PDA

View Full Version : அன்றும்....இன்றும்:இறுதி பாகம்



ராஜாராம்
01-03-2011, 05:30 AM
நிகழ்கால நிகழ்வுகள்..
இன்று நடப்பது....
2011............

ராஜாவின் வீட்டில் உள்ளவர்களுக்கும்,
ஷோபாவின் வீட்டில் உள்ளவர்களுக்கும்,...
மனக்கசப்புகள் எரிமலையாய் வெடித்து சிதறியது....

"ஏன் பொண்ணு சொல்றதில்ல தப்பே இல்லயே....
புருஷன் வசதியாய் இருக்கனும்,,
வசதியாய் வாழனும்னு நினப்பது தப்பா?",
என்று ஷோபா வீட்டார் கூற,,

"நான் ஒரு,எம்.பி.பி.எஸ், எம்.டி படிச்ச டாக்டர்...
சொந்தமா வீடுவாசலெல்லாம் நிறையா இருக்கு...
அவனும் எம்.பீ.ஏ.படிச்சவன்...
அப்படி இருக்கையில்,
என் பையனை ஒன்னுமில்லாமல் விட்ருவோமா?
என்னாங்க அந்தப் பொண்னுதான் அப்படி பேசுகிறதுன்னா,,,.நீங்களுமா?",
என்றார் ராஜாவின் அப்பா.

"அப்படின்னா இப்பவே..
உங்கப் பையனுக்கு சேரவேண்டியதை கொடுத்து
அவரை நல்லவிதமா செட்டில் பன்னுங்க,
நாங்களும் தைரியாம பொண்ண அனுப்பி வைக்கிறோம்",
என்று ஷோபாவின் தந்தை கூற,

"என்னசார் பேசிறிங்க....
சொத்தைப் பிரிச்சுக் கேட்கிறீர்களா?
ரொமப நல்லா இருக்கே?
எங்க புள்ளைக்கு எப்ப எதை செய்யனும்னு எங்களுக்குத் தெரியும்..",
ராஜாவின் அம்மா பதிலடி கொடுத்தாள்.

"இப்படியே ஆளாளுக்கு சண்டைப் போட்டுக்கிட்டே இருந்தால் என்ன ஆகுறது?
பொண்ணுக்கிட்டயும்,பையன்கிட்டையும் கடைசியா ஒருவார்த்தைக் கேளுங்க...
அவங்களுக்கு ஓகே என்றால்...கல்யாணத்தை முடுச்சிடுவோம்...",
ராஜாவின் அண்ணன் கூற,
சற்று அனைவரும் அமைதியாகினர்.

"ஏம்மா...ஷோபா..
உனக்கு இந்தக் கல்யாணத்தில்ல சம்மதமா?",
என்றார் அவளது தந்தை.

"முடிவு அவர் கையில்தான் இருக்குப்பா...
நான் சொன்னதிற்கு,,ஒத்துகிட்டால்,எனக்கு ஓகே..
இல்லைன்னா இந்த சம்மந்தம் வேணாம்,,.",
ஷோபாவின் குரலில் அழுத்தம் இருந்தது,..

"ஏய்...உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்.
உனக்கு அந்தப் பொண்ணு சொல்றதுக்கு சம்மதமா?
நீ ஈரோடுப் போக விருப்பட்டால் எங்களுக்கு
எவ்வித கோவமும் இல்லை..
எங்களுக்காக உன் ஆசையை கெடுத்துக்காதே..
என்ன சொல்றே?",
ராஜாவின் அண்ணன் கேட்டதும்,

"செத்துப் போன பிணத்தை போஸ்மார்ட்டம்
பண்ணிக்கிட்டு இருக்கிங்க எல்லாரும்,..
முடிஞ்சு போனது...முடிஞ்சுப்போனதுதான்..."
என்றவன்,

"ஒரு விஷயம் பிரச்சனை ஆனால்,பேசிமுடிவு பண்ணலாம்...
ஆனால் நீங்களாம்,
முடிஞ்சிப்போன ஒரு விஷயத்தை, பிரச்சனையா ஆக்குகிறீர்கள்.....
எனக்கு இந்த சம்மந்தத்தில் விருப்பம் இல்லை...",
என்றுக் கூறி,விட்டு அவ்விடத்தி விட்டு நகர்ந்தான்.....

