PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்...பாகம்1.



ராஜாராம்
02-03-2011, 06:34 AM
திருச்சி.....மே மாதம்.13ம்....தேதி...இரவு...10.23...மணி

"அபிராமி....அபிராமி...,
எழுந்திரும்மா....
நான்தான் சிவனடிசித்தன் வந்திருக்கேன்...",
மெனமையானக் குரல் அபிராமியின் காதினில் ஒலித்தது,

"யாரு.....",
போத்தியிருந்தப் போர்வையை விலக்கிவிட்டு,
மெல்ல கண்விழித்தாள் அபிராமி..
அவள் அறையின் ஜன்னலுக்கு வெளியே...
இரவின் இருட்டினில்..

மெலிந்த தேகத்துடன்,...
நிரைத்த சடைமுடியுடன்,..
நெற்றிநிறைய விபூதியுடன்,
கையில் ஒரு நீண்டக் அரசமரக்குச்சியை ஏந்தியபடி
தெய்வக்கலையுடன் நின்றிருந்தார்,
80வயதை ஒத்த பெரியவர்..
அதிர்ச்சியடைந்த அபி,

"யார் நீங்க...இங்கே என்னப்பன்னுறீங்க?",

"உன்னுக்கிட்ட ஒரு சேதி சொல்லனும்மா...",

"நீங்க யாரு அதை முதலில் சொல்லுங்க...",

"நான் பைத்தியக்காரன்....சித்தன்....",
என்றவரைப் பார்த்து,

"இங்க எதுக்கு வந்திங்க...",
அவள் பதறியதும்

"உன்னையப் பார்கத்தான் தாயீ...",
என்றவர் புன்முறுவல் பூத்துவிட்டு,

"அம்மாடி.....
உன்னோடு சம்மந்தப்பட்ட ஒருவரது உயிர்...
இப்ப அகால மரணம் அடையப்போது....
உன் வீட்டு பூஜை அறையில் இப்பவே...
உடனே விளக்கை ஏற்றிவை...
அதை தடுத்து நிறுத்தும்மா...
இது உண்மை,....நிஜம்..",
என்று புரியாத புதிராய் அவர்கூறியதும்,

"இல்லை...நான் விளக்கேற்றமாட்டேன்....
நீங்க யாரு...அதை சொல்லுங்க..
நீங்க சொல்றதை நம்பமாட்டேன்..
.நம்பமாட்டேன்..நம்பமாட்டேன்...!!!",
என்று உரக்க கத்தியவளை...

"ஏய் அபிராமி... என்னடி ஆச்சு?",
என்று தூங்கிகொண்டு இருந்த அபிராமியை,
தட்டி எழுப்பினாள்...அவளது பாட்டி மங்களம்.

பாட்டியின் குரலைக்கேட்டதும்

சட்டென,தூக்கத்தில் இருந்துக் கண்விழித்த அபிராமி..
தன் அறையை சுற்றும்முற்றும் பார்த்தாள்.
அங்கு எவ்விதமாற்றமும் இல்லை.
ஜன்னலுக்கு வெளியே
அழகிய நிலவின் ஒளிமட்டுமே தெரிந்தது.
இரவு மணி..10.34 என்பதை,
கடிகார முட்கள் காட்டிக்கொண்டு இருந்தன.
அந்த நிகழ்வு,தான் கண்டக் கனவு என்பதை சற்று அறிந்த அபிராமி,

"பாட்டி.....
யாரோ சித்தர்.....
அகாலமரணம்..அப்படின்னு..
எனக்கு எதுமே புரியலை..",
ஏதேதோ பிதற்றியபடி,அச்சத்துடன்
பாட்டியின் கரங்களை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

"ஏதும் கனவுகண்டியா?",
பாட்டிக் கேட்டதும்...

"ம்ம்ம்...ஆமாம்...பாட்டி...",

"சாமியக் கும்பிட்டுவிட்டு ,தூங்கு...",
செல்லமாக அவள் தலையை வருடி,
அவளை உறங்க வைத்தாள் மங்களம்.


