PDA

View Full Version : "ரா"ணாக்களின் ராஜ்ஜியம்:12(கோவில் மணி)



ராஜாராம்
01-03-2011, 05:01 AM
இது ஒருக் கற்பனைக் கதையே..
தமிழ்மன்ற இதழ்தொகுப்பளர்கள் என்னைப் பொறுத்தருளவேண்டும்...
"புதுமுகம் அறிமுகம்..சூரா.."பண்பட்டவர் புதுவை p.சுரேஷ்:)".)


"ஏய் நம்ம அம்மன் கோவிலில் உள்ள
மணியை யாரோ திருடிக்கிட்ஒருவன் ஓடுரான்டா....
எலே...முரா...சூரா..ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா....",

என்று கிரமத்தின் நாட்டாமை அபாயக் குரல் இட்டதும்,,'
கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது..

"ஏய் நம்ம அம்மன் கோவில் மணியை
களவாடிப்பயல் களவாடிக்கிட்டு போரானாம்..",

"எல்லாரும் ஓடியாங்க...ஓடியாங்க...",

"ஏய் முரா...சூரா...ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா...",
என்றுக் கூச்சலிட்டார் நாட்டாமை.

"நாட்டாமை ஐயா...
உங்களுக்கு வேற ஆளுங்களே கிடைக்கலையா?
முராவையும்,சூராவையும்,ராராவையும்..திருடனைப் பிடிக்க அனுப்புறீங்களே....?",
என்று பெரியவர் ஒருவர் கேட்டதும்.,,

"அவங்க மூணு பேரும் ஓட்டப்பந்தய வீரர்கள்...
ஓட்டப்பந்தயத்தில நிறைய கோப்பைகளையெல்லாம் வாங்கியவங்க..."
என்ற நாட்டாமை,

"நம்ம 18பட்டியிலும் அவனுங்களை ஓட்டப்பந்தயத்தில்
தட்டிக்க யாருமே இல்லை",
என்று பெருமிதத்துக் கொண்டார்.

(ஆம்...முரா...சூரா....ராரா...மூவரும்
உண்மையிலே ஓட்டப் பந்தயங்கள்
பலவற்றில் மாவட்ட அளவில்,மாநில அளவில் பரிசுகள் பெற்றவர்கள்)

நாட்டாமைக் கூறிய மறுநிமிடமே....
மூவரும் புயலெனப் புறப்பட்டு...மின்னல் வேகத்தில்...
அந்தத் திருடனை துரத்தினர்...அவர்களுக்கும்...
அந்த திருடனுக்கும்,,..சிறிய இடைவெளித் தூரமே இருந்தது.
தெருவின்...வளைவினில் திருடன் ஓடிமறைய...
மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

(சிறிது நேரம் ஆனது....)
"போனவர்களை ஆளயேக் காணோம்மே....",
ஊர் மக்களில் ஒருவர் கூற..

"அவனுங்க சிங்கக்குட்டிங்க மாதிரி....
இந்நேரம்,கோயில் மணியுடன்,
திருடனையும் வளைத்து பிடித்திருப்பார்கள்...",
என்று நாட்டாமை....கூறி முடிக்க....
மூவரும்,மக்கள் எதிரில் ,சென்ற வேகம் குறையாமல் ஓடிவந்தனர்...
அதை கண்ட ஊர் மக்கள்,

"முரா...சூரா,,,ராரா...,,ராரா!!!!ராரா!!!!',
என்று சந்திரமுகி பாடல் ராகத்தில் வரவேற்றனர்..

மூச்சு இரைக்க ஓடி வந்தவர்களை நோக்கிப் நாட்டாமை,
"திருடனை புடிச்சிட்டிங்களாடா..கோயில் மணி எங்கேடா...",
என ஆவலோடு கேட்க,

"நாட்டாமை!!!,,....நான் ஜெயுச்சுட்டேன்...
நான்தான் முதலில் வந்தேன்...",என்று முரா கூற

"இல்லை இல்லை...நான்தான் முதலில் வந்தேன்...",
என்று மல்லுக்கு நின்றான்...சூரா..

"ஏய்....ஏன்டா சண்டை போட்டுக்கிறீங்க...
நாட்டாமை ஐயா மூவருக்குமே பரிசுகள் தருவாரு...
நான் சொல்றது சரிதானே....",
என்ற ராரா.. சிரித்தபடி நாட்டாமையை ஒரு லுக்கு விட்டான்.

