கையா.... :smilie_abcfra:

ஆட்டுத்தோல் போர்த்திய நரியை
அடையாளம் காணமுடியாத
ஆடுகள்
பரிதாபத்திற்குரியவைதான்...

ஏன் இந்த எச்சரிக்கை என்றுதான் எனக்கும் புரியவில்லை...

குட்டு வெளிப்படும்,
கொட்டம் அடக்கப்படும்,
நாள் வரும்வரை
நமக்கும் ஏதும்
புரியாது

ஆதி
08-03-2011, 09:07 AM
இது போன்ற நரிகள் ஒவ்வொருத்தருக்குள்ளும் உண்டு எனினும், நான் அப்படி எல்லாம் கிடையாது என்ற சுயபரிசோதனையற்ற மனசமாதானங்கள், நம்மை செம்மறியாகவே நினைக்க வைக்கிறது, மற்ற யாவரையும் நரிகளாகவே நோக்கவும் வைக்கிறது..

இக்கவிதை சுய எச்சரிக்கையாகவும் இருக்கலாம்..

ஆட்டின் தோல் போர்த்தியவர் = சாமியார்/அரசியல் வாதிகள்/சமாதான தூதுவர்கள்
இரவின் வெளிப்படும் நரித்தனங்கள் = ஒழுக்க முறைகேடுகள்

இப்படி சிலதை பொருத்திப்பார்க்கலாம்...

இது போல வாசிப்பவரின் மனநிலைக்கேற்ப பொருள் விரியலாம்...

பாராட்டுக்கள் அக்கா...

அக்னி
08-03-2011, 09:13 AM
இதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆதன்...

இது ஒருவருக்கு வலுவாக விடப்பட்ட எச்சரிக்கையாகவே தெரிகின்றது...

அதனால்,
நீங்க கொடுத்த விளக்கம் தள்ளுபடி செய்யப்படுகின்றது... :aetsch013:

இந்த எச்சரிக்கைக்குரியவரைக் கண்டறியும் வரைக்கும் ஓயமாட்டோம்...

அது முரா வா, ராரா வா, சரா வா, அக்னியா, ஆதவனா, அமரனா, ஆதனா, ஓவியனா, அன்புரசிகனா, சிவா.ஜி யா, மதியா...

(அப்பாடா... மன்றத்தில இன்றைக்கு ஒரு கலவரத்துக்கு அடிபோட்டாச்சு...)


குட்டு வெளிப்படும்,
கொட்டம் அடக்கப்படும்,
நாள் வரும்வரை
நமக்கும் ஏதும்
புரியாது
அப்போ,
குட்டு வெளிப்பட்டுக்
கொட்டம் அடக்கினாத்தான்
புரிஞ்சுப்பீங்களோ... :p

முரளிராஜா
08-03-2011, 09:17 AM
ஐயோ, நான் இந்த விளையாட்டுக்கு வரலைப்பா:confused:

அக்னி
08-03-2011, 09:23 AM
எவ்ளோ சீரியசான விஷயம் போயிட்டிருக்கு...
இது உங்களுக்கு விளையாட்டாத் தெரியுதா முரா...

சந்தேகம் வலுக்கின்றது... :cool:

Nivas.T
08-03-2011, 09:28 AM
அது முரா வா, ராரா வா, சரா வா, அக்னியா, ஆதவனா, அமரனா, ஆதனா, ஓவியனா, அன்புரசிகனா, சிவா.ஜி யா, மதியா...

அப்பாடி நாம இந்த ஆட்டத்துல இல்ல:rolleyes::rolleyes::icon_ush:

Nivas.T
08-03-2011, 09:30 AM
எவ்ளோ சீரியசான விஷயம் போயிட்டிருக்கு...
இது உங்களுக்கு விளையாட்டாத் தெரியுதா முரா...

சந்தேகம் வலுக்கின்றது... :cool:

எனக்கும்தான்:icon_hmm::sport009:

முரளிராஜா
08-03-2011, 09:32 AM
அப்பாடி நாம இந்த ஆட்டத்துல இல்ல:rolleyes::rolleyes::icon_ush:
அக்னி சார் அதுல நிவாஸ் பேரையும் சேருங்க

சிவா.ஜி
08-03-2011, 09:32 AM
எனக்குப் புரிஞ்சிப்போச்சு.....மே மாசம் தோலுரியும்போது தெரியும்.....