உறவினர்கள்,நண்பர்கள்,அனவருக்கும்...
நின்று போன நிச்சயதார்த்தம் பற்றி தகவல் கூறப்பட்டது...
சிறிது நாட்கள் பழகினாலும்,,.
அவளது நினைவுகள்...நிகழ்கால வாழ்க்கையில் இடையூறு
செய்துக் கொண்டுத்தான் இருக்கின்றன...

(பல மாதங்களுக்குப் பின்)
"ஹலோ..நான்தான்,,,ஷோபா பேசுறேன்...
என்னை மன்னிச்சிடுங்க....என் தப்பை நான் உணர்ந்துட்டேன்,,.
அன்று தெரியாமால் பேசிட்டேன்...
உங்களை மறக்க முடியலை...என்னைக் கல்யாணம்பன்னிப்பிங்களா?
....",
ராஜாவிடம்,கேட்டாள்..........



இறந்தகால நினைவுகள்....
அன்று நடந்தது...
ஏப்ரல்..1,2003...

(சுஜாவின் வீட்டுக்கு ராஜா புறப்பட்டான்...)

"ஏய்...வேணாம்டா...இப்ப நீ அங்கப் போனால் பிரச்சனை ஆயிடும்,..
பொறுமையா இருடா..."
என்று அவன் நண்பர்கள் கூறியதைக் கூட பொறுட்படுத்தாமல்....

விரைவாக சுஜாவின் வீட்டை அடைந்தான் ராஜா...

வசலில் மக்கள் கூட்டம்..
வீட்டின்னுள் அழுகை சத்தங்கள்,
பூமாலையில் இருந்த மலர்கள்
ஆங்காங்கே சிதறிக் கிடந்தன...

"இந்தப் பொண்னு,யாரோ ஒருப் பையனை லவ் பன்னுச்சாம்,
அவன் கல்யாணம் பண்ணிக்காமல் ஏமாத்திட்டானாம்...
அதான் தற்கொலைப் பண்ணிக்கிச்சு...",
இப்படியே பலரும் முனுமுனுத்துக் கொண்டிருக்க,

"அடிப்பாவி.......
தற்கொலை செஞ்சிகிற அளவுக்கு,
நான் என்னடி பாவம் பண்ணேன் உனக்கு..
நீயும்தானே...உங்க அப்பா முடிவுக்கு எதிரா இருந்தே...
அந்த தைரியத்தில்தானே....நானும் அமைதியானேன்...
கடைசியில் இப்படிப் பண்ணிட்டியே...",
என்று உள்ளக்குமுறல்களுடன்.....
வீட்டினுள் நுழைந்தான் ராஜா...

"வாடா...சண்டாளப்பாவி....
நீ நாசமாத்தான் போவாய்...
என் பொண்ணை அநியாயமாக் கொன்னுட்டியேடா...பாவி...பாவி.."
ராஜவின் சட்டையை இழுதுப் பிடித்து ,
அவனை ஒரேத் தள்ளாய் தள்ளினார் சுஜாவின் தந்தை..

"நான் இதுக்கு காரணம் இல்லைங்க...
என் சுஜா இப்படி முட்டாள்தனமா பண்ணமாட்டாங்க...",
என்று கண்ணீர்விட்ட ராஜாவின் மேல்,
வாசலில் கிடந்த மண்ணையெல்ல்லம் வாரிவாரி எறிந்தும்,

"நீ நாசமாத்தான்டாப் போவே...",
என்று வயிற்றெரிந்து சபித்தார் அவளது தந்தை..
அவளது கோவம் நியாயம் என்றே எண்னினான்.

"டேய்...வெளியப்போடா...நாயே..."
என்று அவளது உறவினர் ஒருவர் அவனை பலமாக தள்ளினார்..

