PDA

View Full Version : என்னால் மறக்கமுடியாத மனிதர்கள்:4ராஜாராம்
03-03-2011, 10:51 AM
(இது ஒரு உண்மைசம்பவம்.
இதில் இடம்பெரும் நபர்களின் பெயர்களும்,ஊரின் பெயரும்,மாற்றம் செய்யப்பட்டுள்ளது,.
கதைவடிவத்திற்காக,நேரடி வசனங்கள் இடம்பெற்றுள்ளன)


(சேலம் மாவட்டம்...குமாரபாளையம்...21.11.2005)


ரவி ஒரு பெரிய இடத்துப் பையன்.
பெற்றோரின் ஆதரவு சரியானவிதத்தில்,கிட்டாமல்,
தவறான பாதையில் வாழ்க்கையை வாழத்தொடங்கினான்.
ஆம்...கஞ்சா என்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகினான்,.'

"ஏய்...வேணாம்டா...இந்தப் பழக்கம்...",
என்று அவனது தாத்தா,பாட்டி கெஞ்சியும் அவனால்
அந்தப் பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்தான்.

'ஏய்...சங்கர்....உன் பிரண்ட் ரவியை எப்படியாவது
இந்தப் பழக்கத்தில் இருந்துக் காப்பாத்துடா....",
என்று ரவியின் நண்பன் சங்கரிடம்,
ரவியின் தாத்தா கெஞ்சினார்.

"தாத்தா,,..நானும் எவ்வளவ்வோ சொல்லிப்பார்த்துட்டேன்...
அவன் கேட்கவேஇல்லை",
சங்கரின் குரலில் சோர்வு இருந்தது.

"இல்லைடா,,..சங்கர்....நீ நெனச்சா அவனை திருத்தலாம்...ப்ளீஸ்.."
ரவியின் தாத்தா ,சங்கரின் கரங்களை பற்றியவன்னம்
கதறி அழுதார்.
அந்த முதியவரின் அழுகுரல் சங்கரின் மனதை உலுக்கி எடுத்தது,.

"ஏய்...நீயெல்லாம்...மனுஷனாடா?,,.
உன் தாத்தாவும் பாட்டியும் உன் கவலையிலே
செத்துப்போயிடுவாங்கப் போலிருக்குடா..",
என்று சங்கரிடம் எரிமலையாய் வெடித்து சிதறினான் சங்கர்.

ரவியோ..அவற்றையெல்லாம் காதில் வாங்காமல் ,
அந்த போதை வஸ்துவை சுகமாய் இழுத்துவிட்டுக்கொண்டு இருந்தான்.

"நான் பேசிக்கிட்டே இருக்கேன்...
கொஞ்சம் கூட கவலையில்லாமல்
அந்தக் கருமத்தையே இழுத்துக்கிட்டு இருக்கியேடா...",
என்ற சங்கர்.,

"கொண்டாடா.அதை...நானும் உன் கூடவே அதை அடிச்சு,..
சீக்கிரம் செத்துத் தொலையிறேன்டா...".,
என்று ஆத்திரத்தில் ,
ரவியின் கைகளில் இருந்த கஞ்சாவினை வாங்கி,
சற்றே வேகமாய் இழுத்தான்.......

அன்றையதினம் அவனுக்குப் பிடித்தது கேடுகாலம்....

அவனைத் திருத்தவேண்டும் என்ற வீம்பில்,
ரவியிடமிருந்து கஞ்சாவினை வாங்கி இழுக்கத் தொடங்கிய சங்கரும் ...
கொஞ்சம் கொஞ்சமாக ...அந்தப் பழக்கத்திற்கு,
அவனையும் அறியாமல் அடிமையாகத் தொடங்கினான்...

சங்கரின் குடும்பம்,நடுத்தர வகுப்பினை சார்ந்தது.
சங்கரின் தங்கை ராதா,இளம் வயதில் விதவையானவள்,..
அவள் வயிற்றில் 6மாதக் குழந்தையும் வளர்ந்து வந்தது.

(15.12.2005....இரவு...7.30மணி)

"ஏய் சங்கர்...உன் தங்கச்சி ராதாவை...டாக்டர்கிட்டே,...
செக் அப்பிற்கு கூட்டிக்கிட்டு போடா..",
என்றாள் சங்கரின் அம்மா.

"எனக்கு வேலை இருக்கும்மா...இப்ப முடியாது..",
சங்கர் சலித்துக் கொண்டான்.

"அண்ணா ப்ளீஸ்...
என் குழந்தை நல்லா இருக்கான்னு...ஒரேஒரு தடவை
டாக்டர்கிட்டே காண்பித்துட்டால்...எனக்கு திருப்தியா இருக்கும்..",
கெஞ்சினாள்,ராதா.

"சரி...சரி...வந்துதொலை....",
வேண்டா வெறுப்புடன் தங்கையை அழைத்து சென்ரான் சங்கர்.

