PDA

View Full Version : 1000....2000.....3000....ஷீ-நிசி
03-03-2011, 03:44 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Election.jpg

கைநீட்டி வாங்க முடிவெடுத்தபின்,
ஏன் தேர்தலுக்கு தேர்தல்
காத்திருக்க வேண்டும்??

தெருவுக்குத் தெரு
காத்திருக்கலாமே!!!!

ஷீ-நிசி

shiva.srinivas78
03-03-2011, 03:51 PM
நல்ல சாட்டையடி , (ஆனாலும் நம்மாளுங்க கைப்புள்ள கணக்கா இதல்லாம் தொடச்சுபோட்டு போயிட்டே இருப்பாங்க )

Nivas.T
03-03-2011, 04:08 PM
இப்படி சொன்னாலும் எவனாவது திருந்துவான்னு நினைச்சா அது நம்ப அறியாமை

பாலகன்
03-03-2011, 04:55 PM
தெருவுக்கு தெரு போலீசு காரவகளோட போட்டி இருக்கும்னு தான் இப்படி தேர்தலுக்கு தேர்தல் நீட்டுறாங்களோ? கையை சொன்னேன் :)

அன்புரசிகன்
03-03-2011, 09:38 PM
உங்கள் கவிதை சாட்டையடி.... சிறிதாய் சொன்னாலும் பெரிதாய் உறைத்தது. ஆனால்..............

மானம் அது இது என்று இருப்பவன் என்றும் வாங்கமாட்டான்.

சரி இல்லாதவங்களப்பற்றி பார்ப்போம்.....

இப்ப ஆட்சியப்பிடிக்கப்போறது ஒன்றில் மோதகம். இல்லாவிட்டால் கொழுக்கட்டை. டேஸ்ட் என்னமோ ஒன்று தான்.
இங்கே 3 தெரிவுகள் உள்ளன.
வாக்கை போடாது விடுவது, வாக்கை அழிப்பது, வாக்கை அளிப்பது.

ஓட்டுப்போடாமல் விட்டால் அந்த ஓட்டை கள்ள ஓட்டாக மாற்றி விடுவார்கள். நஷ்டம் போடாது விட்டவர்களுக்கு..

போய் வாக்கை யாருக்குமில்லாது அழித்துவிட்டு வந்தாலும் மோதகம் அல்லது கொழுக்கட்டை தான்.
நஷ்டம் போய் அழித்துவிட்டு வந்தது + பயணச்செலவு + நேரவிரயம்

இப்ப வேற ஆப்ஷனே இல்ல. காசு வாங்கி மோ/கொ க்கு வாக்கு அளிப்பது தான். குறைஞ்சது காசாவது வருதில்லே....................
அரசியல் என்பது சாதி என்பது போல் அது அந்த சாதியில் இருப்பவர்கள் மட்டும் தான் வரலாம் என்று ஒரு நியதியுடன் உள்ளது... மாற்றுவதற்கு சங்கரும் அர்ஜூனும் தான் இசைப்புயலின் இசையுடன் வரவேண்டும். ஜதார்த்தம் என்ற ஒன்று உண்டல்லவா...
இது இந்தியாவுக்குமட்டுமல்ல. இலங்கைக்கும் தான்.... புதிதாக தட்டிக்கேட்டால் அதை நாமே வேறு முத்திரை குத்தி அமுக்கிவிடுவோம். மூக்கிருந்தால் சளியும் வந்தே தீரும்.

நல்லவர்கள் யாராவது வாக்கு கேட்டால் பணமில்லாது அளித்துவிட்டு வரலாம். அது நடந்துகொண்டு தான் உள்ளது. காரணம் நம் மன்றில் ஒரு சில திரி படித்திருக்கிறேன். ஆகையால் இதை வேறு விதமாக பார்க்காது தீபாவளி பொங்கல் போனஸ் மாதிரி தேர்தல் போனஸாக இருக்கட்டுமே. இது என்ன வருசத்துக்கு ஒருதடவையா வருது.???:D

ஷீ-நிசி
04-03-2011, 12:11 AM

அன்பு நலமா?

இதை போனஸா எடுத்துக்கலாம்... இதை குறித்து ரொம்பலாம் வருத்தபடவேண்டாம்னு சொல்லவர்றீங்க...

எப்போ நாம காசு வாங்கி ஓட்டு போட ஆரம்பிக்கிறோமோ, அப்பவே அந்த தேசத்தில் நடக்கும் ஊழலுக்கு நாம் உடன்படுகிறவர்களா ஆகறோம். அப்புறம் எப்படி இங்கே கோவம் வரும், ஆத்திரம் வரும், தவறுகளை தட்டி கேட்கும் தைரியம் வரும்?

நீ இன்று உன் ஓட்டை விற்றால்
நாளை அவன் நாட்டை விற்பான்.. சிம்பிள்

இருக்கும் பணத்தை ஓட்டுக்கு ஆயிரம் என அளித்துவிட்டு, வெற்றி பெற்றவன் உனக்கு ஓடி ஓடி தொண்டு செய்யவருவான் என நினைப்பது
மடமையின் உச்சகட்டம்...

ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும், ஒரு தேசம் கூறுபோட்டு விற்கபட்டால், அத்தேசம் கொள்ளையடிக்கபடும்போது கூச்சல் போட்டு மீட்டெடுக்க நம் நாக்குகளெல்லாம் மறுத்துவிடும்...

______________________

கவிதைக்கு கருத்தளித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்.

p.suresh
04-03-2011, 12:58 AM
மக்கள் மனசாட்சிப்படி ஒட்டளிக்க அது அவர்கள் தரும் சன்மானம்.கொள்ளையடித்த பணம் இப்படியாவது மக்களிடமே வந்து சேரட்டுமே.

ஷீ-நிசி
04-03-2011, 01:14 AM
மக்கள் மனசாட்சிப்படி ஒட்டளிக்க அது அவர்கள் தரும் சன்மானம்.கொள்ளையடித்த பணம் இப்படியாவது மக்களிடமே வந்து சேரட்டுமே.

கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் கொடுத்துவிட்டு........ ??????

பாலகன்
04-03-2011, 01:16 AM
மக்கள் மனசாட்சிப்படி ஒட்டளிக்க அது அவர்கள் தரும் சன்மானம்.கொள்ளையடித்த பணம் இப்படியாவது மக்களிடமே வந்து சேரட்டுமே.

இப்படி நாம் நினைப்பதால் தான் அவர்களும் சரி கொள்ளை அடித்துவிட்டு கொஞ்சம் அவர்களுக்கு கொடுத்தால் சந்தோச படுவார்கள் என்று நினைத்துக்கொள்வார்கள் :D

அக்னி
08-03-2011, 10:31 AM
தெருவுக்குத் தெரு
காத்திருக்கின்றவை
இல்லாமையும் இயலாமையும்...

இது
இல்லாமலாக்கும் இயலாததாக்கும்
விஷமன்றோ...

நன்றாகத்தான் விளாசியிருக்கின்றீர்கள் ஷீ-நிசி...
ஆனால், பலன்...???

உமாமீனா
08-03-2011, 10:38 AM
என்னது வெறும் 3000மா....அட போங்கப்பா 5000 தாண்டியாச்சு - தெருவுக்கு தெரு என்ன? வீட்டுக்கு வீடு - ஒவ்வொரு தலைக்கும்

ஓவியன்
08-03-2011, 11:08 AM
ம்ஹூம், ஏமாளிகள் இருக்கும் வரை தானே, ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்..

நல்ல கவிதை ஷீ, ஆனால் உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்கணுமே...

சிவா.ஜி
08-03-2011, 11:09 AM
ஓட்டுரிமைங்கறதை நாம எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கியிருக்கோம்ன்னு இந்தக் காலத்து தலைமுறைக்குத் தெரியாமலிருக்கலாம்...ஆனா...பழைய தலைமுறைக்கூட..இப்படி காசு வாங்கினா...அப்ப அந்த போராட்டத்துக்கும், கஷ்டத்துக்கும்...என்ன விலை?

நெத்தியடிக் கவிதை ஷீநி. யாராவது திருந்தினா நல்லதுதான்...ஆனா....நிதிகள் அவர்களைத் திருந்த விடுவார்களா.....ஜன்நாயகம் நிலைக்குமா...இல்லை பணநாயகம் ஜெயிக்குமா...?

ஆதவா
08-03-2011, 11:33 AM
விஜயகாந்த் சொல்லுவதைப் போல, வாங்கிக் கொள்ளுங்கள்... ஆனால் அவர்களுக்கு ஓட்டுப்போடாதீர்கள்!! இதுதான் எனது நிலையுமே!!
எங்கள் ஏரியா கம்யூனிஸ்ட் ஏரியா என்பதால் இன்னும் “இலவச டிவி” கூட கிடைக்கவில்லை.. அட அதெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை. ரோடு கூட போடப்படவில்லை!!

ஷீ!, இந்த கவிதையை நீங்கள் முழுவதுமாக சொன்னதாக ஞாபகம். கத்தரித்து இருந்தாலும் காரம் குறையாத கவிதை.!!!

ஷீ-நிசி
08-03-2011, 04:20 PM
நன்றி நண்பர்களே!

@ஆதவா...

ஆமாம் ஆதவா அதில் சில வரிகள் அடுத்து அணிவகுக்கும்!

அமரன்
08-03-2011, 05:46 PM
மீண்டும் நிசியாரின் கவிதை மன்றத்தை அழகூட்டுவது மகிழ்ச்சி.

காசு வாங்கும் வாக்காளர்கள் பிச்சைக்காரருக்கு ஒப்பானவர் என்கிறீங்க.

அவுங்க அப்படி இல்லங்க. அவங்க பெருமாள்கள்..

பிச்சை எடுத்துச்சாம் அனுமார் (அரசியல்வாதி) பிடுங்கித் தின்னுச்சாம் பெருமாள்.. (மக்கள்) சரிதானே நான் சொல்றது.

துட்டுக்கு ஓட்டு எனக்குப் பிடிக்காதுதான். ஆனால் பாழ்பட்ட அரசியலால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சனங்களுக்கு இந்தச் சனநாயகம் ஒரு நாளுக்காவது சந்தோசத்தைக் குடுக்கும் என்றால் என்ன செய்ய.. கண்டும் காணாமல் ஊமையாய் அழ வேண்டியதுதான்.