PDA

View Full Version : என் எண்ணம்



shiva.srinivas78
02-03-2011, 09:13 AM
நினைவுகளை நெய்து
உணர்வுகளால் சாயமேற்றி
நான் தைத்த ஆடை
உங்களுக்கும் பொருந்தும்
உடுத்தி பாருங்கள்

எனக்கு பிடித்த நிறம்
உங்களிடம் சாயம் மாறிப்போகிறது
இருந்தாலும் அழகாய்த்தானிருக்கிறது

சுதந்திரமாய் திரியும் கைதிகளாய்
வார்த்தைகள்

என் துயரங்கள் , ஏக்கங்கள் ,சலிப்புகள்
எல்லாம் என் கவிதைகளாக இருக்க
ஆறுதலாக மட்டும் நீங்கள் இருங்கள்

உமாமீனா
02-03-2011, 09:41 AM
கவலைபடாதே சகோதரா...மன்றத்தில் தான் நாங்க இருக்கோம்ல

ஜானகி
02-03-2011, 10:14 AM
கவலையே வேண்டாம்...

மன்றத்து ஆளுங்களும், ரா..ராக்களும், அ..னாக்களும், மீனாக்களும், அலசும் அலசலில், நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பதே உங்களுக்கு மறந்துவிடும்...!

Nivas.T
02-03-2011, 10:51 AM
யாமிருக்க கவலை ஏன்?

ராஜாராம்
02-03-2011, 11:12 AM
என் துயரங்கள் , ஏக்கங்கள் ,சலிப்புகள்
எல்லாம் என் கவிதைகளாக இருக்க
ஆறுதலாக மட்டும் நீங்கள் இருங்கள்


தமிழ்மன்ற நண்பர்கள் நாங்கள் இருக்கின்றேம்.....
என்றும் உண்மைத் தோழனாய்...
கவலைவேண்டாம் சகோதரா

ஆதி
02-03-2011, 11:27 AM
முதலிரு பத்திகள் பின்னவீனத்துவத்துக்கான திசைவெளியை உள்பதுக்கி வைத்திற்கிறது, அடுத்த இரு பத்திகளில் திக்குமாறுவதால், பின்னவீனத்துவத்துக்கான திசைவெளி ஒடுக்கமுற்றுவிடுகிறது..

கவியின் குரல் கவிதையில் உரத்தொலிக்க கவிதையின் குரல் ஒலித்தளர்வுக்கு வலிவுறுத்தப்படுகிறது..

இறுதிக்கு முந்திய பத்தியை நீக்கிவிட்டு..

//என் துயரங்கள் , ஏக்கங்கள் ,சலிப்புகள்
எல்லாம் உம் கவிதைகளில் இருக்க
ஆறுதலாக நீங்கள் இருங்கள்//

என மாற்றியெழுதினால், பின்னவீனத்துவ கவிதையாக உருமாற்றம் பெற்றுவிடுமென தோன்றுகிறது..

கவிஞன் = கவிதை = வாசகன்

பாராட்டுகள் சீனிவாசன்

பிரேம்
07-03-2011, 12:00 AM
டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி..:)

கீதம்
07-03-2011, 06:00 AM
நினைவுகளை நெய்து
உணர்வுகளால் சாயமேற்றி
நான் தைத்த ஆடை
உங்களுக்கும் பொருந்தும்
உடுத்தி பாருங்கள்

எனக்கு பிடித்த நிறம்
உங்களிடம் சாயம் மாறிப்போகிறது
இருந்தாலும் அழகாய்த்தானிருக்கிறது


இந்த இரண்டு பத்திகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. கவிதையைத் தன் விருப்பத்துக்கேற்ப யூகங்களால் அலசுவதால் அதன் சாயம் போயிருக்கலாமோ? நல்ல கருத்து வெளிப்பாடு. பாராட்டுகள்.