PDA

View Full Version : ஆசை....



Nivas.T
02-03-2011, 11:49 AM
சில்லென்று
தெறித்துவிழும்
மழைத்துளிகளில்
சடுதியில் இறங்கி

ஊன் கரைந்து
உருவழிந்து
மண்ணோடு மண்ணாக
கரைந்தோடி

செடியாகி
மரமாகி
பூவாகி
வாசம் தந்து

வாடி வதங்கி
மீண்டும்
மண்ணோடு
விழுந்து மக்கி

தூசாகி
துரும்பாகி
காற்றோடு
கலந்து பறந்து

நீர்மங்களில்
படிந்து
கனலோடு
எரிந்து
ஆவியாய் படர்ந்து

குளிரோடு உறைந்து
மேகமாய் மாறி
விண்ணோடு ஓடி
மலையோடு மோதி
மழையாக வேண்டும்

மீண்டும் மனிதனாய் மட்டும்
மாறிவிடாமல்.....

ஆதி
02-03-2011, 11:58 AM
ஆசைப்படுதலில் அடிபிசகு இருப்புற்றிருக்கிறதோ, நிலையில்லா நிலையால்தான் மனிதன் நிலைகெடுகிறான், தாம் விரும்புவதும் அதே நிலையில்லா நிலையைத்தானே..

நிலையில்லா நிலையை மனிதனாக இருந்துணர்ந்து கொளலில் இருக்கும் வசதி, இருப்பதில்லையே மற்ற எவைகளிலும்..

நிலைத்தல் இயலாதது, நிலைக்க முயல்தல் இயலுமல்லோ, முயவோமே நிலையாய்..

Nivas.T
02-03-2011, 12:38 PM
நிச்சயமாக ஆதன்

ஆனால் மனிதனாய் இருந்து உணர்ந்துகொள்ளுதலை விட

நிலையில்லா தன்மையாக மாறிவிட
ஆசை

ஆசைப்படுவதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?


மிக்க நன்றி ஆதன்