செல்லும்வழியில் சிணுங்கியது அவனது செல்ஃப்போன்.

"மச்சான் சீகிரம் நம்ம குடோனுக்கு வாடா....
நம்ம சரக்கு(கஞ்சா)வந்திருக்கு...",
சங்கரின் நண்பன் அழப்புவிடுக்க,

"நீ இங்கயே நில்லு...இதோ வந்துவிடுகிறேன்",
என்று நட்டநடுக் காட்டில்..
தங்கையை விட்டுவிட்டு,....போதையை தேடி சென்றான்...

சென்ற இடத்தில்....போதயில் லயித்தவன் ,..
தன் தங்கையை மறந்தேப் போனான்......

(16.12.2005...காலை6.0மணி)

"ஐயையோ....என் பொண்ணு ராதா செத்துப்போயிட்டாளே....",
சங்கரின் தாய் கதறினாள்.

ஆம்.....நடுக்காட்டில்...விட்டுசென்ற,
அவனது தங்கையை.....
ஒரிசில காமக்கொடூரர்கள்,சீரழித்துவிட்டனர்...
கற்பினியாய் இருந்த அவளோ...
அவ்விடத்திலேயே...இறந்துப் போனாள்..

"ராதாவிற்கு என்ன ஆச்சும்மா?",
முதல் நாள் போதைக்கூட தெளியாதவனாய்...
அங்கு சங்கரை...
ஊரே கரித்துக்கொட்டியது,,..
வாயிற்கு வந்தபடி சபித்துக்கொட்டினாள்..அவனது தாய்.

"ஐயையோ...என் தங்கச்சியை நானே கொன்னுட்டேனே,,..",
என்று விழுந்துபுரண்டு கதறினான்....சங்கர்,..

(11.01.2006....)

அவனை வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர்....
ஊர்மக்களும் ஒதுக்கி வைத்தனர்....
அளவிற்கு அதிகமாய்...கஞ்சாவினை பயன்படுத்திய அவனோ....

கிழிந்த ஆடைகளுடன்....
நடு வீதிகளில்....
ஏதேதோ புலம்பியபடி...
சுயநினைவின்றி அலையத்தொடங்கினான்...

அவனது...
அந்த பெரிய இடத்து நண்பனோ............
இன்று....மலேஷியாவில் மருத்துவராய்...பணியாற்றுக்கிறான்.
அழகியக் குடும்பத்துடன்...
சங்கரைப்பற்றி சிந்திக்காமல் வழ்ந்துக் கொண்டுள்ளான்...

ஆம்...அவனையும் ஒருப்பெ காதலித்தாள்...அவனை திருத்தினாள்...திருமணம் செய்துக்கொண்டாள்....

சங்கரின் நிலைதான்.......இன்று நடுவீதிகளில்...'
பலரும் சிரிக்கும்வன்னம்...ஆடைகள் கிழிந்து...பரிதாபமாய்........................

Nivas.T
03-03-2011, 11:12 AM
இப்படியும் மனிதர்கள்

மிக்க நன்றி ராஜாராம்

முரளிராஜா
04-03-2011, 12:24 PM
கதை அருமை ராரா,
போதையில் விழுந்த ஒருவனின் வாழ்க்கை எப்படி கெட்டுபோகிறது என்பதை இந்த
கதையின் மூலம் விளக்கியுள்ளாய்.

உமாமீனா
06-03-2011, 09:29 AM
போதைன்னா சும்மா இல்லைடா அது உசுரை வாங்காமல் போகாதுடா....

கொடுமை கொடுமையிலும் பெரிய கொடுமை..

ஓவியா
10-03-2011, 06:25 PM
கதையின் கரு கொஞ்சம் ஒட்டாமல் இருக்கு, இருப்பினும் நண்பனுடன் சேர்ந்தா நாமும் கெட்ட பழக்கத்தை பழகிக்கொள்ளலாம் என்று நானும் அறியேன்.

எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.


என்னுடைய சுய கருத்து.
சில நேரம் நம்மை அழிக்க நினைக்கும் கவலையை தாங்கிப்பிடிக்ககூடிய சக்தி இந்த போதைக்கு மட்டுமே உண்டு. அதனால் கவலைக்கு `இன்ஸ்டண்ட்` மருந்து ஏதாவது ஒரு போதை. இப்ப கண் முன்னே ஒரு கேஸ் பார்க்கிறேன். கொஞ்ச நாளைக்கு பின் நீங்களும் ஒரு கேஸ் பார்ப்பீர்கள்.

வாழ்க போதை. :food-smiley-010::food-smiley-015::food-smiley-004::Hellfighter1::ernaehrung004::icon_drunk::icon_smokeing:

ஆளுங்க
21-03-2011, 04:32 PM
மனதை இறுதியில் பிழிந்து விட்டீர்கள்...
வாழ்த்துக்கள்