PDA

View Full Version : உண்டியல்

shiva.srinivas78
02-03-2011, 09:16 AM
சில்லறை மனிதர்களின் சில்லறைகளும்
நாணயமானவர்களின் நாணயங்களும்
எளியவர்களின் செல்லாகாசுகளும்
மனமற்றவகளின் வெற்று தாள்களும்

வேண்டுதல்கள்
நன்றிக்கடன்கள்
எதிர்பார்ர்புகள்

நிறைவற்ற மனங்களால் நிறையும்
சமத்துவங்கள் பல காணும்

ஆனாலும் வருந்தும்
விடுதலை எப்போது?

Nivas.T
02-03-2011, 09:22 AM
யாருக்கு தெரியும் ?

கவிதை அருமை ஸ்ரீநிவாஸ்

கொஞ்சம் புரியல

ஜானகி
02-03-2011, 09:25 AM
பசித்த ஒருவன்

பத்தும் பறந்திட

தர்மம் மறந்து - அதை

உடைக்கும் போது....?

தாமரை
02-03-2011, 09:30 AM
உண்டு + இயல்

வருமானம் உண்டு என்று எண்ணுகிறவன் வைக்கிறான்
பலன் உண்டு என்று எண்ணுகிறவன் அதை நிரப்புகிறான்
உள்ளே காசு உண்டு என்று எண்ணுகிறவன் அதைத் திறக்கிறான் / உடைக்கிறான்

கடைசியில் அதில் உள்ளதெல்லாம் யாரோ உண்டு கழிந்து போகிறது

உண்டு என்று நம்ப வைத்து உண்டு விடுவதால் உண்டியல் நல்ல தத்துவம் தான்:eek::eek::eek::eek:

உமாமீனா
02-03-2011, 09:33 AM
சிம்பிள் ஆக சொன்னா உண்டு, இல்லை - உண்டியல் அம்புட்டுதான்

எனது 500 வது பதிவு - சுய விளம்பரம் தான்

ஆதி
02-03-2011, 09:42 AM
உண்டு + இயல்

வருமானம் உண்டு என்று எண்ணுகிறவன் வைக்கிறான்
பலன் உண்டு என்று எண்ணுகிறவன் அதை நிரப்புகிறான்
உள்ளே காசு உண்டு என்று எண்ணுகிறவன் அதைத் திறக்கிறான் / உடைக்கிறான்

கடைசியில் அதில் உள்ளதெல்லாம் யாரோ உண்டு கழிந்து போகிறது

உண்டு என்று நம்ப வைத்து உண்டு விடுவதால் உண்டியல் நல்ல தத்துவம் தான்:eek::eek::eek::eek:

உண்டியல் = உண்டி + அல்

இதை இப்படியும் பிரிக்கலாம் இல்லையா அண்ணா...

பிரேம்
02-03-2011, 10:30 AM
கவிதை அருமை..
அது எந்த கோவில் உண்டியல்ன்னு சொல்லுங்க...விடுதலைய நாம கொடுத்திடுவோம்...:cool:

தாமரை
02-03-2011, 10:45 AM
உண்டியல் = உண்டி + அல்

இதை இப்படியும் பிரிக்கலாம் இல்லையா அண்ணா...

பிரிக்கலாம். ஆனால் அங்க பலபேரோட உண்டி இருக்கே... அப்புறம் எப்படி அல் என்று சொல்வது?

ஆதி
02-03-2011, 10:55 AM
கொடுத்தவன் திரும்பி கேட்கிறானென உயிரே கடனாக வந்ததுதான் என்று கண்ணதாசன், போனால் போகட்டும் போடா பாட்டில் சொல்வார், ஆனால், நாம் காணிக்கையென இறைவனை கடங்காரனாக்கும் சாதூர்யத்தை கற்றுக் கொண்டோம்..

உண்மையில் உண்டியல் என்பது கோயிலுக்கும் கோயிலை சார்ந்திருப்பவர்களுக்காகவும் பொருணுதவி செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒன்று, அதை வைத்து நாம் இறைவனை விலைபேசுகிறோம் இன்று..

உண்டியல் தொகை இறைவனுக்கு உவப்பளிப்பதில்லை, அதை உடைப்பவர்களை/திறப்பவர்களை களிப்பாக்குகிறது..

முந்தைய போதொன்றில் இது போன்றொரு கவிதையை நானும் மன்றத்தில் பதித்திருக்கிறேன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15352

பாராட்டுக்கள் சிவஸ்ரீணிவாசாஸ்

ஆதி
03-03-2011, 08:35 AM
பிரிக்கலாம். ஆனால் அங்க பலபேரோட உண்டி இருக்கே... அப்புறம் எப்படி அல் என்று சொல்வது?

இறைவனுக்கான காணிக்கை பெட்டியானால், இது உண்டி அல்..

இறைவனின் பெயர் சொல்லுவோருக்கான காணிக்கை பெட்டியானால், இது உண்டு இல்