PDA

View Full Version : பழமொழிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்



உமாமீனா
08-03-2011, 04:44 AM
பழமொழிகளின் தொகுப்பு


திருநெல்வேலி மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில் ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் பழமொழியானது ப்ரோவேர்ப் (Proverb) என்றும் அழைக்கப்படுகிறது.

இனி கச்சேரிக்கு போவோமா


எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்


புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்


மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது


சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்
அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்


போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

தொடரும்..... தனி திரியில் அல்ல உங்களின் பின்னூட்டங்களுக்கு இடை இடையே

பழமொழி போல பெண்களைத் தாக்கி எழுதப்பட்ட வாசகங்கள் நீக்கப்பட்டன. - - பொறுப்பாளர்

xavier_raja
08-03-2011, 05:36 AM
இது என்னவோ குறிப்பாக பெண்களை தாக்குவது போல் தெரிகிறது.. மார்ச் 8 சர்வேதேச பெண்கள் தினம்.. இன்று போய் இப்படியா பெண்களை வசைபாடுவது..:)

aathma
08-03-2011, 08:25 AM
உமா மீனா அவர்களே , நீங்கள் தொடங்கி இருக்கும் இந்த திரியானது மிகச் சிறந்த முயற்சி . எனது பாராட்டுக்கள் .

பழமொழிகளின் வாயிலாக பெண்களை கேவலப்படுத்தும் செயலை நீங்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

நன்றி

உமாமீனா
08-03-2011, 09:42 AM
இது என்னவோ குறிப்பாக பெண்களை தாக்குவது போல் தெரிகிறது.. மார்ச் 8 சர்வேதேச பெண்கள் தினம்.. இன்று போய் இப்படியா பெண்களை வசைபாடுவது..:)


பழமொழிகளின் வாயிலாக பெண்களை கேவலப்படுத்தும் செயலை நீங்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

நன்றி

பழமொழிகளை நா உருவாக்கவில்லை தோழர்களே.... அதுவும் இன்று மார்ச் 8 சர்வேதேச பெண்கள் தினம்.. நம் தமிழ் மொழியில் உள்ள பழமொழிகள் எந்த அளவுக்கு இருக்கு என்பதை தெரியபடுத்ததான் இந்த பதிவு மற்ற படி வசை பாடுவதற்காக அல்ல - தயவு செய்து புரிந்தி கொள்விர்கள் என உறுதியாக நம்புகிறேன் (தமிழ் பழமொழிகள் தொகுக்கப்பட்ட ஆண்டு மற்றும் தொகுத்தவர்கள் தமிழ்ப் பழமொழிகள் (1842), பெர்சிவல்,பழமொழி (1870), லாரி,தமிழ்ப் பழமொழிகள்(20,000) , கி.வா.ஜெகந்நாதன் 1988 இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு)

ஆதவா
08-03-2011, 09:48 AM
பழமொழிகளை நா உருவாக்கவில்லை தோழர்களே.... அதுவும் இன்று மார்ச் 8 சர்வேதேச பெண்கள் தினம்.. நம் தமிழ் மொழியில் உள்ள பழமொழிகள் எந்த அளவுக்கு இருக்கு என்பதை தெரியபடுத்ததான் இந்த பதிவு மற்ற படி வசை பாடுவதற்காக அல்ல - தயவு செய்து புரிந்தி கொள்விர்கள் என உறுதியாக நம்புகிறேன் (தமிழ் பழமொழிகள் தொகுக்கப்பட்ட ஆண்டு மற்றும் தொகுத்தவர்கள் தமிழ்ப் பழமொழிகள் (1842), பெர்சிவல்,பழமொழி (1870), லாரி,தமிழ்ப் பழமொழிகள்(20,000) , கி.வா.ஜெகந்நாதன் 1988 இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு)

உங்கள் பதிவு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இனிமேல் பெண்களைத் தாக்கும் பழமொழிகளைத் தராதீர்கள். நீங்கள் கொடுத்தவைகளை பழமொழிகள் என்று சொல்லமுடியாமல் ஜோடிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

உமாமீனா
08-03-2011, 09:52 AM
இனிமேல் பெண்களைத் தாக்கும் பழமொழிகளைத் தராதீர்கள்.

அப்படியே ஆகட்டும் - இப்படி இருக்கே என்ற ஆதங்கம் தான் புரிதலுக்கு நன்றி

உமாமீனா
09-03-2011, 03:00 AM
சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்

இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?

தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது

கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி

கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்

அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது

அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்

ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது

இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்

ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்

அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை

அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்

படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்

ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

sarcharan
10-03-2011, 07:35 AM
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்



பல் துலக்காததன் சைடு எபெக்ட் இதுல தெரியுமா?

முரளிராஜா
10-03-2011, 07:48 AM
பல் துலக்காததன் சைடு எபெக்ட் இதுல தெரியுமா?
ஓ ராரா சொன்னது உண்மைதானா?
சாரா, "ரா"ணாக்களின் ராஜ்ஜியம்..13 போய் பாருங்க
நீங்க பல் துலக்காம ஒரு பாம்ப கொலை செஞ்சிருக்கிங்க:lachen001:

உமாமீனா
12-03-2011, 08:11 AM
எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

செவிடன் இருமுறை சிரிப்பான்

ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்

குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்

உமாமீனா
13-03-2011, 06:39 AM
ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,

காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
தோண்டிக்கொள்கிறான்

இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்

மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்
அதிகமாய்க் குத்தும்

உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்
மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை
குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பாளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

பழைய இஞ்சியில் காரம் அதிகம்