கீழே விழுந்த ராஜா மெல்ல எழுந்தப்போது,அவன் கண் எதிரே,

எவ்வித சலனமும் இன்றி
அந்த அழகு தேவதை உறங்கிக்கொண்டு இருந்தாள். .
மலர்மாலைகள் அவள்மேல் படர்ந்துக் கிடந்தன...
அவளது அழகிய விரலில்,.........
அந்தப் பவழமோதிரம்....தொய்வின்றி ஜொலித்துக் கொண்டு இருந்தது...

சித்தப்பிரம்மைப் பிடித்தவன் போல அவளது வீட்டை விட்டு வெளியேவந்தான் ராஜா.
உலகமே தன்னை விட்டு போய்விட்டதைப் போல் ஓர் உணர்வு அவனுள்ளே.

விரக்தியுடன் நடந்து சென்ற அவனது கைகளைப் பற்றிய,
சுஜாவின் தங்கை அபிராமி...

"மாமா,...அக்கா தற்கொலைப் பண்னிக்கலை...
கரூரில் உள்ள ஒரு மாப்பிள்ளைக்கு அக்காவைக் கட்டிவைக்க அப்பா தீவிரமா இருந்தாரு...
அக்கா மாட்டவே மாட்டேன்னு பிடிவாதமாய் சொல்லிவிட்டள்...
கோவத்தில் பெரியப்பா...அக்கவை கண்டபடி அடித்து தள்ளினாரு...
அக்கா அடி தாங்காமல்,அருகில் இருந்த அம்மிக்கல்மீது விழுந்துட்டாள்...",
என்றவள் தேமிதேமி அழுதபடி....

"அக்கா மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்தது,...
டாக்டர்கிட்டே தூக்கிட்டுப் போனோம்....
அக்கா செத்துப்போயி அரைமணிநேரம் ஆயிடுச்சின்னு அங்கே சொல்லிட்டாங்க....
இதுதான் மாமா நடந்த உண்மை"..பெரியப்பாதான் அக்கா சாவுக்கு காரணம்...",,
என்று மீண்டும் அழத்தொடங்கினாள்.

"பெரியப்பாமட்டும் இல்லை...
நானும்தான் அவள் சாவிற்கு காரணம்....
அவள் நிம்மதியாப் போயிட்டள்...
அவள் இல்லமல் ...இனி...நான் கஷ்டப்படதான் போறேன்",

என்று கூறிவிட்டு நடைப்பிணமாய்,
நடைபயணத்தை தொடர்ந்தான்....


அன்றும்....இன்றும்..
_________________
"நிகழ்கால நிகழ்வுகளில்...காதலி உயிரோடு வாழ்கிறாள்..
அவளது காதல் இறந்துவிட்டது.....

இறந்தகால நினைவுகளில்....காதலி இறந்துவிட்டாள்...
அவளது காதல் இன்றும் உயிரோடுதான் வாழ்கிறது...

நிகழ்காலகாதலியின்,இறந்துப் போனக் காதல்
மறுஜென்மம் எடுத்து
வந்தது...

ஆனால்..................
"பிறந்து__இறந்து,
இறந்து___மறுபடிப்பிறந்து, வரும் காதலைவிட......

இறந்தும் நிலைத்து நிற்கும்......காதலே என்றும் சுகமானது........


(முற்றும்...........)

முரளிராஜா
01-03-2011, 05:47 AM
கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.
ராஜா ஷோபாவை கல்யாணம் செய்துகொண்டானா? இல்லையா?
இதுக்கு பதில் சொல்லு. இத நான் கேட்டாதான் பதில் சொல்லுவியா இல்ல................
எப்படி வசதி

ராஜாராம்
01-03-2011, 06:04 AM
கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.
ராஜா ஷோபாவை கல்யாணம் செய்துகொண்டானா? இல்லையா?
இதுக்கு பதில் சொல்லு.................
எப்படி வசதி

கடவுள் அமைத்துவைத்த மேடை...
இனிக்கும் கல்யாண மாலை....
இன்னார்க்கு இன்னரென்று...
எழுதிவைத்தானே தேவன் அன்று...

"மனைவி அமைவதெல்லாம் இறவன் கொடுத்த வரம்..."

