PDA

View Full Version : அதிசயம்...ஆனால் உண்மை... !ஜானகி
04-03-2011, 02:04 PM
கொசுவிற்கும், வியாபாரிகளின் வசவுக்கும் பெயர் போன மாம்பலம் ரயில்வீதி கடைத்தெருவில் இன்று ஓர் அதிசயம் கண்டேன்...

மனம் இறுக்கமாக இருக்கும்போது, நான் அந்தக் கடைவீதிக்குச் சென்று வருவேன்.

பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்கள் பரபரப்பையும் கவனிக்கும்போது என் உற்சாகம் மீண்டும் வந்துவிடும்...

நான் எப்போதும் ஒலிநாடாக்கள் வாங்கும் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.

அந்தக் கடையிலிருந்து எப்போதும் தவழ்ந்துவரும் இசையை நான் ரசிப்பது உண்டு.

இன்று அந்த ஒலிநாடாவுடன் கூடவே ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.

எங்கிருந்து வருகிறது இந்தக் குரல் என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.

அந்தக் கடையின் முன் அமர்ந்து காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் ஒரு வியாபாரி, தன்னை மறந்து அந்த ஒலிநாடாவுடன் பாடிக் கொண்டிருந்தான்....!

எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் போனது...!

அவனறியாமல் அவன் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தேன்.

மொழியோ, ராகமோ, தாளமோ.....எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவன் பாடிக் கொண்டிருந்தான்.

வந்த வியாபாரத்தையும் விடவில்லை...புன்னகையுடன் , இதமாகப் பேசி விற்பனை செய்தான்....!

{கவனிக்கவும்...இதமாகப் பேசினான்...!}

ஆச்சரியம் தாளாமல் அவனுடன் பேச்சுக் கொடுத்தேன்...' உனக்கு இந்தப் பாட்டெல்லாம் தெரியுமா ?' என்றேன்

"பொழுதன்னைக்கும் காதுல விழுகுது...மனசுல பதிஞ்சிருச்சு ' என்றான்...!

எனக்கு சொரேலென்று ஒரு உண்மை புலனானது...ஜாதி, மதம், இனம், மொழி..என்று எல்லாவற்றையும் கடந்தது...இசை !

கரடு முரடான மனதையும் கரைக்கவல்லது .....இசை

{இன்று அந்தக் கடையில் தான் காய் வாங்கினேன் என்று சொல்லவும் வேண்டுமா ?}

இளம் தாய்மார்களுக்கு ஓர் வேண்டுகோள்....

எல்லாவிதமான இசையையும் கேளுங்கள்... கூடவே அது ஏற்படுத்தும் பாதிப்பையும் கவனியுங்கள்..!

சிறுவர்கள் மனம் கெட்டுப் போகத் தூண்டும் சொற்களையுடைய பாடல்களை தயவு செய்து கேட்காதீர்கள் !

நல்லது, கெட்டது அறியாத பருவம் அது.

இசையோ மாபெரும் சக்தி...அதனை நல்ல முறையில் பயன் படுத்திகொள்ளலாமே...

காலை வேளைகளில், சிறுவர்கள் இருக்கும்போது, இதமான, நல்ல அர்த்தங்களைக் கொண்ட பாடல்களை கேளுங்கள்.

உங்கள் வேலை பளுவும் மிதமாகும்...வீண் சச்சரவும் குறையும்.

மெல்ல, மெல்ல, நல்ல இசையின் தரத்தை அவ்ர்களே உணரத் தொடங்குவார்கள்.

ரணமான மனதுக்கு இசை ஓர் அருமருந்து....அதனை நல்ல விதத்தில் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

ஜானகி
04-03-2011, 02:13 PM
உணவு சமைப்பவர்களின் குணநலன்கள் அந்த உணவில் பிரதிபலிக்குமாம்.

அதனால், காலை வேளைகளில் உணவு சமைக்கும்போது, அநாவசிய சண்டை சச்சரவில் ஈடுபடாமல், தாய்மார்கள், நல்ல பாடல்களைக் கேளுங்கள்.

நமக்கும் மனது பதட்டப்படாமல் இருக்கும்...கேட்பவர்களின் மனதிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.

இதனை செயல்படுத்திப் பாருங்களேன்..?