(எனக்குத் தெரிஞ்ச ஆட்டுத்தோல் போர்த்திய நரி அவரு மட்டுந்தாங்க...அதான் அப்படிச் சொன்னேன்)

கீதம்
08-03-2011, 09:34 AM
எனக்குப் புரிஞ்சிப்போச்சு.....மே மாசம் தோலுரியும்போது தெரியும்.....


(எனக்குத் தெரிஞ்ச ஆட்டுத்தோல் போர்த்திய நரி அவரு மட்டுந்தாங்க...அதான் அப்படிச் சொன்னேன்)

ஐயோ அண்ணா... எனக்கு அதுக்கெல்லாம் துணிச்சல் கிடையாது. சத்தியமா சொல்றேன், நம்புங்க. இது வேற... உள்விவகாரம்.

சிவா.ஜி
08-03-2011, 09:36 AM
ஆஹா...உள்ளூர் பார்ட்டிங்க எங்களுக்குத்தான் பயம் இருக்கனும்...உங்களுக்கு என்னம்மா....தைரியமா சொல்லலாம்...

அது சரி...இதென்ன புது கலாட்டா....உள்விவகாரமா......??????

அக்னி
08-03-2011, 09:38 AM
அப்பாடி நாம இந்த ஆட்டத்துல இல்ல:rolleyes::rolleyes::icon_ush:

இந்த ஆடு ஏன் அதிகமா சந்தோஷப்படுது... :icon_hmm:

மதிக்கப்புறமா முற்றுப்புள்ளி இல்லீங்க நிவாஸ்... தொடர்புள்ளிங்க... வடிவாப்பாருங்க...


அக்னி சார் அதுல நிவாஸ் பேரையும் சேருங்க
இந்த ஆடு ஏன் கூட்டம் சேர்க்குது... :icon_hmm:

தாமரை
08-03-2011, 09:39 AM
ஆட்டின் தோல் போர்த்திருப்பதை
அடிக்கடி மறந்துவிடுகிறாய்!
நிலவொளி கண்ட நரியென
நிலை மறந்து ஊளையிடுகிறாய்!

எச்சரிக்கை!
குட்டு வெளிப்படும்,
கொட்டம் அடக்கப்படும்,
இன்றில்லையேனும் நாளை!

ஊளையிடும் நரி யார்? இது மத்தவங்க கேள்வி..

ஆனால் இந்தப் பாடலை எழுதியவர்தான் (ஊளையிட்டதுதான்) நரி..

லாஜிக்கா பாருங்க..

வேற நரி ஊளையிட்டதை கவிஞர் கேட்டிருந்தா குட்டு அப்பவே உடைஞ்சிருக்குமே எதுக்காக எதிர் காலத்தில பாடணும்?

குட்டு வெளிப்படும்,
கொட்டம் அடக்கப்படும்,
இன்றில்லையேனும் நாளை!

ஏன்னா நரியோட குட்டு கவிஞருக்கு ஏற்கனவே வெளிப்பட்டு விட்டது.

நரியே கவிஞரா இருக்கறதாலதான் குட்டு வெளிப்படும் அப்படின்னு தனக்குத் தானே சுய கட்டுப்பாடு செய்து கொள்ளப் பார்க்கிறார்.

அப்போ ஆட்டுத்தோல் என்ன?
ஊளையிடுதல் என்ன என்பதை நீங்களே புரிஞ்சுக்கலாம்.

சிவா.ஜி
08-03-2011, 09:40 AM
அப்பா எல்லா ஆடும் இங்கனத்தான் இருக்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!

தாமரை
08-03-2011, 09:45 AM
அப்பா எல்லா ஆடும் இங்கனத்தான் இருக்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!

ஆடா இருந்தா என்ன? நரியா இருந்தா என்ன? பிரியாணி சூப்பர்..!!!

சிவா.ஜி
08-03-2011, 09:48 AM
ஆம்பூர் பிரியாணிதான....நல்லாத்தான் இருக்கும்...அதெப்படிங்க...கரெக்ட்டா ப்ளான் பண்ணி.......பண்றீங்க.....

ஆனா....நரி பிரியாணியை இன்னும் சாப்பிடல......எங்க கிடைக்கும்....ஹி...ஹி...

