PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்...பாகம்2.



ராஜாராம்
03-03-2011, 10:06 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSGTHSLoBTDO29Pj-8n-BzagI3KuC9NRWcZY5d-IGcPwpFi3XfXrQl9JJ7p
சென்னை....கோடம்பாக்கம்...விஜயவாஹினி ஸ்டுடியோ.....காலை...11.0மணி..
ஷூட்டிங்..,
ஸ்பாட்டுக்கு வந்த இயக்குனர்,நடராஜ்,
"என்னப்பா,,..ஹீரோயின் அஞ்சலி வந்தாச்சா?",

"இல்லை சார்...அஞ்சலி மேடத்துக்கு,
சலிப்பிடித்திருக்காம்...
டாக்டர்கிட்டே,செக்அப் போயிட்டுதான் வருவாங்களாம்",
உதவி இயக்குனர் செல்வராஜ் கூற,

"அவளுக்கு சலிப்பிடிச்சிருக்கு..
அவளை ஹீரோயின்னாய் போட்ட எனக்கு சனிப்பிடிச்சிருக்கு..",
என்றவர்,

"வெள்ளைத்தோலை வெச்சுக்கிட்டு,
நாலு வார்த்தை சேர்ந்தமாதிரி தமிழ் பேசவராதவளையெல்லாம்,
ஹீரோயினா புக்பன்னேன் பாரு....
என்னைய முதலில் செருப்பால அடிக்கனும்.
.....அதுசரி ஹீரோ வந்தாச்சா?.",

"வந்துக்கிட்டே இருக்காராம்..சார்",

"சான்ஸே இல்லாமல் கிடந்தவனை...
வரிசைக்கு நாலுப் படத்தில் புக்பன்னி,அவனை
பெரிய ஆளா ஆக்கினேன்பாரு...அதான் நான் பன்னத்தப்பு...
இன்னைக்கு சொந்தக் கட்சி ஆரம்பிக்கிப்போறேன்னு
ஆட்டமா ஆடிக்கிட்டு இருக்கான்.."
என்று அலுத்துக் கொண்ட இயக்குனரிடம்,

"சார்...படத்தோடப் பேரு என்ன சார்..?",
என்று பத்திரிக்கை நிருபர் பவ்யமாய் கேட்க,

"ம்ம்ம்ம்...காட்டெருமை",

"என்னசார் சொல்றீங்க?
காட்டெருமைன்னு ஒரு பேரா?",
அதிந்துக் கேட்டார்,நிருபர்,

"ஏன் இருக்கக்கூடாதா?
புலி,சிங்கம்,சிறுத்தை,கவரிமான்,..
இப்படியெல்லாம் பேரு வெச்சுப்படம் வரும்போது,..
காட்டெருமைன்னு பேரு வைக்ககூடாதா?",

"என்னசார் இப்படிப் பேசுறிங்க?",
என்று கடுப்பான நிருபரை,

"சார்...அவரே டென்ஷன்ல இருக்காரு...
அப்புறமா பேட்டி எடுங்க சார்...",
என்று அனுப்பிவைத்தார்,உதவி இயக்குனர் செல்வராஜ்.

"வணக்கம் சார்...நான் புலனாய்வுத்துறை அதிகாரி...
நடிகை பிரியதர்ஷினி கொலை விஷயமா...
உங்களிடம் ஒருசிலக் கேள்விகள் கேட்கனும்..",
என்று,இயக்குனரை அடுத்து நெறுங்கினான் அசோக்குமார்.

"அப்படியா...கொஞ்சம் சீக்கிரம் விசாரணையை முடிச்சுக்குங்க...",
என்றார் கறாராக,

"ஓகே...சார்..",
என்ற அசோக்,

"சார்...மே மாதம்13, படம் உங்கப் படம்தானே?",

'ஆமாம்..",

"அந்தப் படம்,ரசிகர்மன்றகாட்சி,மற்றும் பகல் காட்சிகள் ரத்து ஆகி,
இரவுக் காட்சிதான் வெளியானதாமே...ஏன்"?

"பைனான்ஸ் பணம் பாக்கி இருந்தது,,.அதான்.",

"ஒகே...அந்தப் படத்துக் கதைப்படி,,,
நாயாகி பிரியதர்ஷினி கொலையாவதுபோல் அமைத்திருக்கிங்களாமே?".,

"ஆமாம்...",

"நீங்க,திரைக்கதையாய் சித்தரித்ததுபோலவே...
நிஜத்திலும் பிரியதர்ஷினி கொல்லப்பட்டு இருக்காங்க...
உங்க படத்தைப் பார்த்துவிட்டு,,..அப்படி யாரும் செய்திருக்கலாமா?",

"சான்ஸே...இல்லை..கதைப்படி,அந்தக் கொலை சம்பவம்,
படத்தின் இடைவேளைக்கு பிறகுதான் வரும்.,"என்றவர்,

"பிரியதர்ஷினி கொலையானது எத்தனை மணிக்கு?"
அசோக்குமாரைப் பாத்துக் கேட்க,

"சுமார்..10.36க்குமேல் நடந்திருக்கு..",

"ஆனால்...படத்தில் அவுங்க கொலையாவதுபோல்
எடுக்கப்பட்டக் காட்சி,,,இடைவேளை முடிந்து,...12.0மணிக்குமேல்,வரும்",