உங்களுக்குப் பிடித்த திரை இசையை நீங்கள் தனிமையில் இருக்கும்போது ரசிக்கலாமே ?

குழந்தைகள் அருகிலிருக்கும்போது வேண்டாமே...? யோசியுங்கள்...

முரளிராஜா
04-03-2011, 02:44 PM
உண்மைதான் இசை என்பது மாபெரும் சக்திதான்.நாம் எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும் சில இனிமையான பாடல்களை கேட்கும் பொழுது நாம் துன்பங்களை
மறந்து போகிறோம் அல்லவா?

Nivas.T
04-03-2011, 02:55 PM
இசை ஒரு அர்ப்புதமானது

இளையராஜாவை கேட்டால் இசை என்பது ஒன்றுமில்லை என்பார்

அந்த ஒன்றுமில்லை என்பதற்குள் எவ்வளவு அடங்கியுள்ளது என்று அறியயிலாது என்பதுதான் அதன் பொருள்

நல்ல ஒரு அனுபவங்க

கீதம்
04-03-2011, 10:24 PM
நல்ல அனுபவம். மனதை அமைதிப்படுத்தும் வழிகளில் நமக்குப் பிடித்த ஆர்ப்பாட்டமில்லாத நல்ல இசையைக் கேட்பதும் ஒன்று.
பகிர்வுக்கு நன்றி ஜானகி அவர்களே.

M.Jagadeesan
05-03-2011, 01:57 AM
அறுபதுகளிலும்,அதற்கு முன்பும் திரைப்பாடல்கள் கேட்பதற்கு இனிமை
வாய்ந்ததாகவும்,பொருள் பொதிந்ததாகவும் இருந்தன.அவற்றைக் கேட்டு
க்கொண்டு உணவு சமைத்தால் நீங்கள் கூறியபடி உணவு சுவையுள்ள
தாக இருக்கும்.ஆனால் தற்போது வருகின்ற பாடல்களைக் கேட்டுக்
கொண்டு உணவு சமைத்தால் அந்த உணவை வாயில் வைக்கமுடியுமா?

உமாமீனா
06-03-2011, 09:31 AM
இசை அதுக்கு ஈடு ஏது

இது சம்பந்தமாக யோசிக்கும்போது தனி திரி தக்க அனுமதியுடன் தொடங்கணும் என்று ஆவல்

கண்மணி
18-03-2011, 10:44 AM
உணவு சமைப்பவர்களின் குணநலன்கள் அந்த உணவில் பிரதிபலிக்குமாம்.

அதனால், காலை வேளைகளில் உணவு சமைக்கும்போது, அநாவசிய சண்டை சச்சரவில் ஈடுபடாமல், தாய்மார்கள், நல்ல பாடல்களைக் கேளுங்கள்.அப்போ மனைவியை புகழுகிற பாட்டா போட்டு கேட்டுகிட்டே சமைச்சிடலாம். சூப்பர் யோசனை அக்கா!!!! :icon_b::icon_b::icon_b:

ராஜாராம்
18-03-2011, 11:09 AM
நேரில் கண்ட சம்பவத்திலும்..ஒரு அருமையான மகத்துவத்தையும்,
விளக்கத்தையும்.தந்துவிட்டீர்கள்.
நீங்கள் கூறியதுப் போல்,நல்ல அர்த்தமுள்ளப் பாடல்கள் மனதிற்கு சுகமான உணர்வுகளை தரும் என்பது உண்மையே.
இசையைப்போல் மனதிற்கு ஒரு நல்ல மருந்து வேறு எதுவும் இல்லை.
பகிர்வுக்கு நன்றி ஜானகி அக்கா.

சிவா.ஜி
18-03-2011, 01:57 PM
ரொம்ப சரிங்க. நல்ல இசைங்கறது நிலைகொள்ளாமல் தவிக்கும் மனதை நிலைப்படுத்தும், அதே சமயம் நீங்க சொன்ன மாதிரி பாடாவதி பாடல்கள் நம்மைப் படுத்திவிடும்.

நல்லதொரு அனுபவப் பகிர்வுக்கு நன்றிங்க சகோதரி.

ஷீ-நிசி
18-03-2011, 03:35 PM
அவசியம் அனைவருக்கும் பயன்படும் தகவல்... நன்றி!