PDA

View Full Version : கதை கதையாம் காரணமாம்..!



பூமகள்
03-03-2011, 12:52 AM
http://2.bp.blogspot.com/-x7Dix9mY5NQ/TW7zGC-1wDI/AAAAAAAACt8/x5Pk9A5dd1g/s400/babyangel (http://2.bp.blogspot.com/-x7Dix9mY5NQ/TW7zGC-1wDI/AAAAAAAACt8/x5Pk9A5dd1g/s1600/babyangel)




அன்றிரவும்
அப்படியாகத் தான்
ஆரம்பித்தேன்
கதை சொல்ல..

காகம்
பாட்டியிடம்
வடை திருடிய கதை..
திருத்தப்பட்டது
இப்படியாக..

பசிப்பொறுக்காத காகம்
பாட்டியிடம் வாங்கிய வடை
தந்திர நரி பறித்துப் போக…

புதிய கதைமாந்தராய்
பாட்டி அருகில்
இருவடையுடன்
என் குழந்தை…

காக்கை அழுகை
பொறுக்காமல்
தன் இருவடையும்
கொடுத்துச் சிரித்தது
குழந்தை..

நல்லவை விதைக்க
இதைப் போலவே
எல்லாக் கதையிலும்
அரும்பிவிடும்
புதிய பாத்திரம்
என் குழந்தை வடிவில்…!!

கீதம்
03-03-2011, 03:35 AM
நல்ல முயற்சி, பாராட்டுகிறேன் பூமகள். என் குழந்தைகளுக்காகவும் பல கதைகளை இப்படித் திருத்தியிருக்கிறேன்.

தான் வளர்த்த கீரியை அவசரத்தாலும் சந்தேகத்தாலும் கொன்ற ஒரு தாயின் கதை உங்களுக்குத் தெரியும்தானே? அந்தக் கதையைச் சொன்னபிறகு அந்தக் கீரிப்பிள்ளையின்மேல் பரிதாபப்பட்டு என் மகள் பலநாள் புலம்பிக்கொண்டிருந்தாள். அடுத்தமுறை சொன்னபோது கீரியைக் கொல்லாமல் வீட்டைவிட்டுத் துரத்திவிடுவதாகவும் பின் தவறுணர்ந்து வீட்டுக்குள் அழைத்துக் கொஞ்சுவதாகவும் சொன்னேன். அவள் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை. அன்றுமுதல் அவளுக்குச் சொல்லும் கதைகளை அவள் மனம் புண்படாதவாறு மாற்றிச் சொன்னேன். என் மகனுக்கும் இது தொடர்ந்தது. அப்போதே கதை எழுதுவதற்கான வித்து நான் அறியாமலே ஊன்றப்பட்டிருக்கிறது என் மனதில் என் குழந்தைகளின் தயவால்.:)

பெண்குழந்தைகளுக்குச் சொல்லப்படும் தேவதைக்கதைகள் கூட அவர்களை மனதளவில் பலவீனப்படுத்தும் என்று படித்திருக்கிறேன். தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அந்தப் பிரச்சனையிலிருந்து தாங்களே விடுபட முயற்சி செய்யாமல் தங்களைக் காக்க ஒரு ராஜகுமாரன் வருவான் என்று காத்திருக்கும் எண்ணத்தை அக்கதைகள் உருவாக்குவதாகப் படித்து வியந்தேன்.

குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகள் அவர்களது மனவளர்ச்சியைப் பெரிதும் பாதிப்பதால் சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்வது நம் கடமை.

மனமார்ந்த பாராட்டுகள் பூமகள்.

M.Jagadeesan
03-03-2011, 04:06 AM
நாம் என்னதான் கதைகளை மாற்றிச் சொன்னாலும், இலக்கியங்களைப்
படிக்கும்பொழுது உண்மையான கதையை குழந்தைத் தெரிந்துகொள்ளும்
காக்கை ஏமாறியது, வாழ்க்கையில் நாம் ஏமாறாமல் எச்சரிக்கையாக*
இருக்கவேண்டும் என்ற நீதியை உணர்த்துவதற்காக!கீரியைப் பார்ப்பனத்தி கொன்ற கதையின் பின்னால் ஒரு நீதி உள்ளது.எதையும்
அவசரப்பட்டு செய்யக்கூடாது.கண்ணால் காண்பது பொய்.காதுகளால்
கேட்பதும் பொய்.தீர விசாரித்து அறிவதே மெய்.இப்படி ஒவ்வொரு
கதையின் பின்னாலும் ஒரு நீதி உள்ளது.