அதிர்ந்துப் போன ,நாட்டாமையோ....
"என்னாங்கடா,,....சொல்றிங்க?ஒரு எழவும் புரியலையேடா,..
உங்களை திருடனை புடிக்கத்தானேடா அனுப்புனேன்...",
என்று அழாதக்குறையாக கூற,

"ஐயையோ!!!!!,அதை மறந்தேப் போயிட்டோம்மே...",
என்று முரா கூறியதும்,

"ஏய்....நாம ஓடும்போது...
நமக்கு பின்னலே,கைதட்டிக்கிட்டே...
ஓடிவந்தானே ஒருவன்...
அவன்தான் திருட்டுப்பயல் போலிருக்கு",
என்று வியப்பாய் கூறினான் சூரா...

"ஒரு தப்பு நடந்துப் போச்சு பண்ணயார் ஐயா...",
என்றான் ராரா...

"என்னடா,..சொல்லித்தொலையேடா...",
கடுப்படிக்க ஆரம்பித்தார்...நாட்டாமை.

"திருடனைப் பிடிக்கத் துரிதமாகத்தான்,ஓடினோம்..ஆனால்,,..",
என்று பேச்சை அவன் இழுத்ததும்,

"என்ன நடந்தது சீக்கிரம் சொல்லு....",
நாட்டாமை கர்ஜித்தார்.

"ஓட்டப் பந்தயத்திலே,..ஓடுகிற நினைப்பில்...
திருடன்கூட போட்டிபோட்டுக்கிட்டு,...
அவனையும் முந்திக்கிட்டு ஓடிவிட்டோம்..
நாட்டாமை அய்யா.....",
என்று,தயங்கியபடி ராரா கூற,,

"நாங்க மெதுவாத்தான் ஓடினோம்...நாட்டாமை.
அந்த திருட்டுப்பயல்தான்,பலமாக கைத்தட்டி,,,ஆரவாரம் செய்து ...
எங்களை உற்சாகப்படுத்தி,...வேகமா ஓடவெச்சுட்டான்..",
பரிதாபமாக,சூரா கூற,..

"நாட்டாம அய்யா!!,..ரொம்பதூரம் ஓடிப்போயிட்டு வந்ததால்,,..
தண்ணிதாகம் எடுக்குது...
உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லி...
ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா...எதையாவது
குடிக்க கலந்து தரசொல்லுங்கய்யா..."",
என்றான் முரா மூச்சிரைக்க,

"நாட்டாமை அய்யா...
உங்க சிங்ககுட்டிங்களுக்கு தாகமா இருக்காம்...
குடிக்க ஹார்லிக்ஸ் தாங்க.....பாவம்...",
என்று கூட்டத்தில் ஒருவன் நக்கலாய் கூற...
அனை,வரும் சிரிக்கத்தொடங்கினர்..

(மறுநாள்...)

"திருடனை தப்பிக்க விட்டக் குற்றத்திற்காக,..'
முரா..சூரா...ராரா...மூவரையும் ,கோவிலில் உள்ள
தூண்களில் கட்டிப்போடவேண்டும்,, என தீர்ப்பளிக்கிறேன்",
என்று நாட்டாமைக் கூறியதும்,

"நாட்டாமே...தீர்ப்ப மாத்திச்சொல்லு...",
என்று கூறியபடி முன் வந்தார்,
தமிழ்மன்ற இதழ்தொகுப்பாளரில் ஒருவர்...

"ஹய்யா!!!,,..நம்மலைக் காப்பாத்த...
நம்ம மன்றத்து நண்பர் வந்தாச்சு",
என மூவரும் சந்தோஷத்தில் குதிக்க,

"ஏன் தீர்ப்பை மாத்தனும்?",
என்று எதிர் கேள்விக் கேடார் நாட்டாமை.
அந்த இதழ் தொகுப்பாளரைப் பார்த்து,..

"அய்யா...இவனுங்களை, சும்மாக் கட்டிப்போடாதிங்க...
கோவில் மணி இருந்த இடத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு...
பூஜை ஆரம்பிக்கும்போது...
மணியை அடிப்பதற்குப் பதிலா,,,
இவனுங்களை அடிச்சு சாமிக்கும்பிடுங்க..",
என்றதும்,.

"அப்படின்னா,,.இனிமே
நம்ம ஊரு கோவிலில் ஆறுவேளை பூஜை பன்னனும்..ஜாலி,,,",
என்று மக்கள் அனைவரும் பரவசமாகினர்.

