PDA

View Full Version : இது தான் அரசியல்



உமாமீனா
02-03-2011, 05:42 AM
ஒருமுறை முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் ஒரு பள்ளிக்கூடத்துக்கு செல்கிறார் நிறைய பேசினார் அதன் பின் மாணவர்களிடம் எதாவது கேள்வி என்னிடம் கேட்க விருப்பமா?

ஒரு மாணவன் எழுந்து நின்றான்

புஷ் : உன் பெயர் என்ன?
ஜான் : ஜான்

புஷ் : உன் கேள்வி என்ன?

ஜான் : சார் என்னிடம் 3 கேள்விகள் உள்ளன
1) ஐநா அனுமதி இல்லாமல் அமெரிக்கா ஈராக் மேல் போர்தொடுத்தது ஏன்?

2) ஒசாமா எங்கே?
3) அமெரிக்கா அதிகமான ஆதரவை பாகிஸ்தான் மேல் காட்டுவது ஏன்?

புஷ் : நீ ரொம்ப புத்திசாலி மாணவன் ஜான் ... (இடைவேளைக்கான மணி அடித்தது).
ஒ மாணவ செல்வங்களே இடைவேளைக்கு பின் சந்திப்போம் தொடர்வோம்.........


இடைவேளைக்கு பின்

புஷ் : ஓகே மாணவர்களே நாம் எங்கே நிறுத்தினோம்? எஸ், யாரவது கேள்வி கேட்கணுமா?

பீட்டர் கையை தூக்கினான்

புஷ் : உன் பெயர் என்ன?

பீட்டர் : சார் 5 கேள்விகள் கேட்கணும்
1) ஐநா அனுமதி இல்லாமல் அமெரிக்கா ஈராக் மேல் போர்தொடுத்தது ஏன்?
2) ஒசாமா எங்கே?
3) அமெரிக்கா அதிகமான ஆதரவை பாகிஸ்தான் மேல் காட்டுவது ஏன்?
4) இடைவேளைக்கான மணி எப்பொழுதும் இல்லாமல் 20 நிமிசத்துக்கு முன்னாடி அடித்தது ஏன்?
5) ஜான் எங்கே

இது தான் அரசியல்

M.Jagadeesan
02-03-2011, 06:19 AM
இப்பொழுது பீட்டரும் காணாமல் போய்விடுவான்.இது அமெரிக்க அரசி
யல் மட்டுமல்ல;உலக அரசியலும்கூட.

முகம்மது ஹுமாயூன்
02-03-2011, 06:46 AM
நல்ல கற்பனை.அமெரிக்காவிலும் அரசியல் அப்படித்தானா?

Nivas.T
02-03-2011, 07:43 AM
உண்மை முற்றிலும் உண்மை

sarcharan
02-03-2011, 08:10 AM
அமெரிக்க அரசியலை விட அ. தி. மு. க அரசியல் படு மட்டம்

shiva.srinivas78
02-03-2011, 08:40 AM
கேள்விகளை கேட்கும் சுதந்திரமாவது இருக்கிறதே , Mr. President என்று சாதாரண பத்திரிக்கை நிருபர் கூட கேள்வி கேட்கமுடியும் . ஆனால் இங்கு நமக்குள்தான் கேட்க முடியும்

shiva.srinivas78
02-03-2011, 08:44 AM
அமெரிக்க அரசியலை விட அ. தி. மு. க அரசியல் படு மட்டம்

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் போல தெருவுக்கு தெரு அராஜகங்கள் நடப்பதை விட தலைமை மட்டும் ரௌடியாக இருப்பது மேல்

உமாமீனா
02-03-2011, 09:47 AM
அமெரிக்க அரசியலை விட அ. தி. மு. க அரசியல் படு மட்டம்

இது என்ன ஓர வஞ்சனை அப்ப நாங்க என்ன சப்பையா....

இப்படிக்கு

தி. மு. க அரசியல் குழு

lolluvathiyar
02-03-2011, 12:56 PM
5) ஜான் எங்கே

ஐந்தாவது கேள்வி தான் அதிகம் சிரிப்பை வர வைத்தது. ஜான் எங்கே என்ற கேள்விக்கு புஷ் பதில் சொல்ல மாட்டார் ஆனால் ஜானுக்கு தீவிரவாத முத்திரை குத்தி அபுகரிப் சிரையில் அடைத்திருப்பார்கள்.

sarcharan
03-03-2011, 06:50 AM
ஐந்தாவது கேள்வி தான் அதிகம் சிரிப்பை வர வைத்தது. ஜான் எங்கே என்ற கேள்விக்கு புஷ் பதில் சொல்ல மாட்டார் ஆனால் ஜானுக்கு தீவிரவாத முத்திரை குத்தி அபுகரிப் சிரையில் அடைத்திருப்பார்கள்.


உமது இந்த விடயம் பத்தின விஷயம் புஷ்ஷுக்கு தெரிந்தால் நீர் காணாமல் போய் விடுவீர்...:p