PDA

View Full Version : என் காதலை...



ilamaran
28-02-2011, 08:47 PM
"நாளை சொல்லி விடுவேன்"
இப்படிதான்
எழுதுகிறேன்
என் நாட்குறிப்பில்...,
தினமும்..!

அக்னி
28-02-2011, 09:17 PM
“நாளை சொல்லிச் சேர்வேன்”
இப்படி எழுதிடுங்கள்,
இன்றைய குறிப்பில்...

M.Jagadeesan
01-03-2011, 03:20 AM
"இன்று ரொக்கம்; நாளை கடன்" என்று சில கடைகளில் எழுதி வைத்தி
ருப்பார்கள்.அதுபோலத்தான் இருக்கிறது உங்கள் காதல் அறிவிப்பு.சீக்கி
ரம் சொல்லவில்லை என்றால் வேறு யாராவது முந்திக்கொள்வார்கள்.

கீதம்
01-03-2011, 10:31 PM
"நாளை சொல்லி விடுவேன்"
இப்படிதான்
எழுதுகிறேன்
என் நாட்குறிப்பில்...,
தினமும்..!

நாட்குறிப்பும் பேனாவும்
நையாண்டிசெய்யுமுன்
நலமாய் மாறட்டும்
நாளை என்பது இன்று!

கவி நன்று. பாராட்டுகள் இளமாறன்.

Nivas.T
02-03-2011, 05:05 AM
ஒன்றே செய்
நன்றே செய்
இன்றே செய்
அதுவும்
இக்கணமே செய்


கவிதை அழகு இளமாறன்

ilamaran
02-03-2011, 03:20 PM
நாட்குறிப்பு எழுதப்படுவது பெரும்பாலும் இரவுகளில் என்பதாலே யதார்த்தம் வேண்டி நாளை என்று பதிவேற்றினேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே

உமாமீனா
08-03-2011, 10:47 AM
காத்து இருப்பதிலும் சுகம் கண்டு விட்டிரோ?

dellas
10-03-2011, 10:56 AM
ஒருக்கால் அதிசயங்களை தன்னுள் அடக்கிவரும் நாளைதான் நல்ல நாளோ.?
வாழ்த்துக்கள்.