PDA

View Full Version : உலகின் மிகச் சிறிய தாய்



முரளிராஜா
05-03-2011, 06:37 AM
http://www.tamilenn.net/newsgallery/0003.jpg

http://www.tamilenn.net/newsgallery/004.jpg


அமெரிக்காவைச் சேர்ந்த Stacey Herald உலகின் மிகச் சிறிய தாய் என்ற சாதனையை படைத்துள்ளார். 37 வயதான இவர் 2 அடி 4 அங்குலம் உயரத்தை கொண்டுள்ளார். 2005 ஆம் ஆண்டில் இவருக்கு திருமணமாகியுள்ளது. இவரது கணவணின் வயது 28. சாதாரணமாக உயரம் குறைந்த பெண்களுக்கு பிள்ளைகள் இல்லை அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும் ஆனால் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதற்கு உலகின் மிகச்சிறிய தாய் என்ற கின்னஸ் சாதனையை Cristianne Ray பெற்றார். இவர் 2 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவராவார்.
நன்றி; தமிழ்cnn

M.Jagadeesan
05-03-2011, 06:42 AM
உலகின் மிகச்சிறிய தாயைக்கண்டு ரசித்தேன். நன்றி! முரளிராஜா!!

முரளிராஜா
05-03-2011, 06:44 AM
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ஜெகதீசன் சார்

ஓவியன்
05-03-2011, 07:34 AM
செய்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி முரளி, அந்த தாயின் முகத்திலிருக்கும் பெரிமிதப் பூரிப்பே ஒரு கவிதை...

உமாமீனா
05-03-2011, 08:51 AM
வாவ்.....பகிர்வுக்கு நன்றி - முரா

ஜானகி
05-03-2011, 09:56 AM
குழந்தைகளோடு ஒரு குழந்தையாய்...ஒரு தாய்...!

சூரியன்
05-03-2011, 11:29 AM
கேள்விப்படாத செய்தி...

sarcharan
07-03-2011, 12:31 PM
இவரே குழந்தை.. இவருக்கு குழந்தை

பகிர்வுக்கு நன்றி முரளிராஜா.

lolluvathiyar
08-03-2011, 07:11 AM
இதை தான் மனமிருந்தால் மார்கம் உண்டு என்று சொல்லி இருப்பாங்களோ என்னவோ. ஊனத்தை பொருட்டாக நினைக்காமல் தானும் ஒரு தாயாக வேன்டும் என்ற நினைத்ததுக்கு கடவுள எவ்வளௌ அழகான குழந்தைகளை வழங்கி இருக்கிறார் பாருங்கள்.

கீதம்
08-03-2011, 09:54 PM
தன்னம்பிக்கை மிகுந்த பெண்மணியையும், பரந்தமனம் கொண்ட அவர் கணவரையும் பாராட்டுகிறேன். அழகான குடும்பம் கண்டு அளவிலா ஆனந்தம்.

முரளிராஜா
09-03-2011, 04:53 AM
பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

ஆதவா
09-03-2011, 04:59 AM
பகிர்வுக்கு நன்றிங்க முரளி!

தலைப்புதான் இடிக்கிறது. உலகின் மிகச்சிறிய தாய் என்பதைவிட, உலகின் மிக உயரம் குறைந்த தாய் என்று இருந்தால் நன்றாக இருக்குமென்பது என் கணிப்பு

முரளிராஜா
09-03-2011, 05:04 AM
பகிர்வுக்கு நன்றிங்க முரளி!

தலைப்புதான் இடிக்கிறது. உலகின் மிகச்சிறிய தாய் என்பதைவிட, உலகின் மிக உயரம் குறைந்த தாய் என்று இருந்தால் நன்றாக இருக்குமென்பது என் கணிப்பு
உண்மைதான் நண்பரே தலைப்பை மாற்றிவிடவா?

ஓவியா
09-03-2011, 11:04 PM
இவர்களை காணும் போது, கவலை மறந்து நாமும் இவ்வுலகில் இன்னும் கொஞ்சம் வாழனும் என்று தோன்றுகிறது.

நல்ல பதிவி, பகிர்வுக்கு நன்றிகள்.