இப்படிக்கு,
பல கறி சாப்பிட்ட பலராமன்

அக்னி
08-03-2011, 09:51 AM
அப்போ ஆட்டுத்தோல் என்ன?
ஊளையிடுதல் என்ன என்பதை நீங்களே புரிஞ்சுக்கலாம்.
இதுவா இருக்குமோ... :icon_hmm: அதுவா இருக்குமோ...:icon_hmm:

நிலவொளி மாறிச், சூரியவொளி வரட்டும்...
நரி தானா வெளிய வந்துடும்...


ஆடா இருந்தா என்ன? நரியா இருந்தா என்ன? பிரியாணி சூப்பர்..!!!
:icon_b: :icon_good:

முரளிராஜா
08-03-2011, 09:56 AM
அது முரா வா, ராரா வா, சரா வா, அக்னியா, ஆதவனா, அமரனா, ஆதனா, ஓவியனா, அன்புரசிகனா, சிவா.ஜி யா, மதியா...


. :p
இத மாதிரியான விசயத்துகெல்லாம் மட்டும் என் பேருதான்
உங்களுக்கு முதல்ல ஞாபகம் வருமா?

சிவா.ஜி
08-03-2011, 09:59 AM
இதுக்கெல்லாம் கூட வருதேன்னு சந்தோஷப்படுங்க...முரா....ஹி...ஹி...

உமாமீனா
08-03-2011, 10:01 AM
நாட்டு நடப்பை - சூசகமாக சொல்லும் கவிதை - மன்றத்தின் தோழர்கள் தோழிகள் நிச்சயமாக புரியாமலா இருப்பார்கள் - படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

அக்னி
08-03-2011, 10:01 AM
ஆனா பாருங்க சிவா.ஜி...
உங்க பெயரு கூட அதுவா வந்திச்சு... :D

சிவா.ஜி
08-03-2011, 10:02 AM
ஆனா பாருங்க சிவா.ஜி...
உங்க பெயரு கூட அதுவா வந்திச்சு... :D

ஆமா....ஆமா...அதுவாத்தான் வந்துச்சி....நாங்க நம்பிட்டோம்....:sauer028:

முரளிராஜா
08-03-2011, 10:10 AM
கீதம் அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய
அப்படின்னு சொல்லிருக்காங்க. அப்பனா
அது அந்த கருவா பய ராரா வாதான் இருக்கும்
அவன்தான் கருப்பு ஆடு மாதிரி கருப்பா இருப்பான்:lachen001::lachen001:
(இங்க ராரா வை பலிகடாவா ஆக்கிடுவோம்)

Nivas.T
08-03-2011, 10:31 AM
அக்னி சார் அதுல நிவாஸ் பேரையும் சேருங்க

:eek:ஏன் இந்த கொலைவெறி :D:D:D:D

முரளிராஜா
08-03-2011, 10:52 AM
:eek:ஏன் இந்த கொலைவெறி :D:D:D:D
உங்க பேரு இதுல இல்லைனா
நீங்க வேனா வருத்தபடாம இருக்கலாம்
அது உங்க பெரிய மனசு.
ஆனா அதுக்காக நான் சும்மா இருந்திட முடியுமா:lachen001:

Nivas.T
08-03-2011, 11:23 AM
உங்க பேரு இதுல இல்லைனா
நீங்க வேனா வருத்தபடாம இருக்கலாம்
அது உங்க பெரிய மனசு.
ஆனா அதுக்காக நான் சும்மா இருந்திட முடியுமா:lachen001:

அட ஆண்டவா :confused::confused:

ஒரு குருப்பாத்தன்யா திரியுறாங்க:icon_rollout::icon_rollout::icon_rollout:

நிவாஸ் உஷார்...ரா .........உஷாரு:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

நதி
08-03-2011, 08:22 PM
ஆமாம்
நிச்சயம் தேவை
அச்சருக்கை!

கீதம்
08-03-2011, 09:46 PM
ஊளையிடும் நரி யார்? இது மத்தவங்க கேள்வி..

ஆனால் இந்தப் பாடலை எழுதியவர்தான் (ஊளையிட்டதுதான்) நரி..

லாஜிக்கா பாருங்க..

வேற நரி ஊளையிட்டதை கவிஞர் கேட்டிருந்தா குட்டு அப்பவே உடைஞ்சிருக்குமே எதுக்காக எதிர் காலத்தில பாடணும்?