கீதம்
03-03-2011, 04:12 AM
நாம் என்னதான் கதைகளை மாற்றிச் சொன்னாலும், இலக்கியங்களைப்
படிக்கும்பொழுது உண்மையான கதையை குழந்தைத் தெரிந்துகொள்ளும்
காக்கை ஏமாறியது, வாழ்க்கையில் நாம் ஏமாறாமல் எச்சரிக்கையாக*
இருக்கவேண்டும் என்ற நீதியை உணர்த்துவதற்காக!கீரியைப் பார்ப்பனத்தி கொன்ற கதையின் பின்னால் ஒரு நீதி உள்ளது.எதையும்
அவசரப்பட்டு செய்யக்கூடாது.கண்ணால் காண்பது பொய்.காதுகளால்
கேட்பதும் பொய்.தீர விசாரித்து அறிவதே மெய்.இப்படி ஒவ்வொரு
கதையின் பின்னாலும் ஒரு நீதி உள்ளது.

ஐயா.... நீங்கள் சொல்வது சரியே. ஆனால் சற்று விவரம் அறிந்த குழந்தைகளுக்கு ஒத்துவரும். நீங்கள் சொல்வதுபோல் பாடப்புத்தகத்திலோ, கதைப்புத்தகத்திலோ தானே படித்துத் தெரிந்துகொள்ளும்போது சிந்தனை ஓரளவு பக்குவப்பட்டிருக்கும். நீதியை உணரமுடியும்.

இங்கே நான் சொன்னது சரிவரப் பேசவும் துவங்கியிருக்காத ஒன்றிலிருந்து மூன்றுவயதுக்குட்பட்டக் குழந்தைகளுக்கு. அவர்களுக்கு நீதி புரியாது. ஐயோ பாவம் என்னும் இரக்கம் மட்டுமே மேலிடும். கதையில் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதும் புரியாத நிலையில் குழந்தையை நிம்மதியாக உறங்கவைக்கச் சொல்லப்படும் கதைகளில் இதுபோன்ற திருத்தங்கள் செய்யலாம் என்பது என் கருத்து.

அன்புரசிகன்
03-03-2011, 04:47 AM
காக்கை அழுகை
பொறுக்காமல்
தன் இருவடையும்
கொடுத்துச் சிரித்தது
குழந்தை..

தாயின் வளர்ப்பு தான் பிள்ளையின் நடத்தையில் எதிரொலிக்கும் என்பார்கள். ஒருவிதம் புரியாத உணர்வு இந்த வரிகளில். வாழ்த்துக்கள்.



ஐயா.... நீங்கள் சொல்வது சரியே. ஆனால் சற்று விவரம் அறிந்த குழந்தைகளுக்கு ஒத்துவரும். நீங்கள் சொல்வதுபோல் பாடப்புத்தகத்திலோ, கதைப்புத்தகத்திலோ தானே படித்துத் தெரிந்துகொள்ளும்போது சிந்தனை ஓரளவு பக்குவப்பட்டிருக்கும். நீதியை உணரமுடியும்.

நீங்க வேற.. DD இல் சக்திமான் என்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு சிறுவன் நண்பர்களுடன் பேசி வாக்குவாதம் கூடவே நான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறேன். சக்திமான் வந்து காப்பாற்றுவார் என்றுவிட்டு தனக்கு தானே ஊற்றி எரித்த சம்பவம் இந்தியாவில் நடந்தது. அந்தநேரம் பொதிகையில் இந்த செய்தி கண்டிருக்கிறேன். சிறுவயதில் விதைப்பது மிக ஆழமாக பதிந்துவிடும். அந்த நேரத்தில் நீதி எல்லாம் புரியாது.

