PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:3



ராஜாராம்
04-03-2011, 05:08 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR-p32e1HkvRi0r7VykobE6w8n8bILyS4gvNWOHCDzOjB3Vt2UltMw4cYs
சிதம்பரம்.....தேரடி வீதி...காலை..10.30மணி

"ஜோசியர் ஐயா,..எங்கப் பையனுக்கு...திருச்சியிலிருந்து
ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்கு...
ரெண்டையும் பொருத்தம் பாருங்க,,",
என்ற அசோக்குமாரின் தந்தை ,
அபிராமியின் ஜாதகத்தையும்,
தன் மகனது ஜாதகத்தையும்,
,ஜோசியரிடம் நீட்டினார்.

"பேஷா..பார்த்துடலாம்...",
என்று கூறிய ஜோசியர்,
அபியின் ஜாதகத்தையும்,,,அசோக்குமார் ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்..

"ரெண்டுப் பேருக்கும் பொருத்தம் நல்லாவே இருக்கு..
10க்கு 8பொருத்தம் இருக்கு..
தாராளமா கல்யாணம் பன்னலாம்",
என்றதும்..
அசோக்குமாரின் பெற்றோர் முகத்தில் சந்தோஷக்கலை வெளிப்பட்டது.

"நாங்க புறப்படுறோம்...உத்தரவுத்தாங்க...",
என்று அவர்கள் கூறியதும்,

:நல்லபடியா போயிட்டு வாங்க...",
என்று அவர்களை அன்போடு வழிஅனுப்பினார் ஜோசியர்...

காலை மணி 10.58ஐ நெறுங்கிக் கொண்டிருந்தது.

"ஹாலோ...அசோக்..அப்பா பேசுறேன்டா...
உனக்கும்,அந்த திருச்சிப் பொண்ணு அபிராமிக்கும்
.பொருத்தம் நல்லா இருக்காம்...
உனக்கு எப்ப டைம் இருக்கும்னு சொல்லு....
பொண்ணை,நேரில் பார்த்துவிட்டு வந்துருவோம்",
என்று வழக்கம்போல்.,தனது உடனடி தகவலை,அசோக்கிடம் தெரிவித்தார்...அவனது தந்தை.



http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSml8dsF-RPX3RnsRC8CorNXFeSAQszPXP4c2Y_pY1ZtP6ANuwbFS_yQatS_g
சென்னை...அண்ணாசாலை.....காலை...11.02மணி..

செல்ஃபோன்னைக் காதில் வைத்து தலைசாய்ந்தபடி...

"அப்பா...நான் இப்ப கார் டிரைவிங்ல இருக்கேன்...
கொஞ்சநேரம் கழித்துப் பேசுங்களேன்...",
என்றான் அசோக்குமார்...
தனது சவர்லெட்க் காரை ஓட்டியபடி.

தொலைபேசியின் மறுமுனையில் இருந்த அவனது தந்தை....

"ஓகேடா,...நானும் உங்கம்மாவும்...இப்பத்தான்
நம்மஊரு தேரடி வீதியில் இருந்து புறப்படுறோம்...
வீட்டுக்குப் போனதும் உன்னிடம் பேசுறேன்...",
என்று கூற,,..

அதற்கு பதில் அளித்த அசோக்,
"சரிப்பா...",
என்று,
அந்தசொல்லுக்கு ஏற்றாற்போல்
தன்னையும் மறந்து உணர்ச்சிப்பூர்வமாய்,
தலை அசைக்க......

அவனது அந்த செய்கையால்...
அவனது கவனம் சிதறி,
சரசரவென கட்டுப்பாட்டை இழந்த அவனது சவர்லெட் கார்...
சாலைகளில் தாறுமாறாக ஓடி...
மின்னல்வேகத்தில்,
அருகில் இருந்த,முத்துமாரியம்மன் அம்மன் கோவில்
சுவற்றில் முட்டி மோதியது,நின்றது....

சட்டென காரின் கதவை திறந்தவன்னம்,
கைகால்கள் படபடக்க
முகம்வெளிறியவனாய்,
வெளியே,சாலையில் குதித்தான் அசோக்.

அவன் வெளியேறிய மறுநிமிடமே,
முத்துமாரியம்மன் கோவிலின் சுவற்றிலிருந்த,
சிறிய அம்பாள்சிலை ஒன்று,சுவருடன்,
சடசடவென இடிந்து ,
காரின் கண்ணாடியின்மேல் விழுந்தது...
கண்ணாடியோடு சேர்ந்து,தூள்தூளாய் சிதறியது.

சிதம்பரத்தில் இருந்த அவனது தந்தை,
ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது
என்று அறிந்து,
செல்ஃபோன்னில்,

"ஹலோ...அசோக்..என்னபா ஆச்சு?
அசோக்..அசோக்...",
என்று கதற,......
பதில் ஏதும் கூறாமல் பதட்டத்தில் செல்ஃபோனை சுவிட் ஆஃப்
செய்துவிட்டு,,
அதிர்ச்சியில் உரைந்துப்போய் நின்றான்.