குட்டு வெளிப்படும்,
கொட்டம் அடக்கப்படும்,
இன்றில்லையேனும் நாளை!

ஏன்னா நரியோட குட்டு கவிஞருக்கு ஏற்கனவே வெளிப்பட்டு விட்டது.

நரியே கவிஞரா இருக்கறதாலதான் குட்டு வெளிப்படும் அப்படின்னு தனக்குத் தானே சுய கட்டுப்பாடு செய்து கொள்ளப் பார்க்கிறார்.

அப்போ ஆட்டுத்தோல் என்ன?
ஊளையிடுதல் என்ன என்பதை நீங்களே புரிஞ்சுக்கலாம்.

அந்நியரைச் சாடலை விடுத்து
அகத்துள்ளே தேடலைத் துவக்கு
என்கிறீர்கள்!
அதுவும் சரிதான்.

ஐயையோ... ஆட்டுமந்தைக்குள் நரி
என்று கதறுகிறேன்.
கதறலும் ஊளையென
கண்டுகொள்ளப்படுவது துர்பாக்கியமே!

நானாயிருந்தாலும் யாராயிருந்தாலும்
தோலுரிக்கப்படும்போது
தெரிந்துவிடும் நரியா நாரியாவென்று!

தாமரை
09-03-2011, 12:31 AM
அந்நியரைச் சாடலை விடுத்து
அகத்துள்ளே தேடலைத் துவக்கு
என்கிறீர்கள்!
அதுவும் சரிதான்.

ஐயையோ... ஆட்டுமந்தைக்குள் நரி
என்று கதறுகிறேன்.
கதறலும் ஊளையென
கண்டுகொள்ளப்படுவது துர்பாக்கியமே!

நானாயிருந்தாலும் யாராயிருந்தாலும்
தோலுரிக்கப்படும்போது
தெரிந்துவிடும் நரியா நாரியாவென்று!


அதெல்லாம் சரிதான்..

ஆட்டு மந்தைக்குள் நரி இருப்பது தெரிந்தும் ஊளையிடாதே குட்டு வெளிப்படும் அப்படின்னு நரிக்குதானே உதவி செய்யறீங்க. அப்ப ஒண்ணு நீங்க நரியா இருக்கணும். இல்லைன்னா அதோட கூட்டா இருக்கணும்..

ஆடா இருந்தா.. அய்யோ ஆட்டுத் தோல் போர்த்தின நரி காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு அபயக் குரல்தானே எழுப்பணும்.. உங்க குரலில் நரியை அமுக்கி வாசின்னு ஒரு மிரட்டல் தொணி தெரியுதே..

அப்ப ஆடா நீங்க இருக்க வாய்ப்பே இல்லை..

பாதகம் செய்பவரைக் கண்டால்
நீ பயம் கொள்ளலாகாது பாப்பா!

மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!

உங்க கவிதையில் கதறல் இல்லாதது.. இப்பக் கதறினா சரியாகிடாது.. :sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

மதி
09-03-2011, 12:34 AM
ஆடு நரி....கதறல் ஊளை...!!
என்னன்னவோ சொல்றீங்க??:eek::eek::eek::eek::eek::eek:

கீதம்
09-03-2011, 03:01 AM
அதெல்லாம் சரிதான்..

ஆட்டு மந்தைக்குள் நரி இருப்பது தெரிந்தும் ஊளையிடாதே குட்டு வெளிப்படும் அப்படின்னு நரிக்குதானே உதவி செய்யறீங்க. அப்ப ஒண்ணு நீங்க நரியா இருக்கணும். இல்லைன்னா அதோட கூட்டா இருக்கணும்..

ஆடா இருந்தா.. அய்யோ ஆட்டுத் தோல் போர்த்தின நரி காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு அபயக் குரல்தானே எழுப்பணும்.. உங்க குரலில் நரியை அமுக்கி வாசின்னு ஒரு மிரட்டல் தொணி தெரியுதே..

அப்ப ஆடா நீங்க இருக்க வாய்ப்பே இல்லை..

பாதகம் செய்பவரைக் கண்டால்
நீ பயம் கொள்ளலாகாது பாப்பா!

மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!