Nivas.T
03-03-2011, 05:05 AM
நல்ல விசயங்களை செய்யும் பொழுதும் சரி
சொல்லும்போது சரி மனதி எங்கோ ஒரு உணர்வு பிறக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். அதே உணர்வு இக்கவிதையை வாசிக்கும் பொழுதும்.

சிறு வயதில் விதைக்கப் படுவதுதான் அந்தக் குழந்தையின் மாறாத குணமாகிறது.

பிள்ளைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.

நூலைப் போல சேலை
தாயை போல பிள்ளை

அழகான கவிதை

பூமகள்
03-03-2011, 07:38 AM
நன்றி கீதம் அக்கா. தேவதைக் கதைகள் நான் சொல்வதில்லை. (தெரிஞ்சால் தானே சொல்வதற்கு.. ;)). தக்க நேரத்தில் தகுந்த அறிவுரை.. நன்றிகள் கோடி அக்கா.

--

நன்றிகள் ஜகதீசன் ஐயா. நீதி புரியும் வயதில் கட்டாயம் திருத்தாமல் சொல்கிறேன். முதல் ஓரிரு வயதில் குழந்தைகளுக்கு ஈகைப் பண்பும், பகிர்ந்துண்ணும் குணமும் வளர்வது முக்கியம் என்பது என் கருத்து. உங்கள் கருத்துக்கு நன்றிகள் ஐயா.

நாஞ்சில் த.க.ஜெய்
03-03-2011, 07:45 AM
மனதினை கவர்ந்த ஒரு குழந்தையின் கவிதையாக உங்கள் கவிதை பூமகள் அவர்களே!

இங்கே நான் சொன்னது சரிவரப் பேசவும் துவங்கியிருக்காத ஒன்றிலிருந்து மூன்றுவயதுக்குட்பட்டக் குழந்தைகளுக்கு. அவர்களுக்கு நீதி புரியாது. ஐயோ பாவம் என்னும் இரக்கம் மட்டுமே மேலிடும். கதையில் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதும் புரியாத நிலையில் குழந்தையை நிம்மதியாக உறங்கவைக்கச் சொல்லப்படும் கதைகளில் இதுபோன்ற திருத்தங்கள் செய்யலாம் என்பது என் கருத்து.
சிறு குழந்தையிடம் கூறும் கதைகள் வெறும் கதைகளாக இருப்பதைவிட நிகழ்வுகளை காட்டும் கதைகளாக அச்சிறு குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் இருப்பது நலம் ....உங்கள் குழந்தை நீங்கள் கூறிய கதையினை நாமும் படிக்கும் போது உங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புதான் நிகழ்ந்திருக்கும் ..நீங்கள் கூறுவதிலிருந்து உங்கள் குழந்தைக்கு இரண்டரை வயது இருக்கும் என நினைக்கிறேன்.இவ்வயதில் குழந்தையின் கற்கும் திறன் மேம்பட்டிருக்கும் ...இச்சிறு வயதில் இது போன்ற கதைகளை தவிர்த்து தன்னம்பிக்கை உண்மை கதைகளை கூறலாம்...சிறுவயதில் விதைக்கும் விதைகள்தான் அக்குழந்தையின் குணமாகிறது ...

ரசிகன்
04-03-2011, 12:10 PM
வித்தியாசமான வடிவம் கொடுத்திருக்கிறீர்கள்.. வெகுவாய் ரசித்தேன்... வாழ்த்துக்கள்!:)

ஜானகி
04-03-2011, 01:14 PM
ஒரு குழந்தை பிறக்கும் போதுதான் ஒரு தந்தையும், தாயுமே பிறக்கிறார்கள்....!

வாழ்க்கை எனும் பள்ளியில், நம் குழந்தைகள் மூலம் நாம் கற்பதுதான் பெரும் பகுதி.

விழிப்புடன், பெருந்தன்மையுடன் இருந்தால்,அவர்கள் மூலம் நிறையக் கற்றுக்கொண்டு, பக்குவமடையலாம்.......