உமாமீனா
01-03-2011, 06:12 AM
அருமையான ஒரு காதல் கதை கருத்து இருக்கு பகிர்வுக்கு நன்றி ராரா....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்



ராஜா ஷோபாவை கல்யாணம் செய்துகொண்டானா? இல்லையா?
இதுக்கு பதில் சொல்லு. இத நான் கேட்டாதான் பதில் சொல்லுவியா இல்ல................
எப்படி வசதி

....இத பார்ரா ஆரம்பிச்சிட்டாரு......அடுத்த கேள்வியை????

ராஜா ஷோபாவை கல்யாணம் செய்துகொண்டானா? இல்லையா?நடந்தது என்ன? நிஜம் என்ன?

ராஜாராம்
01-03-2011, 06:15 AM
ராஜா ஷோபாவை கல்யாணம் செய்துகொண்டானா? இல்லையா?நடந்தது என்ன? நிஜம் என்ன?

அப்படி ஒரு எண்ணமே அவனுக்கு இல்லை....
அதுதான்
காதலுக்கு மரியாதை..........

Nivas.T
01-03-2011, 06:24 AM
என்ன சொல்றதுன்னு தெரியல ராஜாராம்

என்ன பொருத்தவரைக்கும்

தவற உணர்ந்து திருப்பி வரவங்கள ஏத்துகிறது
தான் நல்லது. மன்னிக்கிறது தப்பில்லன்னு நினைகிறேன்.

அவங்களும் கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு நீங்க இப்படி இருக்கனும்னு தொல்ல கொடுத்திருந்தா என்ன பண்ண முடியும். நல்ல யோசிச்சு கதைல ஒரு திருப்பம் குடுங்க

முடிவு சுபமா இருக்கட்டும்

நல்ல கதை ராஜாராம்
மனதை தொட்டது

பாராட்டுகள்
வாழ்த்துக்கள்

CDMSURESH
01-03-2011, 06:28 AM
GOOD LOVE STORY...........CDMSURESH

அன்புரசிகன்
01-03-2011, 06:36 AM
நீங்க நல்லா கதைவிடுறீங்க.:D தொடர்ந்து அசத்துங்க..

sarcharan
01-03-2011, 07:55 AM
சேது படம் ரீமேக் மாதிரி இருக்கு..

கீதம்
01-03-2011, 09:19 AM
கதையை அழகாகக் கொண்டுசென்றதற்கு என் பாராட்டுகள்.

அன்று இருக்கிறது, இன்று இருக்கிறது எனில் நாளை இருக்கவேண்டுமே?

நாயகனின் வாழ்வில் நலமே நிகழ வாழ்த்துகிறேன்.

முரளிராஜா
01-03-2011, 09:32 AM
சேது படம் ரீமேக் மாதிரி இருக்கு..
சாரா நீங்க என்ன சொல்ல நினக்கிறிங்கன்னு புரியுது.
இததான இந்த பார்வையிலதான ராராவை பாக்கறிங்க.
http://ts4.mm.bing.net/images/thumbnail.aspx?q=418190335079&id=b6a306d255af54efca3a034f44a5e6ce&url=http%3a%2f%2fwww.fantastikindia.fr%2fsite%2fIMG%2fjpg%2fsethu-wallpaper.jpg

முரளிராஜா
01-03-2011, 09:38 AM
அப்படி ஒரு எண்ணமே அவனுக்கு இல்லை....
அதுதான்
காதலுக்கு மரியாதை..........
அவசரபட்டு பதில் சொல்லிட்டியா ராரா
காதலுக்கு மரியாதையை யோசிச்ச நீ
ஷோபா இந்ததிரிக்கு வந்ததும் உன்
மரியாதை என்னவாகும்ன்னு நீ
கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.

sarcharan
01-03-2011, 10:02 AM
அப்படி ஒரு எண்ணமே அவனுக்கு இல்லை....
அதுதான்
காதலுக்கு மரியாதை..........

ஆனால் காதலுக்கு மரியாதையில் காதலர்கள் இணைநது விடுகின்றனரே.