சென்னை....மே மாதம்...14ம் தேதி..காலை..8.0மணி

"நேற்று இரவு,நடிகை பிரியதர்ஷினி...கொலை செய்யப்பட்டார்......
தமிழ் திரைப்பட உலகிற்கு இது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது..
புலனாய்வுத்துறை அதிகாரி அசோக்குமார்...,..
இது சம்மந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்...
அவரது இறப்பிற்கு இறங்கல் தெரிவிக்கும்வன்னம்,
இன்று படபிடிப்புக்கள்,அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன்...
அவர் சமீபத்தில் நடித்த,.
"மே மாதம்..13",
என்ற திரைப்படம்..ஒருசில பிரச்சனைகளினால்
நேற்று,பகல் காட்சிகள்,வெளியிடமுடியாமல் போனது..
அத்திரைப்படம் நேற்று இரவுதான்,தமிழகமெங்கும்,
முதல் காட்சியாக திரையிடப்பட்டதும்,குறிப்பிடதக்கது",
அந்த திரைப்படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல்,
நேற்றையதினம்,..மேமாதம்13ம் தேதி,என்பதும் கூடுதல் தகவல்...",

இவ்வாறு அனைத்து ,தனியார் தொலைக்காட்சி சேனல்களில்லும்
செய்திகள் பரபரப்பாக வெளியாகத் தொடங்கியது...

தி.நகர்...மஹாலெட்சுமி நகரில்...
பிரியதர்ஷினி வீட்டின் வாசலில் கட்டுக்கடங்கா...
ரசிகர்கள் கூட்டம் கூடி நிற்க..
அவர்களை விலக்கியவன்னம்..
காவல்துறை வாகங்கள் வரிசையாய் வந்து நின்றன்..

"சார்....வாசலில் நின்ற கூர்க்காவை பலமா தாக்கியிருக்காங்க,...
அவரு நினைவு இழந்த நிலையில் கிடக்கிறாரு...",
என்று காவல்துறை கண்கானிப்பாளரிடம் பாலா ஓடி வந்துக் கூறினான்..

"நீங்கதான் பாலாவா?
பிரியதர்ஷ்னி இறந்துக்கிடந்ததை முதலில் பார்த்த நபர் நீங்கதானா?",
இன்ஸ்பெட்டர் கேட்டதும்,

"ஆமாம்...சார்",
என்றான் பாலா...

"கான்ஸ்டபிள்ஸ்...வீட்டை முழு சோதனைப் போடுங்க....
கைரேகை நிபுனர்களை பதிவுகளை சோதனைப்போட சொல்லுங்க..",

"பைதேபை...பாலா...
நீங்க..விசாரணை முடியும்வரை நீங்க ஒத்துழைப்பு தரனும்",
என்று இன்ஸ்பெக்ட்டர் கூறியதும்,,.

"தராளாமா,,,சார்",
என்றான் பாலா..

"சார்,,..கூர்காவின் அறையில்,
வெளியாட்கள் வருகைப்பற்றிய,
பதிவேட்டில்...நேற்று இரவு...
10.36க்கு...
சித்தன்னு ஒருவர் பெயர் எண்ட்ரி ஆகியிருக்கு சார்.....
ஆனால்
அவர் திரும்பி எப்ப வெளியேறினாருன்னு குறிக்கப்படவில்லை..",
என்று கூறிக் கொண்டே இன்ஸ்பெக்டரை நெறுங்கினார் கான்ஸ்டபிள் கந்தசாமி.

அந்த பதிவேட்டை தீர ஆரய்ந்த
புலனாய்வுத்துறை அதிகாரி அசோக்குமார்,

"அப்படின்னா...
இந்தக் கொலை
நேற்று இரவு....10.36க்குமேல் நடந்திருக்கு..."
என்ற அசோக்குமார், தீவிரமாய் எதையோ சிந்திகத் தொடங்கினார்....