"அம்மன் சிலை உடைஞ்சுப்போச்சு,,...",
"ஐயையோ...சாமிசிலை நொறுங்கிப்போச்சு...",
என்று அலறியவாறு,
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்
அதிர்சியில் ஓடிவரத்தொடங்கினர்..


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRmuCCRihzOdl55gCsLpLiPLP_V4OEE7fmosrPPrhtEIOjleeUbmhs1UJw
திருச்சி....சமயபுரம்மாரியம்மன் கோவில்,.....காலை..11.43மணி..

"கற்பூர நாயகியே கனகவள்ளி....
காளி மஹமாயி கருமாரியாம்மா...
பொற்கோயில் கொண்ட சிவகாமியம்மா...",
எல்.ஆர்.ஈஸ்வரியின் இனிமையானக் குரலில்\
இசைத்தட்டு ஒலித்துக் கொண்டிருக்க...
அபிராமியும்,,அவளது தோழி மாதங்கியும்..
மாரியம்மனை கும்பிட்டுவிட்டு,
பிரகாரத்தில் வலம் வந்துக்கொண்டிருந்தனர்...

"உனக்கு விஷயம் தெரியுமோ...
நடிகை பிரிதர்ஷினி கொலை சம்மந்தமாக,
விசாரணை செய்துகொண்டு இருக்கும்,
புலனாய்வுதுறை அதிகாரி அசோக்குமார் காரு,
சென்னை அண்ணாநகரில் விபத்துக்குள்ளாகி விட்டதாம்...
எம்,டீவியில்,சிறப்புசெய்தியில்,
இப்பத்தான் பார்த்துட்டு வரேன்,..",,
என்று,தனது நண்பனிடம் பேசிக்கொண்டே வலம் வந்தான்
ஒரு இளைஞன்.

"சாமிக்கும்பிட வந்துட்டு,...
ஊரு கதையை பேசிக்கிட்டு இருக்காங்கப் பாரு...",
என்று அவர்களைப் பார்த்துக் கமென்ட் கொடுத்தாள் மாதங்கி.
ஆனால்அதைக் கேட்ட அபிராமியின்
முகமோ சற்றே சோர்ந்துபோனதுபோல் மாறியது...

அதைக் கண்ட மாதங்கி,
"ஏன்டி ஒருமாதிரி,ஆயிட்டே?",
எனக் கேட்டதும்,
"யாருக்கோ ஆக்ஸிடெண்டுன்னு பேசிக்கிட்டு இருந்தாங்களே...
அதைக் கேட்டதும் மனசுக் கஷ்டமா இருக்குடி...",
என்றாள் அபி.

கோவிலின் பிரகாரத்தில்,செவ்வாடைக் கட்டியபடி
நின்றிருந்த ஒருப் பெண்மனி,
"இந்தாங்க....அம்மனுக்கு படைச்ச மாவிளக்கு பிரசாதம்",
என்று,அங்கு வலம்வரும் பக்தர்களுக்கு...
சிரித்த முகத்துடன் வழங்கிக்
கொண்டு இருந்தாள்.
அபியையும்,மாதங்கியையும்,கண்ட அந்தப் பெண்மனி,

"அம்மாடி..இந்தாங்கம்மா...பிரசாதம் வாங்கிகுங்க...",
என்று ,
ஒரு சிறிய பேப்பரில்,..கொஞ்சம்,படைத்த மாவிளக்கை வைத்து அன்போடு நீட்டினாள்.
அதை வாங்கிய இருவரும்,..
மெல்ல பிரசாதத்தை உண்ண ஆரம்பித்தனர்.

கையில் இருந்த பிரசாதத்தை சாப்பிட்டு முடித்த
அபியின் கண்களில்,
அந்தப் பேப்பரில்...எழுதப்பட்டிருந்த வாசகம் ஒன்று,
தென்பட்டது...
அதைக் கண்டவளின் விழிகள் விரிந்தன...
அதிந்தது அவளது உள்ளம்....

"மின்னெழுந்து..மின்ஒடுங்கி...
விண்ணில் உறைந்தார்போல்...
உன்னுள்ளேயே...
உள்நின்று...
உன்னைநீ அறியும் காலம் வரும்...
காதல் ஏதும் செய்திடவே...
காலமல்ல....கண்மனியே....
உன் ஜனன ராசியதில்...
சாம்பலினை பூசியவனின்
அருள்வாக்கு நிறைந்திருக்கும்....
சிவனாடிசித்தன்...எந்தன்..
தெளிவானக் கூற்றுஇது...."',

கல்லூரிக் கோவிலில்,
அன்று அவளது காதுகளில் விழுந்த
அதே வாசகங்கள்....
கல்வெட்டுகளில் செதுக்கியப்போல்...
எழுத்துவடிவில்,
அந்தக் காகிததில் இருந்தன,..