"சபாஷ்...நல்ல அய்டியா...',
என்ற நாட்டாமை,சற்று யோசித்துவிட்டு,

"கோவிலுக்கு ஒரு மணிதானே இருக்கும்..
முராவை இங்க கட்டி தொங்கவிட்டு விடுவோம்..
மீதம் உள்ள ரெண்டுபேரயும் என்ன செய்வது?",
என்றுக் கேட்டதும்,

"பக்கத்து ஊருக் கோவிலுக்கு...குத்தகைக்கு விட்டுருங்க...
அந்த ஊரு மக்களுக்கும்...
அடிக்க ஆளுக்கிடைச்சமாதிரி இருக்கும்
உங்க ஊருக்கும் வருமானமும் வரும்",
என்ற இதழ்தொகுப்பாளர்...

"கிறுக்கல்கள்,...சொதப்பல் கவிதை...
செய்திசோலை....
இப்படி பல டைட்டிலில் மன்றத்து
மக்களை டார்ச்சர் பன்னுறானுங்க...",
என்று,,கண்ணீருடன், ஆத்திரமாக கூறி முடித்ததும்...

"ராரா...10ரூபா ஒருதரம்...
சூரா...11ரூபா ஒருதரம்",
என்று தள்ளுபடி விலயில்
இருவரையும்,குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்.......

உமாமீனா
01-03-2011, 05:06 AM
படிச்சிட்டு வாரேன்


வாசித்த பின்:

:icon_b::4_1_8::icon_clap:


டேய்........ முடியலைடா........ரா ரா களின் ரவுசு கையில சிக்கிநீங்கன்னு வயு :sport-smiley-005: நேரா ஜி ஹட்ச் தாண்டி :smilie_bett:

செல்வா
01-03-2011, 05:07 AM
ஹா...ஹா.....

ரொம்ப நல்லாருக்கு....

முரளிராஜா
01-03-2011, 05:23 AM
நல்லவேளை ராரா
நான் நாட்டாமை கிட்ட கேட்டது என்னவோ ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா
ஆனா அவங்க நமக்கு என்ன கொடுத்தாங்கன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதே.

நாஞ்சில் த.க.ஜெய்
01-03-2011, 05:32 AM
கதையின் சுவை அதன் நடையில் உள்ளது ....நண்பர் ராஜாராமின் எழுத்துநடையின் சுவை மிகவும் அருமை ..தொடருங்கள் ....

sarcharan
01-03-2011, 06:00 AM
சூரா சுறா மாதிரி இருக்கணும்னு ஆசபட்டாரு ஆனா இப்போ...

sarcharan
01-03-2011, 06:07 AM
"அவனுங்க சிங்கக்குட்டிங்க மாதிரி....


சிங்கம் நெலமை அசிங்கமா போச்சே



"நாட்டாமை!!!,,....நான் ஜெயுச்சுட்டேன்...
நான்தான் முதலில் வந்தேன்...",என்று முரா கூற


பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி சொன்னீங்களாக்கும்?


"ஓட்டப் பந்தயத்திலே,..ஓடுகிற நினைப்பில்...
திருடன்கூட போட்டிபோட்டுக்கிட்டு,...
அவனையும் முந்திக்கிட்டு ஓடிவிட்டோம்..
நாட்டாமை அய்யா.....",
என்று,தயங்கியபடி ராரா கூற,,


சிங்கம் நெலமை அசிங்கமா போச்சே
பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி சொன்னீங்களாக்கும்?



"நாங்க மெதுவாத்தான் ஓடினோம்...நாட்டாமை.
அந்த திருட்டுப்பயல்தான்,பலமாக கைத்தட்டி,,,ஆரவாரம் செய்து ...
எங்களை உற்சாகப்படுத்தி,...வேகமா ஓடவெச்சுட்டான்..",
பரிதாபமாக,சூரா கூற,..


இதுக்கு பொருத்தமா ஒரு கதை சொல்லுறேன்.. ஆனா அப்புறமா



"நாட்டாம அய்யா!!,..ரொம்பதூரம் ஓடிப்போயிட்டு வந்ததால்,,..
தண்ணிதாகம் எடுக்குது...
உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லி...
ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா...எதையாவது
குடிக்க கலந்து தரசொல்லுங்கய்யா..."",
என்றான் முரா மூச்சிரைக்க,


லொள்ள பாரு எகத்தாளத்த பாரு




கோவில் மணி இருந்த இடத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு...
பூஜை ஆரம்பிக்கும்போது...
மணியை அடிப்பதற்குப் பதிலா,,,
இவனுங்களை அடிச்சு சாமிக்கும்பிடுங்க..",
என்றதும்,.