"அப்படின்னா...",
என்று அசோக்குமார் கேட்க,

"நிஜத்தில் நடந்த சம்பவம்...
திரைப்படத்தில் வரும் காட்சிக்கு
முன்னறே நடந்துள்ளது..
எனவே சினிமாவைப் பார்த்து
இந்தக் கொலையை செய்திருக்க வாய்ப்பில்லைன்னு
நினைக்கிறேன்...",என்று நடராஜ் கூறியதும்,

"எக்ஸலண்ட்...சார்...
பேசாமல் நீங்களும் புலனாய்விற்கே வந்திடலாம் போலிருக்கே...
அருமையா கணிக்கிறிங்க....".
என்ற அசோக்குமார்,

"பிரியதர்ஷினி எப்படிப்பட்டவங்க?"

அருமையான கேரக்டர்...
இதுவரை கிசுகிசுன்னு எதுவுமே வந்ததில்லை.
தான் உண்டு,தன் வேலை உண்டுன்னு இருக்கிறவங்க.
எதிரிங்கன்னுக்கூட யாரும் இருக்க வாய்ப்பில்லை..",
என்றதும்,

"பிரிதர்ஷினியின் குடும்பம் பற்றி?",

"எனக்கு தெரிஞ்சவரை...
அவுங்களுக்கு குடும்பம்னு யாரும்மில்லை...
அனாதை இல்லத்தில் வளர்ந்தவங்க...",

"பிரிதர்ஷினிக்கு நெறுங்கிய நண்பர்னு யாரும் உண்டா?",

"ஜானகின்னு ஒரு பொண்ணு,பிரிதர்ஷினிக்கு நெருங்கிய தோழி.
ஜானகி ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்,,,.
நடிகை உதயதாராவிற்கு,
அந்தப் பொண்னுதான் பின்னனிக் குரல் தருகிறது..",

"ஜானகி விலாசம்..போன் நம்பர்..கிடைக்குமா?',
அசோக்குமார் கேட்ட மறுநிமிடமே...

"ஓ...தாராளமா...",

என்று கூறிவிட்டு,
ஜானகியின் விலாசம் போன்நம்பர் இரண்டையும்,
அசோக்கிடம் வழங்கினார் இயக்குனர் நடராஜ்.

"ஓகே...தாங்யூ சார்...
தேவைப்பாட்டல் மறுபடி உங்களை சந்திக்கிறேன்",
என்று அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் அசோக்குமார்.


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTEnkYpjBJPVHqfkIked9AdlqWXQDW1VDEYz2ZloqEyh7KVJ98fCfFGGr0f
திருச்சி.....மெயின்கார்ட்கேட்...கங்கையம்மாள் கலைக்கல்லூரி....


"மச்சான்.....M.L.A,வராங்கடா...",
கல்லூரி வாசலில்,பிரகாஷ் கூற,

"எம்.எல்.ஏ,..வாராங்களா...எங்கேடா?",
என்று கண்களை அங்குமிங்கும் அலையவிட்டான் சிவா.

"மாதங்கி,லெக்ஷ்மி,அபிராமி,...மூனுபேரும் வராங்கடா...
அதைத்தான் சுருக்கி M.L.A.வராங்கன்னு சொன்னேன்...",
என்று பிரகாஷ் கூறியதும்,

"மச்சான்...எப்படிடா...இப்படியெல்லாம் பேசுறே?
எப்படி..?",
என்று சிவா உணர்ச்சிப்பூர்வமாய் கேட்க,

"அதெல்லாம்,,..பிறவிக்கோளாறுடா...மச்சான்..
அதுவா தானா...அவப்போது..வரும்",
என்றான் பிரகாஷ்.

மாதங்கி,லெஷ்மி,அபிராமி...மூவரும்,,பிரகாஷைக் கடந்து செல்ல,
அவர்களில்,அபிராமியை மட்டும்,
ஒருவிதமான ரொமான்ஸ் பார்வையில் பார்த்தான் பிரகாஷ்.
மெல்ல குனிந்ததலை நிமிறாமலே...
அவனை தனதுக் கடைகண்களால் பார்த்தாள் அபிராமி.

"மச்சான்...அபி என்னையப் பார்த்துட்டுப் போறாடா,,...",
பிரகாஷ் குதுகலமாய் கூற,

"காலையிலே..கழுதையப் பார்த்தால் யோகம் வரும்னு...
அபியோடப் பாட்டி சொன்னாங்களாம்டா...
அதான் உன்னைய ஒரு லுக்கு விட்டுருக்காள்...",
என்று கலாய்த்தான் சிவா...

"ஏய் வாங்கடி...நம்ம காலேஜ்
பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு போவோம்...",
என்று மாதங்கி கூற,

அவர்களது கல்லூரிவளாகத்தில்,
வீற்றிருக்கும் விநாயகர் கோவிலில்
மாதங்கி,லெஷ்மி,அபிராமி.,மூவரும்,கண்மூடி,
ஆழ்நிலை தியானத்தில்
பிரார்தனையில் ஈடுபட்டனர்.