உங்க கவிதையில் கதறல் இல்லாதது.. இப்பக் கதறினா சரியாகிடாது.. :sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

உண்ணுவது புல்லா புலாலா
என்னும் ஐயப்பாடிருக்கும்வேளை
எண்ணுவதையெல்லாம் இங்கே
திண்ணமாய்ச் சொல்லல் முறையோ?

அறுதியிட்டறியா நிலையில்
ஐயத்தோடே உரைத்தேன்.
உறுதியாய் அறிந்துவிட்டீர்,
உமக்குமுன் உண்மை கண்டறிந்த
எம்மை ஊளையிடும் நரியின்
உடன்பிறப்பென்று உரைத்திட்டீர்!

கள்ளமற்ற ஆட்டின் நல்லெண்ணத்துக்கு
களங்கம் கற்பித்தீர், நல்மேய்ப்பரே... ...
இனி புலியைப் பார்த்தாலும்
புறப்படுமொரு கவிதை...
மே...மே...மே....மே.....:D

உமாமீனா
09-03-2011, 03:13 AM
எச்சரிக்கை....யாருக்கு விடப்பட்டது? நல்லாவே புரியுது.....இருந்தும் பின்னூட்டங்களை படித்தால் ஸ்ஸ்ஸ்.....முடியலைடா....கண்ணை கட்டுது எல்லாம் ஒரு மார்க்கமாகத்தான் திரியறாங்க....லோ

தாமரை
09-03-2011, 03:41 AM
உண்ணுவது புல்லா புலாலா
என்னும் ஐயப்பாடிருக்கும்வேளை
எண்ணுவதையெல்லாம் இங்கே
திண்ணமாய்ச் சொல்லல் முறையோ?

அறுதியிட்டறியா நிலையில்
ஐயத்தோடே உரைத்தேன்.
உறுதியாய் அறிந்துவிட்டீர்,
உமக்குமுன் உண்மை கண்டறிந்த
எம்மை ஊளையிடும் நரியின்
உடன்பிறப்பென்று உரைத்திட்டீர்!

கள்ளமற்ற ஆட்டின் நல்லெண்ணத்துக்கு
களங்கம் கற்பித்தீர், நல்மேய்ப்பரே... ...
இனி புலியைப் பார்த்தாலும்
புறப்படுமொரு கவிதை...
மே...மே...மே....மே.....:D

ஊளைச் சத்தம் கேட்குதே ஐயோ!
ஆட்டு மந்தையிலொரு நரியோ?

என்றிருந்தால்

அதுதான் கள்ளமற்ற ஆட்டின் நல்லெண்ணம்..

நரி எனத் தெரிந்தும்
அடக்கி வாசி இல்லையென்றால் மாட்டிக் கொள்வாய் என்றால்

நரி இருப்பதில் இந்த ஆட்டிற்கு ஆட்சேபணை இல்லை என்று அர்த்தம்..

புல்லுண்ணும் நரிகள்
இல்லவே இல்லை

ஒருவேளை
"அசத்தப் போவது யாரு?" என்று

ஏதோ ஒரு ஆடு
மேமேகிரி விடுத்து
மிமிக்ரி செய்து பார்க்கிறதோ?

ராஜாராம்
09-03-2011, 04:15 AM
[QUOTE=முரளிராஜா;516527]கீதம் அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய
அப்படின்னு சொல்லிருக்காங்க. அப்பனா
அது அந்த கருவா பய ராரா வாதான் இருக்கும்
அவன்தான் கருப்பு ஆடு மாதிரி கருப்பா இருப்பான்:lachen001::lachen001:
(இங்க ராரா வை பலிகடாவா ஆக்கிடுவோம்)[/QUOTE

ஒரு மனுஷன் ஊருக்குப் போயிட்டு வருவதர்குள்....
இப்படியெல்யெலாம்....சிக்கலில் சிக்கிவிட்டுருக்கியே...முரளி...
என்னா ஒரு வில்லத்தனம்.....
ராஸ்கல்......அளு இல்லாட்டிக்ககூட...துவச்சிஎடுத்துடுறியே....:sauer028:

முரளிராஜா
09-03-2011, 04:21 AM
சரி சரி கதைய எழுத ஆரம்பி நிறைய பேர் உன் கதைக்காக
காத்திருக்காங்க.

கீதம்
09-03-2011, 04:35 AM
ஊளைச் சத்தம் கேட்குதே ஐயோ!
ஆட்டு மந்தையிலொரு நரியோ?