"அப்படின்னா,,.இனிமே
நம்ம ஊரு கோவிலில் ஆறுவேளை பூஜை பன்னனும்..ஜாலி,,,",
என்று மக்கள் அனைவரும் பரவசமாகினர்.



கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ?

ஆறு மனமே ஆறு அந்த நாட்டமை கட்டளை ஆறு...



"சபாஷ்...நல்ல அய்டியா...',
என்ற நாட்டாமை,சற்று யோசித்துவிட்டு,

"கோவிலுக்கு ஒரு மணிதானே இருக்கும்..
முராவை இங்க கட்டி தொங்கவிட்டு விடுவோம்..
மீதம் உள்ள ரெண்டுபேரயும் என்ன செய்வது?",
என்றுக் கேட்டதும்,


ஒரு மணி அடித்தால் ரானாஸ் ஞாபகம்




"பக்கத்து ஊருக் கோவிலுக்கு...குத்தகைக்கு விட்டுருங்க...
அந்த ஊரு மக்களுக்கும்...
அடிக்க ஆளுக்கிடைச்சமாதிரி இருக்கும்
உங்க ஊருக்கும் வருமானமும் வரும்",
என்ற இதழ்தொகுப்பாளர்...


யாரு அந்த ஐடியா அய்யாசாமி?



"கிறுக்கல்கள்,...சொதப்பல் கவிதை...
செய்திசோலை....
இப்படி பல டைட்டிலில் மன்றத்து
மக்களை டார்ச்சர் பன்னுறானுங்க...",
என்று,,கண்ணீருடன், ஆத்திரமாக கூறி முடித்ததும்...

ஆஆஆஆஆ சோலை புஷ்பங்களே. இவர்
சோகம் சொல்லுங்களே...





"ராரா...10ரூபா ஒருதரம்...
சூரா...11ரூபா ஒருதரம்",
என்று தள்ளுபடி விலயில்
இருவரையும்,குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்.......

ஏலம் ஏலம் ஏலம் ஏலம் ஏலலம்மா

Nivas.T
01-03-2011, 06:40 AM
//"ராரா...10ரூபா ஒருதரம்...
சூரா...11ரூபா ஒருதரம்",
என்று தள்ளுபடி விலயில்
இருவரையும்,குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்......//

தொகை அதிகமா இருக்கே:eek::D

அன்புரசிகன்
01-03-2011, 06:45 AM
நல்லவேளை. உங்க மானத்தை ஏலம் விடல... :D

முரளிராஜா
01-03-2011, 09:48 AM
//"ராரா...10ரூபா ஒருதரம்...
சூரா...11ரூபா ஒருதரம்",
என்று தள்ளுபடி விலயில்
இருவரையும்,குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்......//

தொகை அதிகமா இருக்கே:eek::D
நல்லவேளை நான் இங்க அசிங்கபடல.

பிரேம்
01-03-2011, 10:13 AM
தலைகீழ கட்ட போறாங்களா..?!!
மறக்காம பேன்ட் போட்டுக்கோங்க...
வழக்கம்போல வேட்டி கட்டி இருந்தீங்கன்னா...ஷேம்.ஷேம் ஆயிடும்.. :icon_rollout:

ராஜாராம்
01-03-2011, 10:30 AM
நன்றி,
உமாமீனா அவர்களுக்கும்
ஜெய் அவர்களுக்கும்,
செல்வா அவர்களுக்கும்,
சாரா அவர்களுக்கும்,
நிவாஸ் அவர்களுக்கும்,
பிரேம்(இப்படி நடக்கும்னு தெரிஞ்சி ஜீன்ஸ்பேண்ட் போட்டு இருந்தோம்),
முரா வுக்கும்,
அன்புரசிகனுக்கும்,
மற்ற அனைத்து நண்பர்களூக்கும்.

சூரியன்
01-03-2011, 11:39 AM
ஏலம் எடுக்க நான் ரெடி..:D

lolluvathiyar
03-03-2011, 07:24 AM
நான் மன்றத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு அதனால் இந்த முரா ராரா சூரா இவர்களின் புகழ் இன்னும் எனக்கு தெரியல. ஆனால் இவர்களுக்கு ஆப்பு வச்சு மினியாக்கிய கற்பனை கதை அருமை.