சிதம்பரம்.....மே மாதம்...14ம் தேதி...காலை..10.11மணி

"பொண்னுப் பேரு அபிராமி...சொந்த ஊரு திருச்சி..
பி.காம்..மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்.
அம்மா அப்பா கிடயாது...
பாட்டிதான் அவளை வளர்க்கிறாங்க...நல்ல இடம்..
உங்கப் பையன் அசோக்குமாருக்கு பொருத்தமான இடம்..",
என்று தரகர் கூறியதும்,

பெண்ணின் புகைப்படத்தைப் வாங்கிப் பார்த்த ராமநாதன்,

"ஹாலோ...அசோக்...நான் அப்பா பேசுரேன்டா...
உனக்கு ஒருப் பொண்னோட போட்டோ வந்து இருக்கு..
அதை மெயிலில் உனக்கு அனுப்புறேன்..பார்த்துவிட்டு,..
புடிச்சி இருக்கான்னு சொல்லு",
என்று அசோக்கின் தந்தை ராமநதான்,
போனில் உடனடி தகவலை கூறியதும்,

"அப்பா...
நடிகை பிரியதர்ஷினியை கொலை செஞ்சுட்டாங்க...
நான் இப்ப இன்வெஸ்டிக்கேஷன் செய்துக்கொண்டு இருக்கேன்...
அப்புறமா உங்களிடம் பேசுரேன்ப்பா...",
என்று தொலைபேசி தொடர்பைத் துண்டித்தான்
அசோக்குமார்.....

(கண்ணாமூச்சி ஆட்டம்......தொடரும்)
(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821AO.TAMILNADU FILM CHAMBER/1999act..rajaram..RTD240) )

கீதம்
02-03-2011, 06:59 AM
விறுவிறுப்பான ஆரம்பம், எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டது. தொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம்.

முகம்மது ஹுமாயூன்
02-03-2011, 07:05 AM
நன்று.தொடரட்டும் ஆட்டம்..:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

sarcharan
02-03-2011, 07:57 AM
ரா ரா, நம்ம மன்றது மக்கள் எல்லாம் உங்க கதைய படிச்சதுக்கப்புறம் அபிராமி அபிராமின்னு குணா கமல் ரேஞ்சுக்கு பொலம்பறாங்க

Nivas.T
02-03-2011, 07:59 AM
கண்ணாமூச்சு நல்லாவே இருக்கு ராஜாராம்

உமாமீனா
02-03-2011, 08:31 AM
ராஜேஷ் குமார் கதை படிப்பது போல் இருக்கு அட ஆமா, அதுவும் ரா இதுவும் ரா - கலக்குங்க ராரா....

ராஜாராம்
02-03-2011, 09:54 AM
நன்றி
கீதம் அவர்களுக்கும்,
நிவாஸ் அவர்களுக்கும்,
சாராவிற்கும்,
உமாமீனா அவர்களுக்கும்,
முகமது ஹுமாயூன் அவர்களுக்கும்.

(சாரா...நம்மக் கதைய படிச்சா...அனைவரும் கண்டிப்பா குணா கமல்மாதிரிதான் ஆயிடுவாங்க... :lachen001:)

அன்புரசிகன்
02-03-2011, 09:16 PM
அது எப்படி சார். அந்த யன்னல் கண்ணாடிக்குள்ளால இவ்வளவும் தெரிஞ்சுதா??? :D

போன கதையில் 2 சீன். இந்த முறை 3 சீன்.
நல்ல விறுவிறுப்பாக போகுது. அசத்துங்கள்.

ராஜாராம்
03-03-2011, 03:07 AM
நன்றி அன்புரசிகா....:)

முரளிராஜா
03-03-2011, 05:06 AM
ஆரம்பமே அசத்தலா இருக்கு.
கதையின் அடுத்த பாகம் எப்பொழுது
என்ற ஆர்வத்தில் இருக்கிறேன் ராரா

நாஞ்சில் த.க.ஜெய்
03-03-2011, 07:21 AM
சுவைகூட்டும் வகையில் உங்கள் கதை அடுத்து என்ன நிகழும் என சிந்திக்கவைக்கிறது தொடருங்கள் நண்பரே!

sarcharan
03-03-2011, 08:01 AM
அது எப்படி சார். அந்த யன்னல் கண்ணாடிக்குள்ளால இவ்வளவும் தெரிஞ்சுதா??? :D


அது ஜன்னல் கண்ணாடி இல்லை ஜென்டில்மேன் வீடியோ கேமரா.. (வெப் கேமரா).:confused::D:sprachlos020:

govindh
04-03-2011, 07:52 AM
கண்ணாமூச்சி ஆட்டம்...
அருமையான ஆரம்பம்..

பாராட்டுக்கள் ராஜாராம்.