ராஜாராம்
01-03-2011, 10:36 AM
என்ன சொல்றதுன்னு தெரியல ராஜாராம்

என்ன பொருத்தவரைக்கும்

தவற உணர்ந்து திருப்பி வரவங்கள ஏத்துகிறது
தான் நல்லது. மன்னிக்கிறது தப்பில்லன்னு நினைகிறேன்.

அவங்களும் கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு நீங்க இப்படி இருக்கனும்னு தொல்ல கொடுத்திருந்தா என்ன பண்ண முடியும். நல்ல யோசிச்சு கதைல ஒரு திருப்பம் குடுங்க

முடிவு சுபமா இருக்கட்டும்

நல்ல கதை ராஜாராம்
மனதை தொட்டது

பாராட்டுகள்
வாழ்த்துக்கள்

நன்றி நிவாஸ்..நீங்க சொன்னடு சிந்திக்க வேண்டிய விஷயம்தான்

ராஜாராம்
01-03-2011, 10:39 AM
சாரா நீங்க என்ன சொல்ல நினக்கிறிங்கன்னு புரியுது.
இததான இந்த பார்வையிலதான ராராவை பாக்கறிங்க.
http://ts4.mm.bing.net/images/thumbnail.aspx?q=418190335079&id=b6a306d255af54efca3a034f44a5e6ce&url=http%3a%2f%2fwww.fantastikindia.fr%2fsite%2fIMG%2fjpg%2fsethu-wallpaper.jpg


அடப்பாவி....ஒரு மனுஷனை மெண்டல் ஆக்குறதுல உனக்கும் இம்புட்டு சந்தோஷமா?என்னா ஒரு வில்லத்த்னம்... :sauer028:

ராஜாராம்
01-03-2011, 10:43 AM
நன்றி...
கீதம் அவர்களுக்கும்,
சாரா அவர்களுக்கும்,
சீ.டீ.எம்..சுரேஷ் அவர்களுக்கும்,
அன்புரசிகனுக்கும்,
உமாமீனா அவர்களுக்கும்,
முராவிற்கும்
அனைத்து நண்பர்களுக்கும்.

p.suresh
01-03-2011, 11:07 AM
கதையைப் பாடல்களுடன் சொல்லிய விதம் அருமை.

ராஜாவின் பார்வையிலே கதை நகர்கிறது.விருமாண்டி படத்தைப்போல ஷோபாவின் கோணத்திலும் பார்த்தால் தெளிவு கிடைக்கும்
ராஜாவின் வாழ்க்கை சுபம் பெற்றால் நண்பர்களுக்கு சந்தோஷம்.

விட்டுக்கொடுத்தோர் கெட்டுப் போனதில்லை,கெட்டுப்போனோர் விட்டுக் கொடுத்தில்லை.

மதி
01-03-2011, 12:23 PM
நல்லவிதமாக கதையை முடித்துவிட்டீர்கள்.. சுபமான முடிவா??

ராஜாராம்
01-03-2011, 01:45 PM
கதையைப் பாடல்களுடன் சொல்லிய விதம் அருமை.

ராஜாவின் பார்வையிலே கதை நகர்கிறது.விருமாண்டி படத்தைப்போல ஷோபாவின் கோணத்திலும் பார்த்தால் தெளிவு கிடைக்கும்


"சுரேஷூ...இதெல்லாம் நியாயமா?
இப்படி நிக்கச்சொல்லி கேள்விக்கேட்டுஇருக்கியே....
..
:sauer028:

ராஜாராம்
01-03-2011, 01:48 PM
சுபமான முடிவா??

நன்றி மதன் அவர்களே.
நீங்க கேட்டக்கேள்விக்கு பதில்...
நாயகன் படத்து பாணியில்,
"தெரியலையே...தெரியலைப்பா..."

sarcharan
02-03-2011, 05:23 AM
"மனைவி அமைவதெல்லாம் இறவன் கொடுத்த வரம்..."

புரியலையே...

முரளிராஜா
02-03-2011, 05:27 AM
சாரா இது ராரா வுக்கே புரியாது
ஏதோ பதில் சொல்லனுமேன்னு பதில் சொல்லி வச்சிருக்கான்