என்றிருந்தால்

அதுதான் கள்ளமற்ற ஆட்டின் நல்லெண்ணம்..

நரி எனத் தெரிந்தும்
அடக்கி வாசி இல்லையென்றால் மாட்டிக் கொள்வாய் என்றால்

நரி இருப்பதில் இந்த ஆட்டிற்கு ஆட்சேபணை இல்லை என்று அர்த்தம்..

புல்லுண்ணும் நரிகள்
இல்லவே இல்லை

ஒருவேளை
"அசத்தப் போவது யாரு?" என்று

ஏதோ ஒரு ஆடு
மேமேகிரி விடுத்து
மிமிக்ரி செய்து பார்க்கிறதோ?

இருக்கலாம்..... இருக்கலாம்...
பொருந்தியதோலை போர்த்தியதென்று
அறியாமையாலே அடியேனுரைத்திருக்கலாம்...
எல்லாமே ஆடுகள்தாம்...
ஆடுகளின் ஆடுகளம்தான்.
நல்லாவே பார்த்துவிட்டேன்,
நரியேதும் தென்படவில்லை,
சரியாகச் சொன்னீர்,
அசத்தப்போவது யாரு என்றீர்,
அசத்தியது நீரே என்கிறேன்.

உமாமீனா
09-03-2011, 04:35 AM
ஒரு மனுஷன் ஊருக்குப் போயிட்டு வருவதர்குள்....


வந்துடியலா....யப்பா ...ரொம்பவே துளிர் விட்டு போச்சி...பயபுள்ளைக்கு

Nivas.T
09-03-2011, 06:04 AM
இருக்கலாம்..... இருக்கலாம்...
பொருந்தியதோலை போர்த்தியதென்று
அறியாமையாலே அடியேனுரைத்திருக்கலாம்...
எல்லாமே ஆடுகள்தாம்...
ஆடுகளின் ஆடுகளம்தான்.
நல்லாவே பார்த்துவிட்டேன்,
நரியேதும் தென்படவில்லை,
சரியாகச் சொன்னீர்,
அசத்தப்போவது யாரு என்றீர்,
அசத்தியது நீரே என்கிறேன்.

:music-smiley-012:அப்பாடி கடைசியா:whistling:

:icon_clap:ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க:music-smiley-009:

:shutup:இஸ்...... ஸ்ப்பா........... :sport009:

முரளிராஜா
09-03-2011, 07:17 AM
கீதம் அவர்களே எல்லாம் ஆடுகளா? இங்க நான் ஒரு சிங்கம் இருக்கேன்
மறந்துட்டிங்களே

கீதம்
09-03-2011, 07:26 AM
கீதம் அவர்களே எல்லாம் ஆடுகளா? இங்க நான் ஒரு சிங்கம் இருக்கேன்
மறந்துட்டிங்களே

சிங்கம், ஆடு, புலி, நரி எல்லாரும் அவங்கவங்களே மேய்ப்பர்கிட்ட போய் ஆதாரத்தோட அட்டெடன்ஸ் கொடுத்துடுங்க. நீங்க சிங்கம்னு சத்தியம் பண்ணினாலும் எனக்கென்னவோ ஆடு மாதிரிதான் தெரியறீங்க...:lachen001:

Nivas.T
09-03-2011, 07:50 AM
சிங்கம், ஆடு, புலி, நரி எல்லாரும் அவங்கவங்களே மேய்ப்பர்கிட்ட போய் ஆதாரத்தோட அட்டெடன்ஸ் கொடுத்துடுங்க. நீங்க சிங்கம்னு சத்தியம் பண்ணினாலும் எனக்கென்னவோ ஆடு மாதிரிதான் தெரியறீங்க...:lachen001:

:shutup::shutup::shutup::shutup:

sarcharan
09-03-2011, 07:51 AM
ரா ரா நீங்க கொதிச்செழும் நேரம் வந்தாச்சு... சீக்கிரமே அடுத்த கதை எழுதி அதுல முராவ கிழி கிழின்னு கிழிச்சுடுங்க

தாமரை
09-03-2011, 07:52 AM
சிங்கம், ஆடு, புலி, நரி எல்லாரும் அவங்கவங்களே மேய்ப்பர்கிட்ட போய் ஆதாரத்தோட அட்டெடன்ஸ் கொடுத்துடுங்க. நீங்க சிங்கம்னு சத்தியம் பண்ணினாலும் எனக்கென்னவோ ஆடு மாதிரிதான் தெரியறீங்க...:lachen001:

அட்டெண்டஸ் குடுத்து "மேக்கப் டெஸ்ட்" எடுத்துக்கோங்க.. இங்க ஒரிஜினல் சிங்கம் வந்தா என்ன ஆகும்னு தெரியுமா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14904

முரளிராஜா
09-03-2011, 08:08 AM
ரா ரா நீங்க கொதிச்செழும் நேரம் வந்தாச்சு... சீக்கிரமே அடுத்த கதை எழுதி அதுல முராவ கிழி கிழின்னு கிழிச்சுடுங்க
சாரா, இதமாதிரியெல்லாம் பேசகூடாது:icon_ush:
எனக்கு பயமா இருக்கு.

முரளிராஜா
09-03-2011, 08:10 AM
சிங்கம், ஆடு, புலி, நரி எல்லாரும் அவங்கவங்களே மேய்ப்பர்கிட்ட போய் ஆதாரத்தோட அட்டெடன்ஸ் கொடுத்துடுங்க. நீங்க சிங்கம்னு சத்தியம் பண்ணினாலும் எனக்கென்னவோ ஆடு மாதிரிதான் தெரியறீங்க...:lachen001:
உங்க நல்ல நேரம்னு நினைக்கிறேன் இன்னிக்கு இந்த சிங்கத்துக்கு கோபம்
வரல
:lachen001:

sarcharan
09-03-2011, 08:36 AM
உங்க நல்ல நேரம்னு நினைக்கிறேன் இன்னிக்கு இந்த சிங்கத்துக்கு கோபம்
வரல
:lachen001:


வேணாம் மு ரா!
தாமரை திரும்ப வந்தாச்சு.. :frown:

அறைகூவல் விடுறவங்களை அவர் பிரிச்சு (கடிச்சு) மேஞ்சுடுவாரு...:icon_p:

மதி என்ன பேசாம இருக்கீங்க? சொல்லி குடுங்க..:icon_ush:

sarcharan
09-03-2011, 08:39 AM
ரா ரா: பயமா இருக்கா?
மு ரா: பயமா? யாருக்கு?
மு ரா: யாருக்கோ!!!:D:D


ச ரா: ஐயோ நான் ஒடீருதேன் சாமி :confused::confused::confused:

sarcharan
09-03-2011, 08:40 AM
சிங்கம், ஆடு, புலி, நரி எல்லாரும் அவங்கவங்களே மேய்ப்பர்கிட்ட போய் ஆதாரத்தோட அட்டெடன்ஸ் கொடுத்துடுங்க. நீங்க சிங்கம்னு சத்தியம் பண்ணினாலும் எனக்கென்னவோ ஆடு மாதிரிதான் தெரியறீங்க...:lachen001:


பசுத்தோல் போர்த்திய புலி மாதிரி இவர் சிங்கத்தோல் போர்த்திய ஆடா!! அடடா!!!

ரா ரா கொஞ்ச நாள் இல்லன்னதும் ரானாக்கள இப்படி ரன் எடுக்க முடியாதபடி.........
ஹைஓஓஒ

தாமரை
10-03-2011, 12:35 AM
இந்த ஆடு-நரியைப் பார்த்தா கண்மணியோட அந்த ஆடு-நரிதான் ஞாபகத்துக்கு வருது..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=368104

கௌதமன்
10-03-2011, 02:09 PM
கீதம் சொன்ன சீரியஸ் மேட்டரை
கடைசில காமடி பீஸா மாத்திட்டீங்களே!
சிலசமயம் நரி வந்து எட்டி பார்த்துட்டு
குலுங்கி சிரிச்சுட்டுப் போயிருக்கும்.

கீதம்
10-03-2011, 07:49 PM
கீதம் சொன்ன சீரியஸ் மேட்டரை
கடைசில காமடி பீஸா மாத்திட்டீங்களே!
சிலசமயம் நரி வந்து எட்டி பார்த்துட்டு
குலுங்கி சிரிச்சுட்டுப் போயிருக்கும்.

சரியா சொன்னீங்க. நன்றி கெளதமன், இந்த பரிதாபத்திற்குரிய ஆட்டுக்கு வக்காலத்து செய்ததற்கு.