அமரன்
05-03-2011, 10:11 PM
நான் கேட்ட பாட்டி சுட்ட வடைக் கதையில் எல்லாருமே கெட்டவனாக இருந்தார்கள். பாட்டியை ஏய்க்க, நரி காக்கையை ஏமாற்ற, ஏமாற்றாதே ஏமாறாதே என்ற நீதியையும் சொல்லிச்சு அந்தக் கதை.

நீங்கள் சொன்ன பாட்டி வடை சுட்ட கதையில் பசிக்கும் காகத்துக்கு வடை கொடுத்த பாட்டி இரக்கத்தையும், காக்கையிடம் பறித்துத் தின்ற நரி நயவஞ்சகத்தையும், நரியிடம் ஏமாந்த காக்கை மூடத்தனத்தையும் வெளிக்காட்டுகின்றார்கள். இந்தச் சமூக நீதிகளில் உங்கள் குழந்தையில் இரக்கம் ஊற்றப்பட்டு ஈரம் படர்ந்திருக்கு. நல்ல விசயம். அதே நேரம் மற்றய விசயங்களும் வாழ்க்கைக்குத் தேவை. தகுந்த நேரத்தில் அதையும் சொல்லுங்க.

கதைகதையாம் காரணமாம்.. கா... ரணமாம்!!

ஷீ-நிசி
06-03-2011, 12:25 AM
திருந்தப்பட்டது



ஆயா சுட்ட வடை கதை இப்போ கவிதையாகவா???

திருந்தப்பட்டது சரியா? அல்லது திருத்தப்பட்டது என்று வரவேண்டுமா??!!

குழந்தைகளுக்கு போதிக்கும் கதையிலும் கூட சிறு மாற்றம் செய்து சொல்லும்போது ஏமாற்றிய காகம், தந்திர நரி, அழுகாச்சி பாட்டி இல்லாமல், பசியோடு வந்த காகம், அதற்கு உதவின பிள்ளை என்று மாற்றியிருப்பது நன்றாகவே உள்ளது, பசியோடு வருபவருக்கு முடிந்த அளவு உதவி செய்தால், இடையில் தந்திரக்காரர்களுக்கு வேலையுமில்லை.. ஏமாற்றும் அவசியமுமில்லை...


வாழ்த்துக்கள் பூமகள்..

பூமகள்
06-03-2011, 01:46 AM
நலமா ஷீ-நிசி? வீட்டில் சுட்டிகள் நலமா?

திருத்தப்பட்டது சரியாக திருத்தப்பட்டது.. ;) நன்றிகள் ஷீ.

நீங்கள் என் கதைக்காரணத்தைப் பிடித்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.. நன்றி. :)

அன்பு எல்லார் இடத்தும் இருந்தால் தீமைக்கு அங்கு இடமேது. அறமெனப்படுவதை மறந்து வரும் காலமாகிவிட்டது. மீண்டும் மீட்டு கொணர்வது நம் கையில் தான் உள்ளது.

மிக்க நன்றிகள் ஷீ. :)

ஷீ-நிசி
06-03-2011, 12:16 PM
நலமா ஷீ-நிசி? வீட்டில் சுட்டிகள் நலமா?

திருத்தப்பட்டது சரியாக திருத்தப்பட்டது.. ;) நன்றிகள் ஷீ.

நீங்கள் என் கதைக்காரணத்தைப் பிடித்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.. நன்றி. :)

அன்பு எல்லார் இடத்தும் இருந்தால் தீமைக்கு அங்கு இடமேது. அறமெனப்படுவதை மறந்து வரும் காலமாகிவிட்டது. மீண்டும் மீட்டு கொணர்வது நம் கையில் தான் உள்ளது.

மிக்க நன்றிகள் ஷீ. :)

சுட்டிகள் நலமே பூ...

அங்கேயும் சுட்டி(கள்)? போல.... :aetsch013:

வாழ்த்துக்கள்

அக்னி
14-03-2011, 02:05 PM
நிலாச்சோறு ஊட்டுவது
குழந்தையைக் குளிர்விக்கும்...

ஆனால்,
அவ்வப்போ,
வயதறிந்து,
சூரியச் சோறு ஊட்டுவதும்
அவசியம்...
குழந்தையைச் சுடவல்ல,
புடம்போட...

பாராட்டு பாமகளுக்கு...