"ஏய்....
இதைப் படி...
அன்றைக்கு என் காதில் கேட்டது இதான்டி..
எனக்கு பயமாக இருக்கு...இதைப் படிச்சுப் பாருடி...".
படபடவென ...ஏதேதோ பதறினாள்,அபி

"ஏய் லூஸா நீனு...
காதில் கேட்டேன்னு சொல்றே,,..இதைப் படிங்கிற..?
என்னடி ஆச்சு உனக்கு...",
என்று,
அபியின் கைகளில் இருந்த
அந்தப் பேப்பரை தன்னிடம் வாங்க,
மாதங்கி முயற்சித்த மறுநிமிடமே...

அபியின் கைகளில் இருந்தக் காகிதம்...
காற்றில்.....
மெல்ல மெல்ல....வின்னில் உயரத்தொடங்கியது...

சற்றுநேரத்திற்கெல்லாம்....
சமயபுரம்மாரியம்மன் கோவிலின்,
கோபுர முகப்பில்....
சுதைவேலைகள் செய்யப்பட்ட சிலைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது........

கோபுரத்தில் சிக்கிய அந்தக் காகிதத்தையே வெறித்துப்
பார்தவன்னம்...
சிலைபோல் நின்றாள்...அபிராமி.....


(கண்ணாமூச்சி ஆட்டம்..........தொடரும்)

(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821A0.TAMILNADU FILM CHAMBER/..rajaram..RTD240)

ஜானகி
04-03-2011, 05:47 AM
சிதம்பரம், சமயபுரம், திருச்சி, சென்னை.... என்று நீங்கள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் எங்களுக்கு தட்டாமாலை சுற்றுவது போலிருக்கிறது....இதில் சோட்டானிக்கரை வேறு போகிறீர்கள்.... எதற்கும் வரும்போது, எலுமிச்சம்பழம் மந்திரித்துக் கொண்டுவரவும்....

sarcharan
04-03-2011, 06:13 AM
மதி கத சொல்லுறேன் பேர்வழின்னு உலகத்த சுத்துனாறு, நீங்க தமிழ்நாட்ட சுத்துறீங்க...

Nivas.T
04-03-2011, 07:20 AM
ராஜாராம்,

விடாதுகருப்பு மாதிரி தொடங்கி, சிதம்பர ரகசியமாக்கி, திருச்சியில் திருப்பம் கொடுத்து, சமயபுரத்தில் சந்தேகம் கொடுத்து, சென்னையில் விசாரணை, விபத்து.......அப்பப்பா என்ன சொல்றது ஆடுங்க உங்க கண்ணாமூச்சிய......பார்க்கலாம் யாரு சிக்குராங்கன்னு..

Nivas.T
04-03-2011, 07:23 AM
மதி கத சொல்லுறேன் பேர்வழின்னு உலகத்த சுத்துனாறு, நீங்க தமிழ்நாட்ட சுத்துறீங்க...

:eek:உலகம் மட்டுமா விட்டா அவரு கிரகம் கிரகமா கூட சுத்தி (குறிப்பு சுத்தியல் அல்ல) கட்டுவாரு...

(:icon_ush:ரகசியம்: வெளிகிரக ஜந்துக்களை வைத்து மதி ஒரு கதை எழுதப்போவதாக கேள்வி:icon_ush:)

sarcharan
04-03-2011, 07:37 AM
:eek:
(:icon_ush:ரகசியம்: வெளிகிர ஜந்துக்களை வைத்து மதி ஒரு கதை எழுதப்போவதாக கேள்வி:icon_ush:)



ஐயையோ வாங்க பின்னங்கால் பிடரில அடிக்க ஒடீரலாம்

govindh
04-03-2011, 08:10 AM
கண்ணாமூச்சி ஆட்டம்....
விறு விறுப்பானத் தொடர்....
பாராட்டுக்கள் ராஜாராம்.

பாகம் - 4 : சோட்டானிக்கரை...!?

முரளிராஜா
04-03-2011, 12:43 PM
ஊரில் இருந்து வந்தவுடன் கண்ணாமூச்சி ஆட்டத்தின் அடுத்த பாகத்தை தொடருவாய் என எதிர்பார்க்கிறேன்

உமாமீனா
05-03-2011, 09:03 AM
ஊரில் இருந்து வந்தவுடன் கண்ணாமூச்சி

எந்த ஊரு சோட்டானிக்கரைக்கா...!?

அன்புரசிகன்
06-03-2011, 11:49 PM
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? காப்பி டீ எல்லாம் சாப்பிட்டாச்சா? வெத்தல பாக்கு ஏதாவது போடுறீங்களா??? அப்புறமென்ன.. அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க... நல்ல விறுவிறுப்பாக போகுது... :lachen001:

அந்த கவிதையை ஏன் அங்க தொங்க விட்டீர்கள்? அங்கேயும் ஏதாவது சஸ்பென்ஸ்???