"மின்னெழுந்து..மின்ஒடுங்கி...
விண்ணில் உறைந்தார்போல்...
உன்னுள்ளேயே...
உள்நின்று...
உன்னைநீ அறியும் காலம் வரும்...
காதல் ஏதும் செய்திடவே...
காலமல்ல....கண்மனியே....
உன் ஜனன ராசியதில்...
சாம்பலினை பூசியவனின்
அருள்வாக்கு நிறைந்திருக்கும்....
சிவனாடிசித்தன்...எந்தன்..
தெளிவானக் கூற்றுஇது....",

அபியின் காதருகே
யாரோ ஒருவரது மூச்சுக்காற்று பட்டது....
அவளது காதில்...கனவில் வந்த அதே முதியவரின் குரல்,
துள்ளியமாய் கேட்டதும்...

"ஐயோ...யாரு...",
திடுக்கிட்டு,,,.
உடலெல்லாம் வியர்த்துப்போனவளாய்..
கண்விழித்து சுற்றும்முற்றும் பார்வயை திருப்பினாள் அபிராமி....
எதுவும் அவளதுக் கண்களுக்கு புலப்படவில்லை.

"ஏய்,...என்னடி?என்னாச்சு?",
அவளைப் பிடித்து உலுக்கினாள்,
மாதங்கி,.

"யாரோ,என் காதுகிட்ட வந்து பேசுனாங்கடி...",
அபியின் குரலில் அச்சம் இருந்தது.

'உன் லவ்வர் பிரகாஷா இருக்குமோ...",
சூழ்நிலை அறியாமல் கிண்டல் செய்தாள்,மாதங்கி..

லெஷ்மியோ,
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாதவளாய்,

"ஏய்...நேரமாச்சு வாங்கடி,...கிளாஸிற்குப் போலாம்..",
என்று கூற....
மூவரும் வகுப்பறையை நோக்கிச் நடந்தனர்..

அபியின் பார்வைமட்டும்...
கல்லூரியின் வளாகத்திற்குள்....
அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யார்?
என்றக் கேவிக்குறியுடன்,,
அங்குமிங்கும் தேடிக்கொண்டே இருந்தது,.


(கண்னாமூச்சி ஆட்டம்....தொடரும்)

(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHIAATTAM:13654821A0.TAMILNADU FILMCHAMBER/..rajaram..RTD240)

Nivas.T
03-03-2011, 11:27 AM
அசத்தல் ராஜாராம்,
தொடருங்கள்

ரகசியம் தொடரட்டும்

dellas
03-03-2011, 03:58 PM
நன்று ராஜாராம். (ஆனால் மனதில் ஒரு உறுத்தல். நான் இந்த கதையைப் படித்திருக்கிறேனோ என்று. இயக்குனர் ஒரு வேலையாளின் ஊமை உறவினனை வைத்து நடிகையைக் கொல்லும் கதை ஓன்று நான் படித்துள்ளேன். அதுபோலவ இதுவும் உள்ளது. )

nagendran elangovan
03-03-2011, 06:47 PM
:icon_b:

அன்புரசிகன்
03-03-2011, 09:48 PM
கண்ணாமூச்சி ... நல்ல பெயர் தான். படிக்கிறவனுங்களுக்கு தலை சுத்துறமாதிரி கதையை அமைப்பது உங்களுக்கு நன்றாகவே வருகிறது. தொடருங்கள்.

ராஜாராம்
04-03-2011, 01:45 AM
(ஆனால் மனதில் ஒரு உறுத்தல். நான் இந்த கதையைப் படித்திருக்கிறேனோ என்று. இயக்குனர் ஒரு வேலையாளின் ஊமை உறவினனை வைத்து நடிகையைக் கொல்லும் கதை ஓன்று நான் படித்துள்ளேன். அதுபோலவ இதுவும் உள்ளது. )

நன்றி டெலாஸ் அவர்களே,.
ஒரு சிறிய விளக்கம்.தாங்கள் கூறுவதுபோல்,இயக்குனருக்கும்,இக்கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாதக் கதை இது.
இது மாறுபட்ட,கதைத்தளம் உடையது.
இருப்பினும் தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி

ராஜாராம்
04-03-2011, 01:48 AM
நன்றி,
நிவாஸ் அவர்களூக்கும்,
நாகேந்திரன் இளங்கோவன் அவர்களுக்கும்,
அன்புரசிகனுக்கும்,(இப்பவே தலை சுற்றுகிறதுனா?சொச்சக் கதையை படிச்சா என்னா ஆகப்போறிங்களே.... :lachen001::lachen001: )

govindh
04-03-2011, 08:03 AM
அசத்தலான தொடர்...
பின் தொடர்ந்து வருகிறேன்...

முரளிராஜா
04-03-2011, 12:36 PM
அருமையா இருக்கு ராரா
தொடரட்டும்

உமாமீனா
05-03-2011, 09:01 AM
அசத்துங்க ராரா..............